'ச்சேட்' (The Chat) நாள் 5
அன்புள்ளங்களே, 'ச்சேட்' நாள் 5 இதோ. தாமதத்திற்கு மன்னிக்கவும். தீபாவளி அலுவல்களினால் கதையின் update சற்றுப் பின்தங்கிவிட்டது. நீலா, சந்துரு வின் 'ச்சேட்' வாட்ஸ்அப்' செயலியில் தொடருகிறது. புதிய திருப்பங்களுடன். . .
இக்கதையைத் தொடர்ந்து படித்து like, vote, share, follow பண்ணும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
உங்கள் அமுதா
கதைகளே கற்பனையின் சிறகுகள்
அவன் : ஹாய் நீலா. ரொம அழகான 'குட் மாரினிங்' படம். உனக்கும்
என்னுடைய காலை வணக்கம்
அவள் : இது என்ன நான் வரைந்த படமா? யாரோ போட்டாங்க, அத
உங்களுக்குத் தள்ளி விட்டேன். அவ்வளவுதான்.
அவன் : இருந்தாலும் என்னை நினைச்சு, எனக்கு குட் மார்னிங் சொல்ல
வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தானே போட்டே
அவள் : அதிலென்ன சந்தேகம் சந்துரு. நீங்க என்னோட டியரஸ் பிரண்டு
ஆயிட்டீங்க, உங்களப் பத்தி நினைக்காம இருப்பேனா? ஏன் நீங்க என்னைப் பத்தி நினைக்க மாட்டீங்களா சந்துரு?
அவன் : என்ன நீலா இப்படிக் கேட்டுட்டே. . உன்னப் பத்தி every nano
second னும் நான் நெனச்சிக்கிட்டே இருப்பேன். .
அவள் : .................................
அவன் : ஹே, நீலா. . என்ன சைலண்டு ஆயிட்டே? என்ன ஆச்சு?
அவள் : உண்மையா சொல்றீங்களா சந்துரு?
அவன் : அதிலென்ன சந்தேகம் நீலா. உன்னப் பத்தி நான் நெனக்காத
நேரமே இல்ல
அவள் : ஏன்?
அவன் : because. . because. . நீ எனக்கு ரொம்ப நல்ல பிரண்டு
அவள் : ஓ. . தேங்ஸ் சந்துரு
அவன் : ஏன் நீலா, நீ என்னைப் பத்தி நெனக்க மாட்டியா?
அவள் : நெனப்பேன் சந்துரு
அவன் : ஆடிக்கும் அம்மாவாசைக்குமா? ஹ்ஹஹ்ஹஹ
அவள் : ஹ்ஹஹ்ஹஹ இன்னைக்கு என்ன சாப்பிட்டீங்க?
அவன் : பிரேக்பஸ்ட் இட்லி, லன்ஞ் இனிமேல் தான், நீ?
அவள் : காலையில் லொந்தோங் (lontong), லன்ஞ் இன்னும் இல்ல
அவன் : லொந்தோங் னா?
அவள் : அது ஒரு வகையான கட்டிச் சாதம். தென்னை இலையில் வேக
வைத்து உண்பது. ரொம்ப ஆரோக்கியமானது.
அவன் : அப்படியா? . . . எனக்கு ஒருநாள் கிடைக்குமா?
அவள் : என்ன?
அவன் : நீ சொன்னியே லொந்தாங்தான்
அவள் : ஹ்ஹஹ்ஹஹ லொந்தாங் இல்ல லொந்தோங்
அவன் : ஏதோ ஒன்னு. கொடுப்பியா நீலா?
அவள் : எங்க ஊருக்கு வாங்க தாறேன்
அவன் : நிச்சயம் வருவேன். . என்னோட டியர் பிரண்ட பாக்க. பொன்னு
என்ன பண்றாங்க?
அவள் : ஸ்க்கூல்
அவன் : ஓ. . வீட்டுல யாரும் இல்லையா நீலா?
அவள் : இல்ல சந்துரு. அவரு நேத்து ராத்திரி நான் தூங்கும்போது
வீட்டுக்கு வந்தாரு. விடியற்காலையிலேயே பாத்தாம் (batam)
போயிட்டாரு. ஒரு வாட்ஸ்சாப் ல bye அவ்வளதான்
அவன் : கவலப் படாத உனக்கு நான் இருக்கேன் – இருப்பேன்
எப்போதும், ஒரு நல்ல கம்பேனியனா. .
அவள் : தேங்ஸ் சந்துரு
அவன் : அடிக்கடி தேங்ஸ் சொல்லாதடி
அவள் : என்னது? டி யா?
அவன் : ஐயோ. . சாரி சாரி. . வெறி சாரி ஏதோ ஒரு flow ல
வந்திருச்சு. சாரி நீலா
அவள் : ஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ
அவன் : அப்பா! சிரிச்சிட்டே, கோவிச்சுக்கிட்டேன்னு நெனச்சேன்
அவள் : சந்துரு. . .
அவன் : சொல்லு நீலா
அவள் : உங்களுக்கொன்னு தெரியுமா. எனக்கு வாடி போடின்னு
என்னோட கணவர் கூப்புடனும்ன்னு ரொம்ப ஆசை. . ஆனா, அவரு அப்படி என்னைக் கூப்பிடவே மாட்டாரு.
அவன் : அப்போ டியர், டார்லிங்ன்னு கூப்பிடுவாரா? ஹ்ஹஹ
அவள் : அறைஞ்சனா தெரியும்
அவன் : ஹேய், சும்மா சொன்னேன். நீ சிரிக்கனும்ன்னு
அவள் : ரியலி சந்துரு. என்னை ஆசையா பேரு சொல்லிக்கூட கூப்பிட
மாட்டாரு. நானும் ஒரு பொன்னுதானே. . எனக்கு மட்டும் ஆசை இருக்காதா சந்துரு?
அவன் : don't worry நீலா. அதை விடு. இப்போ நான் ஒன்னு கேட்டா
ஒத்துக்குவியா?
அவள் : Sure சந்துரு. சொல்லுங்க
அவன் : என்னே first வாங்க போங்கன்னு கூப்பிடுறத விட்டுவிட்டு 'டா'
போட்டுக் கூப்பிடு. ஒ கே வா?
அவள் : சரி டா சந்துரு ஹ்ஹஹ்ஹ
அவன் : WOW. . I love it நீலா, அப்புறம் நானும் உன்ன 'டி' போட்டுக்
கூப்பிடலாமா?
அவள் : Sure டா . . எனக்கு ரொம்ப பிடிக்கும் . . infact யாராவது
அப்படிக் கூப்பிட மாட்டங்களான்னு ஏங்கிட்டு இருந்தேன்
அவன் : அந்த பாக்கியம் எனக்கு கிடச்சிருக்கு டி நீலா
அவள் : .....................................
அவன் : ஹே, என்ன சைலண்ட்?
அவள் : நீ 'டி' போட்டுக் கூப்பிடும்போது ஏதோ ஒரு feeling. .
அவன் : என்னடி feeling?
அவள் : ஒன்னுமில்ல, சொல்லத் தெரியல டா
அவன் : இட் இஸ் ஓகே டி, தெரியும்போது சொல்லு
அவள் : ஓ கே டா
அவன் : நீலா வீட்டுல யாருமே இல்லன்னு சொன்னியே
அவள் : அதுக்கு?
அவன் : நான் ஒன்னு கேட்டா செய்வியா?
அவள் : என்ன செய்யனும், சொல்லுடா
அவன் : நீலா, நம்ம. .
அவள் : நம்ம. . ?
அவன் : இப்ப Whatsapp ல தான ச்சேட் பண்றோம். .
அவள் : ஆமா
அவன் : அதனால. .
அவள் : அதனால? சொல்லுடா புதிர் போடாம
அவன் : Whatsapp ல கால் பண்ணி பேசுவோமா? உன் குரல் கேட்க
ஆசையா இருக்கு டி
அவள் : ஐயோ, ஐயோ இதுக்குத்தான் இவ்வளவு பீடிகை போட்டியாடா?
நம்ம வீடியோ கால் பண்ணியே பேசலாம் டா
அவன் : நீலா இத நான் எதிர்பார்க்கலே இல்ல. . ரியலி
அவள் : யெஸ் டா, நான் கால் பண்ணட்டா, நீ கால் பண்றியா?
அவன் : நீயே கால் பண்ணு . .எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு
அவள் : சரியான பயந்தாகோலி. . ஓ கே. நானே கால் பண்றேன்.
ரெடியா இரு
அவன் : ......................
அவள் : ஹலோ......ஏ.....அன்சர் பண்ணு....
அவன்: லையன் கட் ஆவுது நீலா
அவள் : சரி திரும்பக் கால் பண்றேன்
அவன் : சரி
(ரிங் போகிறது)
அவன் : ஹலோ நீலா
அவள் : .......................
Connection Cut
'ச்சேட்' தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro