Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

20

காலேஜ் கல்ச்சரல்ஸ் ஆர்கனைசிங்க் ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக சென்றது. மீனாக்‌ஷிகூட மிகவும் சந்தோசமாக தனது வேலைகளை சுறுசுறுப்பாக செய்தாள். மூண்றாம் வருட மாணவர்கள் பலர் காலேஜில் இல்லாதது இவர்களுக்கு மிகவும் இலகுவாக இருந்தது. இல்லை என்றால் இரண்டாம் வருட மூன்றாம் வருட மாணவர்கள் என்ற பிரச்சினைகள் வந்திருக்கும். இன்று அது கூட இல்லாமல் எல்லாம் மிகவும் ஸ்மூத்தாக எல்லாமே போய்க்கொண்டிருந்தது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும் மீனாக்‌ஷி தனது நேரத்தை க்ரிஷ்ஷிற்கு ஒதுக்கினாள்.

" மீனாக்‌ஷி நம்ம இன்னைக்கு சினிமா போகலாமா?" என்று க்ரிஷ் கேட்க அவள் அவனை முறைத்தவள்

" ஏண்டா தம்பி உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா. உன்ன காதலிச்சதும்தான் காதலிச்சேன், எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. அப்படி இருந்தும் உன்கூட ரெண்டு வாட்டி நான் சினிமாக்கு வந்திருக்கேன். இந்த பிசி செட்யூல்லயும் மறுபடி கூப்பிடுறியேடா?" என்று கூற அவன் கோபமானான்.

" இங்க பாரு மீனாக்‌ஷி, உனக்கு வர இஷ்டம் இல்லைன்னா சொல்லு. இந்த தம்பினு கூப்பிடுற வேலை எல்லாம் வெச்சிக்காத. எனக்கு செம்ம கடுப்பாகுது" என்று முகத்தை திருப்பிக்கொண்டான். அவனின் கோபம் மீனாக்‌ஷிக்கு சிறு பிள்ளையின் கோபம் போல தோன்றியது.

" டேய் செல்ல குட்டியில்ல, புஜ்ஜு குட்டியில்ல, என் அம்மு குட்டியில்ல. இன்னைக்கு முடியாதுடா. ப்ளீஸ் டா கண்ணா. புரிஞ்சிக்க. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள். இது எதற்கும் நான் அசரமாட்டேன் என்பது போல க்ரிஷ் இருந்தான்.

" சரி நீ இரண்டு நாள் பொறுத்துக்கிட்டின்னா நீ கேட்டியே அந்த 'ஏதோ மின்னல்' சாங்க் டூயட் வெர்சன் நீயும் நானும் பாடலாம். ஏன்னா அந்த பாட்டு ரொம்ப மோசமான பாட்டுடா. அதை பாடினதுக்கு அப்புறம் அதையே சொல்லி என்ன கலாய்க்க கூடாது" என்று கூற அவன் சந்தோசமானவன்

" சரி இரண்டு நாள் பொறுத்துக்கிறேன். இரண்டு நாள் கழிச்சி நீ சினிமாக்கு போகவும் வரனும். இன்னைக்கு நீ வர முடியாதது என்றதுக்கு பனிஷ்மண்ட்டா வேணும்னா அந்த பாட்ட பாடுறத நம்ம வெச்சிக்கலாம்" என்று கூற அவள் அவன் புஜத்தில் அடித்தவள் " சரியான கேடிடா நீ" என்றாள்.

இரண்டு நாட்களின் பின் தியேட்டரில்,

" மீனாக்‌ஷி, அடியேய் மீனாக்‌ஷி " என்று அவளின் காதுக்கு அருகில் க்ரிஷ் கிறக்கமாக கூப்பிட்டான்.

" டேய் இப்படி காத கடிக்காம பேசாம படத்த பாரு" என்று கூற அவன் மேலும் அவளை நெருங்கி

" மீனாக்‌ஷி நம்ம லவ் பண்ணி மூணு வாரம் முடிஞ்சது. இதுவரைக்கும் நம்ம ஒரு முத்தம் கூட கொடுத்துக்கல்ல. ப்ளீஸ்டி ஒரே ஒரு முத்தம் கொடேன்" என்று கூற அவள் அவனை முறைத்தவள்

" டேய் ரொம்ப பண்ணாத, பின்னாடி ரேஷ்மா இருக்கா" என்று கூற அவன்

" ஹேய் அவ படம் பார்க்குறாடி. ஒரே ஒரு முத்தம்தான். ஜஸ்ட் அ கிஸ்" என்று கெஞ்சினான்.

" க்ரிஷ் இங்க பாரு. என்னால முத்தம்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா உங்க அக்காகிட்ட கேட்டு உனக்கு முத்தம் கொடுக்கட்டுமா?" என்று கூற அவனுக்கு கோபம் வந்தது.

இன்றுடன் இவர்கள் காதலித்தபின் சினிமாவுக்கு வருவது மூண்றாவது முறை. ஒவ்வொரு தடவை சினிமாவுக்கு வரும் போது ரேஷ்மாவையும் இவர்கள் அழைத்துக்கொள்வர். காதலிக்கும் முன்னரும் இவர்கள் நண்பர்கள் பட்டாலமாக சினிமாவுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களின் நண்பர்கள் எல்லாம் கல்ச்சரல்ஸின் பிசி என்பதால் இவர்கள் மூவரும் சினிமாவுக்கு செல்வது யாருக்கும் தவறாக தோன்றவில்லை.

கடந்த மூன்று தடவையும் சினிமா ஆரம்பிக்க லைட் ஆஃப் ஆனதும் க்ரிஷ் மீனாக்‌ஷியிடம் முத்தத்திற்காக கெஞ்ச ஆரம்பித்துவிடுவான். மீனாக்‌ஷியும் ஏதாவது ஒரு காரணம் கூறி அந்த முத்தத்தை மறுத்துவிடுவாள். மீனாக்‌ஷி ஒரு விடயம் மட்டும் தெளிவாக இருந்தாள். எந்த ஒரு விடயத்தையும் ஆரம்பிப்பது கடினம். ஆனால் அதுவே ஆரம்பித்து விட்டால் அடுத்த தடவை அதை செய்வதில் பயம் இருக்காது. என்னதான் க்ரிஷ்ஷை காதலிப்பதாக அவனிடம் அவளே வெளிப்படையாக கூறினாலும் உடல் ரீதியான தொடுகையை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆனால் க்ரிஷ் இதை வேறு மாதிரி சிந்திக்க தொடங்கினான். தன்னை மீனாக்‌ஷி நம்பவில்லையோ என்பது அவனின் எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இவர்கள் சினிமாவுக்கு வந்தால் அது பிரச்சினையில்தான் முடியும். அதை சமாதானம் செய்யும் தூதுவராக ரேஷ்மா இருப்பாள். இன்றும் ரேஷ்மா அதே யோசனையில் இருந்தாள். இன்று என்ன பிரச்சனை வரபோகின்றதோ என்று.

படம் முடியும் முன்னரே க்ரிஷ் எழுந்து வெளியில் செல்ல ரேஷ்மாவிற்கு புரிந்தது இன்றும் ஏதோ ஒரு புது பஞ்சாயத்து உள்ளது என்று. ஆரம்பத்தில் இது ரேஷ்மாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளையும் மதித்து சமரசத்திற்கு இவர்கள் அழைப்பது போகப்போக அவளுக்கும் பிடித்தமான ஒன்றாகி போனது. ஆனால் என்றும் அவள் மீனாக்‌ஷியை விட்டுகொடுத்ததில்லை.

வெளியில் வந்த க்ரிஷ் பின்னாலேயே மீனாக்‌ஷியும் வர அவளை தொடர்ந்து ரேஷ்மாவும் வந்தாள்.

" என்ன க்ரிஷ் பாதியிலேயே வந்துட்ட" என்று ரேஷ்மா கேட்க க்ரிஷ் கோபத்தில்

" நீ எதுக்கு எப்ப பார்த்தாலும் எங்க கூட ஒட்டிக்கிட்டு வர. உனக்கு வேற வேலை இல்லையா?" என்று கேட்டான். இவன் இப்படி கேட்பான் என்று பெண்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. க்ரிஷ் கோபமாக உள்ளான் என்பது அறிந்த மீனாக்‌ஷி

" க்ரிஷ் இப்போ நீ வீட்டுக்கு போ. நம்ம நாளைக்கு பேசலாம்" என்று கூற அவனுக்கு கோபம் அதிகமானது.

" இங்க பாரு மீனாக்‌ஷி. நீ என்ன விட வயசுல பெரியவதான். நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக எல்லா இடத்துலயும் என்ன டாமினேட் பண்ணனும்னு நினைக்காத. ஒரு கிஸ்தானே கேட்டேன். அதுக்கு நீ ரொம்ப பிகு பண்ற. இதுல இவ வேற எப்ப பாரு நம்ம கூட ஒட்டிக்கிட்டு" என்று ரேஷ்மாவை பார்த்து கூற ரேஷ்மா எதுவும் கூறாமல் இருந்தாள். ஆனால் மீனாக்‌ஷியால் அப்படி இருக்க முடியவில்லை. ரேஷ்மா இவர்களுடன் வருவதே மீனாக்‌ஷியின் வற்புறுத்தலினால்தான்.

" க்ரிஷ் சொன்னா கேளு, இப்போ நீ ரொம்ப கோபமா இருக்க. ப்ளீஸ் நம்ம நாளைக்கு இது பத்தி பேசலாம்" என்றாள். அவனும் கோபமாக பதில் எதுவும் கூறாமல் தனது மோட்டார்பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்துவிட்டான். அவனின் வேகம் பார்த்து இருவருக்குமே பயம் தொற்றிக்கொண்டது.

அவன் சென்றதும் ரேஷ்மாவிடம் மீனாக்‌ஷி

" சாரிடி, அவன் அப்படி பேசியிருக்க கூடாது. என்னாலதான் அவன்கிட்ட உனக்கு பேச்சு கேட்க வேண்டியதா போயிடிச்சி" என்று கூற அவள்

" ஹேய் லூசு, நான் உன் ஃப்ரெண்டி. உனக்காக இது கூட பண்ண மாட்டேனே. அப்புறம் வழமைபோல சார் கிஸ் கேட்டிருப்பாரு. நீ நான் இருக்கேன்னு சொல்லிருப்ப. அந்த கோபத்த என் மேல காட்டிட்டு போறாரு. ஆமா ஒரு கிஸ் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவ?" என்ற கேட்க மீனாக்‌ஷி

" காதல்தான் ரொம்ப ஈசியா வந்திடிச்சி ரேஷ்மா. ஆனா பிசிக்கல் டச்ச என்னால ஈசியா அலவ் பண்ண முடியல. ஏன்னா ஒரு வாட்டி பண்ணிட்டோம்னா அதுக்கு அப்புறமா அது கண்டினியூ ஆகும். எனக்கு அதுதான் ரொம்ப பயமா இருக்கு. உனக்கு ஒன்னு தெரியுமா. க்ரிஷ் ஒரு குழந்தைடி. நான் அவன காதலிக்கிறத விட என்ன அவன் அதிகமா காதலிக்கிறான். நைட் ஆனதும் பாரு, ஒரு சின்ன குழந்தை மாதிரி என்கிட்ட சரண்டர் ஆகிடுவான். எனக்கு அவன்கிட்ட இப்போலாம் ரொம்ப பிடிச்சது அவனோட கோபமும் அது வந்த வேகத்துலயே காணாம போறதும்தான்" என்றாள்.

" காதல் பார்ப்பது பாதி கண்ணில், கல்யாணாம் பார்ப்பது நாளு கண்ணிலடி பெண்ணே" என்று கலாய்த்தாள்.

" என்ன இதுக்கும் மணிரத்னம் சாங்க்தானா? அது என்னமோ உன்மைதான் ரேஷ்மா. காதலிக்கும் போது எதுவுமே நமக்கு தெரியிறது இல்ல. ஆனா ஒரு விசயத்துல நான் ரொம்ப தெளிவா இருக்கேன். கல்யாணம் ஆகுற வரைக்கும் க்ரிஷ் கூட நோ பிசிக்கல் டச்" என்று கூற

" அப்போ நீ முன்னாடி லவ் பண்ண பசங்களையும் டச் பண்ண விடல்லையாடி" என்று கேட்டவளுக்கு மீனாக்‌ஷி ஒரு முறைப்பை பதிலாக கொடுத்து

" இல்லை" என்றாள்.

வீட்டிற்கு வந்த க்ரிஷிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதற்கு காரணம் மீனாக்‌ஷி தான் எது கேட்டாலும் தன்னை ஒரு சிறு பையன் போல நடத்துவது அவனுக்கு பிடிக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக எது பற்றியும் யோசிக்காமல் இருந்தான். சிறிது நேர அமைதிக்கு பின் அவன் மனதில் மீனாக்‌ஷி மேல் காதல் ஊற்று பொங்கியது. இது ஒரு வழமையான விடயம்தான். எப்போதும் அவளுடன் கோபித்துக்கொண்டு வந்தாலும் அவனே அவளிடம் வலிய சென்று பேசிவிடுவான். அதற்கு இருந்த ஒரே ஒரு காரணம் ராதவை தனக்கு எப்படி பிடிக்குமோ அதே இடத்தில் இப்போது மீனாக்‌ஷியை வைத்து பார்க்க ஆரம்பித்திருந்தான்.

திருமணத்தின் பின் தனக்கு ராதாவின் அன்பு கிடைக்காது என்று நினைத்தவனுக்கு இப்போது மீனாக்‌ஷி அந்த அன்பை கொஞ்சமும் குறைவில்லாமல் கொடுப்பாள் என்ற நிம்மதி அவனுக்கு இருந்தது. மீனாக்‌ஷி மீது எவ்வளவுதான் அவன் கோபம் கொண்டாலும் அந்த கோவம் அடுத்த நாளைக்கு சென்றதில்லை. இது மீனாக்‌ஷிக்கும் நன்றாகவே தெரியும்.

------------
ஹாய் வட்டீஸ், ஒரு குட்டி திருத்தம். முதல் அத்தியாயத்தில் க்ரிஷ் மீனாக்‌ஷியை கையில் குழந்தையுடன் கண்டதும் " மூண்று வருடங்கள் கண்களால் கண்டும், கைகளால் தொட்டு விளையாடிய முகம்" என்று கூறியிருப்பேன். அதில் இருந்த அந்த மூண்று வருடம் என்ற வசனத்தை நீக்கிவிட்டேன். காரணம் இவர்கள் காதல் மூண்று வருடம் நீடிக்கவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro