பகுதி - 16
உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன்
மௌனமா இங்கே
உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஓ .. எப்போதும் .. ஓ
பத்து நிமிடம் என்பது அப்படியே அரை மணி நேரமாய் கழிய யுவா மட்டும் அழைப்பு விடுக்கவே இல்லை.
மற்றவர்களுக்கெல்லாம் எடுத்து முடித்தவர்கள் யுவா மற்றும் சுதாவிற்கு எடுக்காமல் அவன் அழைப்பான் என காத்திருக்க
45 நிமிடங்கள் கழித்தே அவன் அழைத்தான்.
"எடுத்தாச்சா ம்மா ?" என்றவனின் கேள்வியில் மனதுக்குள்ளேயே அவனை வறுத்தெடுத்த ராதா
"உனக்கு தான் எதுவும் பிடிக்கலையே? உனக்கும் சுதாவுக்கும் மட்டும் எடுக்கல டா , என்ன செய்ய வேற கடைக்கு போகவா இல்லை இதே கடைல ஏதாவது பார்க்கட்டுமா ? எனக் கேட்க
"நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க , எனக்கு இன்னும் கொஞ்சம் வொர்க் இருக்கு ஒரு ஒன் ஹவர்ல முடிச்சுடுவேன் நானே எங்களுக்கு எடுத்துக்கிறேன் " என்றவனின் கூற்றை ஆமோதித்தவர் மற்றவர்களிடம் கூறினார்.
"அம்மா நானும் இருக்கவா ? எனக்கு தானே புடவை எடுக்கணும் நான் இல்லைனா எப்படி ? ப்ளீஸீ ப்ளீஸ் " என்றவளிடம் "வேணாம் சுதா " என பார்வதி கூறிக் கொண்டிருக்க
ராதாவோ "யுவாக் கண்ணா சுதாவுக்கு தானே புடவை எடுக்கணும், அவளை இங்கேயே வெளியே உனக்கு வெயிட் பண்ண சொல்லுறோம் , இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துட்டு வந்துடுங்க " என்றவர் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
திட்டுவிடுவானோ என்ற பயம் தான்!!!
"அய்யா ஜாலி ஜாலி " என்று மனதிற்குள்ளே ஒரு ஆட்டம் போட்டவள் ராதாவை நோக்கி தன் அனைத்துப் பற்களையும் காட்ட
அவள் அருகில் வந்து தலையை வருடியவரோ " நம்ம நகை எடுத்துட்டு சாப்பிட்டு வரப்போ யுவா வந்துருவான் நினைக்கிறேன் , அவன் சாப்பிட்டுட்டு வரலைனா உங்களுக்கு ட்ரெஸ் எடுத்ததுக்கப்புறம் சாப்பிட வெச்சிடு டா " எனக் கூற
"சரிங்க அத்தை " என்றவளோ அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு வந்தும் அவன் வராமல் இருக்க நான் சுத்தி பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தவளோ ஒவ்வொரு தளமாக சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஒரு மணி நேரமாய் சுற்றிக் கொண்டிருந்ததால் கால் வலி எடுக்க ஆரம்பிக்க அங்கேயே ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவள் புலனம், படவரி , முகப்புத்தகம் என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வர அப்பொழுதும் அவன் வந்த பாடில்லை.
அவனுக்கு அழைத்துக் கேட்கலாமா என நினைத்தாலும் அவன் பேசக் கூடாது எனக் கூறியிருந்ததால் அதை மீற மனமில்லாமல் கன்னத்தில் கை வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதிலும் அலுப்பு தட்ட
ஏற்கனவே தறவிறக்கம் செய்திருந்த கதையை ஓப்பன் செய்து படிக்க ஆரம்பித்திருந்தாள்.
கதைகள் படிப்பதில் அலாதி பிரியம் சுதாவிற்கு...
அந்த உலகத்திற்குள் சென்று விட்டால் சோறு , தண்ணீர் என எதுவும் வேண்டாம்.
இப்பொழுது நேரத்தைக் கடப்பதற்கு அது உதவி புரிய ஒரு காலை மடக்கி, கன்னத்தில் கை வைத்து கதைக்குள்ளேயே மூழ்கி விட்டாள்.
தன்னருகே பத்து நிமிடத்திற்கு மேலாக அமர்ந்திருந்தவனைக் கூட கண்டுக்கொள்ளாமல் சுதா கதை உலகத்திற்குள் மூழ்கியிருக்க
அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அடிக்கடி இதழ்களில் மெல்லிய கீற்றாய் புன்னகை தவழ்வதும், சில சமயம் அச்சோ என்று உளறுவதுமாய் கதையை ரசித்துக் கொண்டு அவள் இருக்க
அவளை ரசிக்கும் ரசிகனாய் யுவா மாறியிருந்தான்.
ஹிட்லர் ரசிகனாய் மாறியிருந்தது கூட சில நிமிடங்கள் தான்...
கதைக்குள் மூழ்கியிருந்தவள் யுவாவின் அழைப்பில் தன்னிலை வந்து அவன் அழைப்பை ஏற்காமல் "இப்போதான் இந்த லேம்ப் போஸ்ட்க்கு நம்ம நியாபகம் வருது போல!! இரண்டு மணி நேரமா ஒரு பொண்ணு இங்கே காத்துருக்காளேனு கொஞ்சம் கூட அக்கறை இல்லை " என்று வாய்விட்டு புலம்ப
"ம்க்கும் " என்ற குரலில் திரும்பியவள் திருத்திருவென முழித்தாள்.
"எப்போ வந்தீங்க?" திக்கித் திணறி அவனிடம் கேட்டவள் நம்ம பேசுறதை கேட்டிருப்பானோ என நினைத்துக் கொண்டிருந்தவளிடம்
"வீட்டுக்குக் கிளம்பலாமா ?" என யுவி கேட்க
"டிரெஸ் " என்று இழுத்தவளிடம் கைகளில் இருந்த பையைக் காட்டி "வாங்கியாச்சு வாங்கியாச்சு கிளம்பலாம் " என்று கூற "என்னையும் கூப்பிட்டிருக்கலாமே " என்றவள் திடீரென்று துளிர்த்த கண்ணீரை கட்டுப்படுத்த வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
"எப்படியும் நான் தானே செலக்ட் பண்ணனும் நல்லா தான் பண்ணியிருக்கேன் உன்னையும் கூட்டிட்டு போன லேட் ஆகும் எனக்கு அந்தளவு டைம் இல்ல , கிளம்பு " என்றவன் முன்னே செல்ல
அவனுடன் எப்படியெல்லாம் நேரத்தை செலவிட வேண்டும் என யோசித்து வைத்திருந்தவள் யுவாவின் இந்த செயலில் மிகவும் வாடிப் போனாள்.
தன்னுடன் நடந்து வந்தவளின் நடையே அவளின் நிலையைக் காட்டிக் கொடுக்க அவளை சிறிது மாற்ற நினைத்தவன்
" நான் வரும்போது ஏதோ படிச்சுட்டே இருந்தியே என்ன அது ?" எனக் கேட்டான்.
"எனக்கு புத்தகம் படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும் யுவி , புத்தகத்துல மூழ்கிட்டா நான் யாரையும் கண்டுக்க கூட மாட்டேன் அந்தளவு படிக்கிறது பிடிக்கும் " கண்கள் மின்ன கூறியவளைப் பார்த்து சிரித்தவன்
"எந்த மாதிரி புக்ஸ் " எனக் கேட்க
"காதல் கதைகள் தான் " என்று கூறி சிரித்தவளிடம்
"வேஸ்ட் ஆப் டைம் " எனக் கூறி யுவி நடக்க
" ஆஆஆன் " என்று வாயைப் பிளந்தவளோ முறைத்தவாறே
"ஏன் ஏன் " எனக் கேட்டாள்.
"கதைகள் ஒரு மாய உலகம் தீரா , நம்ம வாழ்க்கை அந்த மாதிரி மாற வாய்ப்பே இல்லை ஆனால் சில சமயம் நீ கதைல வர கதாபாத்திரமா உன்னை நினைச்சுப்ப பிகாஸ் உன்னை அந்த கதாபாத்தாரம் மிகவும் கவர்ந்திருக்கும் , எனக்கு கதைகளில் வர மாய உலகத்தை விட இந்த உலகம் பிடிச்சிருக்கு அதுனால அந்த மாய உலகம் என்னைப் பொறுத்த வரை வேஸ்ட் ஆப் டைம் தான் " என்றவனிடம்
"ஓஓஓ" என்றவள் உடனே "ஆனால் நான் அந்த மாதிரி என்னை கதாபாத்திரமா நினைச்சுக்கிட்டது இல்லையே!! நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா பீல் பண்ணா கதை படிப்பேன் எனக்கு அது கொஞ்சம் ரிலீப்பா இருக்கும் " என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன்
"ஸ்ட்ரெஸ்ஸா இருக்கப்போ பசங்க ஸ்மோக் பண்ணுறாங்களே அந்த மாதிரியா " எனக் கேட்க
இல்லை இல்லை என்று வேகமாக தலையசைத்தாள்.
"அப்புறம் ? இரண்டும் ஒன்னு தான் ஸ்மோக்கிங் பேட் பார் ஹெல்த்னா இதுவும் அப்படி தான் " என்று கூற
"ச்ச ச்ச எனக்கு கதை படிக்கிறது பிடிக்கும் நான் படிப்பேன், உங்களுக்கு ஸ்மோக்கிங் ஸ்ட்ரெஸ் ரிலீப்னா எனக்கு இது! இரண்டுமே அளவுக்கதிமானா தான் ஆபத்து...
நான் எந்த கதாபாத்திரமாவும் என்ன நினைச்சுப் பார்த்ததில்ல , அந்த மாதிரி நான் வாழணும்னு நினைச்சதும் இல்லை" என்றவளிடம் புன்னகைத்துக் கொண்டே இல்லையென்பதாய் தலையசைத்தவன்
"நீ நினைச்சது இல்லை...ஆனால் உன் ஆழ்மனசுல அந்த எண்ணம் ஒரு வடுவாய் அமைஞ்சிரும், அதைத்தான் நீ உன் லைப் பார்ட்னர் கிட்ட எதிர்ப்பார்ப்ப , அந்த மாதிரி இல்லைனா உனக்கு பிடிக்காமல் போயிடுது...அவங்களை அவங்களுக்காகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்கும் யாருக்கும் வரது இல்லை !! எவ்வளவு கொடுமைக்கார ஹூரோவா இருந்தாலும் ஹூரோயின் காதலால் திருந்தி அவளுக்காக மாறுறது கதை , படங்களில் வேணா நடக்கும் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை , நிஜம் வேற நிழல் வேற !!! உனக்கு கூட என்னை அந்த மாதிரி தான் பிடிச்சிருக்கு நினைக்கிறேன் " என்றவன் எப்படியாவது அவளுக்காக தான் மாறப் போவதில்லை என்பதை உணர்த்தி விட வேண்டும் எனக் கூறிக் கொண்டிருந்தான்.
"எது எப்படியோ போகட்டும் , ஆனால் நீங்க ஹூரோ தான் எனக்காக மாறுற ஹூரோ " என்றவள் அவனைப் பார்த்து கண் சிமிட்ட
" நீ சரியான இம்சை டி " என்றவனோ தலையில் அடித்துக் கொண்டு அனைத்து பைகளையும் அவள் கைகளில் திணித்து
" சொல்லுறதை புரிஞ்சுக்கிறதே இல்லை, இதுதான் உனக்கு பனிஸ்மெண்ட் தூக்கிட்டு நட " என்றவன் அவள் முதுகில் இரு கைகளையும் வைத்து அவளைத் தள்ளிக் கொண்டு நடக்க
"அய்யோ யுவி மெதுவா " என்றவளோ சிரித்துக் கொண்டே
நடந்தாள்.
நீங்க சாப்பிட்டதுக்கப்புறம் தான் நாம கிளம்புறோம் என சுதா கூறிவிட அவளின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாலும் அவளுக்காக அவன் மாற நினைக்கவில்லை அவளையும் அப்படி தனக்காக மாற சொல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை!!!
நான் நானாக இருக்கிறேன்...
அவள் அவளாக இருக்கட்டும் அது மட்டும் தான் யுவாவின் எண்ணம்.
சுதாவின் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் "கொஞ்சம்
வொர்க் இருக்கு தீரா வீட்டுக்குள்ள வரமுடியாது சாரி அங்கிள் ஆன்டி கிட்ட சொல்லிடு" எனக் கூற
"ஓகே யுவி " என்றவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க
"என்ன " என்று புருவம் உயர்த்தியவனிடம் அவளும் என்ன என்பது போல் புருவம் உயர்த்தினாள்.
அதில் புன்னகைத்தவன்
"கிளும்பு டி " எனக் கூற
அவனின் டி அழைப்பில் கண்களை விரித்தவள் "யுவி சூப்பரா இருக்கு நீங்க டி சொன்னது " என்றதோடு நிறுத்தாமல் அவன் முகத்தை கைகளில் ஏந்தி கன்னத்தில் இதழ் பதிக்க இப்போது கண்களை விரிப்பது யுவாவின் முறையானது.
"இதெல்லாம் நான் பண்ணனும் டி "
புன்னகைத்துக் கொண்டே கூறியவனின் கன்னக்குழி சிரிப்பில் மயங்கியவள் அதைத் தொட்டுப் பார்த்து மறுபடியும் அந்த குழியில் முத்தம் பதிக்க
"இதெல்லாம் சரியே இல்லை பார்த்துக்கோ இரு அங்கிள் கிட்ட சொல்லுறேன்" என்றவன் அங்கிள் என அழைப்பதற்குள் அவளின் இதழணைப்பிற்குள் வந்திருந்தான்.
இருவர் கண்களும் ஒரே மாதிரி விரிய காதல் காதல் காதல் மட்டுமே அதில் நிறைந்திருந்தது.
அவனைத் தன்னிடமிருந்து விலக்கியவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க வெட்கம் கொண்டு குனிந்தவாறே கதவைத் திறந்து இறங்கி நிற்க "ஓய் " என்றவனின் குரலில் ஓடியே விட்டாள்.
தன் கேசத்தை அழுந்த கோதியவனுக்கு முதன் முறையாக வெட்கம் வந்தது...
இப்படி ஒரு புன்னகை அவன் முகத்தில் என்றுமே தோன்றியதில்லே.
கார் கதவை கூட மூடாமல் ஓடிவிட்ட அவளின் தீராவை நினைத்து சிரித்தவன் துணி பைகளை அப்போது தான் கண்டான்.
"ஓஓ மேடம் இங்கேயே வெச்சுட்டு போயிட்டாங்களா ? பண்ண வேண்டிய வேலையை மறந்துட்டு மத்ததெல்லாம் நல்ல பண்ண வேண்டியது " சிரித்துக் கொண்டே புலம்பியவன் பைகைளைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
"என்னடி உள்ளே வந்ததும் ரூம்குள்ள போயிட்ட ? என்ன பண்ணுற ? கதவைத் திற டி " சுதா அறையின் முன் நின்று பாரு கத்திக் கொண்டிருக்க அதைப் பார்த்தவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.
"பண்ணுறதையெல்லாம் பண்ணிட்டு வெட்கம் வேற " மனதில் நினைத்தவன் "நீங்களும் வந்திருக்கீங்களா யுவா வாங்க வாங்க " என்ற பாரு அடியேய் யுவா வந்திருக்காங்க பாரு , அவரை பை தூக்க வெச்சுட்டு நீ சும்மா வந்தியா? இப்போ வெளிய வரியா இல்லையா டி " பார்வதி கத்திக் கொண்டே இருக்க
"அய்யய்யோ இவரை யார் உள்ளே வரச் சொன்னது " நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே சங்கட்டமாக இருந்தது.
"விடுங்க ஆன்டி பரவால நான் கிளம்புறேன் டைம் ஆச்சு" என்றவன் "வரேன் ஆன்டி அப்புறம் தீரா கொடுத்தது சூப்பரா இருந்துச்சு அவகிட்ட சொல்லிடுங்க " சத்தமாக கூறியவன் சிரித்துக் கொண்டே வெளியே செல்ல
"மம்மி" என்று சிணுங்கிக் கொண்டே காலை தரையில் அடித்தவள் "டேய் லேம்ப் போஸ்ட் உன்னை " என்றவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
கதவை மெல்லமாக திறந்தவள் தன்னை முறைத்துக் கொண்டிருந்த பாருவைக் கண்டு ஈஈ என்று இழிக்க "என்ன டி பண்ணிட்டு இருந்த ? யுவா வந்தானு கூப்பிட்டா கூட வெளியே வர மாட்டியா ?" எனக் கேட்க
"அய்யோ அம்மா பாத்ரூம்ல இருந்தேன் போதுமா " என்றவளுக்கு இப்போது தான் புடவைகளைக் காண ஆர்வம் பிறக்க அந்த பையை பாருவிடம் இருந்து வாங்கினாள்.
"உள்ளே பத்திரமா வை , நாளைக்கு டெய்லர் ஷாப்புக்கு போகலாம் " என பாரு கூற...
" ம்ம் என்றவள் " அறைக்குள் செல்ல திரும்ப...
" யுவாக்கு என்ன கொடுத்த சூப்பரா இருந்துச்சாம் ?" என்ற பாருவை அதிர்ந்து நோக்கியவள்
" அது அது அது" என்று இழுக்க
"என்னடி " என்றவர் "சாக்லெட்டா " எனக் கேட்க
ஆமாம் என்று வேகமாக தலையசைத்தவளோ அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.
"என்ன புள்ளையோ? சாக்லெட்னு சொல்ல இவ்ளோ நேரமா ?" என்று புலம்பியவர் சோபாவில் அமர்ந்துக் கொண்டு வாங்கி வந்திருந்த பொருட்களை பார்க்க ஆரம்பித்திருந்தார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro