Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

'ச்சேட்' (The Chat) நாள் 15


அன்புள்ளங்களே, நீலா சந்துருவிடம் சண்டை போட்டுக்கொண்டு தன் நாட்டுக்கே கிளம்ப விமான நிலையத்திற்குச் செல்கிறாள். ஆனால், அவளை அங்கேயே உட்கார வைத்துவிடுகிறது விமான நிலையத்தில் நடந்த அந்த எதிர்பாராத சம்பவம். தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் 'ச்சேட்'.

உங்கள் அமுதா

கதைகளே கற்பனையின் சிறகுகள்

"நீலா. . என்னை மன்னிச்சிடு,'' சந்துரு மெதுவாக ஆரம்பித்தான். நீலாவின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும். அவள் சன்னல் பக்கமே தன் பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

''நீலா ஐ எம் சாரி! உன்னிடம் பொய் சொல்லிவிட்டு, தெரியாத ஊரில் உன்னைத் தனியாக விட்டுச் சென்றுவிட்டேன். நீ காலையில் டாய்லட் சென்றதும் என் மனைவியுடைய அக்கா அங்கு வந்தார். அவர் பெயர் சரோ. உன்னோடு என்னைப் பார்த்துவிட்டால் . . பிறகு கேட்கவே தேவையில்லை. எல்லாரிடமும், குறிப்பாக என் மகனிடம்போய் சொல்லிவிடுவார். அவரைச் சமாளிக்கத்தான் வெளியில் அவரை அழைத்துச் சென்றேன்.அதுவும் நீ ஹோட்டலில் இருந்ததால்தான். இல்லையென்றால். . ''

''இல்லையென்றால், அப்படியே விட்டுட்டு ஓடியிருப்பீங்க. நல்ல வேளை, கடவுள்தான் காப்பாற்றினார்!''

''அப்படியில்ல டி,''

''சரி, அவங்க உங்ககிட்ட என்ன பேசினாங்க?''

''****************''

''சந்துரு உங்கிட்டத்தான் கேக்குறேன். பர்சனல்ன்னா(personal)சொல்ல வேண்டாம்,''

''இல்லடி, என்ன, அவங்க தங்கச்சிய மறுபடியும் ஏத்துக்க சொன்னாங்க. அவ இப்போ முன்ன மாதிரி எல்லாம் இல்லன்னு சொன்னாங்க, நான் முடியாதுனு ஒரே பேச்சா சொல்லி அனுப்பிட்டேன். ''

''ஏன் முடியாதுனு சொன்னே சந்துரு? அவங்க திருந்தியிருக்கலாம் இல்லயா?''

''என்னடி பேச்சு பேசுறே நீலா. இத நீ நம்ம காதலிக்கிறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கனும். நானும் கேட்டிருப்பேன். இப்ப போய் சொல்லுறே? பைத்தியமாடி உனக்கு?''

''ஆமா, பைத்தியம்தான் சந்துரு. ஆனா, இப்போ தெளிஞ்சுபோச்சு. இப்பவே உன் மனைவியின் அக்காவ கண்டதும் என்னை விட்டு ஓடிட்டே. அப்புறம் நான் உன் பின்னால வந்தா, உன் மாமா, அத்தை, தம்பி, அண்ணனுன்னு என்னை அம்போன்னு விட்டுட்டு போகமாட்டேன்னு என்ன நிச்சயம்?''

''நீலா?''

''ஆமா சந்துரு. நம்ம உறவு சூழ்நிலையாலும், அதனால் உருவான ஆசையாலும் பிறந்ததுனு நான் நல்லா தெரிஞ்சிக்கிட்டேன். நாளைக்கே என் புருஷன் என்னிடம் அன்பா நடந்துகொண்டா என்னால அவரை விட்டுட்டு உங்கூட வரமுடியாது.''

''துரோகி!''

''நீ எப்படி வேணுமானாலும் என்ன கூப்பிட்டுக்கோ. ஆனா, அதுதான் உண்ம. என் குடும்பத்த பிரிஞ்சு உங்கூட நான் எக்காலமும் வர மாட்டேன். ஏதோ, என் கணவர் என்னோட அன்பாகவும், ஆசையாகவும் இல்லாம இருந்ததால வெறும் உணர்வுகளால் ஏற்பட்ட ஆசைக்காக உங்கூட பழகிட்டேன். என்ன மன்னிச்சிடு சந்துரு. நான் என்னோட தப்ப உணந்துட்டேன்.''

சந்துரு  உணர்ச்சியற்று நின்றான். 

''நீலா, அடிப்பாவி. என் உணர்ச்சியோட விளையாடிட்டேயடி! உன் நடிப்பையெல்லாம் நான் உண்மையான காதல்ன்னு நெனச்சிடேனடி. எப்படிடீ உன்னால இப்படியெல்லாம் பேச முடிஞ்சது? அப்போ, நீ எங்கிட்ட பேசினது எல்லாம்? என்ன பாக்காம இருக்க முடியாது, ஒவ்வொரு வினாடியும் உங்களப்பத்திதான் நெனக்கிறேன், இதெல்லாம பொய்யா? ச்சே! இப்படியும் பொம்பளங்க இருப்பாங்களா? cheat!

''நீ என்ன எப்படி வேணுமானாலும் திட்டிக்கோ. I don't care. ஆனா, நான் உண்மையை உணந்திட்டேன். நீ இவ்வளவு பேசுறியே, உன்னால உன் மனைவியையும் பையனையும் விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?''

''நம்ம காதல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் உருவானுச்சு. அது நம்ம அகிரிமண்ட் (agreement) மறந்திட்டுப் பேசாதே. நம்ம மனப்பாரங்களை ஷேர் பண்ணவும், மகிழ்ச்சியை ஷேர் பண்ணவும்தான் இந்த உறவு. உடல் உறவுக்காக இல்ல. உன்னோட திருமண வாழ்க்கைய நான் தொந்தரவு செய்ய மாட்டேன், அதுபோல என்னோட திருமண வாழ்க்கையை நீ disturb பண்ண கூடாது. இப்படித்தான் நம்ம முதலில் பேசிக்கிட்டோம்,''

''அது எல்லாம் பேசுறதுக்குத்தான் நல்லாயிருக்கும் சந்துரு. நிஜ வாழ்க்கையில அப்படியெல்லாம் நடந்துக்க முடியாது. நம்ம காதலில் உடல் உறவுக்கு வேலையில்லன்னு சொன்னேலே, நீ என்னை touch பண்ண try பண்ணலே? சொல்லு சந்துரு? நான் மட்டும் இடம்கொடுத்திருந்தா என் நிலைமை என்ன ஆயிருக்கும்? பேசுறான் பேச்சு!''

''நீலா, அது நான் வேணும்னு செய்யல டி. இயற்கையின் தூண்டுதலால் அப்படி நடக்கவிருந்துச்சு. நான் என்ன செஞ்சாலும் உன் அனுமதி இல்லாம செய்ய மாட்டேன். அது உனக்கும் நல்லாத் தெரியும்.''

''ரொம்ப பேசாதடா. இயற்கையின் தூண்டுதலாம். ம்ம். . இது எல்லாம் ஒழுக்கங்கெட்டவன் செய்ற வேலை!''

''வாய மூடு நீலா. நீ பெரிய ஒழுங்கானவளா. கட்டுன புருஷன், பதினாறு வயசு பொன்னு. இவங்க இருக்கும்போதே இன்னொருத்தன தேடி நீ வரல? ஒழுக்கத்தப் பத்தி நீ பேசாதே!''

''நெனச்சேன். கடைசியில நீ இப்படித்தான் பேசுவேனு எனக்குத் தெரியும். என் புத்திய செருப்பால அடிக்கனும். உங்கிட்டல்லாம் பேச்சு வாங்குறேன் பாரு. நீங்க ஃபேஸ் புக்கில ஃபிரண்டு ரிக்குவெஸ்ட் கொடுப்பீங்க. நாங்க எப்படி இருந்தாலும், 'ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லுவீங்க. கண்ணே, செல்லம், ஸ்வீட்டுன்னு கூப்பிட்டு எங்க மனச களைப்பீங்க. உங்க ஆசையைத் தீத்துக்குவீங்க, அப்புறம் இத வாங்கிட்டு வா, அத வாங்கிட்டு வான்னு ஜாடையா சொல்லுவீங்க. காசு கேட்டா ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவீங்க, உங்க உலகமே இதுதானே? இதுல என்னப்போல அப்பாவி பொன்னுங்க எத்தன பேரு சிக்குனாங்களோ!

''நீலா, நீ ரொம்ப ஓவராப் பேசுறே. உன்ன நான் எப்படி காதலிச்சேன்னு தெரியுமா? என் மனைவியைக் கூட நான் அப்படி நேசிக்கல,'' என்று கூறி ஒரு புத்தகத்தை தன் பையிலிருந்து நீலாவிடம் எறிந்தான். பின் விரைவாக அறையைவிட்டு வெளியேறினான் சந்துரு. புத்தகத்தை எடுத்தாள் நீலா.

புத்தகத்தின் முகப்பில் 'ச்சேட்' என்று எழுதியிருந்தது. புரட்டினாள். சற்று நேரம் மௌனம் அந்த அறையில் படர்ந்தது. முதல் பக்கத்தில் 'அன்பே நீலா' என்று தொடங்கி, அவளும் சந்துருவும் முதல் நாளில் ச்சேட் செய்த செய்திகளிலிருந்து அவள் இந்தியாவிற்கு வரும் கடைசி நாள்வரை இருக்கும் செய்திகள் அனைத்தும் நகல் எடுக்கப்பட்டு அதில் அழகாக ஒட்டப்பட்டிருந்தது. இடையிடையே நீலாவின் புகைப்படங்களும், மலர்களின் படங்களும் அழகு சேர்த்திருந்தன. அதன் கடைசி பக்கத்தில், ''இன்று என் இதயராணி நீலாவை நேரில் காணப் போகிறேன். நீலாவை நான் அடைய முடியாது என்ற போதிலும் அவள்தான் என் மானசீக மனைவி'' என்று எழுதப்பட்டிருந்தது. 

நீலாவின் கண்கள் நனையத் தொடங்கின. ''சந்துரு என்னை மன்னித்துவிடு,''  என்று ஓலமிட்டு அழுதாள். நாம் இருவருமே உணர்ச்சிகளுடன் விளையாடி விட்டோம். அது எவ்வளவு ஆபத்து என்பதை நான் புரிந்துகொண்டு விட்டேன். என்னால் உன்னை மனத்தில் சுமந்துகொண்டு, என் கணவருடனும், மகளுடனும் வாழ முடியாது டா. உன்னை என்னால மறக்க முடியாது. உன் மகன் ''எப்பப்பா நீயும் அம்மாவும் ஒன்னு சேருவீங்க'' என்று  அனுப்பிய மெசெஜ்களை உனக்குத் தெரியாம பாத்ததிலிருந்து குற்ற உணர்ச்சி என்னை கூறு போட்டது. உன்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் உணர்வோடு கலந்துவிட்டது டா சந்துரு. நீ உன் குடும்பத்தோட சேரும் வாய்ப்ப குறைக்க நான் வந்திட்டேன்னு நினைக்கும்போது என்னால அத தாங்க முடியல. ஒரு குடும்பத்த நான் பிரிக்க மாட்டேன். உன் வாழ்க்கையில் இனி நான் இருக்கக் கூடாதுனு முடிவெடுத்துதான் உங்கிட்ட கடுமையா நடந்துகிட்டேன். என்ன மன்னிசிடுடா சந்துரு. உன்ன கொஞ்சம் கொஞ்சமா  மறக்க முயற்சி செய்ய போறேன். என் குடும்பத்தோடு நான் போய் வாழப் போறேன். .,''  என்று அழுது தீர்த்தாள். அந்த புத்தகத்தை சுக்குநூறாகக் கிழித்து வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாள். ''சந்துரு, நம்ம உறவிற்கு  எந்த சாட்சியும் இருக்கக் கூடாது,''

சந்துரு படார் என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். சில ரூபாய் நோட்டுகளை நீலாவின் முகத்தில் விட்டெறிந்தான். ''நான் உன் காசை ஏமாத்திட்டேன் என்ற பழிச்சொல் எனக்கு வேணாம். ஹோட்டல் செலவில் பாதியும், நான் வாங்க சொன்ன பாட்டலுக்குமான காசும் இதுல இருக்கு. எண்ணிப் பாத்துக்கோ, கணக்குச் சரியா இருக்கான்னு,''

நீலா பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு, ''தேங்ஸ்' என்று மட்டும் கூறினாள். 

''கவலப்படாதே, உன்னைக் காதலிச்ச பாவத்திற்காக உன்னை ஏர்போட்டில் கொண்டுபோய் விடும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது,'' என்று கூறிவிட்டு தன் தலையணையை எடுத்து கீழே போட்டுப் படுத்தான். 

நீலாவும் கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை. தலையணை மட்டும் நனைந்திருந்தது.

*********************************************

மறுநாள். 

நாள் முழுவதும் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. தனித்தனியாகவே இருவரும் கீழே சென்று காலை உணவையும், மதிய உணவையும் உண்டுவிட்டு வந்தனர். நீலா தன் பயணப்பெட்டியில் தன் பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சந்துரு ஊருக்குச் செல்வதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தான். நீலா சந்துருவின் முகத்தை அவ்வப்போது நோக்கினாள். ஆனால் அவன் சட்டை செய்யவே இல்லை.

''சந்துரு,''

''யெஸ்''

''தேங்ஸ் ஃபோர் எவரிடிங்'' (thanks for everything)

"ம்ம்''

''கார் புக் பண்ணிட்டிங்களா''

''பண்ணிட்டேன் மேடம். நீங்க நைட் ஒன்பது மணிக்கெல்லாம் தயாரா இருங்க. 1 am பிளைட். நாம் 3 மணி நேரத்திற்கு முன்பே ஏர்போட்டில் இருக்கனும்,''

சந்துரு தன்னை 'மேடம்' என்று அழைத்ததை நீலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்கள் குளமாகின. இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.

''ஓ கே''

நீலாவையும் சந்துருவையும் ஏற்றிச் செல்ல கார் வந்தது. தன் பயணப் பெட்டியைச் சுமந்துகொண்டு, நினைவுப் பைகளை ஓரத்தில் விட்டுவிட்டு நீலா கிளம்பினாள்.

''மேடம், கடைசியா ச்செக் பண்ணிக்கோங்க. எதையும் விட்டுட்டு போகலயே,'' என்று சந்துரு நீலாவைப் பார்க்காமலேயே பேசினான். 

நீலாவால் பேச முடியவில்லை. 'ம்ம்ம்' என்று மட்டும் கூறினாள். 

காரின் முன்சீட்டில் சந்துரு அமர்ந்துகொண்டான், நீலா பின்சீட்டில் அமர்ந்துகொண்டாள். வரும்போது சந்துருவுடன் கைகோர்த்துக்கொண்டு பின்சீட்டில் அச்சத்துடனும், நாணத்துடனும் அமர்ந்து வந்தது அவளுக்கு நிழலாகத் தெரிந்தது. அவள் கண்கள் நீரோடையானது. விரைவாகத் துடைத்துக்கொண்டாள். பின்னாலிருந்து முன் கண்ணாடியை நோக்கினாள். சந்துரு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் கண்களும் சிவந்திருந்தன.

கார் ஏர்போட் வந்தடைந்தது. சந்துரு வாகனத்திற்குப் பணத்தைக் கட்டினான். நீலா பணத்தைக் கொடுக்க முன்வந்தாள். 

''வேணாம் மேடம். இது என் கடன்,''

நீலா எதுவும் பேசவில்லை. தன் பயணப் பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு டிப்பார்ச்சர் (departure) நுழைவாய்க்குள் சென்றாள்.

தனது பாஸ்போட்டையும், டிக்கெட்டையும் அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். சந்துரு கலங்கிய விழிகளுடன் நின்றுகொண்டிருந்தான். அவனை ஓடிப்போய் கட்டியயணைத்து விடைபெற வேண்டும்போல் நீலாவிற்கு இருந்தது.

''ticket expired madam. This is yesterday's flight. you cannot go. . go that side," என்று அதிகாரி நீலாவிடம் டிக்கெட்டையும் பாஸ்போட்டையும் திருப்பிக்கொடுத்தார். 

டிக்கெட்டில் 21.11. 2019, 1am departure  என்று அச்சிடப்பட்டிருந்தது. ''அடக்கடவுளே, அது நேற்று இரவு அல்லவா? இன்று தேதி 22.11.2019. 1.00am என்பது நமக்கு 21.11.2019 என்றாலும் அது அடுத்த நாள் கணக்காயிற்றே! 

நீலா கதிகலங்கி நின்றாள்! 

(தொடரும்)







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro