'ச்சேட்' (The Chat) நாள் 10
அன்புள்ளங்களே, தாமதத்திற்கு மன்னிக்கவும். அலுவல்கள் காரணமாக update சற்றுத் தாமதமாகிவிட்டது. சந்துரு - நீலாவின் ச்சேட் தொடர்கிறது. உறவு நெருக்கமாகிறது. இரண்டு பேரும் நேரில் சந்திப்பார்களா? தொடர்ந்து படியுங்கள்.
உங்கள் அமுதா
கதைகளே கற்பனையின் சிறகுகள்
அவள் : நேரில் சந்திப்போமா? என்று சந்துரு கேட்ட கேள்வி நீலாவின் விரல்களை ஒரு விநாடி கட்டிப்போட்டுவிட்டது. அவளுக்கு என்ன பதில் 'டைப்' பண்ணுவது என்று தெரியவில்லை.
அவன்: நீலா. . பேபி, இருக்கியா?
அவள்: ஆ. . இருக்கேண்டா. .
அவன்: நான் ஏதாவது தப்பா கேட்டேனா ? சாரி டி
அவள்: ச்சேசே,, அப்படியெல்லாம் இல்ல
அவன்: அப்புறம் ஏன் சைலண்டு ஆயிட்ட?
அவள்: ஒன்னுமில்ல டா. . கொஞ்சம் யோசிச்சேன்
அவன்: இவனை நம்பி பார்க்க வரலாம்ன்னா. . ஹ்ஹ
அவள்: சந்துரு!
அவன்: சாரி. . சாரி
அவள்: எனக்கும் உன்ன நேருல பாக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு
அவன்: அப்புறம் என்ன பேபி. . பாத்துடுவோம்
அவள்: சரி டா
அவன்: ரியலி? வாவ். . எப்போ? எங்க? எப்படி?
அவள்: நம்ம எதுக்கு மத்தவங்களுக்குப் பயப்படனும்? எல்லாரும்
சுயநலமாத்தானே இருக்காங்க. நம்ம மட்டும் நம் ஆசைகளையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சிட்டு எதுக்காக இந்த சுயநலம் பிடிச்ச கூட்டத்துக்காக வாழனும்?
அவன்: பாரதியின் புதுமைப் பெண்ணே. . உனக்குத் தலை வணங்குகிறேன்.
அவள்: ஏய், சும்மா அறுக்காதே. . நான் முடிவு பண்ணிட்டேன். நம்ம நேருல சந்திக்கிறோம்
அவன்: நீலா, எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல
அவள்: ஏய், ரொம்ப நடிக்காதடா. . ஹ்ஹஹ. சரி இதுதான் பிளேன். கவனமாகக் கேளு.
அவன்: சொல்லுங்க மேடம்
அவள்: மேடம் கீடம்ன்னு சொன்னே, வாங்கிடுவே
அவள்: ஓகே டி பேபி. . சொல்லுடி
அவள்: என்னோட பொன்னு. .
அவன்: நம் பொன்னு. .
அவள்: சரிடா சாரி, நம் பொன்னுக்கு இன்னும் இரண்டு வாரத்தில ஸ்கூல் கேம்(camp) ன்னு சொன்னா. மலேசியாவில் இருக்கும் சௌஜானா என்ற இடத்தில. . ஏதோ மோட்டிவேஷனல்(motivational) கேம்மா. . அஞ்சு நாளு கேம். எனக்கு அவளை அனுப்ப விருப்பமில்லதான். அஞ்சு நாளு பிள்ளைய பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு நெனச்சேன். ஆனா, இப்ப அந்த வாய்ப நாம ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாதுன்னு இருக்கு?
அவன்: எப்படி டீ?
அவள்: லக்ஷனா கேம்ல இருந்து வர்றதுக்கு அஞ்சு நாள் ஆகும். அந்த கேப் (gap) ல நான் மூனு நாள் இந்தியா வந்து உன்னப் பாத்துட்டு போயிடுறேன்ண்டா
அவன்: நீலா. .
அவள்: ஆமாடா சந்துரு. உன்னப் பாக்கனும் சந்துரு. உன் முகத்த நேருல பாக்கனும். உன்ன கட்டிப்பிடிக்கனும், உன் கையை கோர்த்துக்கிட்டு கடை கடையா ஷோப்பிங் போகனும். . ரொம்ப ஆசையா இருக்கு சந்துரு. . நடக்குமா?
அவன்: நீலா. . என்னடி இப்படி கேக்குறே பேபி. . கண்டிப்பா நடக்கும். நம்ம மனசு வச்சா. .
அவள்: நான் மனசு வச்சிட்டேன். . நீ?
அவன்: நீலா. . நான் எப்போதோ என் மனசை உனக்குக் கொடுத்திட்டேன் டீ. என் மனசு எங்கிட்டயே இல்ல
அவள்: i love you da
அவன்: சரிடி. . பிளேன் விவரமாச் சொல்லு. நான் லீவு எல்லாம் போடனும்
அவள்: லக்ஷனா கிட்ட என்னோட பியூட்டிஷன் பிஸ்நஸ் சம்மந்தமா ஒரு வாய்ப்பு சென்னையில் கிடச்சிருக்கு, போயிட்டு மூனு நாளில் வந்திடுவேன்னு சொல்லிட்டு கிளம்பி வர்றேன். . அவ கேம் போயிட்டு வர்றதுகுள்ளே நான் உங்கள பாத்திட்டு ஓடோடி வந்திடுவேன்
அவன்: வெரி குட். ஆனா, பாத்து கவனமா டி
அவள்: சரி டா. எனக்கு இப்போவே ரொம்ப எக்சைட்டடா(excited) இருக்கு.
அவன்: எனக்கும்தான் நீலா. நீ கரகட்டான தேதி எனக்கு whatsapp பண்ணிவிடு. அப்புறம் ஹோட்டல் செலவு, சாப்பாடு செலவு எல்லாத்தையும் நம்ம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்குவோம், சரியா?
அவள்: அதப் பத்தியெல்லாம் கவலப் படாத டா. எல்லாம் நான் பாத்துக்கிறேன்
அவன்: இல்ல இல்ல, கட்டாயம் ஷேர் பண்ணிக்கனும். நீ எத்தன செலவுதான் தனியாப் பாப்பே? டிக்கெட் எல்லாம் போடனும் இல்லயா?
அவள்: ஓகே ஓகே. நான் ஆன்லலைன்ல இங்க இருந்து ஹோட்டல் எல்லாம் புக் பண்ணிடுறேன்.
அவன்: சரி டி. ஆனா, புக் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட காட்டு டி. சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்குற இடம் பாத்து புக் பண்ணிட்டா, நான் மாட்டிக்கிடுவேன் ஹ்ஹஹ்ஹ
அவள்: அதெல்லாம் பாத்துக்கலாம். புக் பண்றதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்றேன்டா. .
அவன்: ஓகே டி. நீலா, எனக்கு ரொம்ப பயமா இருக்குடி
அவள்: ஏண்டா?
அவன்: உன்ன நேருல பாத்தா, நான் எப்படி பேசுவேன்?
அவள்: ம்ம்ம வாயாலதான் ஹ்ஹஹ்ஹ
அவன்: ஏய், கள்ளி. என்மேல் உனக்கு எவ்வளவு அன்பும் பாசமும் காதலும் இருந்தா இப்படியொரு முடிவு எடுத்திருப்பே?
அவள்: நீ இப்படியே பேசிட்டு இருந்தா. . அப்புறம் நான் வரமாட்டேன் சொல்லிட்டேன்.
அவன்: ஏய், ஏய் அப்படியெல்லாம் பண்ணிடாதே டி, லூசு. எனக்கு ஒரு ஆசை நீலா
அவள்: சொல்லுடா
அவன்: ஏர்போட்டில் இருந்து உன்ன டேக்சியில் கூட்டிட்டு வரும்போது உன் கையை பிடிச்சிகிட்டே வரனும்
அவள்: தாராளமா டா
அவன்: அப்புறம் ஹோட்டல் ரூம்முக்கு வந்ததும், உன் நெற்றியில் முத்தமிடனும்
அவள்: ம்ம், அப்புறம்
அவன்: அப்புறம். . .சொன்னா கோச்சிக்க மாட்டியே
அவள்: டேய், உன்னப் பாக்க ஏழு கடல் தாண்டி வரப்போறேன், இப்ப போய் கோச்சிக்குவியா கீச்சுகிறுவயான்னு
அவன்: நீலா. .
அவள்: சொல்லுடா
அவன்: ஹோட்டல் ரும்ல நமக்கு ஒரே படுக்கையா இல்ல தனித்தனி படுக்கையா. .
அவள்: தனி தனி படுக்கைத்தான். . அதுல என்ன சந்தேகம்?
அவன்: ம்மு, அதுக்கு நீ வராமலே இருக்கலாம்.
அவள்: ஹ்ஹஹ்ஹஹ, சந்துரு ஒரே படுக்கைத்தான் போதுமா?
அவன்: நீலா உண்மையாவா?
அவள்: யெஸ்.
அவன்: என்னடி சொல்லுறே? உனக்குப் பயமா இல்லையா?
அவள்: எதுக்கு?
அவன்: இல்லே. . ஒரே படுக்கைன்னா கொஞ்சம் அப்படி இப்படீன்னு நான் ஏதாவது பண்ணிட்டேனா?
அவள்: பண்ணு
அவன்: என்னடி? ரொம்பத்தான் தைரியம். சரி சரி
அவள்: சந்துரு, நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம். கட்டிப்புடிக்கிறது, கிஸ் பண்றது இதெல்லாம் பண்றது தப்பில்ல. . இதெல்லாம் நம்ம மத்தவங்க மாதிரி தினமும் செய்ய முடியாது சந்துரு. அதனால கொஞ்சம் செய்யலாம் தப்பில்ல. .ஹ்ஹஹ்ஹ
அவன்: ஹேய் நீலா, உனக்கு இருக்கிற தைரியம் எல்லாம் எனக்கு வராதுடி
அவள்: சரி அதெல்லாம் நான் அங்க வர்றப்போ பாத்துக்கல்லாம். இப்ப நான் டிக்கெட் புக் பண்ணனும் சந்துரு. பாய். .
அவன் !!!!
'ச்சேட்' தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro