Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

'ச்சேட்' (The Chat) நாள் 6

அன்பு நண்பர்களே. .சந்துரு - நீலா ச்சேட் தொடர்கிறது. நீலாவின் மீது சந்துரு காட்டும் அக்கறையில் அவள் மெய் மறக்கிறாள். உண்மையிலேயே சந்துரு நல்லவன் தானா? தொடர்ந்து 'ச்சேட்' நாள் 6  . புதிய திருப்பங்களுடன் . . 

உங்கள் அமுதா

கதைகளே கற்பனையின் சிறகுகள்

அவன் : நீலா. WOW. . ஃபோட்டோல பாக்கறத விட நேருல சூப்பரா

இருக்கே

அவள் : சும்மா சொல்லாதடா சந்துரு. .

அவன் : ஹே, நிஜமா டி . . .

நான் எப்படி இருக்கேன்?

அவள் : ம்ம். . பரவாலே

அவன் : அடிவாங்கப் போறே

உண்மையைச் சொல்லுடி, நல்லா இல்லயா?

அவள் : ஓ கே. . புடிச்சிருக்கு

அவன் : எத?

அவள் : உன் மீசைய ஹ்ஹஹ்ஹஹ்ஹஹ

அவன் : ரஜினி நினைத்தாலே இனிக்கும் படத்தில மீசையைப் பிடிங்கி,

இந்தா வச்சுக்கோன்னு கொடுத்த மாதிரியெல்லாம் நான்

கொடுக்க முடியாதுடி. . இது ஒரிஜினல் தெரியுமா

அவள் : அப்படியா? நான் பொய் மீசைன்னு நினைச்சேன்

அவன் : ஹேய்

அவள் : சும்மா டா, கோபமா?

அவன் : இல்லடி. . உன் மேல எனக்குக் கோபமே வராது

அவள் : ஏண்டா? அப்போ உன்ன என்ன வேணுமானாலும் திட்டலாமா?

அவன் : ம்ம் திட்டுடி. . நல்லா திட்டு. . கேக்க ஆசையா இருக்கு

அவள் : நாய், நரி, பன்னி, எருமை,

அவன் : ஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ

அவள் : என்னடா சிரிக்கிறே?

அவன் : எனக்கு நீ திட்டுறது காதுல விழவே இல்ல. நான் உன்

அழகான முகத்தைப் பாத்துப் பாத்து ரசிச்சிட்டு இருக்கேன். .

அவள் : போடா. .

அவன் : என்ன வெட்கமா?

அவள் : ........................

அவன் : என்ன . . சைலண்டு ஆயிட்டே. .

அவள் : சந்துரு எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. . மனசுல உள்ள

பாரம் எல்லாம் காத்துல பறந்துபோன மாதிரி இருக்கு

அவன் : மீ டூ டி

அவள் : என் கூட கடைசி வரைக்கும் பிரண்டா இருப்பீல?

அவன் : உங்கூட டூ

அவள் : ஏண்டா?

அவன் : என் மேல சந்தேகம் இருந்தா இப்பவே என்னை புளோக்

பண்ணிடு

அவள் : Why டா?

அவன் : பிறகென்ன, நான் உன்மேல் எவ்வளவு மதிப்பும் மரியாதையும்

வைச்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமா? உன் பிரண்ஷிப்ப புக்கிஷமா மனசுக்குள்ள வைச்சிருக்கேன். . எங்கிட்ட போய் கடைசி வரைக்கும் இருப்பியா, இருக்கமாட்டியான்னு கேள்வி. . பிரண்ஷிப் னா முதல நம்பிக்கை வேணும் நீலா. உனக்கு என் மேல சந்தேகம் இருந்தா இதுவே நம்ம பேசுற கடைசி ச்சேட் ஓ கே வா. நான் இனிமேல் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன். நீ என்னை தாராளமா புளோக் பண்ணிக்கலாம்

அவள் : ஹே. . சந்துரு, என்ன நீ பாட்டுக்கு கடகடன்னு பேசிட்டே

போறே? நான் சும்மாதான் கேட்டேன் ஓ கே வா

அவன் : சும்மா கேட்டேன், சுமந்துகிட்டு கேட்டேன்னு. .

அவள் : கூல் யா . . தப்புத்தான் மன்னிச்சிக்கோ. நம்பிக்கைத்தான்

எல்லாம்ன்னு சொன்னே. . அப்படி நம்பித்தான் என்னோட குடும்ப வாழ்க்கைய தொடங்கினேன். . ஆனா நம்பின மாதிரி நடக்கல சந்துரு. இன்னொரு ஏமாற்றத்த என்னால தாங்க முடியாது. அதுதான் கேட்டேன். . சாரி

அவன் : I understand d. எனக்கு மட்டும் குடும்ப வாழ்க்கையில்

ஏமாற்றம் இல்லயா சொல்லு? ஆனா, நான் இன்னமும் என்னோட வாழ்க்கை மாறும்னு நம்புறேன். நீ எனக்கு யாரோ எவரோ தெரியாது. நேருலகூட பாத்தது கிடையாது. .இதோ இப்பத்தான் வீடியோ ச்சேட் பண்றேன். ஆனா, உன்னோட நட்பு என் வாழ்க்கையில் வெளிச்சத்த உண்டாக்கும் என்று என் மனசு சொல்லுது. . அவ்வளவுதான். நீ நாளைக்கு என்னோட பிரண்ஷிப் வேணாம்னு சொல்லிட்டா கூட, நான் அத positive ஆதான் எடுத்துக்குவேன்.

அவள் : சந்துரு. . .

அவன் : சொல்லு நீலா

அவள் : உன்னோட பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியுது. I like it.

உன்னிடம் ஒரு maturity தெரியுது. என்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கேன்னு சொன்னே இல்லயா, அப்படி எல்லாரும் சொல்ல மாட்டாங்க. .ஆண்கள் கூட ச்சேட் பண்ற பெண்களை இந்த உலகம் வேற கண்ணோட்டத்திலதான் இன்னும் பாக்குது. நான் ஆண் நண்பர்களிடம் ச்சேட் பண்ணிருக்கேன். Fb ல friend request கேப்பாங்க, அப்பறம் messenger ல ச்சேட் பண்ணுவாங்க. அப்பறம் உடனே WhatsApp நம்பர் கேப்பாங்க. இல்லாட்டி உடனே messenger வழியாக கால் பண்ணிடுவாங்க. சில பேர் இன்னும் மோசம். ஆபாசமான படங்கள் எல்லாம் அனுப்பி வைப்பாங்க. நான் உடனே அப்படிப்பட்டவங்கள  புளோக் பண்ணிடுவேன். கேஷுவலா ச்சேட் பண்ணுனா உடனே ரொம்ப ச்சீப்பானவன்னு சில ஆண்கள் நினைக்கிறாங்க சந்துரு. ஆனா, உங்ககிட்ட பேசுன வரைக்கும் நீங்க அப்படியெல்லாம் இல்ல. ஒவ்வொன்னும் என்னோட பர்மிஷன் கேட்டுத்தான் செய்றே. பொன்னுங்க மேல் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கே. ஒருத்தரைப் பத்தி செரிஞ்சிக்க ஒரு வருஷம் தேவையில்ல, ஒரு நாள் போதும். அந்த வகையில் உன்னப் பத்தி நான் நல்லாவே தெரிஞ்சிக் கிட்டேன் சந்துரு. இனிமேல் துளியளவும் உன் மேல சந்தேகமே வராது

அவன் : நீலா, நீ எங்கிட்ட கேட்டதும் ஒருவகையில் நியாயம்தான்.

பொன்னுங்க எடுத்த எடுப்பிலே தெரியாதவங்கள நம்பிடக்கூடாது. அதுவும் fb ல இருப்பவர்கள். இப்ப உள்ள காலக்கட்டத்தில் என்னென்னமோ நாம கேள்விப்படுறோம். பொன்னுங்களின் பலவீனத்த தெரிஞ்சிக்கிட்டு, அவங்கள ஏமாத்தி மனச காயப்படுத்தி, அய்யோ சொல்லவே தேவையில்ல நீலா. அதனால உனக்கு முழுமையா ஒரு ஆன்லையன் பிரண்டுமீது நம்பிக்கை வரும்வரைக்கும் சந்தேகம் பட்டுக்கிட்டே இருக்கனும். யோசிக்கனும். இது நான் என்னோட குட் பிரண்டுக்கு கொடுக்கும் அட்வாயிஸ்.

அவள் : அப்போ உன்னப்பத்திக் கூட சந்தேகப் படலாமா?

அவன் : Why not? நானும் ஆம்பளதானே. உனக்கு என்மேல் எப்ப

முழுமையா நம்பிக்கை வருதோ அதுவரைக்கும் சந்தேகப்பட்டுக்கிட்டே இரு. நான் தப்பா நினைக்கவே மாட்டேன் டி

அவள் : தப்பானவர்கள் இப்படியெல்லாம் பேச மாட்டாங்க. எங்க

அவங்களோட identity தெரிஞ்சிடுமோன்னு பயந்து பயந்து பேசுவாங்க. அவங்க பேச்சில நிறைய பொய் கலந்திருக்கும். அதிகமான வர்ணனை இருக்கும், அடிக்கடி நம்மைப் பாராட்டுவாங்க. உங்க மாதிரி தெளிவாகப் பேச மாட்டாங்க சந்துரு

அவன் : நம்ம வீடியோ கால் ஆஃப் பண்ணிட்டு நார்மலா ச்சேட்

பண்ணலாமா?

அவள் : ஏன் என் முகத்தைப் பார்க்கப் பிடிக்கலயா?

அவன் : எவ்வள நேரந்தான் உன் முகத்தையே பாத்துக்கிட்டு இருக்கிறது

ஹ்ஹஹ்ஹஹ

அவள் : ஹே. . அடி வாங்கப் போற டா

அவன் : சும்மாதான் சொன்னேன். . வீடியோ ச்சேட்டில் ஒழுங்காப் பேச

முடியாது. . நிறைய disruptions ஏற்படும். அதுமட்டுமில்லாம, உங்க வீட்டுல பின்னால யாராவது பாத்திட்டா, சந்தேகப்படுவாங்க. உனக்கு என்னால எந்த வகையிலும் கெட்ட பேரு வரக்கூடாது டி

அவள் : சந்துரு, you are really great. ஒகே. நான் வீடியோ ச்சேட் ஆஃப்

பண்றேன். .

அவன் : நம்ம நேருல எப்படி இருப்போம் என்று பாத்துக்கிறதுக்குத்தான்

வீடியோ ச்சேட் டி. அது ரொம்ப நேரம் பேசுறதுக்கு வசதியா இருக்காது. அதுக்கு வாய்ஸ் ச்சேட் தான் நல்லது. இப்ப நம்ம ரண்டு பேரும் வீடியோ ச்சேட் ல பாத்துக்கிட்டோம். இனிமே நம்ம யாருகிட்ட பேசுறோம்ன்றதில் சந்தேகம் இருக்காது. இந்த internet உலகத்தில வெறும் ஃபோட்டோ மட்டும் பாத்து ஏமாந்திட கூடாது. . அதில நீ ரொம்ப உஷார். உடனே வீடியோ ச்சேட் பண்ணலாமான்னு கேட்டியே. . ஹ்ஹஹ

அவள் : அப்படியெல்லாம் இல்லடா, சும்மா உன்ன பாக்கனும்னு

தோனுச்சு அவ்வளதான். . .....................................

அவன் : இப்போ திருப்தியா?

அவள் : 100 %

அவன் : அப்போ என்னை முழுசா நம்பிட்டயா?

அவள் : ஆமா

அவன் : அப்பாடா !

உன்னோட நம்பிக்கைய முழுசா பெறுவதற்கு இவ்வளது லெக்சர்

தர வேண்டியதா போச்சு ஹ்ஹஹ

அவள் : என் மனசு சொல்லுது நீ நல்லவன்னு

அவன் : தேங்கியூ டி. உன் நம்பிக்கைக்கு நான் எப்போதும் உரியவனா

இருப்பேன்

அவள் : அது போதும் சந்துரு

அவன் : ஹே, நான் உனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பட்டா?

அவள் : ம்ம அனுப்பிவிடு. . ஆமா என்ன ஃபோட்டோ?

அவன் : நீ அத பாத்து அதிர்ச்சி அடைய கூடாது

அவள் : என்ன புதிர் போடுறே?

அவன் : என்னைத் திட்டக்கூடாது. .

அவள் : ம்ம்

அவன் : அனுப்பவா?

அவள் : அனுப்புடா. . என்னத்தான் அனுப்புறேன்னு பாப்போம்

அவன் : ஒன் செக்கண்ட் . . அனுப்பிட்டேன்

(டு. . டு)

அவள் : ஹே கிடச்சுட்டு

அவன் : வெயிட் டி. . நான் முதல்ல போயிடுறேன். . அப்பறம் ஒப்பன்

பண்ணு . . அப்பத்தான் நீ திட்டுவது எனக்குத் தெரியாது

அவள் ஹ்ஹஹ சரிசரி

(சந்துரு disconnected)

அவள் ஹே. . இந்த ஃபோட்டோ. . என்ன தைரியம் இவனுக்கு .

Connection Cut

ச்சேட் தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro