பகுதி - 18
நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ ஒற்றை
திங்கள் உன்னை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊரும் உயிரெனவே
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்
டீ சர்ட் , லாங்க் ஸ்கர்ட்டில் தலையில் கட்டிய துண்டுடன் வெளியே வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த ராதா மற்றும் கிருஷ்ணாவைக் கண்டு புன்னகைத்த படியே "குட் மார்னிங்" என்று கூற அவர்களும் "குட் மார்னிங்" என்றபடி புன்னகைத்தனர்.
தன்னருகே வந்த சுதாவிடம் ராதா காபியை நீட்ட "தேங்க் யூ ராதாம்மா " என்றவளோ நாக்கைக் கடித்துக் கொண்டு "அத்தை " என திக்கித் திணறி கூற
"நீ ராதாம்மானே கூப்பிடு டா ஏன் புதுசாலாம் டிரை பண்ணுற? அதுதான் நமக்கு வராதே " என்றவரை செல்லமாக முறைத்தவள் "நான் வெளியே இருக்க சோபாவில் உட்கார்ந்து குடிக்கவா ?" என தயங்கிக் கொண்டே கேட்டாள்.
" இதுல என்ன டா தயக்கம் ? இது உன் வீடு மாதிரி தாரளமா போ " என்ற கிருஷ்ணாவைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள் "தேங்க்ஸ் கிருஷ்ப்பா " என்றபடியே வெளியே சென்றாள்.
வெளியே அமர்ந்து வேலை செய்வது யுவாவிற்கு பிடிக்குமென்பதால் அங்கே அமர சோபா ஒன்றை வாங்கி போட்டிருந்தான்.
ஒற்றை காலை மடக்கி காபி அருந்திக் கொண்டிருந்தவளுக்கு கண்களெல்லாம் கலங்கிப் போனது.
வீட்டின் நினைவுகள் மட்டுமே மனமெங்கும் நிறைந்திருக்க குடும்பத்தாரை நினைத்து "உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் " என வாய் விட்டே புலம்பியவள் அப்படியே சோபாவில் சாய்ந்துக் கொண்டு வீட்டை ஆராய்ந்தாள்.
கேட்டிலிருந்து வீட்டிற்கு நிறைய இடைவெளி இருக்க ஒரு ஓரத்தில் கார், பைக் நிறுத்தியிருந்ததால் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை.ஆனால் மறுபக்கத்தில் மொட்டையாக இருக்க இங்கே ஏதாவது செடி ,மரம் வெச்சா எவ்வளவு நல்லா இருக்கும் என்று யோசித்தவள் இரவு அவன் கூறிய வார்த்தை நியாபகம் வந்ததும் மனது பாரமானது.
காலையில் திருமணம் முடிந்து காரில் ஏறியவள் பாருவைப் பார்த்ததும் உடனே இறங்கி ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
அழவேக் கூடாது என எடுத்த உறுதியெல்லாம் பாருவைக் காணும் வரை தான்.
அதற்காக தான் பாருவும் வராமல் ஒளிந்திருக்க அப்படியும் சுதாவின் கண்களில் பட்டுவிட்டார்.
தன்னைக் கட்டிக் கொண்டு அழும் சுதாவைக் கண்டு அவரும் அழுக தீபும் அவர்களோடு சேர்ந்துக் கொள்ள இங்கு சிவராமன் கிருஷ்ணாவின் தோள்மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார்.
யுவாக்கு தான் எரிச்சலாக இருந்தது.
ஓவரா சீன் போடுறாளே என்று!!!
சிறிது நேரம் பொறுத்தவன் இந்த சென்டிமென்ட் படலம் இன்னும் நிறுத்தாமல் தொடர்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பாகி "தீரா " என்று அழைக்க
அவன் குரலில் திடுக்கிட்டு பாருவிடமிருந்து விலகியவள் திரும்பி யுவியைப் பார்க்க ஒற்றை விரலை மட்டும் நீட்டி வா என அழைக்க "ம்ம்" என்றவளோ மறுபடியும் பாருவைப் பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.
தன் விரலசைவுக்கு கட்டுப்பட்டு உடனே வந்த மனைவியை நினைத்து புன்னகைத்தவன் அவள் இன்னும் அழுது கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பாகி "கொஞ்சம் அழுதுறதை நிறுத்துறியா ப்ளீஸ், எனக்கு இரிடேட் ஆகுது ? உன்னை நாங்க ஒன்னும் கொலை பண்ணிட மாட்டோம் இப்படி அழுகிறவ ஏன் என்னை கல்யாணம் செய்துகிட்ட ? உங்க வீட்டுலையே இருந்துக்க வேண்டியது தானே " என்று கேட்க
அதிர்ந்து தன் முகத்தைப் பார்த்தவளைக் கண்டு மனம் இறங்கியவன்
"ஒன்னுமில்ல டா !!! என் கூட தானே இருக்க போற உங்க வீடும் பக்கத்துல தானே இருக்கு அப்பப்போ அங்கே போயிட்டு வா.எதுக்கு அழுகிற இது நீ ஹேப்பியா இருக்க வேண்டிய மொமண்ட் ஓகே வா ? "என்றவன்
தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொள்ள அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தவள் கண்களை மூடினாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் விளக்கேற்றி அனைத்து சம்பிரதாயங்களையும் செய்த பின்னரே இருவரையும் ஓய்வு எடுக்குமாறு கூற "எப்போ தான் இதெல்லாம் ஓவர் ஆகும் " என எண்ணிய படி இருந்தவன் இதைக் கூறியதும் தன்னறைக்குள் புகுந்துக் கொண்டான்.
யாருமே இல்லாமல் தனியாக தவிக்கவிட்டது போல் தோன்ற இதோ வந்துவிடுவேன் என்பது போல் கண்களில் தேங்கிய கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள் கைகளைப் பிசைந்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
"அண்ணி என் ரூமுக்கு போலாமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...வரீங்களா ?" என்று கேட்ட மானுவைப் பார்த்து புன்னகைத்தவள் வேகமாக தலையசைத்தாள்.
முகம் கழுவி வெளியே வந்தவள் அப்படியே மெத்தையில் அமர்ந்து கண்களை மூட
"ஏன் அண்ணி உட்கார்ந்துட்டே தூங்குறீங்க ? படுத்துக்கோங்க " என்ற மானுவைப் பாரத்து மெலிதாக புன்னகைத்தவள் சரி என்றபடி படுத்துக் கொண்டாள்.
வெளியே வந்து மானு யுவாவின் அறைக்குள் நுழையாமல் வெளியே கதவருகே நின்றபடி " தூங்குறாங்க அண்ணா " எனக் கூற
"இனிமேலாச்சும் இப்படி நடந்துக்காதீங்க!! பாவமா உட்கார்ந்துட்டு இருந்தா , ரெஸ்ட் எடுங்கனு சொன்னா போதுமா ?அவளுக்கு இது புது இடம் தானே ? நீ தானே இதெல்லாம் பார்த்து செய்யணும் "யுவி திட்ட ஆரம்பித்ததும் தலை குனிந்தவள் "சாரி அண்ணா இனிமேல் ஒழுங்கா நடந்துக்கிறேன் " என்றவளிடம்
"ம்ம் " என்றவன் கதவடைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.
"பொண்டாட்டி மேல அவ்வளவு அக்கறை இருந்தா இவர் பண்ண வேண்டியது தானே ?" திட்டிய படியே சமையலறைக்குள் நுழைந்தவள் அம்மாவிடமும் அண்ணனைப் பற்றி புகார் கூறி அவனைத் திட்டுவதை நிறுத்தவில்லை.
இரவு முதலிரவிற்காக அறையை தயார் செய்தவர்கள் அவளையும் தயார் செய்து யுவாவின் அறைக்குள் அனுப்ப பயத்துடனே உள்ளே நுழைந்தவள் அவனைக் காணாது திகைத்தாள்.
"எங்கே போயிருப்பாரு ?" என எண்ணியபடியே அறையை நோட்டமிட்டவள் பால்கனி அருகே செல்ல யுவாவோ அங்கிருந்த குட்டி சோபாவில் மடி மீது லாப்டாப்பை வைத்துக் கொண்டு ஏதோ தீவிரமாக டைப் செய்து கொண்டிருந்தான்.
" அவனுக்கு எதிரே அமர்ந்தவள் கன்னத்தில் கை வைத்து அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க இவள் புறம் திரும்பாமலே என்ன என்பது போல் புருவம் உயரத்தியவனைக் கண்டு அதிர்ந்தவள் " உங்களைக் காணோமேனு இங்கே வந்தேன் " எனக் கூற
மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவன் "டிரெஸ் அன்கம்பர்டபிளா இருந்தா மாத்திக்கோ " எனக் கூறி மறுபடியும் லாப்டாப்பிற்குள் மூழ்கிவிட
அவளும் அவன் கூறிய படியே உடையை மாற்றிக் கொண்டு வந்தாள்.
பால்கனியில் நின்றபடி நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தவள்
"இங்கே பூச் செடிகளெல்லாம் வெச்சா சூப்பரா இருக்கும் யுவா , கீழே இருக்கே சோபா அங்கே உட்கார்ந்துகிட்டா சில்லுனு காத்து , பூக்களோட வாசம்னு சூப்பரா இருக்கும் " என்றவள் அவனைப் பார்க்காமலேயே கூறிக் கொண்டிருக்க
"உன் வீட்டுல உன் இஷ்டப்படி இருக்கலாம் பட் இது என் வீடு எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கும் இருக்கணும் " என்றவன் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவள் "இதுவும் என் வீடு தானே யுவி நான் உங்க மனைவி தானே எனக்கு உரிமை இல்லையா? கண்டிப்பா மாத்துங்கனு நான் சொல்லலையே நல்லா இருக்கும்னு தானே சொன்னேன் " என்றவளுக்கு அவனின் அந்நிய பேச்சில் கண்கள் கலங்கியது.
"இப்படி அழுது அழுது சீன் கிரியேட் பண்ணாத தீரா! எஸ் நீ என் மனைவி தான் இல்லைனு சொல்லல பட் தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காத , காலையில் சீக்கிரம் எழுந்தோமா குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிட்டோமோ காலேஜ் போனாமானு இரு " என்றவன் அவ்வளவு தான் என்பது போல் நிறுத்திக் கொள்ள
அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அறைக்குள் வந்தவள் மெத்தையில் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
"இப்படியெல்லாம் இவன் பேசுவானா ? " என நினைத்தவள் "அவனுக்கு தான் அது பிடிக்காதே நம்ம மேல தான் தப்பு நம்ம அப்படி கேட்டிருக்க கூடாது " மனதை தேற்றிய படி கண்களை மூடியவள் உறங்கியும் விட்டாள்.
விடியற்காலையிலேயே எழுந்தவள் கண்களைத் திறக்க அவளுக்கு எதிரில் இன்னும் லாப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தவன் தான் கண்களில் பட்டான்.
"யுவி குட் மார்னிங்! நீங்க தூங்கவே இல்லையா ?" எனக் கேட்க
அவளைப் பாராமலே "குட் மார்னிங் , இப்போ தான் எழுந்தேன் இந்த வொர்க்கை இன்னைக்கே கம்ப்ளீட் பண்ணனும் அதுனால தான் " எனக் கூற
"ம்ம் " என்று தலையசைத்தாள்.
"யுவி நான் ஒன்னு கேட்கவா ?" எனக் கேட்க
"கேளு " என்றவனின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டவள்
"அது அது வெளியே போன ஏதாவது கேட்பாங்களே என்ன சொல்லணும்" எனக் கேட்க
அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் "கதை படிச்சு படிச்சு கெட்டு போயிருக்க அப்படியெல்லாப் கேட்க மாட்டாங்க " என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள்
"சப்போஸ் கேட்டா " என மறுபடியும் இழுக்க
" உனக்கு இப்போ என்ன தான் வேணும் தீரா! எனக்கு முக்கியமான வேலை இருக்குனு சொன்னேன் தானே எதுக்கு என்னை தொந்தரவு பண்ணுற மார்னிங்கே கடுப்பேத்தாத! அவங்க ஒன்னும் உன்னை மாதிரி இல்லை நமக்கு அவசர அவசரமா நடந்த கல்யாணம் புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்க லேட் ஆகும்னு தெரியும்...
இங்கே இருந்து மறுபடியும் எதையும் கேட்டுத் தொலைக்காம வெளியே போ " என்று படபடவென பொரிந்தவன் லாப்டாப்பை தூக்கிக் கொண்டு பால்கனிக்கு சென்றுவிட
கண்களில் கண்ணீருடனே குளியலறைக்குள் நுழைந்தாள்.
அனைத்தையும் சோபாவில் அமர்ந்து யோசித்தவளுக்கு இவனின் இந்த முகம் மன வருத்தத்தை தான் கொடுத்தது.
ஒருவேளை ரொம்ப வேலையோ அதுனால தான் இப்படி நடந்துக்கிறாங்க போல பாவம் என்றபடியே மனதை தேற்றியவள் உள்ளே வர அவளுக்காக ஒரு பெரிய ஆப்பை ரெடி செய்திருந்தார் ராதாம்மா.
"நான் ப்ரேக்பாஸ்ட் செஞ்சுட்டேன் டா நீ முதன் முதலா நம்ம வீட்டுல சமைக்க போற இப்போ ஒரு ஸ்வீட் மட்டும் செஞ்சிடு " என்றபடி வெளியே சென்றுவிட
"காபி கப்பை உள்ளே வைக்க வந்தது ஒரு குத்தமா ராதா அத்தை வெச்சுட்டியே ஒரு பெரிய ஆப்பை " புலம்பிய படியே ஸ்டவ்வை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன செய்ய என மட்டும் தெரியவில்லை.
உடனே தன் கைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தவள்
"யார் அழைத்தது யார் அழைத்தது யார் குரலிது " என்ற காலர் டியூனில் கடுப்பாகி மறுமுனையில் அட்டெண்ட் செய்ததும் "நான் தான் அழைத்தேன் என் குரல் தான் ஆனால் உன் கூட கொஞ்சி குலாவ மட்டும் இல்லை துரோகி கல்யாணத்துக்கு வர உனக்கு என்ன டி கேடு ! உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் ஒழுங்கா எனக்கு இப்போ ஒரு ஸ்வீட் ரெசிபி மட்டும் சொல்லிக் கொடுத்துட்டு காலை கட் பண்ணிடு " எனக் கூறி பதிலுக்கு காத்திருக்க
"அடியேய் இம்சை உனக்கு என் வீட்டைப் பத்தி தெரிஞ்சுமா இப்படி கத்திக்கிட்டு இருக்க ? நானே உன் கல்யாணத்துக்கு வர முடியலைனு பீல் பண்ணிட்டு இருக்கேன் ஏன் டி பேச மாட்டேனு சொல்லுற நானே பாவம் " என அவள் கூறியதும்
"நோ நோ நோ நான் தான் பாவம் " என்றவள்
"எனக்குத் தெரியும் டி ஜேக் மாமா ஆனாலும் நீ வருவேனு நினைச்சேன் பரவால விடு இப்போ ஸ்வீட் செய்யணும் டி சீக்கிரம் ஏதாவது சொல்லேன் எங்க அத்தம்மா இப்படி மாட்டி விடும்னு தெரியாம போச்சு டி எனக்கு சுடுதண்ணீர், காபி தவிர ஒன்னுமே செய்ய தெரியாதுனு நான் எப்படி சொல்லுவேன் " என்றவள் புலம்ப ஆரம்பிக்க
இத்தனை நேரம் கல்யாணத்திற்கு செல்ல முடியவில்லையே எனப் புலம்பிக் கொண்டிருந்தவள் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
"அடியே ரோசா சரியான இம்சை டி நீ !! ஸ்வீட் தானே சிறப்பா செஞ்சுடலாம் ப்ரிட்ஜ்ல ஏதாவது வெஜிடபில்ஸ் இருக்கானு பாரு ? என்றதும் உடனே சரி என்றவள் திறந்து பார்க்க
"பச்சை கலர்ல நிறைய இருக்குடி " என்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது நந்தனாவால்.
"காய்கறில முக்கால் வாசி அந்த கலர்ல தான் இருக்கும் நாயே! கேரட் இருக்கா ?" என்றதும்
"ஓஓ இருக்கே ! இதை வெச்சு தான் பண்ண போறாமா ? அப்புறம் எதுக்கு டி வெஜிடபிள்ஸ் இருக்கானு பார்க்க சொல்லுற ?" என்று சுதா சீற
"கேரட்டும் வெஜிடபிள் தான் அது நியாபகம் இருக்குல நீயெல்லாம் ஒரு பாட்டனி ஸ்டூடண்ட் " என்றவளிடம் "போடி போடி " என்ற சுதாவோ நந்தனா கூறுவது போலவே செய்ய ஆரம்பித்தாள்.
நந்தனா சுதாவின் பள்ளித் தோழி...
இரு வானரங்களும் சேர்ந்து விட்டால் அந்த இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
மற்றவர்களை கலாய்ப்பது தான் இவர்களது பொழுது போக்கு போர் அடித்து விட்டால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கழுவி ஊத்திக் கொள்வார்கள்.
மூன்று தேவிகளாய் வலம் வரும் இந்த வானரக் கூட்டத்தில் இவர்களுக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பவள் தான் ரேஷ்மா.
சில சமயம் ஆள் கிடைக்காமல் இருக்கும் தருணங்களில் ரேஷ்மாவை வைத்து செய்வது தான் மற்ற வானரங்களில் வழக்கம்.
நந்தனா சொல்வதை அப்படியே செய்தவள் அடிக்கடி சந்தேகம் என்ற பெயரில் அவளைக் கடுப்பேத்தவும் தவறவில்லை.
"ரோசா அவங்க வந்துருந்தாங்களா?" ஆவலுடன் கேட்டவளை கலாய்க்கும் எண்ணமே சுதாவிற்கு வர
"எவங்க " எனக் கேட்டபடியே கேரட்டில் பால் ஊற்றி கிண்ட ஆரம்பிக்க
"அதான் டி அவங்க" என்றவளுக்கு இவள் கலாய்க்கிறாள் என்பது நன்றாகவே தெரிந்துவிட்டது.
"அவங்களுக்கு பெயர் இல்லையா ஜேக் மாமா" என்றவளுக்கோ சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிரித்தால் அவள் ரெசிபி சொல்லாமல் கட் செய்து விடுவாளோ என்ற எண்ணத்தில் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
"லவ் டி " என்றவளுக்கு அவன் பெயரைக் கூறவே அவ்வளவு வெட்கம்.
அச்சம் ,மடம், நாணம், பயிர்ப்பு என்பதெல்லாம் எந்த கடையில் கேட்கும் ரகங்கள் தான்...
ஆனால் காதல் வந்த பிறகு அவையெல்லாம் தானாக வந்துவிட்டது...
"ஓஹோ அப்படி...அவங்களா வந்தாங்க வந்தாங்க" என்றவள் அடுத்து என்ன செய்யணும் எனக் கேட்க
சரியான தகவல் கூறாததால் கடுப்பில் இருந்தவள் "அதை அப்படியே சிங்கில் போட்டுட்டு கழுவி வெச்சிடு எனக் கூற "ஓஓ சரி" என்றவள் அப்படியே செய்ய போக
"அடியேய் " என்ற நந்தனாவில் குரலில் தான் தன்னிலை அடைந்தாள்.
"அன்பு பத்தி ஒழுங்கா சொல்லலையேனு சிங்கில் போட சொன்னா அதுக்கும் தலையாட்டிட்டு ஓஓ சரினு வேற சொல்லுவியா பைத்தியமே !!" என்றவள் திட்டிக் கொண்டே சொல்ல அதெல்லாம் எங்கே இவளுக்கு கேட்டது.
அவள் நினைவெங்கும் யுவா தானே நிறைந்திருந்தான்.
இது அவனுக்கு பிடிக்குமா ? நல்லா இருக்குனு சொல்லுவானா? காலையில முறைச்சானே இப்போ சிரிப்பானா அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் மறுபடியும் அழைப்பு வர அதில் தான் தன்னிலை அடைந்தாள்.
"ஏன் டி கால் பண்ணிட்டு மறுபடியும் கூப்பிடுற ? விளையாடுறியா ? நானே பாவம் ஒழுங்கா ஸ்வீட் செய்யலைனா திட்டு வாங்குவேன் "புலம்பியவள் மட்டும் கைகளில் கிடைத்தால் சட்னி தான் நந்தனாவிடம்.
ஒருவழியாக கேரட் அல்வாவை செய்து முடித்தவள் வெளியே வர மற்றவர்களும் காலை உணவை உண்ண வந்திருந்தனர்.
அனைவருக்கும் பரிமாறியவள் அல்வாவையும் போட்டுக் கொடுக்க
"சூப்பரா இருக்கு டா " என்ற கிருஷ்ணாவைப் பார்த்து புன்னகைத்தவளின் விழிகள் யுவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
ராதா , மானுவும் அல்வாவை பாராட்ட இருவருக்கும் தலையசைப்பை மட்டுமே கொடுத்தவள் யுவி எப்படியும் பாராட்ட மாட்டான் என முடிவெடுத்து அவளே அவனிடம் சென்று கேட்டாள்.
"எந்த யூ டியூப் சேனல் பார்த்து செஞ்ச? சொன்னா நான் அவங்க கிட்ட ரெசிபி நல்லாருக்குனு சொல்லிடுவேன் " நக்கலாக கூறியவன் கண்ணாடி முன் நின்று கேசம் கோதிக் கொண்டிருக்க
அவன் கூறியதில் வருந்தியவள்
"ரெசிபி அவங்களோடதா இருந்தாலும் நான் நல்லா தானே செஞ்சேன் யுவி அதுக்காக ஒரு அப்ரிசியேஷன் கூட இல்லையா ?" என்றவளின் ஏக்கம் அவனையும் பாதித்தது போல!!!
அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டவன் "என் தீராக்குட்டிக்கு அப்ரிசியேஷன் வேணுமா ?" எனக் கேட்க
"எனக்கு எதுவுமே செய்யத் தெரியாதுனு உனக்குத் தெரியும் தானே!! இது தான் என் பர்ஸ்ட் டிரை தெரியுமா ஆனால் நீ எதுவுமே சொல்லல " குழந்தைப் போல் கோபம் கொள்பவளைக் கண்டு புன்னகைத்தவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து
"நாட் பேட் " எனக் கூற
"ம்ம்க்கும் " என உதடு சுழித்தவளோ
அவனை அப்படியே அணைத்து மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.
கரெக்ஷன்ஸ் பார்க்கல🚶♀🚶♀ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருந்தா மன்னித்துக் கொள்ளவும்🤕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro