"ச்சேட்'' (The Chat) நாள் 2
அன்பு உள்ளங்களே - 'ச்சேட்' இரண்டாம் நாள் வெளிவந்துவிட்டது. சந்துருவும் நீலாவும் தொடர்ந்து பேசுகிறார்கள். அவர்களின் உரையாடலைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நன்றி - அமுதா
கதைகளே கற்பனையின் சிறகுகுள்
அவன் : ஹாய்
அவள் : ஹாய்
அவன் : என்ன ரொம்ப நேரமா காணோம்?
அவள் : கொஞ்சம் வேலை
அவன் : it is ok
சாப்டாச்சா?
அவள் : சாப்டேன்
அவன் : இன்னைக்கு ரொம்ப வேலயா?
அவள் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல
அவன் : டெய்லி எத்தனை பேருக்கு மேக் அப் போட போவீங்க?
அவள் : அது புக்கிங் பொறுத்து இருக்கு, சீசன் டைம்ல ரொம்ப ஆடர்
வரும், சில நாள் ஒன்னுமே இருக்காது
அவன் : ஓ. .அப்படியா
அவள் : அப்படித்தான், நீங்க ரொம்ப பிசின்னு சொன்னீங்க
அவன் : அவ்வப்போதுதான்
அவள் : அப்படியா
அவன் : அப்படித்தான்
அவள் : நக்கலா?
அவன் : சும்மாதான், கோச்சீக்காதிங்க
ஆமா, நேத்து என்னை அம்போன்னு விட்டுட்டு நீங்க பாட்டுக்குப் போயிட்டீங்க, ஒரு பாய் கூட சொல்லாம. .
அவள் : கொஞ்சம் அவசரம், சாரி
அவன் : சாரியெல்லாம் ஏத்துக்கமாட்டேன்
அவள் : வேற என்ன வேணும்
அவன் : அது சொன்னா கோசிக்க மாட்டீங்களே
அவள் : சொன்னா தானே கோச்சிக்கறதா, இல்லையான்னு முடிவு
பண்ண முடியும்?
அவன் : கேக்க தயக்கமா இருக்கு
அவள் : அட சும்மா சொல்லுங்க
அவன் : ..............................
அவள் : ஹலோ, இருக்கீங்களா
அவன் : ம்ம்
அவள் : அப்போ சொல்லுங்க
அவன் : உங்க வாய்ஸ் கேக்கனும்னு ஆசையா இருக்கு
அவள் : அதுக்குள்ளவா, பேசி 2 நாள் தான ஆச்சு. . கொஞ்ச
நாளாகட்டும் அப்புறம் வாய்ஸ் மெசெஜ் அனுப்புறேன்
அவன் : உங்கள் விருப்பம்
அவள் : கோபமா?
அவன் : இல்லயே. .
அவள் : சரி சரி நாளைக்கு அனுப்புறேன்
அவன் : தேங்ஸ்
அவள் : தேங்ஸ் எல்லாம் சொல்லக்கூடாது
அவன் : நான் ஒன்னு சொன்னா தப்பா நினக்கா மாட்டீங்களே
அவள் : என்னங்க நீங்க, முதல இருந்து தப்பா நினக்க கூடாதுனு
சொல்லிக்கிட்ட இருக்கீங்க. என்ன பாக்க என்ன அப்படியா இருக்கு?
அவன் : ஐயையோ, நான் சும்மா சொன்னேன். நீங்க படத்தில ரொம்ப
அழகா இருக்கீங்க
அவள் : ஹ்ஹஹ தேங்ஸ்
அவன் : உங்க . . உங்க ஏஜ் தெரிஞ்கிலாமா?
அவள் : ......................
அவன் : சாரிங்க. . தப்பா கேட்டுருந்தா மன்னிச்சுடுங்க
அவள் : பெண்கள் கிட்ட வயசு கேக்க கூடாது, ஆண்கள்கிட்ட
சம்பளத்த கேக்க கூடாது ஹ்ஹ
அவன் : correct, நீங்க நல்லா பேசுறீங்க
அவள் : உங்க fb ல ஏங்க ஃபோட்டோஸ் ஒன்னு கூட இல்ல? வெறும்
மரம், செடி கொடி மட்டும் வச்சிருக்கீங்க? உங்க profile
படம்கூட கொஞ்சம் பார்க்க பழைய படம் மாதிரி இருக்கு . .
அவன் : அது வேற ஒன்னும் இல்ல. எதுக்கு தேவையில்லாம படங்கள்
எல்லாம் upload பண்ணனும்னுதான். Profile படம் ஒரு ரண்டு வருஷத்திற்கு முன்னால எடுத்தது. உங்களுக்கு வேணும்னா இப்ப ஒரு selfie எடுத்து அனுப்பட்டுமா?
அவள் : அனுப்புங்களேன்
அவன் : 1 sec
அவள் : ......................
அவன் : வந்துட்டா?
அவள் : இன்னும் இல்லங்க. . download ஆயிட்டு இருக்கு
அவன் : பாத்ததும் பயந்திராதீங்க ஹ்ஹஹ
அவள் : ஏங்க, பாக்க அவ்வளோ பயங்கராம இருப்பீங்களா? ஹ்ஹ
அவன் : ஹ்ஹஹ்ஹ. . வந்துட்டா?
அவள் : இன்னும் இல்ல. . பெரிய ஃஐல் போலருக்கு, இன்னும்
சுத்திக்கிட்டே இருக்கு
அவன் : ம்ம். . அதுவரைக்கும் ஏதாச்சும் பேசுங்க
அவள் : நீங்க எந்த ஊரு?
அவன் : இந்தியா தாங்க, சென்னை
நீங்க?
அவள் : நான் மலேசியா
அவன் : ஓ. . நீங்க மலேசியா வா?
அவள் : என்னோட profile பாக்கலியா?
அவன் : பாக்காம இருப்பேனா? உங்க ஃபோட்டோஸ் எல்லாம்
பாத்துகிட்டே இருந்தனா, நீங்க எந்த ஊருன்னு கவனிக்க
மறந்திட்டேன். அது, எப்படிங்க எல்லா ஃபோட்டோஸ்லயும் ரொம்ப அழகா இருக்கீங்க?
அவள் : ............................
அவன் : என்னங்க சத்தத்த காணோம். கோபமா? தப்பா
சொல்லிட்டேனா? இல்ல. . . . வெட்கமா?
அவள் : ஐயோ நீங்க வேற. . அப்படியெல்லாம் இல்ல. . உங்க
ஃபோட்டோ இன்னும் வர்ல, அதப் பாத்துக்கிட்டு இருந்தேன்
அவன் : இன்னுமா வர்ல? resent பண்ணவா?
அவள் : ஆ. . வந்திருச்சு வந்திருச்சு
அவன் : என்னங்க?
அவள் : உங்க ஃபோட்டோ
அவன் : hmm ஐயா எப்படி இருக்காரு?
அவள் : profile படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ரொம்ப வித்தியாசம்
அவன் : நான் சொன்னேனே அது பழைய ஃபோட்டோன்னு
அவள் : ம்ம், அழகாத்தான் இருக்கீங்க
அவன் : thank you, if you don't mind. .
அவள் : என்ன?
அவன் : உங்க செல்ஃபி ஒன்னு அனுப்பி வைக்கிறீங்களா?
அவள் : ..............................
அவன் : என்னங்க அமைதியாயிட்டீங்க, நான் அனுப்புனேன் தானே
அவள் : அனுப்புறேன், ஆனா. .
அவன் : உடனே delete பண்ணிடனும் அவ்வளவுதானே?
அவள் : yes yes
அவன் : கண்டிப்பாங்க, உங்க ஃபோட்டோ வைச்சுட்டு நான் என்ன
பண்ண போறேன். நம்பிக்கை இருந்தா அனுப்புங்க, இல்லாட்டி வேணாம்.
அவள் : அப்படியெல்லாம் இல்ல. . நம்பிக்கை இல்லாட்டி உங்ககூட
பேசக்கூட மாட்டேன்
அவன் : நன்றி – அப்போ புகைப்படம் அனுப்புவீங்க. . ஹ்ஹ
அவள் : அனுப்புறேன் . .நீங்க அனுப்பும்போது நான் அனுப்பாட்டி அது
நியாயமே இல்ல, எனக்கும் நாகரிகம் தெரியும்
அவன் : மிக்க நன்றி. ஆனா, எனக்கும் நாகரிகம் தெரியும்ங்க. பெண்கள்
இந்தமாதிரி ஆன்லைன்ல தெரியாதவர்களுக்குப் புகைப்படம் அனுப்புவது ஆபத்தானது. இது தெரியாத சில பெண்கள் கண்மூடித்தனமாக அனுப்பி விடுறாங்க, அதுக்கப்பறம் வருந்தி என்ன பயன்? அதனால நீங்க போட்டோ எல்லாம் எனக்கு அனுப்ப வேணாம். உங்க fb profile உள்ள படமே போதும். நீங்க எப்படி இருப்பீங்கன்னு நான் பாத்திட்டேன். அதனால போட்டோ எல்லாம் வேணாம். கேட்டதற்கு மன்னிச்சிடுங்க
அவள் : என்னங்க நீங்க, ஒரு போட்டோக்காக இவ்வளவு
சீரியஸாயிட்டீங்க? இதோ அனுப்புறேன். 1 நிமிஷம்
அவன் : ..................................
அவள் : வந்துடுச்சா
அவன் : ம்ம்
அவள் : என்ன ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?
அவன் : ............................................
அவள் : ஹலோ. . என்ன ஆச்சு?
அவன் : இது. . இது. . நீங்களா?
Connection Cut
'ச்சேட்' தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro