'ச்சேட்' (The Chat) நாள் 13
அன்புள்ளங்களே, நீலா சந்துருவைப் பார்க்கச் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கிறாள். சந்துரு வருவானா? தொடர்ந்து படியுங்கள்!
உங்கள் அமுதா
கதைகளே கற்பனையின் சிறகுகள்
"வெல்கம் டு சென்னை, மேடம். கேப் வேணுமா?'' என்ற ஒரு குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் நீலா. அதே குரல்!! சந்துரு!
''யெஸ் மேடம். ஐ எம் சந்துரு. நீங்க தானே நீலா? உங்களை அழைக்க வந்திருக்கிறேன். கேப் ரெடியா இருக்கு. போலாமா?''
''ம்ம் போலாம்''
சந்துரு ஏற்கனவே புக் பண்ணி வைத்திருந்த கேப் அவர்களுக்காகக் காத்திருந்தது. சந்துரு ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான். அவனுக்குப் பின்னே நீலா நடந்தாள். சென்னை ஏர்ப்போட் கூட்டத்தில் எங்கே சந்துருவை மிஸ் பண்ணிவிடுவோம் என்ற அச்சத்தில் அவனின் பின்னே விறு விறு என நடந்தாள் நீலா. சந்துரு அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. முன்னே விரைந்து நடந்தான்.
கேப் நிற்கும் இடத்தை இருவரும் வந்தடைந்தனர். கதவைத் திறந்துவிட்டு, நீலாவைச் சைகையின் மூலம் உள்ளே அமரச் சொன்னான். பின் அவனும் ஏறிக் கொண்டான்.
''மேடம், ஹோட்டல் அட்ரஸ் வச்சிருக்கிங்களா?''
''ம்ம் இருக்கு,'' என்று கூறிக்கொண்டே அதனைத் தன் பையிலிருந்து எடுத்துக்கொடுத்தாள் நீலா.
அதனை வாங்கி டிரைவரிடம் கொடுத்து, இங்கே போங்கண்ணா. வேகமாகப் போங்க,'' என்று டிரைவரிடம் கூறினான் சந்துரு.
நீலாவை ஒருவிதப் பயம் கௌவிக்கொண்டது. என்ன இவன் என்னிடம் ஒழுங்கா பேசவே மாட்றான்? இவனுக்கு என்ன ஆச்சு? நாம் தான் அவசரப் பட்டுவிட்டோமோ? என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். சந்துருவின் பக்கம் திரும்பினாள். அவன் கையில் ஒரு தண்ணீர் போட்டலை வைத்துக்கொண்டு அதனைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். நீலாவிற்குத் தொண்டை வறண்டுபோயிருந்தது. பேச்சுக்கொடுத்தாள்.
''அது தண்ணியா?''
''ம்ம''
''தரீங்களா
''ஷுவர்,'' என்று கூறி அதன் மூடியைத் திறந்து நீலாவிடம் நீட்டினான். அதை வாங்கிக் குடித்துவிட்டு திரும்ப கொடுத்த நீலா, ''தேங்ஸ்'' என்று கூறினாள். அதற்குச் சந்துரு பதிலேதும் கூறவில்லை.
இடம் வந்துவிட்டது. டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, கேப்பைவிட்டு நீலாவும் சந்துருவும் இறங்கினார்கள். நீலா ஹோட்டலின் வரவேற்பறையில் அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். சந்துரு அங்கிருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
''சாரி மேடம். நீங்க ரெண்டு பேரும் ஏதாவது ஆதாரக் கார்டு தரவேண்டும். அதை நாங்க ஜரக்ஸ் பண்ணி எங்க ரெக்காடுக்காக வைத்துக்கொள்வோம். உங்க ஐடி கார்டு, பாஸ்போட், டிரைவிங் லைசன்ஸ் ஏதாவது இருந்தா கொடுங்க,''
நீலா இதை எதிர்பார்க்கவே இல்லை. வேறு வழியில்லாமல் தனது பாஸ்போட்டைக் கொடுத்தாள். பின் சந்துரு பக்கம் திரும்பி, ''சந்துரு உங்க ஐடி கார்டு ஏதாவது இருந்தா தர முடியுமா?'' என்று உரக்கக் கத்தினாள். சந்துரு பதறியடித்துக்கொண்டு வந்தான்.
''எதுக்காம்?''
''கேக்குறாங்க''
''எதுக்கு சார்?''
''எங்க ரெக்காடுக்கு சார். இது 5-ஸ்டார் ஹோட்டல். எங்களோட கெஸ்ட் எல்லாருக்கிட்டயும் நாங்க கேப்போம். ஹோட்டல் ரூல்ஸ்.''
சந்துரு தனது பாகெட்டில் இருந்த தனது டிரைவிங் லைசன்ஸ் எடுத்து நீலாவிடம் நீட்டினான். அதைப் பார்த்ததும் அவளுக்கு 'திக்' என்றது. அதை வாங்கி ரிசப்ஷனிஸிடம் கொடுத்தாள்.
எல்லாம் சரிபார்த்து முடித்தவுடன் ரிசப்ஷனிஸ் ரூம் கார்டை (சாவியை) நீலா கையில் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட நீலா, ''போலாமா?'' என்று சந்துருவைப் பார்த்துக் கேட்டாள். அவன் ''ம்ம்'' என்று தலையாட்டினான்.
அவர்கள் அறையைச் சென்று அடையும் முன்பே அவர்களின் லகெஜ் அவர்களுக்காக வெளியே காத்திருந்தது. ''ம்ம், நல்ல சர்விஸ்'' என்று நீலா சந்துருவிடம் கூறினாள். அதற்கு அவனிடமிருந்து பதில் இல்லை.
கதவை கார்டு போட்டுத் திறந்தாள். லகெஜ் எல்லாம் அறையின் ஓரத்தில் எடுத்து வைத்துவிட்டு அறைக் கதவைப் பூட்டினாள் நீலா. அப்போது. . .
இரண்டு முரட்டுக் கரங்கள் அவளைப் பின்னாலிருந்து அணைத்தன. ''வந்துட்டியாடி நீலா, என்னைப் பார்க்க. I love you" என்று கூறி நீலாவின் நெற்றியில் இலேசாக முத்தமிட்டான் சந்துரு.
இதைச் சற்றும் எதிர்பாராத நீலா திளைத்துவிட்டாள். தன்னையும் அறியாமல் அவனை இறுகக் கட்டியணைத்தாள். அப்படியே இருவரும் ஒரு முப்பது வினாடிகளுக்கு இருந்தார்கள். மௌனம் மட்டுமே அங்கு நிறைந்திருந்தது.
''சந்துரு, இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு, ஏன் என்னைத் தெரியாத மாதிரி நடந்துகிட்டே ?''
''அது ஒன்னும் இல்லடி செல்லக்குட்டி. உன்னப் பாத்த உடனே ஓடி வந்து கட்டியணைத்து அப்படியே தூக்கிக்கிட்டுப் போகனும்னுதான் என் மனசு துடித்தது. அது பொது இடம் டி. புரிஞ்சுக்கோ. எனக்குத் தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாம் எங்கயிருந்து நின்னு பாத்துக்கிட்டு இருப்பாங்கனு தெரியாது. அவனவன் கையில வேற ஃபோன வச்சிக்கிட்டு சுத்துறான். படத்தை எடுத்து ஃபேஸ்புக்குல போட்டான்னா? வேற வினையே வேணாம். அது உனக்கும் ஆபத்து, எனக்கும் ஆபத்து டி. .
''புரியுது டா. ''
''நான் முன்கூட்டியே ஏர்போர்ட்டுக்கு வந்திட்டேன் டி. உன்னப் பாத்திட்டேன். உன் கண்ணுல இவன் வருவானா, வரமாட்டானானு அவ்வள பயம் இருந்துச்சு. கொஞ்சம் விளையாடிப் பாப்போம்ன்னுதான் லேட்டா வந்தேன் ஹ்ஹ''
''நீ மட்டும் வராம இருந்தேனு வச்சுக்கோ''
''திரும்பி போயிருப்பயாடி?''
'இல்ல, வேற ஒருத்தன் பின்னால போயிருப்பேன். . ஹ்ஹஹ எத்தன பேரு கேப் வேணுமா மேடம்னு கேட்டாங்க தெரியுமா?'
''அடிப் பாவி''
''ஹே, சும்மா சொன்னேன்டா. நான் அங்கேயே செத்துப்போயிருப்பேன்''
''பேபி, இது என்ன பேச்சு?, சரி நம்ம சந்தோஷமா இருக்கத்தான் வந்தோம். முதலில் போய் குளிச்சிட்டு வா, அதுக்கப்பறம் நல்லா சாப்பிடுவோம், அதுக்கப்பறம் மத்தது எல்லாம் ஹ்ஹஹ''
''ச்சீ போடா, பொறுக்கி''
''ஹ்ஹஹ்ஹ'
நீலா ஹோட்டலில் உள்ள ஓய்யாரமான குளியலறையில் தன்னை மறந்து குளித்தாள். அந்த இதமான வெந்நீர் அவளின் துன்பங்களை எல்லாம் கறைத்தது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. அந்த ஈரத்தின் நடுவே அவளின் கண்களில் உள்ள நீரும் அவளுக்கே தெரியாமல் வழிந்தோடியது.
குளித்துவிட்டு வெளியில் வந்த நீலாவை சந்துரு வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அது நீலாவிற்கு ஒருவிதக் கூச்சத்தை ஏற்படுத்தியது. அவள் நெற்றியில் படிந்திருந்த ஈர முடிகளைத் தன் விரலால் ஓரத்தில் தள்ளினான். அங்கிருந்த வாசனை திரவியத்தை எடுத்து அவளின் மேல் அடித்து அந்த வாசத்தை உள்ளிழுத்தான். நீலா சிலையாய் நின்றுகொண்டிருந்தாள். அவனின் பார்வையிலிருந்து விலகுவதைப் போல் பாவனை செய்தாள். அவன் அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான். அவளின் முகத்தை அப்படியே எடுத்துத் தன் கழுத்தில் புதைத்துக் கொண்டான். நீலா ஸ்தமித்துப் போனாள். சந்துருவின் இரு கரங்களும் நீலாவின் முதுகில் வீணை வாசித்துக்கொண்டிருந்தன. நீலா மெய்மறந்திருந்தாள். அவளைப் அப்படியே தூக்கிக்கொண்டு சந்துரு அழகாக விரிக்கப்பட்டிருந்த மெத்தை விரிப்பில் போட்டான். நீலா எழுந்திருக்க முயற்சி செய்தாள். ஆனால், அதற்குள் சந்துரு அவள்மேல் விழுந்துவிட்டான்!
விழுந்தவன் அசைவற்றுக் கிடந்தான். நீலா பதறிவிட்டாள். சந்துருவை ஓரமாக படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள்.
''சந்துரு, சந்துரு, எழுத்திரு டா. உனக்கு என்ன ஆச்சு?'' என்று அவனின் முகத்தை அறைந்தவாறு கேட்டாள்.
சற்று நேரத்தில் சந்துரு தெளிவடைந்தான். மெத்தைமீது நிமிர்ந்து அமர்ந்தான்.
''டேய் என்னடா ஆச்சு? நான் பயந்தே போயிட்டேன். ''
''ஒன்னும் இல்லடி, களைப்பு. காலையிலிருந்து உன்ன பாக்கப்போறோம் என்ற டென்ஷன்ல ஒன்னுமே சாப்பிடல. அது தான் பேபி. ரொம்ப பயந்திட்டுயா?''
நீலா உடனே ரூம் சர்விஸ்க்கு தொடர்புகொண்டு உணவை வரவழைத்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் நான்கு சேண்டுவிச்சுகள், 2 காப்பி ரூம் கதவைத் தட்டியது. அதை வாங்கிக்கொண்டு சந்துருவைச் சாப்பிட வைத்தாள் நீலா.
''ஹேய், பேபி, நான் மட்டும் மயங்கி விழழேனா, என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சம் யோசிச்சுப் பாரு,'' என்று கண்ணடித்த சந்துருவைப் பார்த்து,
''நீ ரொம்ப மோசம் டா. எதிர்பார்த்தத விட படு ரோமாண்டிக்கா இருக்கே, ம்ம்'
'' ஹ்ஹஹ. நீ அப்படியே குளிச்சிட்டு வந்தியா, செம்ம மூட் ஆச்சு. சாரி டி. நீ ஏதும் தப்பா நெனச்சிக்காத. ''
''ச்சே ச்சே. அப்படியெல்லாம் இல்ல.''
''அப்ப. . ஓ கே வா? ஹ்ஹ''
''அடி வாங்கப் போற டா''
''சும்மா சொன்னேடி. உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்காது. சரி, லக்ஷனாவிற்குப் போன் பண்ணுனியா
"ஓ, வந்து இறங்கியதுமே பண்ணிட்டேன்,''
''வெரி குட்''
''இந்த ரண்டு நாள் என்ன பிளேன்? (plan) ஷாப்பிங் போவோமா?''
''இந்தப் பொம்பளங்களே இப்படித்தான். . ஷாப்பிங் ஷாப்பிங் ஷாப்பிங். அதெல்லாம் வேணான்டி. ''
''அது எப்படி, ஒன்னுமே வாங்காம போறது டா. லக்ஷனாவுக்காவது ஏதாச்சும் வாங்கிட்டு போக வேணாமா?''
''சரி டி.,நாளைக்குப் போவோம். ஒரு இடத்துக்கு மட்டும் போய் தேவையானது எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடலாம். அப்புறம் நம்ம ரண்டு பேரும் நிறைய பேசுவோம், ஷேர் பண்ணுவோம். ஓ கேவா''
''சரி டா. உன் நிலைமை எனக்கும் புரியுது. எனக்குப் பரவாயில்ல. இங்க யாரையும் தெரியாது. ஆனா உன் நிலைமை வேற. யாராவது பாத்துட்டாங்கன்னா உனக்குத்தான் ஆபத்து. I understand da"
"சரிடி. நான் போய் ஃரஷ்(fresh) ஆயிட்டு வர்றேன்,''
''ஓ கே டா''
சந்துரு குளிக்கச் சென்றவுடன் நீலா சந்துரு டிரசிங் டேபிளில் விட்டுச்சென்ற அவனது டிரைவிங் லைசன்ஸை மீண்டும் எடுத்துப் பார்த்தாள்.
குளியலறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தாள்.
''என்னடி தேடுறே?''
''டி வியோட ரிமோட் எங்கடா, ?'' பேச்சை மாற்றினாள் நீலா.
''அங்கதான் இருக்கும் பாருடி''
அது அங்கேதான் இருக்கிறது என்று நீலாவிற்கும் தெரியும். ''ஓ இங்கதான் இருக்கு'' என்று கூறிக்கொண்டே டிவியைத் திறந்து பார்த்தாள். ஏதோ நியூஸ் ச்சேனல் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சந்துருவும் அவளுடன் பார்த்தான்.
இருவரும் சற்று மௌனமாக இருந்தார்கள். சந்துருவுக்கு இடையில் நிறைய மெசெஜ் வந்த வண்ணம் இருந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டும், டிவியையும் பார்த்துக்கொண்டிருந்தான். இரவு மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது.
''ஐயா ரொம்பத்தான் பிசி போலருக்கு,''
''அப்படியெல்லாம் இல்லடி. வொர்க் விஷயமா அடிக்கடி இதுபோல மெசெஜ் வரும். ''
சந்துருவின் கை நீலாவை அணைத்தன. அது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனின் தோள்களில் சாய்ந்தபடி தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
''நீலா, உங்கிட்ட என்னென்னமோ பேசனும்னு வந்தேன். ஆனா, உன்னை நேருலப் பாத்தவுடன் எல்லாமே மறந்துவிட்டது. உன்னை என் பக்கத்தில் மட்டும் வச்சிக்கிறனும்னு மட்டும் தோணுது. நீ என்கூட இப்படியே இருப்பயா நீலா?''
சந்துருவின் மூச்சுக்காற்று நீலாவின் மேல் படர்ந்தது. அவள் அமைதியாக இருந்தாள்.
''நீலா, என்ன அமைதியாக இருக்கே? என்கூட இருக்க மாட்டியா?''
''எனக்குத் தலை வலிக்குது சந்துரு. பிளைட்டில் வந்த களைப்பு இன்னும் போகல. தூக்கம் வருது,''
''ஓ. . அப்படியா? சரி சரி நீ ரெஸ் எடு. நாளைக்குப் பேசலாம்,''
''ஓ கே சந்துரு. நீயும் ரெஸ் எடு''
சந்துரு எழுந்து அங்கிருந்த சோபாவில் படுத்துக்கொண்டான்.
''சந்துரு, என்ன அங்க போய் படுத்துகிட்ட?''
''இல்லடி சும்மாதான். நீ நல்லா வசதியாப் படுத்துக்கோ. எனக்குப் பிரச்சன இல்ல''
''வந்து பக்கத்துல படுடா. இவ்வளவு பெரிய கட்டில்ல நான் மட்டும் தனியாவா படுக்கப்போறேன். . லூசு.
''சரிடி. . வர்றேன்''
இருவரும் கட்டிலில் படுத்துக்கொண்டனர். முதுகுகள் மட்டுமே ஒன்றையொன்று பார்த்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்குள் சந்துருவிடமிருந்து வந்த குறட்டை சத்தம் அவன் ஆழ்ந்து உறங்கிவிட்டான் என்பதை உறுதிப்படுத்தியது. நீலாவிற்குத்தான் தூக்கம் வரவில்லை. எழுந்து படுக்கையில் அமர்ந்துகொண்டாள். மனம் கனத்தது. சந்துருவின் டிரைவிங் லைசன்ஸில் அவனின் பிறந்த தேதியைக் கண்ட நீலா சந்துரு அவளைவிட 4 வருடங்கள் இளையவன் என்பதைத் தெரிந்துகொண்டாள். தனது தம்பி வயதிலிருக்கும் ஒருவனிடம்போய் இப்படியெல்லாம் நடந்துகொண்டுவிட்டோமே என்று அவளின் உள்மனம் அவளை உறுத்தியது.
தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். ''குட் நைட் மம்மி. டேக் கேர். என்ஜோய்.'' என்று லக்ஷனா மெசெஜ் அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்துக்கொண்டே கண்கலங்கிய நீலா சந்துருவின் ஃபோனுக்கு ஒரு மெசெஜ் வருவதைக் கவனித்தாள். அதை எடுத்துப் பார்த்த நீலாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!
'ச்சேட் ' தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro