ஞாயிற்றுகிழமை காலையில் கல்பனாவின் வீட்டின் காம்பவுண்ட் தாண்டி பின்புறமுள்ள கடற்கரை
மணல்வெளியில் ஜெபா, கதிர் ஜனார்த்தனன், கல்பனா நால்வரும் இரண்டு அணியாக பிரிந்து பீச்பால் விளையாடிக் கொண்டிருந்தனர்.
"கதிர் இந்த கேம சூப்பரா விளையாடுவான்..... நீங்க அவன் கூட பேர் பண்ணிக்குறீங்களா?" என்று கேட்ட கல்பனாவிடம் உற்சாகமாக தலையாட்டிய ஜெபா,
விளையாட்டை ஆரம்பித்த பிறகு நான்கைந்து முறை கதிரை "கான்சென்ட்ரேட் பண்ணி வெளாயாடுங்க கதிர்ணா! பால் வர்றத பாக்காம, எங்க வானத்த பாத்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?" என்று திட்டினான்.
இரண்டு தடவை காதில், முதுகில் பந்தால் அடிவாங்கிய கதிருக்கு இன்று பீச்பால் விளையாடும் ஆசை சுத்தமாக இல்லை. அவனது மனது வேறு இடத்தில் இருந்தது.
"என்ன கதிர்.... போதும் போதும்ங்குற அளவுக்கு இவள பால் பின்னால நீங்க ஓட விடுவீங்கன்னு உங்கள பத்தி கல்பனா பயங்கர பில்டப் குடுத்துட்டு வந்தா! இங்க நீங்க என்னடான்னா பால எடுக்கறதுக்கு பதிலா குனிஞ்சு பீச் மண்ணை அள்ளிக்கிட்டு இருக்கீங்க? வாட்ஸ் ராங்?" என்று கேட்ட ஜனார்த்தனனிடம் சிரிப்புடன்,
"அது ஒண்ணுமில்ல ஜனா.....
சந்தனா இங்க வராதது தான் ராங்!
சும்மா நேரமே நம்ம ஓவியருக்கு கற்பனை பிச்சிக்கிட்டு கொட்டும்! இந்த தடவ அவர் கேர்ள்ப்ரெண்டோட வேற வந்துருக்காரு! அம்மாட்ட கல்யாணம் பண்ணிக்குறதுக்கு சம்மதம் வேற வாங்கிட்டாரு. இந்தா அவர் பக்கத்துல நிக்குற சந்தனாவோட தம்பியும் அவங்களோட மேரேஜ்க்கு புல்
கோஆப்பரேஷன் குடுக்குறாரு! பின்ன நம்ம தலைவருக்கு கனவு காணுறதுக்கு வேற காரணமா வேணும்? அவனுக்கு நாமளே கண்ணுக்கு தெரியுறோமோ இல்லையோ? இதுல பால் எங்க கண்ணுக்கு தெரியுறது? அதான் கை, காலுல எல்லாம் அடி வாங்கிட்டு இருக்கான்.....!" என்றாள் கல்பனா.
"ஆமா... நீங்க சொல்ற மாதிரி இன்னிக்கி எனக்கு கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது. அதுனால
இன்னிக்கு ஒருநாளைக்கு மட்டும் நீங்களும் ஸாரும் ஆப்போஸிட்ல நின்னு விளையாடுங்க அக்கா! நான் அப்டியே கொஞ்ச தூரம் கடல்ல கால் நனைச்சுக்கிட்டே வாக்கிங் போயிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு பந்தை ஜனார்த்தனனிடம் பாஸ் செய்தவன் ஜெபாவையும் தன்னுடைய கைப்பிடியில் இழுத்துக் கொண்டு சென்றான்.
"கதிர்ணா..... எனக்கு இப்ப வாக்கிங்லாம் போக வேண்டாம்!" என்று மறுப்பாக தலையாட்டியவனை,
"வாடா...... சும்மா!" என்று சொல்லி தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்.
"நான் கதிர்ட்ட நேத்து நைட் எல்லாமே பேசிட்டேன் கல்பனா! அவனுக்கு இந்த வீட்ட நமக்கு தர்றதுல கொஞ்சங்கூட வருத்தமோ, கோபமோ இல்ல..... எதுக்கு விக்குற மாதிரி வித்து, திரும்ப இத எங்கிட்ட இருந்து வாங்கிக்குறீங்கன்னு ஒருவார்த்த கூட கேக்கல. இந்த வீட்ட குடுக்குறீங்களான்னு கேட்டவுடனே ஓகேன்னுட்டான்.... அதுவும் முகத்துல அப்பாடா அப்படிங்கற நிம்மதியான ஃபீலோட...... இப்போ இவன் நினைச்சா இவ்ளோ பெரிய வீட்டை அவன் சொல்ற ரேட்டுக்கு நம்மள வாங்க வைக்க முடியும்..... ஆனா இவன் பணத்த பத்தியெல்லாம் ஒண்ணுமே கேட்டுக்கல. ரியல்லி உங்கப்பா மூலமா இப்டி ஒரு ரிலேஷன்ஷிப் கிடைச்சதுக்கு நீ ரொம்ப லக்கிதான் கல்பனா!" என்று சொன்ன கணவனின் முகம் நோக்கி சிரித்தவள்,
"ஒருவழியா நான் ரொம்ப வருஷமா உங்க கிட்ட சொல்லிட்டு இருந்த விஷயம் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சு ஜனா! எல்லா விஷயமுமே வருஷக்கணக்குல சொல்லிக் குடுத்த பிறகு தான் உங்களுக்குப் புரியுமா......? ஆனாலும் நீங்க இப்டி மின்னி மின்னி எரியுற ட்யூப் லைட்டா இருக்கக்கூடாது!" என்று சொன்னாள்.
"ஏய்..... இவன வாருறதுக்கு
எப்படா சந்தர்ப்பம் கெடைக்கும்னு பார்த்துக்கிட்டே இருப்பியாடீ நீ? பாகேஸ் ஆன்ட்டி ஊருக்குப் போறாங்க. அததவிர நமக்கு பெரிசா கவலைப்பட ஒண்ணுமில்ல; அதுனால ஒரு ஒன்வீக் லீவு போட்டு அஸ்ஸாம் போயிட்டு வருவோமா? இளா பொறந்ததுக்கு அப்புறம் நம்ம ஹனிமூனே போகவில்ல?" என்று கேட்ட தன்னுடைய கணவனிடம் திகைப்புடன்,
"அதுசரி.... இப்ப உங்களுக்குத் தான் ஹனிமூன் கேக்குதாக்கும்? நீங்களும் நானும் ஆப்போனென்ட்ஸா இருந்து ஒரு கேம் விளையாடுவோம். அதுல நீங்க ஜெயிச்சீங்கன்னா வேணும்னா அஸ்ஸாம் போறத பத்தி யோசிக்கலாம்!" என்று சற்றே பிகு செய்து அவன் தாடையில் செல்லமாக இடித்தவள் தன்னுடைய தந்தையைப் பார்க்கும் ஆசையில் கணவனுடன் விளையாடும் இந்த விளையாட்டில் அவனை ஜெயிக்க வைக்கும் முடிவில் தான் விளையாட்டை துவக்கினாள்.
கதிரும், ஜெபாவும் கல்பனாவின் வீட்டிலிருந்து கடற்கரை வழியாகவே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து போயிருந்தனர்.
"கதிர்ணா.... இன்னும் எவ்ளோ தூரம் நாம வாக்கிங் போகப்போறோம்? காலையில இருந்து நீங்க ஒரு மார்க்கமாவே திரியுறீங்களே ஏன்.....? நேத்து கொஞ்ச நேரம் உங்கள அந்த சாத்தான் கூட தனியா விட்டுட்டுப் போனதுனால இப்டி
லூசாகிட்டீங்களா என்ன?
நாம இன்னிக்கு ஊருக்கு கிளம்புறமா இல்லையா?" என்று வரிசையாக கதிரிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தான் ஜெபா.
"அடடடா! கொஞ்ச நேரம் சும்மா வாயேன்டா; கேப்பே விடாம எத்தன கேள்வி கேப்ப? இந்த விஷயத்துல
நீயும், சஞ்சீவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கீங்கடா
சேகர்.... அவனும் இப்டித்தான் நான் என்ன மூடுல இருந்தாலும் அதப்பத்தி கொஞ்சங்கூட கவலையே படாம
தொணதொணன்னு கேள்வி கேட்டுட்டே இருப்பான்! இந்நேரம் பொள்ளாச்சியில ஒக்காந்து
என்ன செஞ்சுட்டு இருக்கானோ? நேத்து நைட் டீவியில ஒரு பாட்டு கேட்டேன்டா சேகர்; நேசம் படத்துல இருந்து ஒரு பாட்டு..... அத இப்ப மறுபடியும் கேக்கணும் போல இருக்கு! அந்த பாட்ட மட்டும் கேட்டுட்டு வீட்டுக்கு திரும்பிப் போய்டலாம்! நான் போன் கொண்டு வரல. நீ அந்த பாட்ட உன் மொபைல்ல வையேன்!" என்று கேட்டவனைப் பார்த்து குர்ரென்று முறைத்த ஜெபா கதிரிடம்,
"அந்த டூத்பேஸ்ட் சாஷே
உங்கள தான் தனியா கழட்டி விட்டுட்டு ஓடிட்டான்ல..... அப்புறம் எதுக்கு நீங்க இன்னும் அவனப் பத்தி பேசிட்டு இருக்கீங்க?
பெரிய பிஸினஸ் பேமிலின்னு வேற சொன்னீங்க! காலையில இருந்து நைட் வரைக்கும் அவனோட பிஸினஸ கட்டிட்டு ஓடிக்கிட்டு இருப்பான்; வேற என்னத்த பண்ணுவான்? ஊருக்கு எப்ப கிளம்புறோம்னு கேட்டேன்? அதுக்கு இன்னும் பதிலே வரக்காணும்?" என்றான்.
"ம்ப்ச்! மெதுவா போலாம்டா! சஞ்சீவ்க்கும் உனக்கும் ஏன்டா செட் ஆகவே மாட்டேங்குது? உன்னை மாதிரியே அவனும் ரொம்ப நல்ல பையன்டா..... என்ன கொஞ்சம் ரிசர்வ்டு டைப்! உங்க
அக்கா தம்பி சண்டைக்குள்ள நான் உள்ள வரமாட்டேன்..... அதுமாதிரி எனக்கும், சஞ்சீவ்க்கும் உள்ள ப்ரெண்ட்ஷிப்புக்கு நடுவுல நீ வராத! இன்னொருதடவ எங்காதுல விழுற மாதிரி லஷ்மிய சாத்தான்னும் சொல்லாத! அடிவாங்குவ!" என்று கதிர் ஜெபாவிடம் சொல்ல அவன் கதிரிடம்,
"உங்களுக்கு எங்க அக்காவ கட்டிக் குடுத்துட்டு உங்கட்ட இருந்து அடிவேற வாங்கணுமா நானு?
நீங்களும் தான் அவள எம்முன்னால சூனியபொம்மன்னு திட்டுனீங்க! அதுக்கு நான் ஏதாவது ரியாக்ட் பண்ணுனேனா? என்ன இங்க வந்ததுல இருந்து அவளுக்காக நீங்களும், உங்களுக்காக அவளும் உயிர்வாழுற மாதிரி ஸீனப் போடுறீங்க? அந்த சஞ்சீவ பத்தி ஒருவார்த்த பேசுனா இப்டி கோபப்படுறீங்க! இதெல்லாம் நல்லாவேயில்ல பார்த்துக்கங்க.....!" என்று சொன்னவனிடம்
"நல்லாயில்லயா? போடா.... உனக்கு ஒண்ணுமே தெரியல. இதெல்லாம் எவ்ளோ நல்லாயிருக்கு!" என்று கண்கள் மூடி சிறு சிரிப்புடன் பதிலளித்தான் கதிர்.
"ம்ஹூம்......! கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ சரியில்ல...... பாட்டு பாடுறது, டான்ஸ் ஆடுறது மட்டுமில்ல..... இந்த பீச் மண்லயே நின்னு குட்டிக்கரணம் அடிக்குறதுன்னாலும் சரி! அடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேருங்க! அங்க அவ உங்க வீட்ல தனியா உங்கப்பா, அம்மா கூட இருக்கா. என்னத்தையாவது பேசி வம்ப இழுத்து வச்சுட்டான்னா கஷ்டம்.... நான் முதல்ல போறேன். சீக்கிரமா நீங்களும் வீட்டுக்கு வந்து சேருங்க!" என்று கதிரிடம் சொல்லி விட்டு தன்னுடைய மொபைலை கதிரிடம் கொடுத்து விட்டு
அங்கிருந்து கிளம்பினான் ஜெபசேகரன்.
உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம்
உன் மார்பினில் சேர்ந்ததா
உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்
என்ற வரிகளைக் கேட்ட போது கதிருக்கு நேற்றிரவில் அவன் மார்பில் ஒண்டிக்கொண்டு முத்தத்தை வாங்கியும் கொடுத்தும் கொண்டிருந்த சந்தனா நினைவில் வந்தாள். அவளை கைவளைவில் வைத்து அணைத்தபடியே சென்று கிடைத்த கேப்பில் அவசர அவசரமாக தொலைக்காட்சி பெட்டியில் ஒரு பாட்டு சேனலை தேடி வைத்தவனுக்கு காதல் செய்ய துணையென்றானது தான் அந்தப் பாடல்!
அவன் தந்த முத்தத்தை கண்மூடி ரசித்து வாங்கிக் கொண்டிருந்தவள் அவனுடைய சட்டை பட்டனில் கைவைத்த போது கதிரின் கை அவளது செயலுக்கு தடைபோட்டது.
"ம்ப்ச்! நான் உன் பாடி மஸூல்ஸ பாக்கணும்; நீ பிட்டா இருக்கியா? சிக்ஸ் பேக் வச்சுருக்கியா? இதெல்லாம் எனக்கு சும்மா கட்டிப்புடிச்சா தெரியவேயில்ல. ட்ரெஸ்ஸ கழட்டு!" என்று கேட்டவளிடம் உறுதியான மறுப்பு தெரிவித்தவன்,
"நீ கேக்குறது எல்லாத்தையும் இன்னொரு நாள் காலையில பாக்கலாம். ஜெபாவ கூட்டிட்டுப் போயி குடிக்க வச்சது நீதானன்னு கேட்டு ஒருநாள் நம்ம வீட்டுக்கு சண்ட போட வந்தியே? அதுமாதிரி நாகர்கோவிலுக்கு போன அடுத்த நாள் காலையில கூட வா. நீ கேட்ட மாதிரி உம்முன்னால வந்து நிக்குறேன். இப்பல்லாம் உன்னோட ஆசை ஆவுறதுக்கில்ல!" என்றான் தீர்மானமாக.
"நம்ம பர்ஸ்ட் நைட்லயும் எங்கிட்ட இப்டியே தான் பேசுவியா? ஏன்டா இப்டி வெளக்கெண்ண மாதிரி பேசுற?" என்று தான் கேட்டதற்கு அவனிடமிருந்து முடியாது என்ற பதில் வந்ததால் சற்றே எரிச்சலடைந்த குரலில் கதிரிடம் கேள்வி கேட்டாள் சந்தனா.
"நீ என்னை வெளக்கெண்ணன்னு சொன்னாலும் சரி! வேப்பெண்ணன்னு சொன்னாலும் சரி; இல்ல பஜ்ஜி சுட்டு வச்ச மிச்ச எண்ணென்னு சொன்னாலும் சரி; சந்தானலஷ்மி மிஸஸ் கதிரேசனா ஆகுற வரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தர்ட்ட பட்டன கழட்டுற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது சூபொ!" என்று சொன்னவன், தன்னுடைய ப்ரியசகியின் கோபத்தை தணிக்கும் வகையில் அவள் மூக்குடன் மூக்கை உரசினான்.
"ம்ப்ச்! என்ன பட்டன கழட்டுறதெல்லாம்னு அழுத்திச் சொல்ற? நான் ஒண்ணும் டர்ட்டி மைண்ட் செட்டோடல்லாம் உம்மேல கைய வைக்கல; என்னை விடு;
இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் போ.... போய் தூங்கு!" என்று சொன்னபடி அவன் பிடியில் இருந்து விலகிக் கொள்ள முயன்றவளிடம்,
"விடுறதா.... லூசு ஃபெதரு! என்னடீ பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட? டர்ட்டி மெண்ட்செட் உனக்கு வேணும்னா இல்லாம இருக்கலாம்; ஆனா நானும் அப்டி சரியா இருப்பேன்னு சொல்ல முடியாதுல்ல...... அதுனால தான்டா!
உன்னோட கையி வேற வேல தான் பாக்கக்கூடாதுன்னு சொன்னேன். கதிர கட்டிப் பிடிச்சுக்குறதையோ, அவன் கன்னத்துல, நெத்தியில, கழுத்துல முத்தம் குடுக்குறதையோ வேண்டாம்னு சொன்னனா? பாரு பின்கழுத்த முறுக்கிப் பிடிக்குறேன்னு பிடிச்சு என்செயின கூட லேசா நெளிச்சு வச்சுட்ட! இதெல்லாம் வேண்டாம்னு நான் சொன்னனா செல்லம்?" என்று கேட்டவனின் மடியில் அமர்ந்திருந்தவள் அவன் முகம் பார்த்து,
"இது மட்டும் உனக்கு ஜில்லுன்னு இருக்குதாக்கும்? போடா!" என்றாள் கோபத்துடன்.
"நம்ம வீம்பம்மா ரொம்ப கோபமா இருக்காங்க போலிருக்குதே? அவங்க கோபத்த காலி பண்றதுக்கு நாம என்ன பண்ணலாம்?" என்று
யோசித்தவன், அவளை தன் முதுகின் பின்பிறமாக சாய்த்து மார்பின் கீழும், இடையின் கீழுமாக இரண்டு கைகளை கொடுத்து தூக்கிக் கொண்டு சென்று பாயில் கிடத்தினான்.
"டர்ட்டி மைண்ட்செட் உனக்கு வேணும்னா இல்லாம இருக்கலாம்; ஆனா நானும் அப்டி சரியா இருப்பேன்னு சொல்ல முடியாதுல்ல லஷ்மி......?" என்றவனின் வார்த்தைகள் பாயில் படுத்த சந்தனாவை சற்றே கலங்கடித்துக் கொண்டிருக்க அவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro