முத்து 21
நம்ம ஸ்கூல் லைப திரும்பி பார்ப்போம்..ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள்..
1ம் வகுப்பு...
அம்மாவின் சட்டையை பிடித்துக் கொண்டு ஸ்கூல் போக முடியாதுன்னு அழ அழ ஸ்கூல் போன காலம்...
2ம் வகுப்பு....
பக்கத்திலிருக்கும் பசங்களோட பெயர கேட்டு ப்ரன்ட் பிடிச்சிகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமான காலம்...
3ம் வகுப்பு...
பக்கத்திலிருக்கிற பசங்களுடைய திங்ஸ தொட்டு பார்த்து பொறாமையில யாருக்கும் தெரியாம உடைத்த கனங்கள்....
4ம் வகுப்பு...
ஸ்கூல் விட்டு லைன்ல யாரு முன்னாடி போறதுன்னு சண்ட போட்றதுலயும் அம்மாகிட்ட சண்ட போட்டத சொல்லி அழுதும் கடந்தது...
5ம் வகுப்பு....
போய்ஸ் கேர்ல்ஸ் இரண்டா பிரிஞ்சிகிட்டு சண்ட போட்டும் எல்லாரும் ஒன்னா சேர்ந்துகிட்டு கண்ணாமூச்சி , ராஜா-ராணி விளையாடியும் கடந்த கனங்கள்...
6ம் வகுப்பு....
அம்மா அப்பாவும் வேணும், ப்ரன்ட்ஸும் வேணும் அப்டிங்குற கட்டத்துல, யார் சொல்றத கேட்பது? அப்டின்னு கட்டுக்கு மேல இருக்கிற பூன மாதிரி தடுமாறிய நொடிகள் ஏராளம்....
7ம் வகுப்பு...
நாம எல்லாரும் இப்போ பெரியவங்க, நமக்கு எல்லாமே தெரியும் என்ற இறுமாப்புடன் திமிராக சுற்றிய காலம்...
8ம் வகுப்பு...
டீச்சர்ஸ் எவ்வளவோ எட்வைஸ் பண்ணாலும் "நமக்கு தான் காதே கேக்காதே" அப்டின்னு அவங்கள அலட்சியப் படுத்யிய பொழுதுகள்....
9ம் வகுப்பு....
ப்ரன்ட்ஸ்குள்ள கேங்ஙா பிரிஞ்சி அதுகுன்னு ஒரு பெயர் வெச்சிகிட்டு சுத்துறதும் , நாம எல்லாரும் ஒன்னா இருக்கனுங்கிறதுக்காகவே நேரகாலத்தோட ஸ்கூல் போய் இடம் பிடித்து கலாட்டா செய்த பொழுதுகள்...
10ம் வகுப்பு....
நம்மள படிக்க வைக்கணுங்கிற நோக்கத்துல க்லாஸ் டீச்சர் நம்மள ப்ரன்ட்ஸ் கூட உட்கார விடாம க்ருப் பிரிச்சி போட்றதும், அவவோட பாடம் முடிஞ்சதும் மறுபடியும் பழைய மாதிரி ப்ரன்ட்ஸ் கூட உட்கார்ந்த இனிய நொடிகளும் பாடங்கள கட் அடிக்கணும் அப்டிங்குறதுக்காகவே அர்த்தமேயில்லாத காரணம் காட்டி வெளியே பாய்றதும் , அப்றம் ப்ரின்ஸிகிட்டயோ மேடம்கிட்டயோ மாட்டி எல்லார் முன்னாடியும் ஏச்சி கேட்டு அவமானப் பட்டாலும் அத ஜோக்கா எடுத்துகிட்டு (வெக்கமே இல்லாம) சிரிச்சு உருண்ட பொழுதுகள்....
11ம் வகுப்பு....
டீச்சர்ஸ் கூடயும் ப்ரன்ட்ஸ் கூடயும் ரொமுப க்ளோஸா பழகி , எவ்வளவு தான் உள்ளுக்குள்ள மோதல்கள் இருந்தாலும் எல்லாருமா சேர்ந்து மொக்க செல்ஃபி எடுக்கிறதும் ஒருத்தியோட சாப்பாட்ட எல்லாருமா சேர்ந்து சாப்பிட்றதும் , chair ல தண்ணிய ஊத்தி அடுத்தவன் அதுல தெரியா தனமா உட்கார்ந்ததும் எல்லாருமா சேர்ந்து கேலி பண்றதும் என இனிமையான அந்நொடிகள சந்தோஷமா களிச்சுட்டு கடைசியில ஸ்கூல விட்டுபோக முடியாது என அழுது புரண்ட காலம்.....
ஸ்கூல் போக முடியாதுன்னு வந்த நாம் அத விட்டு போக முடியாதுன்னு அழும் அளவிற்கு எம்மை மாற்றியது இந்த ஸ்கூலும் ப்ரன்ட்ஸும் தான்..எம் வாழ்வில் நாம் மறக்க முடியாத இந்நினைவுகள் எம் மனதில் சிலையில் பதித்த ஓவியங்களாய் என்றும் இருக்கும்...
**********
Hllw dudes..i hope u guys liked this update...pls gv me a feedback abt it..
stay awesome...
lv u all..
c u all in the nxt update..
Bye for now..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro