22
இன்று.......
" ஹேய் ஸ்டாப் ஸ்டாப். என்னப்பா எப்பவும் மணிரத்னம் மூவில வர்ற மாதிரி ரத்தின சுருக்கமா பேசுவ. ஆனா உன் ப்ளாஷ்பேக் மட்டும் இவ்வளவு நீளமா போகுது. நல்ல வேலை காலேஜ் கல்ச்சரல்ஸ்ல என்னென்ன நடந்ததுன்னு டீடைல் சொல்லாம விட்டீங்களே. அது வரைக்கும் போதும்" என்று ரூபினி சிரிக்க க்ரிஷ்ஷிற்கு நிஜமாகவே இப்பொழுது சிரிப்பு வந்தது. பல நாட்களின் பின் அவன் வாய்விட்டு சிரித்தான். பல நாட்களாக சிரிப்பை மறந்திருந்த அவனின் முகம் சிரிக்கும் போது மிக அழகாக காட்சியளித்தது. க்ரிஷ்ஷிற்கு ராதாவுக்கும் சிரிக்கும் போது இடது பக்க கன்னத்தில் மட்டும் v வடிவில் குழி விழும். அந்த குழியில் விழாதவர் யாருமே இல்லை.
" க்ரிஷ் இப்பவே டைம் ஒன்பது மணி ஆச்சுப்பா. நான் வீட்டுக்கு போகனும். நேத்தைக்கு முழு நேரமும் நான் வீட்டுல இல்ல. இன்னைக்கும் ஃபுல் டே நான் வீட்ட போகலன்னா அப்பா கவலை படுவாங்க. நான் எங்க போறேன், என்ன தொழில் பண்றேன்னும் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தாலும் அவங்க அத என்கிட்ட கேட்க மாட்டாங்க. ஏன்னா அத கேட்டு என் மனச காயப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறாங்க.ஆனா என் மேல ரொம்ப அக்கறையா, பாசமா இருப்பாங்க. சோ, மைடியர் ஃப்ரெண்ட் ஐ நீட் டு கோ நவ்" என்று கூற க்ரிஷ் முகம் வாடியது. அவனின் முகவாட்டத்தை தவறாக கணித்தவள்
" ஹேய் என்ன, வீட்டுக்கு வந்துட்டு எதுவுமே நடக்காம போறேன்னு யோசிக்கிறியா? நம்ம இப்போ ஃப்ரெண்ட்ஸ். ஃப்ரெண்ட்ஸ்குள்ள நோ செக்ஸ். இதை நம்ம ஆல்ரெடி பேசியாச்சி சார்" என்று கூற புன்னகைத்த க்ரிஷ்
" அதுக்கிள்ள ரூபினி. இன்னைக்கு என்கூட இருந்தா என் வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுவேன். அதான் யோசிக்கிறேன்" என்று கூற அவனின் தலையில் கை வைத்து அவனது கேசத்தை தனது விரல்களால் மெதுவாக கோதிவிட்டாள்.
" ஒரு ப்ராப்ளமும் இல்லை க்ரிஷ். இந்த மாசம் நான் வேற எந்த கஸ்டமரையும் பார்க்க வேண்டியதில்லை. மாசம் ஆரம்பிச்சதுமே போதியளவு பணம் கிடைச்சிடிச்சி. சோ நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றேன். நீங்க மீதி கதையை சொல்லுங்க" என்று கூற அப்போதுதான் க்ரிஷ்ஷிற்கு உரைத்தது அவளுக்கு இன்னும் தான் பணம் கொடுக்கவில்லை என்று.
உடனே தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க ரூபினி அவனை முறைத்தவள்
" நான் செக்ஸ் வெச்சிக்காம யார்கிட்டயும் காசு வாங்கமாட்டேன். ப்ளீஸ் இந்த காச கொடுத்து என்ன கேவல படுத்த வேணாம்" என்று கூற க்ரிஷ் அவள் கைகளில் பணத்தை தினித்தான்.
" என்ன ஃப்ரெண்ட்னு ஏத்துக்குறேல்ல. அப்போ இந்த பணத்த பிடி. நான் எதுக்கு இந்த பணத்த கொடுத்தேன்னு நாளைக்கு சொல்றேன். அப்பவும் உனக்கு இந்த பணத்தை திருப்பி கொடுக்கனும்னு தோனிச்சின்னா கொடு. நான் மறுபேச்சு இல்லாம வாங்கிக்கிறேன். இப்போதைக்கு நான் ஏன் இதை கொடுத்தேன்னு மட்டும் யோசிச்சிக்கிட்டே இரு" என்றவன்
" தனியா போய்டுவியா ரூபினி. இல்லன்னே வீடு வரைக்கும் நான் வரட்டுமா?" என்று கேட்க அவனின் அக்கறையான பேச்சு அவள் உள்ளத்தை நெகிழச்செய்தது.
" இல்ல க்ரிஷ் நான் தனியா போயிடுவேன். வீட்டுக்கு போனதும் உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்" என்றவள் கால்டாக்சியை புக் செய்தவள் தனது இருப்பிடம் சென்றவள்.
கால் டாக்சி ஒரு வெர்க்கிங்க் வுமன் ஹாஸ்டலில் நிற்க அதில் இருந்து இறங்கிய ரூபினியை கண்ட ஒரு பெண்
" ஹேய் ரேவதி, என்னப்பா ரெண்டு நாளா ஆளவே கானோம். எங்க போயிருந்த" என்று கேட்க அவளிடம் கேள்வி கேட்ட பெண்ணை நோக்கி புன்னகைத்தவள்
" அண்ணாக்கு மேரேஜ் பிக்ஸ் ஆச்சி. நேத்துதான் பொண்ணு பார்க்க போணோம். அதான் ஊருக்கு போயிட்டு வர்றேன்" என்று கூற அந்த பெண்ணும்
" ஹேய், அப்போ நெக்ஸ் லிஸ்ட்ல நீதானா. சூப்பர். ஆமா எப்போ கல்யாணம்?" என்று கேட்க அவள் சற்று கூட யோசிக்காமல்
" ரெண்டு வருசம் கழிச்சிதான் கல்யாணம். அண்ணா மேல்படிப்புக்காக லண்டன் போறாரு. ஆனா பாரேன், யார்கிட்டயும் சொல்லாம இதுங்க ரெண்டுமே லவ் பண்ணிருக்குங்க. கல்யாண பொண்ணு எங்க அத்த பொண்ணுதான். எனக்கும் அவளுக்கும் சின்ன வயசுல இருந்து ஒரு ப்ராப்ளம் இருந்திச்சி. அண்ணாக்கு அவங்களத்தான் கல்யாணம் பேசப்போறோம்னு தெரிஞ்சதும் எனக்கு ஆரம்பத்துல பிடிக்கல. ஆனா அண்ணா என் சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னப்போ ரொம்ப சந்தோசமா இருந்திச்சி. என்ன இருந்தாலும் அண்ணனுக்கு அத்தை பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சி. அதனால என் அண்ணனோட சந்தோசத்துக்காக ஓக்கே சொல்லிட்டேன்" என்று கூற அவளின் ஹாஸ்டல் மேட்
" ஹேய் உனக்கு உங்கண்ணன்னா ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்க அவள்
" எனக்கு இந்த உலகத்துல எங்க அண்ணனத்தான் ரொம்ப பிடிக்கும்" என்றவள் " கிழக்கு சீமையிலே" திரைப்படத்தில் இருக்கும் ' தென் கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே' பாடலை பாடிக்கொண்டு சென்றாள்.
ரூபினி அந்த புதிய ஹாஸ்டல் மேட்டை கடந்து சென்றதும் ரூபினியை மாடியில் இருந்து பூர்ணி கவனித்துக்கொண்டே இருந்தாள். ரூபினியை பற்றி அதிகம் தெரிந்த ஒரே ஜீவன் இந்த பூர்ணி மட்டும்தான்.
" டாக்டர், ரெண்டு நாளா ரூபினி ஹாஸ்டல் வரல்ல. இப்போ வந்தவகிட்ட இங்க இருக்குற ஒரு புது பொண்ணு சும்மா பேச்சு கொடுத்தா. இப்போ புதுசா ஏதோ அண்ணன், கல்யாணம் அப்படின்னு சொல்றா. எனக்கு எதுவுமே புரியல. ரொம்ப பயமா இருக்கு டாக்டர்" என்று பூர்ணி கூற மறுமுனையில்
" இன்னைக்கு அவள எங்க ஹாஸ்பிடல்ல பார்த்ததா நர்ஸ் சொன்னாங்க. நீங்க ஒன்னும் பயப்பட வேணாம். நாளைக்கு நீங்க ஹாஸ்பிடல் வாங்க. நம்ம பேசலாம்" என்றார்.
க்ரிஷ்ஷின் தோழி ரூபினியா? இல்லை ரேவதியா? வீட்டுக்கு போகின்றேன் என்று க்ரிஷ்ஷிடம் கூறியவள் ஏன் ஹாஸ்டல் வந்தாள். ராதா, க்ரிஷ் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே உல்டா செய்து ஏன் தன் வாழ்க்கையில் நடந்ததாக கூற வேடும். இது எல்லாவற்றிட்கும் காலம் தான் பதில் கூற வேண்டும்.
இங்கு ஹாஸ்பிடலில்,
தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் மீனாக்ஷிக்கு இரவு நேர வேலை என்பதால் அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். வேலை சோர்வு ஒரு பக்கம் இருந்தாலும் மனச்சோர்வு இன்னொரு பக்கம் வாட்டியது.
இங்கு அதிகம் பாதிக்கப்பட்டது மீனாக்ஷியே. ஒரு புறம் தன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் கணவன். மறுபுறம் மன்னிக்க முடியாத தவறை செய்தான் என்று பழி சுமத்தப்பட்ட தன் காதலன். இடையில் மீனாக்ஷி பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கு போல ஆனாள்.
ராதாவின் அறைக்குள் மீனாக்ஷி வர
" என்ன மீனாக்ஷி ரவுண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சதா?" என்று கேட்க மீனாக்ஷியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ராதாவை அணைத்து அழுதவள்
" அண்ணி, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லம் நடக்குது. காதலிக்கும் போது எனக்கு க்ரிஷ்ஷ எவ்வளவு பிடிக்கும் தெரியுமா. ஆனா அந்த இன்சிடண்ட்கு அப்புறம் க்ரிஷ் கிட்ட பேசாததுதான் நான் செஞ்ச மிகப்பெரிய தவறோன்னு தோனுது. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஷக்தி என்ன மகாராணி மாதிரி வெச்சி பார்த்துக்கிறாரு. என்னதான் அவரு என்ன மகாராணி மாதிரி பார்த்துக்கிட்டாலும் அவருக்கு நான் கிடைக்குறதுக்காக அவரு பண்ண வேலையில என் காதல் செத்துப்போனது மட்டும் இல்லாம ஒரு அப்பாவியோட வாழ்க்கையும் அந்தரத்துல நிற்குது.
எனக்கு பைத்தியம் பிடிக்கிறாப்போல இருக்கு அண்ணி. எங்க க்ரிஷ் கிட்ட கொஞ்சம் அன்பா பேசினா ஷக்தி மேல உள்ள கோவத்துல என் மனசு க்ரிஷ் மேல தாவிடுமோன்னு பயமா இருக்கு. என்னால ஷக்தி பண்ணதையும் ஈசியா எடுத்துக்க முடியல. பேசாம சூசைட் பண்ணிக்கலாமான்னு இருக்கு. நான் அன்னைக்கே செத்து போய் இருக்கலாம். இப்போ என்னால எல்லோருக்குமே ப்ராப்ளம்" என்று கூற அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த ராதா
" இங்க வா மீனாக்ஷி" என்று அவளை அருகில் அழைத்து அவளின் கையை தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக்கொடுத்தவள்
" உன் வாழ்க்கையில இரண்டாவது தடவையா முடிவெடுக்க உனக்கு ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. இப்போ உன்னால ஷக்தி வேணுமா இல்ல க்ரிஷ் வேணுமான்னு டிசைட் பண்ண முடியும். இதுதான் கடைசி வாய்ப்பு. க்ரிஷ்தான் வேணும்னா நான் அவன்கிட்ட பேசுறேன். நான் சொன்னா உன் விசயத்துல கண்டிப்பா அவன் கேட்பான். ஷக்தியால உன் முடிவ எதிர்த்து எதுவுமே பண்ண முடியாது. ஆனா ஷக்திதான் வேணும்னா இது இப்படியே இருக்கட்டும். எல்லோரும் க்ரிஷ் கால்ல விழுந்து மன்னிப்ப கேட்டுக்கலாம். ஆனா ஒரே ஒரு விசயம் சொல்ரேன் மீனாக்ஷி. க்ரிஷ்ஷ ஒரு காதலனா மட்டும்தான் உனக்கு தெரியும். க்ரிஷ்ஷோட கணவன் என்கிற முகம் எப்படி இருக்கும்னு தெரியாது. ஆனா ஷக்தியோட கணவன் என்கிற முகம் உனக்கு தெரியும். எல்லா பொண்ணுங்களும் ஏங்குற ஒரு முகம் அது. இப்படி ஒரு கணவன் எந்த பொண்ணுக்கு கிடைச்சாலுமே அவங்க அத தவற விடமாட்டாங்க. வீட்டுக்கு போயி தெளிவா யோசி. நீ எந்த முடிவெடுத்தாலும் இந்த ராதா உன்கூட இருப்பேன்" என்றார். ஆனால் ராதாவுக்கு மீனாக்ஷியின் முடிவு முன்னாடியே தெரிந்திருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro