Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ச்சேட் (The Chat)- நாள் 1

வணக்கம் நண்பர்களே!! என்னுடைய அடுத்த கதை கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும். இந்த 'ச்சேட்' என்னும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முற்றிலும் என் கற்பனையில் உதித்தவை. சற்று வித்தியாசமான உரையாடல் பாணியில் இக்கதை முழுதும் இடம்பெறப் போகிறது. கதையைப் படித்துவிட்டு உங்கள் likes, comments போடுங்க . . அது எனக்கு மிகவும் முக்கியம். 

இப்படிக்கு உங்கள் அமுதா

கதைகளே கற்பனையின் சிறகுகள்


(மெசஞ்சரில் (Messenger)

அவன் : என்ன பேசவே மாட்டுறீங்க?

அவள் : ஹாய்

அவன் : அப்பா! இப்பவாவது பேசுனீங்களே, எப்படி இருக்கிக்கீங்க?

அவள் : ஃபைன்(fine), நீங்க?

அவன் : ம்ம், சாப்டாச்சா?

அவள் : சாப்டேன்

அவன் : நீங்க?

அவள் : யெஸ்

அவன் : என்ன spl?

அவள் : ஸ்பெஷல் எல்லாம் இல்ல, பூரி

அவன் : பூரி நைட்டில் சாப்பிடாதீங்க, ஒயில் (oil) ஐட்டம்

அவள் : ஓகே. . நன்றி

அவன் : எதுக்கு நன்றி

அவள் : என்மேல் அக்கறை காட்டியதற்கு

அவன் : இதுகெல்லாம் நன்றி சொல்வாங்களா

அவள் : சும்மா

அவன் : இனிமே நீங்க நன்றியெல்லாம் சொல்லக் கூடாது, ஓகே வா

அவள் : சரி, சொல்லமாட்டேன்

அவன் : தேங்ஸ்

அவள் : தேங்ஸ் மட்டும் சொல்லலாமா?

அவன் : ஓ. . ஹஹ. . சாரி

அவள் : சாரி பூரி

அவன் : ஹஹா ஹஹா

அவள் : என்ன சிரிப்பு

அவன் : இல்ல, நீங்க ஜோக்கெல்லாம் அடிப்பீங்களா

அவள் : அப்பப்போ 

அவன் : உங்க பேரே நீலாவா?

அவள் : ஆமா, ஏன் கேக்குறீங்க? 

அவன்: Beautiful name 

அவள்: தேங்ஸ், முழுப்பெயர் நீலமலர். ரொம்ப பழைய பெயர். .ஹஹ்ஹ

அவன்: நோ நோ, அழகான இலக்கியப் பெயர். எனக்கு உங்க பெயர் ரொம்ப                       பிடிச்சிருக்கு

அவள்: உங்க முழுப் பெயரே சந்துருவா? 

அவன்:ஆமாங்க, ஏங்க நல்லாலில்லையா?  

அவள்: ஐயையோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, நினைத்தாலே இனிக்கும்                     படத்துல கமலஹாசன் பெயர் சந்துரு. எனக்கு ரொம்ப பிடிச்ச பெயரு

அவன்: ஆனா, கமலஹாசனுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க ஹஹஹ                                 பக்கத்திலக்   கூட என்னால் வரமுடியாது

அவள் : ஹஹ்ஹ

அவன் : ஆமா, ஃப்ரி (free) டைம்ல என்ன பண்ணுவீங்க

அவள் : சமையக்கப் பிடிக்கும், அப்புறம் கதைகள் படிப்பேன், பாட்டுப்

                   பாடுவேன்

அவன் : பாட்டெல்லாம் பாடுவீங்களா?

அவள் : ஐயோ, நீங்க வேற, சும்மா வாய்க்கு வந்தத பாடுவேன், பெரிய

                   பாடகியெல்லாம் இல்ல

அவன் : எனக்காக ஒரு இரண்டு வரி பாடுறீங்களா?

அவள் : இப்பவா?

அவன் : ஆமா

அவள் : ஐயையோ முடியாது

அவன் : ஏங்க

அவள் : என்னங்க நீங்க பாடெல்லாம் சொல்றீங்க

அவன் : சும்மாதான் கேட்டேன், உங்க குரலைக் கேக்கலாம்னு தான்,

                    பிடிக்கலனா பரவால

அவள் : இன்னொரு நாள் பாடுறேன்

அவன் : உங்க விருப்பம்

அவள் : நீங்க ஃப்ரி டைம்ல என்ன பண்ணுவீங்க

அவன் : நமக்கு ஃப்ரி டைமே கிடையாதுங்க

அவள் : ???

அவன் : என்னங்க அமைதியாயிட்டீங்க

அவள் : இல்ல ஃப்ரி டைமே இல்லன்னு சொல்றீங்க, அப்புறம் இப்ப

                    மட்டும் எப்படி?

அவன் : அது அப்பப்போ கிடைக்கும்போது மட்டும்தான் இப்படி

அவள் : சரிங்க நீங்க அப்போ வேலய பாருங்க

அவன் : ஹலோ ஹலோ, என்னங்க அதுக்குளேயும் போறேனு

                    சொல்றீங்க

அவள் : நீங்க தானே ரொம்ப பிசின்னு சொன்னீங்க

அவன் : இல்ல, இப்போ பிசி இல்ல

அவள் : ஆமா, கேக்க மறந்திட்டேன்

அவன் : என்னங்க

அவள் : நீங்க என்ன வேலப் பாக்குறீங்க

அவன் : சோஃவ்டு வேர் எஞ்சினியர் (software engineer)

அவள் : Wow

அவன் : Thanks

அவள் : எதுக்கு இப்போ தேங்ஸ்

அவன் : சாரி

அவள் : பூரி

அவன் : ஹஹஹ, நீங்க என்ன பண்ணுறீங்க?

அவள் : நான் பியூட்டிஷன் (beautician)

அவன் : Wow, அதுதான் ரொம்ப அழகா இருக்கீங்க

அவள் : ஹலோ, பியூட்டிஷன் மத்தவங்களுக்கு மேக் அப் போட்டு

                    விடுறவங்கதெ.

அவன் : தெரியும்ங்க -நீங்க மேக் அப் போடாமலேயே அழகா

                     இருக்கீங்க

அவள் : ரொம்ப ஐஸ் வைக்காதீங்க

அவன் : ரியலி

அவள் : அப்படியா, தேங்ஸ்

அவன் : நீங்களும் நல்லாத்தான் இருக்கீங்க

அவள் : நன்றிங்க

அவள் : மறுபடியுமா?

அவன் : அது நம்ப பண்பு, சொல்லாம இருக்க முடியல

அவள் : சரிங்க

அவன் : நீங்க பியூட்டி பார்லர் (beauty parlour) வச்சிருக்கீங்களா?

அவள் : கடையெல்லாம் இல்ல, சும்மா ஃரிலாண்சா (freelance) செய்றேன்.

                   படிச்சிருக்கேன், எதுக்கு திறமையை வீணாக்கனும்? அதுதான்                 

                   செய்றேன்

அவன் : வெரி கூட். பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கனும்

அவள் : ஹலோ, நீங்க எந்தக் காலத்தில இருக்கீங்க? இப்போ பெண்கள்

                   எல்லாரும் ஆண்களுக்கு நிகரா இருக்காங்க

அவன் : ஐயோ நான் ஒன்னும் தப்பா சொல்லலீங்க. .

அவள் : சரி சரி, நானும் சும்மாதான் சொன்னேன்

அவன் : நான் ஒன்னு கேட்டா தப்பா நெனக்க மாட்டீங்களே

அவள் : என்ன சொல்லுங்க

அவன் : இல்ல ஒன்னுமில்ல

அவள் : அப்போ நாளைக்குப் பேசலாமா?

அவன் : உங்க விருப்பம். நாளைக்கு என்ன டைமுக்கு வருவீங்க

(பின்னால் கதவு மணியை அழுத்தும் ஒலி கேட்கிறது)

Connection cut

அவன் : ஹலோ, எங்க போயிட்டீங்க? பதில் சொல்லாமலேயே

போயிட்டீங்க? 

(ச்சேட் மீண்டும் தொடரும்)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro