21
காலேஜ் கல்ச்சரல்ஸ் ஆரம்பமாகியது. மூன்றாம் வருட மாணவர்கள் இல்லை எனினும் எந்த ஒரு தடங்களும் இன்றி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த நிகழ்வை சரியாக ஒழுங்கமைத்து அதை செயற்படுத்திக்கொண்டிருக்கும் மீனாக்ஷி மற்றும் சாலமனுக்கு எல்லோரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கடைசியாக சினிமா தியேட்டரில் நடந்த சண்டைக்கு பின் இந்த தடவையும் க்ரிஷ்ஷே மீனாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனான். அவளும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் காதலுடன் அவன் கேட்ட மன்னிப்பையும் வழங்கினாள். இருந்தாலும் கல்ச்சரல்ஸ் நடக்கும் இந்த நாட்களில் அவளால் க்ரிஷ்ஷுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை.
எல்லா நிகழ்வுகளும் சரியாக நடைபெற பாட்டு போட்டியில் மட்டும் சிறு குழறுபடி ஏற்பட்டது. காரணம் கடைசி தினத்தில் பாட்டுப்போட்டியை வைக்க, எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் பாட நேரம் கொடுத்து இரண்டாவது சுற்றுக்கு அந்த போட்டியை கொண்டு செல்ல நடுவர்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை. உடனே நடுவர்கள் பாடல்கள் வெளியாகி, திரைப்படம் வெளியிடப்படாமல் இருக்கும் படங்களில் இருந்து டூயட் பாடல்களை பாடுமாறு போட்டியாளர்களை கேட்க அங்கு சிறு குழப்பம் உண்டானது. காரணம் அப்படியான பாடல்கள் மிக சொற்பமாகவே இருந்தது. அப்படியான பாடல்கள் இருந்தாலும் அந்த பாடல் மூலம் நடுவர்களை கவர்வது போல உள்ள பாடல்கள் மிக மிக சொற்பமே. ஆனால் மீனாக்ஷிக்கு ஒரு பாடல் மனதில் உதித்தது. ஆனால் அவளுக்கு ஜோடியாக யாரை பாட வைப்பது என்பதில்தான் பிரச்சனை ஆரம்பமானது.
இவர்களின் காலேஜில் பாடல் படிக்கும் பெண்கள் அதிகமாக இருந்தாலும் ஆண்கள் மிகவும் குறைவு. ஷக்தி ஒரு அளவுக்கு பாடுவான். அதுவும் சூப்பராக எல்லாம் பாடுவான் என்று கிடையாது. ஆனால் அவனை ஒரு சப்போர்டிங்க் சிங்கர் ஆக பயன்படுத்த முடியும். கடைசியில் வேறு வழியின்றி ஷக்தியையே மீனாக்ஷியுடன் டூயட் பாட அழைக்க அவனும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டான். இந்த பாடல்தான் இவர்கள் மூவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்க போகின்றது என்று அப்போது இவர்களுக்கு தெரியவில்லை.
பெண்- ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே..
போட்டி போட்ட தாழம்பூவின் பூட்டு உடைகிறதே..
சல்லாப வெயில் அடிக்க கல்லூறும் புயல் அடிக்க
ஆசை மொட்டு விட நாணம் கட்டிலிட கூந்தல் கூட சுடுதே..
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டிவிடுதே..
ஆண்-அடியே அழகு பெளர்னமியே...
ஆளை விழுங்கும் மல்லிகையே...
மூடி வைத்த பாகங்களால் மூச்சில் உஷ்னம் மூட்டுகிறாய்...
பெண்-சாரல் மழை போல் விழுந்துவிட்டாய்...
வேர்கள் முழுதும் நனைத்துவிட்டாய்...
மழையாய் இருந்த எனது மனசில்..
விதையாய் விழுந்து முளைத்துவிட்டாய்...
ஆண்-உன் மெளனங்களால் என்னை தாக்கிவிட்டாய்...
மத்தளமாய் என்னை மாற்றிவிட்டாய்...
பெண்-என் பொக்கிசங்கள் திருடிவிட்டாய்...
பூவில் காற்றாய் வருடிவிட்டாய்...
ஆண்-பெண்ணே உன்னை தாதா...
பெண்-போர்வையாக வாவா...
பெண்-உயிரின் மூச்சில் நார்கிழித்தேன்...
உனக்கு என்னையே சரம் தொடுத்தேன்...
எரியும் உலையில் கொதி கொதித்தேன்...
எனக்குள் இறங்கு உனை அழைத்தேன்...
ஆண்-வாழை இலைபோல் தனித்திருத்தேன்...
காற்றாய் நுழைந்து கிழித்துவிட்டாய்...
தரிசு நிலம் போல் தவித்திருந்தேன்...
உயிரை உயிரால் உழுதுவிட்டாய்...
பெண்-நான் விறகு என நினைத்திருந்தேன்...
என் நரம்பை மீட்டிவிட்டாய்...
ஆண்-சிறு தாமரை போல கவிழ்ந்திருந்தேன்...
சூரியனாய் திறந்துவிட்டாய்...
பெண்-மூங்கில் காற்றாய் வாவா...
ஆண்-முத்தம் பெய்வோம் வாவா...
இவர்கள் இருவரும் இந்த பாடலை பாடி முடிக்க இந்த முறை மீனாக்ஷியை விட ஷக்தி மிகவும் ரசித்து பாடியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி ஷக்தியின் பர்பாரமன்ஸ்கு இவர்களின் கல்லூரிக்கே முதலிடம் கிடைத்தது. மீனாக்ஷி, ஷக்தி இருவருக்குமே மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் க்ரிஷ்ஷிடம் சென்றது.
மீனாக்ஷியின் பாடும் அழகை காண வந்த க்ரிஷ் டூயட் பாட்டு என்றதும் மிகவும் ஆவளாக காத்திருந்தான். பாடல் ஆரம்பித்ததுமே அவனின் பின்னால் இருந்த மற்ற கல்லூரி மாணவர்கள் சிலர்
" மச்சி, இந்த சாங்க் செம்ம எரோடிக் சாங்க்டா. ஆனா படிக்கிறப்போ ஃபீல் பண்ணி படிச்சா சூப்பரா இருக்கும். அதுவும் ஆம்பளை படிக்கிற லைன விட பொண்ணு படிக்கிற லைன்லாம் செம்மயா இருக்கும்" என்று ஒருவன் கூற அதற்கு பதிலாக இன்னொருவன்
" டேய் பார்த்தியா எப்படி ஃபீல் பண்ணி படிக்கிறாங்கன்னு. அதுவும் அந்த மேல் சிங்கர பாரேன். சூப்பரா அனுபவிச்சி படிக்கிறான். கண்டிப்பா முதல் பரிசு இவனுங்களுத்தான். பொண்ணும் சூப்பரா இருக்கா. அதுவும் இவன் படிக்கிறதுக்கு அவ கொடுக்குற ரியாக்சன பார்த்தா ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி தெரியுதுடா" என்று கூறினான். அதற்கு இன்னொருவன்
" என்னதான் இருந்தாலும் இப்படியான ஒரு சாங்க எந்த பொண்ணாச்சும் ஒரு பையன் கூட மேடையில பாட ஒத்துக்குவாளா? இவ பாடுறான்னா கண்டிப்பா அந்த பையன் இவளோட லவ்வராத்தான் இருப்பான்" என்று இவர்கள் ஷக்தி மற்றும் மீனாக்ஷியை சேர்த்து வைத்து பேச க்ரிஷ்ஷிற்கு பற்றிக்கொண்டு வந்தது. அவன் மீனாக்ஷி எப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி பாட வேண்டியதாகியது, யார் கூட சேர்ந்து பாடினால் என்று யோசிக்கும் நிலமையில் அவன் இல்லை. அவனுக்கு தோன்றியது எல்லாம் மீனாக்ஷி எப்படி இன்னொரு ஆணுடன் இப்படி பாடலாம் என்பதே. அது ஷக்தியே என்றாலும் அவன் மனது அதை ஏற்கவில்லை. பரிசு வழங்கும் வைபவத்திற்கு முன்பாகவே அவன் மண்டபத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டான். மீனாக்ஷி அவளின் பரிசை வாங்க செல்லும் சமயம் க்ரிஷ்ஷை தேடினாள். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. மண்டபத்தில் இல்லாத ஒருத்தனை எங்கே என்று தேடுவது.
போட்டிகள் அனைத்தும் முடிந்து எல்லோரும் வீடு செல்ல ஆயத்தமாகினர். ஒரு வழியாக க்ரிஷ்ஷை கண்டுபிடித்து மீனாக்ஷி அவனிடம் தனது பரிசை காட்ட வர அவன் கோபத்துடன் இருந்தான். இப்போதைய அவனின் கோபம் எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை.
" க்ரிஷ் பாட்டு போட்டியில நான் பர்ஸ்ட் ப்ரைஸ் வின் பண்ணிருக்கேண்டா" என்று அவள் பெற்ற சிறு வெற்றிக்கோப்பையை காட்ட அவன் பதில் ஏதும் கூறாமல் முகத்தை திருப்பிக்கொண்டான். மீனாக்ஷியுடன் வந்த ரேஷ்மாவிற்கு இவனின் செயல்கள் சுத்தமாக பிடிக்கவில்லை.
" க்ரிஷ் இப்போ எதுக்கு ஓவரா சீன போடுற. நானும் ஆரம்பத்துல இருந்தே பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். எதுக்கெடுத்தாலும் இவ மேல எரிஞ்சி விழுற. உன் ப்ராப்ளம்தான் என்ன" என்றவள் மீனாக்ஷியை பார்த்து
" இங்க பாரு மீனாக்ஷி, நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இவன் இப்பவே இப்படி பண்றான். உங்க லவ்வ நெக்ஸ்ட் ஸ்டேஜ்கு கொண்டு போக முன்னாடி ஒன்னுக்கு ரெண்டு வாட்டி நல்லா யோசிச்சிக்க" என்று கூற கோபத்தில் க்ரிஷ் ரேஷ்மாவை பார்த்து முறைத்தான்.
" நீ என்ன டேஷ்கு எங்களுக்குள்ள வர்ற. உன்ன யாரு கூப்பிட்டா இப்போ. மீனாக்ஷி என்னோட லவ்வர். நாளைக்கு எனக்கு பொண்டாட்டி ஆக போறவ. இனிமே நீ எங்களுக்குள்ள வந்த உன்ன கேவலமா திட்டுவேன். உன் வாழ்க்கையில நீ அந்த வார்த்தைகள் எதுவுமே கேட்டுக்கூட இருக்க மாட்ட. இப்போ மூடிக்கிட்டு கிளம்பு" என்று கூற ரேஷ்மாவிற்கு கோபம் வந்தது. இவ்வளவு நாட்களில் யாரும் அவளை இப்படி திட்டியது கிடையாது. இங்கு மீனாக்ஷி மீது யாருக்கு உரிமை அதிகம் என்ற போட்டி போல அவர்கள் இருவரும் அடித்துக்கொள்ள தயாராகினர்.
" எது பொண்டாட்டியா? டேய் அதுக்கு முதல்ல நீ அவள மதிக்க கத்துக்க. உன்ன காதலிச்ச இந்த கொஞ்ச நாள்ள அவ தன்னோட நிம்மதிய இழந்ததுதான் அதிகம். எப்போ பாரு ஏதாச்சும் ஒன்னுக்கு அவகிட்ட சண்டை போடுறது. இல்ல அவகிட்ட மோசமா நடந்துக்க டிரை பண்றது. நீ காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து நீ இந்த ரெண்டை தவிர வேற என்ன பண்ண. சொல்லு பார்க்கலாம்" என்று கூற க்ரிஷ்ஷிற்கு மட்டிலடங்கா கோபம் வந்தது.
" ரேஷ்மா இவ என் லவ்வர். நான் இவகிட்ட என்ன வேணா பண்ணுவேன். ஏன்னா இவ எனக்கு சொந்தம். எனக்கு மட்டும்தான் சொந்தம். நான் உன்கிட்ட வந்து மோசமா நடந்துகிட்டா நீ சொல்றதுல நியாயம் இருக்கு. ஆமா முத்தம் கேட்டது மோசமான செயலா? நான் என் காதலிகிட்ட முத்தம் கேட்டேன். அதுல உனக்கு என்ன ப்ராப்ளம். நான் என்ன பண்ண சொன்னாலும் மீனாக்ஷி கேட்பா" என்று அந்த ' என்ன பண்ண சொன்னாலும்' என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி சொல்ல மீனாக்ஷிக்கு ஒரு மாதிரியாக ஆகியது. அவனை நோக்கியவள்
" க்ரிஷ் நீ கோபமா இருக்கே. வா நம்ம நாளைக்கு இது பத்தி பேசலாம்" என்று அவனது கையை பிடிக்க செல்ல அவன் அவள் கைகளை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இன்று மீனாக்ஷியிடம் தன் காதலை கூறலாம் என்று வந்த ஷக்திக்கு க்ரிஷ்ஷும் அவளும் காதலிப்பது தெரிய அவன் மனது சுக்கு நூறாகியது. க்ரிஷ் கூறிய 'என்ன பண்ண சொன்னாலும்' என்ற வார்த்தை அவன் மனதை கொன்றது. தான் காதலித்த பெண் மீது வேறொருவன் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் போது ஏற்படும் இயலாமை அது. அவனால் எதுவுமே செய்ய முடியாமல் மெளனமாக அழ மட்டுமே முடிந்தது. மீனாக்ஷி என்ற அவனின் காதலி அவன் அருகில் இருந்து ஏதோ ஒரு சூனியத்தை நோக்கி புள்ளியாக போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அவன் தந்தை கூறிய வார்த்தைகள் " வெற்றிதான் ஒரு மனிதனை உயர்த்தும்" என்ற போதனையும் சம்பந்தமில்லாமல் அவன் மனதில் தோன்றியது.
------------
ஹாய் வட்டீஸ்,
மறுபடி ஒரு திருத்தம். 10 வது அப்டேட்டில் ரூபினி க்ரிஷ்ஷிடம் அவன் என்ன படித்துள்ளான் என்று கேட்டதற்கு அவன் 3 வருடம் மருத்துவம் படித்ததாக கூறுவான். அந்த மூண்று வருடத்தை 2 வருடமாக மாற்றியுள்ளேன்..
ஒரு வாசகரின் வேண்டுகோளுக்கு இணங்க இனி வாரத்துல்கு இரண்டு அப்டேட்கள் மட்டுமே வரும்.. திங்கள , வியாழன் அல்லது ஞாயிறு, புதன் கிழமைகளில்.
comments களுக்கு ரிப்ளை செய்ய முடியவில்லை. ஆபீஸ்ல செம்ம பிசி. மன்னிகவும். நேரம் கிடைக்கும் போது ரிப்ளை பண்ணிடுறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro