11
" ரூபினி நம்ம இப்போ அவசரமா ஹாஸ்ப்பிடல் போகலாம். எனக்கு மீனாக்ஷி எந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்றான்னு தெரியும்" என்று கூற ரூபினி
" இங்க பாருங்க, நான் இப்போ உங்க கூட வந்தா இன்னும் ப்ராப்ளம் அதிகமாத்தான் ஆகும். நீங்க தனியா போங்க. போய் உங்க அக்காகிட்ட பேசுங்க. அக்காமேல இவ்வளவு பாசத்த வெச்சிக்கிட்டு எதுக்கு இந்த வெட்டி வீராப்பு" என்று அவன் தலையில் கைவைத்து அவனின் கேசத்தை அன்பாக கோதிவிட்டாள்.
" அப்புறம் உங்க அக்காக்கு உங்க மேல கோபம்லாம் ஏதுமில்லன்னு நினைக்கிறேன். நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதத்தான் அவங்களால தாங்கிக்க முடியல. நீங்க உங்க அக்காவ பார்த்து உண்மைய சொல்லுங்க. நான் யாரு, நமக்குள்ள என்ன உறவு அப்படின்னு. கண்டிப்பா அவங்க புரிஞ்சிக்குவாங்க" என்று கூற க்ரிஷ் அமைதியானான்.
" என் வாயில நல்லா வந்திடும். வாய் கிழிய அக்காகிட்ட பேசிட்டு என்கிட்ட மட்டும் அமைதியா இருக்குறது. இப்ப உன் பிரச்சினை என்ன" என்று ரூபினி கேட்க அவன் அவள் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியது அவனுக்கு ஒரு வித சுகத்தை கொடுத்தது.
" ப்ளீஸ் ரூபினி, நான் தனியா அங்க போனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீங்க என் கூட வந்தா கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் ஆகும். நானும் டென்சன் ஆகாம இருப்பேன்" என்று கூற இப்போது அமைதியாவது ரூபினியின் முறை ஆனது.
" நான் உங்களுக்கு கொடுக்குறேன்னு சொன்ன டபுள் பேமண்ட கொடுக்குறேன். ப்ளீஸ் ஹாஸ்ப்பிடல் வரைக்கும் வர முடியுமா?" என்று கேட்க அவளும் " சரி" என்றாள்.
இருவரும் மீனாக்ஷி வேலை செய்யும் ஹாஸ்ப்பிடலை அடைந்தனர். அவர்கள் வந்த் ஹாஸ்பிடலை கண்டதும் ரூபினியின் முகம் வியர்க்கத்தொடங்கியது. ஹாஸ்பிடல் உள்ளே அவளை அழைத்துக்கொண்டு க்ரிஷ் செல்ல முயல ரூபினி அவனை தடுத்தாள்.
" க்ரிஷ் எனக்கு வேற ஒரு கஸ்டமர்கிட்ட போகனும். நான் முன்னாடியே சொல்ல மறந்துட்டேன். நீங்க போய் உங்க அக்காவ பாருங்க" என்று கூற க்ரிஷ்
"எதுக்குங்க இப்படி பொய் சொல்றீங்க. இன்னைக்கு முழு நாளும் என்கூட இருக்கேன்னுதானே சொன்னீங்க. இப்போ என்ன வேற ஒரு இடத்துக்கு போகனும்னு சொல்றீங்க" என்று கூற ரூபினியால் பதில் கூற முடியவில்லை.
இருவரும் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து ராதா இருக்கும் அறையை ரிசப்சனிடம் கேட்டு உள்ளே சென்றனர்.
இதுவரை எந்த ஒரு பயமும் இல்லாமல் வந்த ரூபினி ஹாஸ்பிடலினுள் நுழைந்ததும் அவளுக்கு ஒரு வித பயம் ஆரம்பமானது. இது எதையும் கவனிக்கும் நிலையில் க்ரிஷ் இல்லை.
ஒரு வழியாக ராதாவை அட்மிட் செய்திருக்கும் அறைக்கு முன் வந்தவர்கள் அங்கிருந்த கண்ணாடி கதவின் வழியாக உள்ளே பார்க்க ராதா கிழிந்த நாராக தூங்கிக்கொண்டிருந்தாள். அவளின் அருகில் மீனாக்ஷியும் ராதாவின் கணவர் சுரேஷும் இருந்தனர்.
ஆரம்பத்தில் இருந்தே க்ரிஷிற்கும் சுரேஷிற்க்கும் ஏழாம் பொருத்தம். இதில் இன்று ராதாவின் இந்த நிலைக்கு தான் தான் காராணம் என்று தெரிந்தால் சுரேஷின் மொத்த கோபமும் தன் மீது திரும்பும் என்பது தெரிந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
அறையில் இருந்து சுரேஷ் வெளியில் வர க்ரிஷும் சுரேஷும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டனர். தன் மீது கோபம் கொண்டு சுரேஷ் திட்டுவான் என எதிர்பார்த்த க்ரிஷ்ஷை நோக்கி
" அக்காக்கு ஏதுமில்ல. இப்போ அவளுக்கு மூணு மாசம். அதுதான் மயக்கம் போட்டு விழுந்துட்டா. நீ உள்ள போய் அக்காவ பாரு" என்று கூற க்ரிஷ்ஷிற்கு தலையே சுற்றியது. காரணம் சுரேஷின் இந்த கனிவான வார்த்தைகள் தான் எதிர்பாராத ஒன்று.
இந்த பதட்டத்தில் ரூபினியை அழைத்து வந்ததை மறந்தவன் ராதாவை பார்க்க கதவை திறந்து உள்ளே சென்றான். பூட்டிய கதவு திறப்பதை கண்ட மீனாக்ஷி கதவின் பக்கம் தலையை திருப்ப அங்கு க்ரிஷ் நிற்பதை கண்டவளுக்கு மட்டில்லடங்காத கோபம் வந்தது. இருந்தாலும் ஹாஸ்பிடலில் வைத்து சத்தமிட முடியாது என்பது புரிந்தவள்
" ஏண்டா அக்கா செத்துட்டாளா? இல்லை இன்னும் உயிரோட இருக்காளான்னு பர்க்க வந்தியா" என்று அடிக்குரலில் கேட்க க்ரிஷ்ஷின் கண்கள் கலங்கியது.
" உன் வீட்டுக்கு வந்து அண்ணி அவ்வளவு கெஞ்சினப்போவும் வராத பாசம் இப்போ உனக்கு வருதா. நீ எல்லாம் என்ன ஜென்மம்டா" என்று அவனை இடைவிடாது அடிக்குரலில் மீனாக்ஷி திட்ட அவன் எதுவும் கூறாமால் அமைதியாக இருந்தான். கோபத்தில் மீனாக்ஷி கதவை திறந்து கொண்டு வெளியில் செல்ல அங்கு ரூபினியுடன் ஒரு நர்ஸ் பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.
' இவளையும் கூட்டிக்கிட்டுத்தான் இங்க வந்திருக்கான் போல' என மனதுக்குள் க்ரிஷ்ஷை மேலும் திட்டியவள் சுரேஷின் அருகில் சென்றாள்.
" அண்ணா, அவன வெளியில வர சொல்லுங்க. இது ஹாஸ்பிடல், என்னால அவன் கூட கத்தி சண்டை போட முடியாது" என்று கூற சுரேஷ் அமைதியாக நின்றான். இது வேலைக்காகாது என்று நினைத்தவள்
" அக்கா மயக்கம் போட்டு விழ இவந்தான் காரணம்" என்று சுரேஷிடம் நடந்த அனைத்தையும் கூறினாள். நடந்தவற்றை கேட்டவன் ராதா இருக்கும் அறைக்குள் சென்று சுரேஷை இழுத்து வருவான் என மீனாக்ஷி எதிர்பார்த்தாள். ஆனால் சுரேஷ் எதுவும் கூறாமல் சிலை என நின்றான்.
க்ரிஷ் வெளியில் வர சுரேஷ் அவனிடம்
" அக்காவுக்கு எப்படி இருக்கு" என்று கேட்க மீனாக்ஷிக்கு ஒரே ஆச்சரியம். தன் காதல் மனைவி இப்படி மயக்கம் போட்டு விழ காரணமானவனிடம் சுரேஷ் அமைதியாக பேசிக்கொண்டிருப்பதை கண்டவள் கோபமாக சுரேஷை பார்த்தவள்
" அண்ணி இப்படி மயக்கமாக காரணம் இவந்தான்னு சொல்ரேன், ஆனா நீங்க இவன்கிட்ட பவ்யமா பேசிக்கு இருக்கீங்க" என்று எகிற சுரேஷ்
" மீனாக்ஷி நீ உள்ள போய் ராதா கூட இரு. நான் க்ரிஷ் கிட்ட பேசிட்டு வர்றேன்" என்றான்.
மீனாக்ஷி உள்ளே சென்றதும் க்ரிஷின் கைகளை பிடித்த சுரேஷ்
" என்ன மன்னிச்சிடு சுரேஷ். அன்னைக்கு நான் தெரியாம அப்படி பண்ணிட்டேன்" என்று கூற தனது பத்தாவது வகுப்பில் நடந்த பிரச்சினை பற்றிதான் சுரேஷ் பேசுகின்றான் என நினைத்தவன்
" அதெல்லாம் ஒரு விசயமே இல்ல. அதுக்கு அப்புறமா என் வாழ்க்கையில என்னென்னமோ நடந்திடிச்சி. உங்களுக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்லனும். அன்னைக்கு நீங்க பண்ண காரியத்தால எனக்கு வாழ்க்கையில பிரச்சினைகள் வரும்போது எப்படி அதை கையாளனும் என்று ஓரளவுக்கு புரிஞ்சது. இல்லைன்னா இந்த பிரச்சினை வந்தப்போ நான் உடனே தற்கொலை செஞ்சிருந்தாலும் செஞ்சிருப்பேன்" என்று கூறினான்.
" அதில்லை கரிஷ் நான் சொல்ல வந்த்து.." என்று வேறு எதையோ பேச வர மீனாக்ஷி
" அண்ணிக்கு முழிப்பு வந்திடிச்சி. உள்ள வாங்க" என்று கூற சுரேஷ் உள்ளே சென்றான்.
மிகவும் சோர்வாக இருக்கும் தன் மனைவியிடம் சென்றவன் அவள் தலையை வருடி
" இப்போ எப்படிமா இருக்கு" என்று கேட்க ராதா
"நான் க்ரிஷ்ஷ பார்த்தேங்க. ஆனா அவன் என்ன கேவலப்படுத்திட்டான். நான் செஞ்ச தவறுக்கு எனக்கு தண்டனை கொடுக்கிறேன்னு நினைச்சிக்கிட்டு அவன் தன்னை தானே அழிச்சிக்க பார்க்கிறான். என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல" என்று புலம்ப சுரேஷ் மிருதுவாக அணைத்து
" என்னதான் உன் மேல கோபம் இருந்தாலும் உன் அருமை தம்பி உன்ன விட்டுக்கொடுப்பானா? அவன் வெளியிலதான் நிற்கிறான். இரு நான் வர சொல்றேன்" என்று கூற ராதாவால் நம்பமுடியவில்லை. சுரேஷ் க்ரிஷ்ஷை உள்ளே அழைக்க அவன் ரூபினியையும் அழைத்துகொண்டு வந்தான். க்ரிஷ் தான் எவ்வளவு கூறியும் அவன் ரூபினியை அழைத்து வந்தது ராதாவுக்கு கோபத்தை அதிகமாக்கியது.
" வெளியில போடா. உள்ள வராத. நான் எவ்வளவு கெஞ்சியும் என்ன இவ முன்னாடி கேவலப்படுத்தனும்னே இப்படி பண்றேல்ல. இப்போ எதுக்குடா இவள கூட்டிக்கிட்டு வந்த. இன்னும் என் மனச காயப்படுத்தவா" என்றழுதவள் ரூபினியை சைகையால் அவள் அருகில் அழைத்தாள். ரூபினியும் வேட்டைக்காரர்களிடம் மாட்டிக்கொண்ட மான் குட்டி போல மருகி மருகி ராதா அருகிள் செல்ல
" உன்கால்ல வேணாலும் விழுகுறேன். என் தம்பிய விட்டு போயிடு. உனக்கு எவ்வளவு காசு வேணாலும் நான் கொடுக்கிறேன். தயவு செய்து என் தம்பிய விட்டு போயிடு" என்று கைகூப்பி ராதா அழ அங்கிருந்த யாராலும் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
உடனே ரூபினி அந்த அறையை விட்டு வெளியேற பார்க்க க்ரிஷ் அவளின் கைகளை பிடித்தான். ரூபினி அவன் கைகளை உதறியவள் அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தாள்.
" எங்களுக்குள்ள வெறும் பிசிக்கல் ரிலேசன்சிப் மட்டும்தான். உங்கள காயப்படுத்தனும்னுதான் அவரு நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொன்னாரு. மத்தபடிக்கு அது எதுவுமே நிஜம் இல்லை" என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றாள்.
---------------
ஹாய் வட்டீஸ்..
எனக்கு புரியுது என்னோட அப்டேட்ல இப்போலாம் content மிகவும் குறைவாகிவிட்டது. காரணம் 800 இருந்து 900 சொற்களில் அப்டேட் எழுதி பழகிய நான், இப்போதெல்லாம் கதையில் சம்பாசனைகளை குறைத்து இடம், மற்றும் மனிதர்களின் மன நிலையை எழுதுவதால் கதை மூவ் ஆகாமல் அதே இடத்தில் நிற்பது போல தோன்றுகின்றது. முடிந்தவரை வாரம் இரண்டு அப்டேட்கள் தொடர்ச்சியாக கொடுக்க முயற்சிக்கின்றேன்.
என்னுடைய இந்த புது முயற்சியை பொறுமையாக படிக்க முடிந்தால் படியுங்கள். இல்லை என்றால் இதை விட சூப்பர் கதைகள் எல்லாம் உள்ளது. அதை படிக்கலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro