14
அன்று.........
ராதா காதலித்த விடயம் க்ரிஷ்ஷிற்கு தெரியாது. இருந்த போதும் அவள் தனக்காக அந்த காதலையே தூக்கி எறிய முனைந்தது அவனின் உள்ளத்தில் ஒரு பெரிய ஒரு அலையை ஏற்படுத்தியது. என்னதான் சுரேஷ் மீது க்ரிஷ்ஷிற்கு கோபம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தான் செய்ததும் தவறுதான் என்பதை க்ரிஷ் உணர ஆரம்பித்தான். ஆனால், அவனால் சுரேஷை தன் அக்காவின் கணவனாக நினைத்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் தன் அக்கா சுரேஷை காதலித்தது அவனுக்குள் பல யோசனைகளை கொண்டு வந்தது.
அடுத்த நாள் காலேஜ் சென்றவன் முதல் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தான். ராகிங்க் செய்யவேண்டும் என்று அவனுக்கு ஆதரவு தெரிவித்த அவனின் நண்பர்கள் பட்டாளம் கூட இன்று, முதல் வருட மாணவர்களை வரவேற்க சென்றுவிட்டனர்.
க்ரிஷ் பங்க்சனில் இல்லாததை கண்ட மீனாக்ஷி அவனை தேடிக்கொண்டிருந்தாள். கடைசியில் அவன் ஒரு பெரிய மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில் தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டு அவன் அருகில் சென்றவள் அவன் அருகிலேயே அமர்ந்தாள். தான் வந்து அமர்ந்தது கூட தெரியாமல் க்ரிஷ் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை கண்ட மீனாக்ஷி
"ஹ்ம்ம்க்க்ம்ம்" என்று தன் தொண்டையை கனைக்க அவள் பக்கம் திரும்பியவன் அவளை ஒரு வெற்று பார்வை பார்த்தான்.
" சாரி க்ரிஷ், அன்னைக்கு நான் உனக்கு சப்போர்ட்டா கைய தூக்கலன்னு என் மேல கோவத்துல இருப்ப. அங்கிருந்த எந்த பொண்ணுமே ராக்கிங்க்கு சப்போர்ட்டா கைய தூக்காதப்போ நான் மட்டும் சப்போர்ட் பண்ணா பார்க்குறங்க வித்தியாசமா நினைப்பாங்கன்னுதான் கைய தூக்கல. ஆனா அது உன்ன இந்தளவுக்கு பாதிக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல்ல. ஐ அம் ரியல்லி சாரி" என்று கூறினாள்.
தான் தனியாக இருக்க காரணம் காலேஜில் நடந்த குழப்பம் என மீனாக்ஷி நினைத்தது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனாலும் அவனும் அதை வைத்து மீனாக்ஷியை கலாயக்க எண்ணி
" ஆமா மத்தவங்க பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா நீ கூட எனக்கு சப்போர்ட் பண்ணலன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கவலையாச்சு தெரியுமா?" என்று அவன் இல்லாத ஃபீலிங்க்ஸை வரவழைத்து பேச மீனாக்ஷி அப்படியே உருகிவிட்டாள்.
" ஐ அம் சாரி, ஐ அம் சாரி க்ரிஷ். இனிமே அப்படி பண்ணமாட்டேன். ஐ அம் ரியல்லி சாரி" என்றதும் அவன் மீனாக்ஷியை மேலும் கலவரமாக்க எண்ணி தனது நடிப்பை தொடர்ந்தவன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான்.
" க்ரிஷ் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும், என்ன பத்தி தப்பா நினைக்க மாட்டியே?" என்று கேட்க அவன் புருவத்தை உயர்த்தி அவளை என்ன என்பது போல கேட்டான். அதற்கு அவள்
" நான் ஒருத்தர காதலிக்கிறேன். நீதான் என் காதல முழுமைப்படுத்த ஹெல்ப் பண்ணனும்" என்று கேட்க அவன்
" என்ன ஷக்திய லவ் பண்றியா. நான் நினைச்சேன்டி, வந்த முதல் அன்னைக்கே அவன சூப்பர் ஹேண்ட்சம்னு சொன்ன ஆளுதானே நீ" என்று கூற அவளின் முகபாவனை மாறியது. இவளை கலாய்த்ததில்தான் அவள் முகம் மாறியது என்று தவறாக நினைத்த க்ரிஷ்
" ஹேய் ஸ்பை கேர்ள் கூல் கூல். நான் உன்ன சும்மா கலாய்க்கத்தான் அப்படி சொன்னேன். நீ நல்ல பொண்ணுதான். ஷக்திகிட்ட பேசனுமா?" என்று கேட்க அவள் மனதுக்குள்
' எரும எரும, என்ன பேச விடுதா இது. அவனே இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்கான்' என நினைத்தவள் எதுவும் கூறாமல் அங்கிருந்து எழும்பினாள்.
" என்ன லவ் பண்ணதும் வெட்கம் வந்திடிச்சா. எல்லாம் என் நேரம், நீ வெட்கப்படுற கருமத்த எல்லாம் நான் பார்க்க வேண்டியிருக்கு. ஆனா இன்னொரு விசயம், உன்ன அண்ணினு எல்லாம் கூப்பிட முடியாது. வேணும்னா பன்னினு கூப்பிடுறேன்" என்று கூற அவள் கோபமாக
" போடா தத்தி தடி மாடு. நீயெல்லாம் கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிள்தான்" என்றவள்
' நம்ம ஃபேஸ் ரியாக்ஷன் அவ்வளவு கேவலமாவா இருக்கு. நம்ம முகத்த கோபமா வெச்சிக்கிட்டா இவன் வெட்கப்படுறியான்னு கேட்குறான்' என மனதில் நினைத்தவள் அங்கிருந்த நகர இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அந்த பக்கமாக க்ரிஷ்ஷை தேடி வந்த ஷக்தி கேட்டு விட்டான்.
மீனாக்ஷி அவளின் அக்கா காணாமல் போன பின் அவளுடைய தனிமையை போக்க பாடல்கள் பாடுவது மற்றும் நாவல்கள் வாசிப்பது என மாற்றியிருந்தாள். கடந்த சில நாட்களாக அவள் வாட்பெட் என்ற செயலியில் அதிகம் கதைகள் வாசிக்க ஆரம்பித்தாள்.
காலேஜ் விட்டு வந்த மீனாக்ஷி அன்றிரவு " ஆகாஷனா" என்ற கதையை படித்தவள் அதில் காதலை நேரடியாக சொல்லாததால் ஏற்பட்ட குழப்பங்களை படித்தவளுக்கு தன் காதலிலும் ஏதும் குழப்பங்கள் வந்துவிடுமோ என பயந்தாள். உடனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியவள் தனக்கு மிகவும் பிடித்த பாடலை வாட்செப்பில் அவளே பாடி க்ரிஷ்ஷிற்கு அனுப்பியவள் அவன் அந்த மெசேஜை பார்க்கும் வரை காத்திருந்தாள்.
வீட்டிற்கு வந்த க்ரிஷ் தன் அக்காவிடம் சென்றான்.
" அக்கா நீ சுரேஷ் மாமாவையே கல்யாணம் பண்ணிக்கக்கா. ஸ்கூல்ல நான் பண்ணதும் தப்புதானே. இருந்தாலும் அவர உனக்கு ஜோடியா ஏத்துக்க என் மனசு ஒத்துக்கல்ல. ஆனா நீ எனக்காக எவ்வளவோ பண்ணியிருக்க. கடைசியில உனக்கு பிடிச்ச வாழ்க்கையையும் எனக்காக நீ இழக்க வேணாம்கா. நான் கொஞ்சம் கொஞ்சமா சுரேஷ் மாமாவ ஏத்துக்க டிரை பண்றேன்" என்று கூற அவனை அணைத்தவள் மிதமாக அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.
" டேய் நிஜமாத்தான் சொல்றியா. உனக்கு விருப்பம் இல்லைன்னா வேணாம்டா. எனக்கு எல்லோர விடவும் நீதாண்டா முக்கியம். உனக்காக நான் எது வேணாலும் செய்வேன். ஏன்னா நீ என்னோட தம்பிடா" என்று கூற க்ரிஷ்ஷிற்கு அவமானமாக இருந்தது. ராதா அவனுக்காக தன் வாழ்க்கையைதே தூக்கி எறிய பார்க்கின்றாள் என்பது அவனுக்கு ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் மறு புறம் குற்ற உணர்வில் இருந்தான். இப்படி தனக்காக வாழும் தன் அக்காவின் காதலை தனது சுயநலத்தால் அழிக்க பார்த்தோமே என்று அவனுக்கு அவன் மீதே கோபம் வந்தது.இனி வாழ்நாள் முழுவதும் தன் அக்காவின் மனதில் ஒரு சிறிய கஷ்டம் கூட வராமல் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான்.
" இல்லக்கா எனக்கு விருப்பம்தான். நான் என்னோட நிலைப்பாட்ட மாத்திக்கிறேன். நீ மாமாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதத்த சொல்லிடு" என்று கூறி அவனின் அறைக்கு சென்றான்.
இங்கு ராதாவுக்கோ சந்தோசத்தில் கை, கால் புரியாமல் மிதந்தாள். க்ரிஷ் அவளின் திருமனத்திற்கு சம்மதம் தெரிவிப்பான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் சம்மதிப்பான் என அவள் நினைக்கவில்லை. இந்த திருமணத்தில் ராதவின் அனுமதி மிகவும் முக்கியமானதாக இருந்தது. காரணம் சுரேஷ் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னமே நிச்சயதார்த்தத்தை முடித்து விடலாம் என சுரேஷின் தாய் நினைத்தார். இது ராதாவுக்கும் தெரியும். ஆனால் இங்கு க்ரிஷ்ஷின் சம்மதம் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்தால் தன் மீது அவனுக்கு கோபம் வரும் என நினைத்ததனால்தான் அன்று சுரேஷிடம் இந்த திருமணம் நடக்காது என்று கூறியிருந்தாள். இவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம் என்று வீட்டாருக்கு தெரியாது. ராதா இந்த திருமனத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் விட்டாள் சுரேஷ் வெளி நாடு செல்லும் முன் அவனுக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்ய அவனின் தாய் முனைப்பாக இருந்தார்.
" ஹலோ எப்படி இருக்கீங்க மாமா?" என்று ராதா சுரேஷிற்கு கால் செய்து கேட்க அவன் குரலில் சுரத்தே இல்லாமல்
" இருக்கேன் ராதா. அம்மா உங்க வீட்டுல என்ன முடிவெடுத்தாங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. உங்கப்பா வேற உன் விருப்பம்தான் அவரு விருப்பம்னு சொல்லிட்டாரு. ஆனா நீ என்னடான்னா விரல் சூப்புர உன் தம்பிக்கு நம்ம கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்க" என்று கூற மறுமுனையில் சிர்த்தவள்
" மாமா அவன் நம்ம கல்யானத்துக்கு ஓக்கே சொல்லிட்டான். நீங்க அத்தைக்கிட்ட சொல்லிடுங்க எங்க வீட்டுல சம்மதம்னு" என்று கூற சுரேஷிற்கு முதன் முதலாக க்ரிஷ் மீது பொறாமை வந்தது. தன்னை காதலித்தவள் அவளின் திருமனத்திற்கு தன் தம்பியின் அனுமதியை வேண்டி நின்றது அவன் காதலை அவள் கொச்சைபடுத்தியது போல தோன்றியது. இருந்தாலும் அவன் ராதாவை உயிருக்கு உயிராக காதலித்தான். ராதாவை எந்த சந்தர்ப்பத்திலும் இழக்க அவன் மனம் ஒப்புக்கொள்ளவிலை.
திருமனத்திற்கு க்ரிஷ் சம்மதம் தெரிவித்தது ஒரு புறம் சந்தோசம் என்றாலும் மறு புறம் தன்னை விட ராதா க்ரிஷ்ஷின் மேல் அதிக அன்பு வைத்திருப்பது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
" சரி ராதா, நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன்" என்று கூற ராதா
" சந்தோசமான விசயம் சொல்லிருக்கேன். நீங்க ஏனோ தானோன்னு பேசுறீங்க" என்று சந்தேகமாக கேட்டாள். தன் குரலில் தெரியும் சிறிய மாற்றத்தையே சரியாக கணிக்கும் தன்னவளை மனதுக்குள் மெச்சியவன்
" ச்சேச்சே அப்படி ஏதுமில்லடி பொண்டாட்டி. இன்னும் இரண்டு வாரத்துல போகனும்னு சொல்லிருக்காங்க. அதான் உன்ன விட்டிட்டு போகனுமேன்னு கவலை" என்று கூற எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல ராதா
" என்ன பார்த்துக என் தம்பி இருக்கான். நீங்க கவலைபடாம போயிட்டு வாங்க மாமா" என்று அவள் சாதாரணமாக கூற அது க்ரிஷ்ஷின் மேல் சுரேஷிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro