பகுதி - 11
Waiting for a புன்னகை சிரிடி
காணவில்லை heartbeat திருடி……
அடடா நான் கவிஞன் உனை பார்த்து
கெட்டுப்போன கவிஞன்
honest ah நான் பேசவா
இல்லை இது போதுமா
ஓ……மை டார்லிங் நாங்க கம்மிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங்
ஓ...
chorus ah நான் கேட்கவா
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா
அழகியே…… மேரி மீ மேரி மீ அழகியே………
டீ சர்ட், த்ரீ போர்த் பேண்ட், இடுப்பில் துண்டு விகிதம் பாடிக் கொண்டே ஒட்டடை அடைத்துக் கொண்டிருந்தவளுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருந்தனர் மது, சிவா மற்றும் தீபு.
சிவராமன் மற்றும் பார்வதி கல்யாண வேலையில் பிஸியாக இருக்க சுதாவின் கைகளில் தான் வீட்டை ஒப்படைத்து விட்டனர்.
திருமணம் இன்னும் இரண்டே மாதத்தில் என்பதால் வீட்டு வேலைகளை செய்ய பழகிக்கோ என்று கூறி பார்வதியும் சிவராமனுமடன் வெளியே சென்று விட இந்த நான்கு வானரங்களும் வீட்டை ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.
கோரஸ் பாடும் வேளையில் மது தீபு கையை சுரண்ட "என்னடி " என்றவனோ சன்னலை துடைத்துக் கொண்டிருந்தான்.
"இன்னைக்கு உங்க மாமா வருவாரு தானே!!கொஞ்சமாச்சும் டீ டிக்காஷன் இருக்கா? நம்ம ப்ளான் போட்டு ஐந்து நாள் ஆச்சு, ஆனால் இன்னும் எக்ஸிகியூட் பண்ணலனா எப்படி? " என்று திட்டியவளை முறைத்தவன்
"போட்டது ஒரு மொக்க ப்ளான் , இதை எக்ஸிகியூட் பண்ணலனு திட்ட வேற செய்யுற ? அவர் வந்துடுவாரு ஒழுங்கா வீடு கூட்டு " என்றவனை முதுகில் அடித்தவள்
"எங்க வீட்டுலையே நான் வேலை செய்ய மாட்டேன் " என புலம்பியவாறே மது வீடு கூட்ட ஆரம்பித்தாள்.
நான்கு நாட்களுக்கு முன்பு , அதாவது நம்ம வானரங்கள் ஐடியாவோட வர சொன்ன அதே நாள்.
யுவாவிடம் பேசாமல் ஸ்விட்ச் ஆப் செய்தவள் அதற்கு பிறகு அவனிடம் பேச முயற்சி செய்யவே இல்லை...
அதனால் தான் என்னவோ அடுத்த நாள் அழகாகவே விடிந்தது அவளுக்கு...
என்றும் போல் பாட்டு பாடிக் கொண்டே தீபுவுடன் கல்லூரிக்கு கிளம்பியவள் மது மற்றும் சிவாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வகுப்பறைக்குச் சென்று விட இந்த மூன்று வானரங்களும் கேண்டீனில் இருந்தால் சுதாவிடம் மாட்டிக்கொள்ளவோம் என்று லைப்ரரியில் ஐக்கியமாகிவிட்டனர்.
"நீ ஆரம்பி " சிவாவைப் பார்த்து கூறிய மதுவை முறைத்தவன்
" ஏன் நீ ஆரம்பிக்கிறது" எனக் கூற
"நீ ஆரம்பிச்சா குறைஞ்சா போயிடுவ " என்றவளை
"அதே மாதிரி நீ ஆரம்பிச்சா குறைஞ்சா போயிடுவ " என சிவாவும் கேட்க
தலையில் அடித்துக் கொண்ட தீபுவோ நான் ஆரம்பிக்கிறேன் என்று கூறி தான் பார்த்தவற்றையெல்லாம் கூற ஆரம்பித்தான்.
தீபுவிற்கு பிறகு மது, சிவா என மூவரும் கூறி முடிக்க "இதிலிருந்து என்ன தெரியுது ?" என்ற சிவாவை
"என்ன தெரியுது?" என இருவரும் கேட்க
"ஒரே படத்துல வர ஐடியாவைத் தான் பாலிவுட் ஹாலிவுட் கோலிவுட்னு எல்லாத்துலையும் பாலோ பண்ணுறாங்க " எனக் கூற
அவன் மண்டையில் கொட்டிய மதுவோ "ஒழுங்கா நம்ம என்ன பண்ணலாம்னு சொல்லு டா " எனத் திட்டினாள்.
"இந்தாரு டி ...அடிச்சுக்கிட்டே இருந்தேன்னா வைய்யு நின்னை கொன்னு கழியும் " என்ற சிவாவைப் பாவமாக பார்த்த தீபு
"என்ன பாஷை டா பேசுற? புரியுற மாதிரி பேசேன்" எனக் கூற
"ஈஈஈஈ" என்று இழித்தவன்
"என்னை வேற கோலிவுட் பாருங்கனு சொல்லிட்டீங்க..தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம்னு மாத்தி மாத்தி பார்த்து நான் எந்த மொழில பேசணும்ங்கிறதையே மறந்துட்டேன்" என்றவனைப் பார்த்து இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
"பொறுப்பே இல்லாம சிரிச்சுட்டு இருக்கீங்க!! சுதாக்கா முக்கியம் இல்லையா உங்களுக்கு? வாங்க ப்ளான் போடலாம் " என்ற சீரியஸாக கூறிய சிவாவை இருவரும் மொத்த ஆரம்பிக்க
அங்கு லைப்ரரியில் இருந்த அதிகாரியோ இவர்களை திட்ட ஆரம்பித்தார்.
"உஸ் உஸ்" என்று அவரிடமே கூறியவன் "லைப்ரரில கத்தக் கூடாது சார் அது கூட தெரியாதா" என்று கூறி அடுத்த நொடியே வெளியே ஓடிவிட்டான்.
சிரித்துக் கொண்டே வெளியே வந்த மது, தீபுவைக் கண்டவன் "நல்ல வேளை டா நான் எந்த டிபார்ட்மெண்ட்னு தெரியாது! அவரை மிரட்டுனதுக்கு ஐடி கார்டு பிடுங்கி வெச்சிடுவாரோனு நெனச்சு பயந்துட்டேன்" என்ற சிவாவைப் பார்த்து சிரித்தவர்கள்
"அதான் நாங்க இருக்கோமே!!! போட்டு கொடுத்துட்டோம்" வாசன் ஐ கேர் விளம்பரம் போல் நாங்க இருக்கோம் என்று கூற அவர்களை அடிக்க துரத்தினான்.
இப்படி அடிதடிகளிலே அந்த நாள் ஓடிவிட திட்டத்தை மட்டும் தீட்டவில்லை இந்த வானரங்கள்...
இறுதியில் தீபு தான் மாமாவை வரச் சொல்லுவோம் அவருக்கு அக்காவை எந்தளவு பிடிச்சிருக்குனு டெஸ்ட் பண்ணிட்டு நம்ம ப்ளான் போடலாம் எனக்கூறி இதோ இன்று அதுவும் நடக்கப் போகிறது...
அதாங்க அவர்கள் டெஸ்ட் வைக்கும் நாள்!!!
பாட்டு பாடிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவள் மூவரும் காபி வேணும் எனக் கேட்ட "இதோ நான் போடுறேன் " எனத் துள்ளி குதித்து ஓடியவள் உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்துக் கொண்டாள் தனக்கு காபி வைக்கத் தெரியாது என்று...
"இப்போ என்ன பண்ணுறது? நாமளும் வீராப்பா உள்ள வந்துட்டோம்!!!கடவுளே உன் மேல பாரத்தைப் போட்டு தான் ஆரம்பிக்கிறேன் " என்றவள் மூவருக்கும் தெரியாமல் மொபைலை எடுத்துக் கொண்டு மறுபடியும் சமையலறைக்குள் ஓடி விட்டாள்.
காபி செய்வது எப்படி ? அடுத்த நொடி விதவிதமாக வீடியோக்கள் வர இரண்டே நிமிடத்தில் காபி வைப்பது எப்படி என்ற வீடியோ க்ளிக் செய்து அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் சுவற்றில் சாய்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவனைக் கவனிக்கவில்லை.
அவளை கீழிருந்து மேல் வரை அளவிட்டவனின் கண்களோ அவன் முகத்தில் தான் வந்து நின்றது.
அனைத்து முடிகளையும் ஒன்றாக இணைத்து க்ளிப் குத்தியிருக்க அவளைப் போலவே அடங்காத இரண்டு கற்றை முடிகள் மட்டும் நெற்றியில் ஆடிக் கொண்டிருந்தது.
அது என்னவோ அவளை மிகவும் அழகாக காட்ட கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் லேம்ப் போஸ்ட்.
முதலில் பாலை ஊற்ற வேண்டும் , அதற்கு பிறகு என்றவள் அய்யய்யோ மறந்துட்டனே எனக் கூறி தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் அந்த வீடியோவைக் காண ஆரம்பித்தாள்.
"ஒரு காபி கூட போடத் தெரியாதா?" பற்களைக் கடித்தவன் அவளின் முக பாவனைகளில் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்...
டேட்'ஸ் லிட்டில் பிரின்சஸ் என்று உளறிக் கொண்டிருக்கும் பெண்கள் என்ன செய்தாலும் அழகு தான் போல!!!
(நான் டேட்'ஸ் லிட்டில் பிரின்சஸ் இல்லைங்கோ!!! சண்டைக்கு வராதீங்க... )
இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு வலது கையில் மொபைலைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் சமையல் திண்டில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
இனி இவங்களுக்கு காபி வராது என்று புன்னகைத்துக் கொண்டவன் அவள் அருகில் சென்று நின்றான்.
அவன் நின்றதையும் உணராது முழு கவனத்தையும் முதன் முறை போடப் போகும் காபியிலேயே பதித்தவள்
பால் ஊத்திட்டு அது பொங்கி வந்ததும் அளவா பால் எடுத்துட்டு சுகர், காபி தூள் போட்டா போதும்...அய்ய் சிம்பிள் அவ்வளவு தானா! என்று புன்னகைத்தவள்
"முதலில் அடுப்பு பத்த வைக்கணும் தீரா மா!" என்ற குரலில் பயந்து நிமிர்ந்தவள் கைகளில் இருந்த கைபேசியை தவற விட்டாள்.
அது சரியாக யுவாவின் வலது கையில் அடைக்கலமாகியிருக்க அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவன் முகத்தைப் பார்க்காமல் தன் விரல்களால் இல்லாத மாவை பிசைந்துக் கொண்டிருந்தாள்.
இதோடு அவனிடம் பேசி நான்கு நாட்கள் ஆகி விட்டது.
நிம்மதியா இருந்தேன் வந்துட்டான் லேம்ப் போஸ்ட் என்று மனதினுள்ளே பல நல்ல வார்த்தைகளால் அவனைப் புகழ்ந்து தள்ளியவள்
"அம்மா அப்பா இல்லை" என்று மட்டும் கூற
"தெரியுமே " என்றவன் வீட்டுக்கு வந்தவங்களை உட்காருனு சொல்ல மாட்டியா எனக் கேட்க
அவனை முறைத்தவள் " ஹால்ல போய் உட்காருங்க " எனக் கூற
"எனக்கு இங்கே தான் உட்காரணும்" என்றவன் அவளின் பக்கத்தில் இருந்த இடத்தை கை காட்ட "ஆஆஆ" என்று வாயைப் பிளந்தவள் "இந்த இடம் உங்களுக்கு பத்தாதே " எனக் கூற
"சரியா இருக்குமே " என்றவன் அவள் பேச இடம் தராமல் அவளை ஒட்டியவாறு அமர்ந்தான்.
தள்ளி அமர்ந்தவள் அவனின் நெருக்கத்தில் அவஸ்தையுடன் நெழிய "இன்னும் போனா சிங்க் குள்ள தான் விழுவ!" என்று சிரித்தவனை முறைத்தவள் கீழே இறங்க போக அதற்குள் அவனின் நீண்ட கை அவளை கீழே இறங்கவிடாமல் அணைத்திருந்தது.
இந்த முதல் அணைப்பில் கண்களை விரித்தவளின் இமைகளோ டப் டப் என்று அடித்துக் கொள்ள இதயமோ ரயில் வண்டியின் வேகத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது.
"அய்யோ யுவி என் ஹார்ட்க்கு ஏதோ ஆயிடுச்சு வேகமா துடிக்குது " என்றவள் அவனைப் பார்க்க
அவளின் இந்த பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை ரசிக்கவே செய்தான் அந்நியனிலிருந்து ரெமோவாய் மாறியிருந்த யுவி.
"அப்படியே அதை இன்னும் கொஞ்சம் வேகமாக துடிக்க வைக்கலாமா?" என்று கேட்க
"அய்யோ? எனக்கு ஏதாவது ஆயிடும்?" என்று பதறியவளிடம்
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது" என்றவனை சந்தேகமாக ஏறிட்டவள்
"அதெப்படி முடியும்? " எனக் கேட்க
அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான்.
மற்ற நேரங்களில் அவனைப் பார்த்து பயந்தாலும் இதோ இப்படி புன்னகைக்கும் தருணத்தில் அவளையும் மீறி அவனை ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள்.
அவளின் கண்களில் ரசனையைக் கண்டவன் அவள் நெற்றியில் தன் முதல் முத்திரையை இட்டான்.
கண்கள் வெளியே வந்துவிடுமோ என்ற நிலையில் விழி விரித்தவள்
"யு...வி" என்று இழுக்க "யுவி தான்" என்றவன் "இனிமேல் என்கூட பேசாம இருக்கக் கூடாது!!! பேசாம இருந்தா இதுதான் தண்டனை புரியுதா?" எனக் கேட்க
அவன் கூறியதில் மனதின் ஒரு ஓரத்தில் நிம்மதி பரவுவதைக் கண்டவள் வேகமாக தலையாட்டினாள்.
"நாங்க எதுவும் பார்க்கல" என்று கத்திய சிவாவை மது , தீபு இருவரும் முறைக்க சுதாவோ இவர்களின் சத்தத்தில் கீழே குதித்து முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
"சாரி மாமா... காபி ரெடியானு கேட்ட வந்தோம் " என்ற தீபு தன் அருகில் இருந்த மது மற்றும் சிவா இருவரையும் இழுத்துக் கொண்டு வெளியே செல்ல யுவாவோ தன் கேசத்தை அழுந்த கோதிக் கொண்டு நடந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு இதழ்கள் தானாக விரிந்தது.
"தீரா காபி போடலாமா" எனக் கேட்க
"நீங்க போங்க நான் போடுறேன்" என்றவள் கீழே குனிந்துக் கொண்டே பதில் அளிக்க அவளை நெருங்கி வந்து நின்றவன் "உனக்கு எப்படிப் போடத் தெரியும்னு எனக்குத் தெரியும்!! ஒழுங்கா நான் சொல்லித் தரதை கவனி" என்றவன் அவளைப் பின்னிருந்து அணைத்தவாறே காபி போட கற்றுக் கொடுத்தான்.
"ஏன் டா கத்துன" என்ற தீபுவை முறைத்த சிவா "டேய் நான் பார்த்த எல்லா படத்துலையும் அப்படிதான் டா கத்துவாங்க " எனக் கூற
"அடப்பாவி " என்ற இருவரும் தலையில் கை வைத்தவாறே சோபாவில் அமர்ந்தனர்.
"தப்பா கத்திட்டனோ!! எதுக்கோ டைலாக் கரெக்ட்டானு ஒரு டைம் செக் பண்ணிக்கலாம் " என்றவன்
இப்போது இருவரின் அருகே அமர்ந்துக் கொண்டு "சாரி டா தப்பா கத்திட்டேன்" என்று கூற
"விடு டா பரவால" என்ற தீபுவிடம்
"டைலாக் தப்பா சொல்லிட்டனேடா!! நான் வேணா மறுபடியும் போய் கரெக்ட்டா சொல்லிட்டு வந்துடவா" என்று கேட்டவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்!!!
பொங்கல் வேலைகளில் பிஸியாகி விட்டேன்😒😒நம்மளையே வெலை வாங்குனா எப்படி🚶♀அதான் அப்டேட் வரல😒😒
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro