பகுதி - 13
கனவிலும் காணாத
வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை
என உன் பேச்சு அளவில்லா
ஆட்டம் போட இறந்து இறந்து
பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்
வரம் கொடுத்தாயடா கள்ள
பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம்
எண்ண எண்ண
கணக்கில்லாத அளவு இந்த பாடலை ரிபீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தவளின் மனம் முழுவதும் யுவாவே நிறைந்திருந்தான்.
அவனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாலா என்று கேட்டால் இல்லை தான்...
ஆனால் அவனால் தன் மனதில் சிறு சலனம் ஏற்பட்டு விட்டது என்பதை மட்டும் அறிந்தவள் அழகாக புன்னகைத்தாள்.
இன்னைக்கு இருந்த மாதிரியே நீங்க எப்பவும் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும் யுவி !!! எனக்கு இந்த யுவியைத் தான் பிடிச்சிருக்கு என்றவளின் விரல்கள் தன் மொபைலில் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படத்தை வருடியது.
இதுதான் நாம்!!!
இதுவரை அவனை வெறுத்துக் கொண்டிருந்தவள் ஒரே ஒரு நாள் அவன் தனக்காக நடந்துக் கொண்டதைப் பார்த்து மொத்தமாக கவிழ்ந்துவிட்டாள்!
அன்பான பேச்சு, அரவணைப்பு இது போதும் ஒருசில பெண்களுக்கு!(அடிக்க வராதீங்க!!! பரிசு, பணம் முக்கியம்னு நினைக்கிற பெண்களும் இருக்காங்க)
சிறு வயதில் இருந்தே பார்வதி, சிவராமன் இருவரின் காதலைக் கண்டு வளர்ந்தவளுக்கு அவளுக்கு வரப்போகிற கணவரும் தன் தந்தையைப் போலத் தான் இருப்பார் என மனதில் பதிந்து விட்டது.
எங்கு சென்றாலும் தன் கையைப் பிடித்துச் செல்லும் தந்தை எங்கே?
முன்னால் சென்று அவன் பின்னால் தன்னை ஓட விட்ட யுவி எங்கே?
தனக்கு பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்யும் தந்தை எங்கே?
இதெல்லாமா உனக்குப் பிடிச்சிருக்கு என்று கேட்கும் யுவி எங்கே ?
என ஒவ்வொன்றிற்கும் தன் தந்தையுடன் ஒப்பிட்டே யுவாவைப் பார்த்தவள் அனைவரும் தன் தந்தையைப் போலவே இருக்க மாட்டார்கள் என்பதை மறந்து விட்டாள்.
அவள் வளர்ந்த சூழலும் அப்படித்தானே!!!
தீபு அக்கா அக்கா என்று பாசத்தை பொழிபவன், சிவா உடன் பிறந்தோர் யாரும் இல்லாததால் சுதா தான் அவனுக்கு எல்லாமே!
அதை விட அன்பு...
பூஜிதாவின் மேல் அவன் காட்டும் அன்பைப் பார்த்து பலமுறை பொறாமை கூட பட்டிருக்கிறாள் !!
ஏன் உங்களை மாதிரி ஒருத்தரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என அவனிடமே கூறியிருக்கிறாள்!!
இப்படி அன்பை மட்டுமே பொழியும் ஆண்களுக்கு மத்தியில் இருந்தவளுக்கு யுவாவின் செயல்கள் பிடிக்காமல் போனதில் ஒன்றும் தவறில்லையே!!
ஆனால் இன்று அவன் நடந்துக் கொண்டதைப் பார்த்து பரவசமடைந்தவள் இதுதான் அவன் என்று மனதில் நிறுத்திக் கொண்டாள்.
லேம்ப் போஸ்ட் என்ற அவன் எண்ணை யுவி என்று மாற்றியவள் பக்கத்தில் ஒரு சிவப்பு நிற இதயத்தையும் வைக்க தவறவில்லை.
அவன் ஆன்லைன் வருகிறானா என நொடிக்கொரு முறை ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தவள் கடுப்பாகி அவனுக்கே அழைத்துவிட்டாள்.
அழைத்ததிற்கு பிறகு தான் அய்யோ நாம ஏன் இப்போ கூப்பிட்டோம் என்ன பேசுறதுனு வேற தெரியலையே என புலம்ப ஆரம்பித்தாள்.
நல்லவேளை அவன் அட்டெண்ட் செய்யவில்லை என வெளியே கூறினாலும் மனதின் ஒரு ஓரத்தில் ஏன் அவன் அட்டெண்ட் செய்யவில்லை என ஏங்கவும் செய்தாள்.
குட்நைட் என்று அவனுக்கு அனுப்பியவள் அவன் பார்க்கிறானா எனப் பார்த்துக் கொண்டிருக்க அவனோ அழைத்து ஓய்ந்த மொபைலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்றைக்கு தான் நடந்து கொண்டது மிகவும் அதிகம் என நினைத்துக் கொண்டிருந்தவன் முதன் முதலாக சுதாவே அழைத்ததைக் கண்டு உறுதியே செய்து கொண்டான்.
இப்படியெல்லாம் அவனால் இருக்கவே முடியாது , ஒருநாளைக்கே மூச்சு முட்டுவது போல் இருக்க திருமணம் முடியும் வரை அவளிடம் பேசாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன் கைகளில் இருந்த மொபைலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கு சுதாவோ அவன் ஆன்லைன் வருவான் வருவான் என எதிர்ப்பார்த்திருந்து ஒரு கட்டத்தில் தூங்கியும் போனாள்.
இப்படியே அவளிடம் அவன் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டே மூன்று நாட்கள் நகர இந்த மூன்று நாட்களும் சோகமாக இருந்தவளைக் கண்டு பூஜிதா தான் மனமுடைந்து போனாள்.
யுவி ஒழுங்காக பேசாததால் சுதா சோகமாக இருக்க , பிடிக்காத திருமணத்தினால் தான் அவள் சோகமாக இருக்கிறாள் என தனக்குத் தானே நினைத்துக் கொண்ட பூஜிதாவும் அன்புவிடம் அழுதுகொண்டே தன் தோழியின் வாழ்வை சரிசெய்ய சொல்லி கெஞ்ச "சரி டா " என்ற அன்புவிற்கும் இனிமேலும் பொறுமையாக இருந்து பயனில்லை என நினைத்து அடுத்த நாளே யுவியை சந்திக்க முடிவு செய்தான்.
சிஸ்டத்தின் முன் தலையைப் பிடித்து அமர்ந்திருந்த யுவியின் கண்களோ சிவந்து காணப்பட வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தலையை கோதிக் கொண்டிருந்தவனைப் பார்த்த அஸ்வின் " என்ன யுவா ஆச்சு " எனக் கேட்க
"கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்ணுறேன் அஸ், வொர்க்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல " என்ற யுவாவிடம்
"ஒரு காபி குடிச்சுட்டு ப்ரெஸ் ஏர்ல நின்னுட்டு வா , பெட்டரா பீல் பண்ணுவ... நான் தான் இருக்கேனே உன் வொர்க்கை நான் பார்த்துக்கிறேன் " எனக் கூறிப் புன்னகைத்தான்.
"தேங்க்ஸ் அஸ், காபி குடிச்சுட்டு வந்து என் வொர்க்கை நானே பார்த்துக்கிறேன் " என்ற யுவா வெளியேறி விட
"இது உனக்குத் தேவையா " என்ற கபிலனைப் பார்த்து சிரித்த அஸ்வின்
"பழகிடுச்சு டா " எனக் கூறி தோளைக் குலுக்கிக் கொண்டான்.
காபியை வாங்கிக் கொண்டு கேபிடேரியாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தவன் காபியைக் குடித்துக் கொண்டே வெளியில் வேடிக்கைப் பார்க்க மேசையின் மேல் வைத்திருந்த அவனின் மொபைல் அடிக்க ஆரம்பித்தது.
திரையில் கண்ட தீரா என்ற பெயரையே அவன் கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க
அதை அட்டெண்ட் செய்யும் எண்ணம் துளியும் அவனுக்கு வரவில்லை.
நோட்டிபிகேஷன் வரிசையாக வந்துக் கொண்டிருக்க கடுப்பானவன் அதை ஓப்பன் செய்தான்.
குட் மார்னிங் , குட் நைட், சாப்பிட்டீங்களா , ஏன் பேச மாட்டிங்கிறீங்க இப்படி பல செய்திகளால் இன்பாக்ஸ் நிறைந்திருக்க அவள் டிபியை பார்த்தவனின் இதழ்களிலோ ஒரு ஏளனப் புன்னகை இருந்தது.
அவளும் அவனும் சேர்ந்திருந்த புகைப்படம் அது...
அன்று அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் அவர்களுக்கோ தெரியாமல் தீபுவின் கை வண்ணத்தால் எடுக்கப்பட்ட புகைப்படம்.
காபி கொடுத்து விட்டு நகர்ந்தவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவள் கைகளோடு கை கோர்த்துக் கொண்டு அவளைப் பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்த புகைப்படத்தைப் பார்க்க பார்க்க இவனுக்கு தான் வெறியேறியது.
"ச்சச எல்லாம் நடிப்பு " என்றவன் மனமோ உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.
எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் தனக்கென ஒரு கோட்பாடுகளை வைத்துக் கொண்டு வாழுபவன் இன்று நடந்த சம்பவத்தால் அனைத்தையும் மறந்து முதன் முதலாக புகைக்க ஆரம்பித்தான்.
முதன் முதலாக புகைத்ததில் கண்களில் கண்ணீர் வரும் வரை இருமியவன் கைகளோ மொபைலைத் தன் பேண்ட் பேக்கட்டில் தேடி எடுத்து சிவராமனுக்கு அழைப்பு விடுத்தது.
"அங்கிள் ஈவ்னிங் உங்களைப் பார்க்கணுமே !!! நீங்க ப்ரீயா " என்றவன் அவர் பதிலுக்கு காத்திருக்க "பார்க்கலாமே யுவா!! எனக்கு எந்த வேலையும் இல்லை " என்றவரிடம் இடத்தையும், நேரத்தையும் கூறி விட்டு வைத்தவன் ஒரு பெருமூச்சுடன் வேலைப் பார்க்க சென்றான்.
தன் வேலைகளை முடிந்தளவு சீக்கிரமே முடித்தவன் சொன்ன நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விட அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த சிவராமனைக் கண்டு புருவம் உயர்த்தியவன் "குட் ஈவ்னிங் அங்கிள் " என்றவன் ஒரு சிறிய புன்னகையுடன் அவர் அருகில் அமர்ந்தான்.
"காபி ? " என்று கேட்ட யுவியிடம் "எனக்கு ப்ளாக் டீ போதும் " என்றவரிடம் தலையசைத்தவன் ஆர்டர் செய்துவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.
வந்ததிலிருந்து ஒருவித யோசனையிலேயே இருந்த யுவியைப் பார்த்தவர் "வாட் ஹேப்பண்ட் யுவா ?" எனக் கேட்க
"ஒரு டென் மினிட்ஸ் அங்கிள், இன்னும் இரண்டு பேர் வரணும் " எனக் கூறி இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல் அமைதியாகிவிட அவர் தான் ஒன்றும் புரியாமல் நெற்றியைத் தடவிக் கொண்டு இருந்தார்.
காபி மற்றும் ப்ளாக் டீயை பேரர் கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைக்க அதே நேரத்தில் அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தனர் அன்பு மற்றும் வசந்த்.
அங்கிருந்த சிவராமனைக் கண்டு அதிர்ந்த அன்பு தனக்கு பின்னால் வந்த வசந்தைத் திரும்பிப் பார்க்க
"இவன் என்னடா நம்ம பேசலாம்னு சொல்லிட்டு சுதாவோட அப்பாவைக் கூட்டிட்டு வந்திருக்கான் அய்யய்யோ டீச்சர் அடிச்சுட்டாங்கனு அம்மாவைக் கூட்டிட்டு வர மாதிரி " என்ற வசந்தை முறைத்த அன்பு
"எல்லாம் உன்னால தான் " என்றபடியே அவர்களை நோக்கிச் சென்றான்.
வாங்க அன்பு அண்ட் என்று இழுத்த யுவாவை முறைத்த வசந்த் தன் பெயரைக் கூற வாட்டெவர் என்ற யுவாவோ "என்ன குடிக்கிறீங்க ?" எனக் கேட்க
"கொஞ்சம் விஷம் இருந்தா தா பா " என்று முணுமுணுத்த வசந்தோ தங்களையே பார்த்துக் கொண்டிருந்த சிவராமனைக் கண்டு தலை குனிந்துக் கொண்டான்.
"இரண்டு காபி போதும் " என்ற அன்புவைப் பார்த்து தலையசைத்தவன் அதை ஆர்டர் பண்ணிவிட்டு தன் காபியை ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.
அவனின் இந்த செய்கையில் கோபம் வர "இவன் என்னடா இந்த ஆட்டிட்யூட் காட்டுறான் எனக்கு வர கோபத்துக்கு " என்று கூறி பற்களைக் கடித்த வசந்தின் கையை பிடித்துக் கொண்ட அன்புவோ
"ப்ளீஸ் டா " எனக் கெஞ்சினான்.
"இவங்க எதுக்கு இங்கே வந்திருக்காங்க யுவா ? இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே " என இழுத்த சிவராமனைப் பார்த்து புன்னகைத்த அன்பு
"நான் சுதாவோட ப்ரெண்ட் பூஜிதாவோட அண்ணா அன்பு ,அங்கிள் " என அன்பு கூற
"ஓஓ அன்புவா? உன்னைப் பற்றி சுதா நிறைய சொல்லிருக்கா பா " என்றவர் யுவாவின் புறம் திரும்பி "யுவா அன்பு ரொம்ப தங்கமான பையன் பா , சின்ன வயசிலேயே எத்தனைப் பொறுப்பு " என்று கூற
"ஆமா ஆமா அங்கிள் ரொம்பபப தங்கமான பையன், அவரைப் பத்தி எல்லாமே உங்க பொண்ணு சொல்லியிருக்க மாட்டானு நினைக்கிறேன் அப்படித்தானே அன்பு " என்று இழுத்தவனின் நக்கல் குரலில் கோபம் கொண்ட வசந்த் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் டேய் என்று கத்திக் கொண்டே எழுந்தான்.
"கூல் டவுன் வசந்த் !!! எதுக்கு கோபம்" என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு தன் உயரத்திற்கு நிமிர்ந்து அமர்ந்தவன் தங்களையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த சிவராமனை நோக்கி
புன்னகைக்க
"இவன் ஏன் டா லூசு மாதிரி சிரிக்கிறான் , எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போல " எனக் கூறி தலையில் அடித்துக் கொண்ட வசந்த்
"என்னாச்சு யுவா ? அந்த தம்பி ஏன் கோபப்படுறார்? சுதா என்ன என்கிட்ட சொல்லல " படபடப்புடன் வினவிய சிவாரமனிடம்
"ஒன்னுமில்ல அங்கிள் " என்ற அன்புவோ "யுவா ப்ளீஸ் ஸ்டாப் இட்" பொறுமையாக கூறினான்.
"ப்பாபாபா என்ன ஒரு பொறுமை !!! தென் அங்கிள் இல்லை அன்பு மாமா !! எங்கே மாமா சொல்லு " என்ற யுவாவை அன்புவும் சிவராமனும் அதிர்ந்து நோக்க
"யுவா " என்று கத்திய அன்பிற்கு இதுவரை இருந்த பொறுமை எங்கோ சென்றிருந்தது.
"என்னடா கத்துற ? என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? " என்றவன் சிவராமனிடம் திரும்பி
"அங்கிள் தீராவுக்கு" என்றவன் உடனே நிறுத்தி தன்னை சமன்செய்து கொண்டு "சுதாவுக்கு என்னைப் பிடிக்கலையாம், பார்த்தாலே பயமா இருக்காம், என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழ்க்கை நல்லா இருக்காதாம், நாசமா போயிடுவாளாம் , அப்புறம் இதோ இந்த தங்கமான பையன் உங்க பொண்ணை விரும்புறானாம் , இவனோட நான் சுதாவை சேர்த்து வைக்கிறதாம் " என்றவன்
சிவராமனின் அதிர்ந்த பார்வையைக் கண்டு "அங்கிள் டென்ஷன் ஆகாதீங்க!! உங்களோட டெசிஷன் தான் பைனல் " என்றவன்
பேச வேண்டியது அவ்வளவு தான் என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"என்னால யுவி கூட பேசாம இருக்கவே முடியல பூச்சி" என்று கூறி தன் தோள்மீது சாய்ந்தவளைக்
கண்டு அதிர்ந்த பூஜிதா
"உனக்கு இந்த கல்யாணம் தான் பிடிக்லையே " என்று திக்கித் திணறி கூறியவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
"யுவியை எனக்கு இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு பூச்சி " என்றவள் சோகத்தையும் மீறி அழகாக புன்னகைத்தாள்.
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro