Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சாகரசங்கமம்-முன்னோட்டம்


"பையனோட ராசி நட்சத்திரம் சொல்லுங்கோ" என்ற அர்ச்சகரிடம் அர்ச்சனைத்தட்டை நீட்டிய மதிவதனி புன்னகையுடன் "வித்யாசகர், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம்" என்று சொல்ல அவர் கர்ப்பகிரகத்துக்குள் சென்று விட்டார்.

அருகில் நின்ற மகளிடம் "வித்தி எங்க போனான் ஷாலி?" என்று கேட்க அவளோ "வித்தி அண்ணா நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தா எப்போவும் என்ன பண்ணுவானோ அதை தான் பண்ணிட்டிருப்பான்மா" என்றாள் நமட்டுச்சிரிப்புடன்.

மதிவதனியோ அவரது மைந்தன் இருபத்திமூன்று வயதிலும் இன்னும் குழந்தையாக இருக்கிறானே என அலுத்துக் கொண்டபடி நெல்லையப்பரிடம் மகனுக்கு நல்ல புத்தி அளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

ஆனால் அவரது மகனோ அங்கே நின்றிருந்த பாவாடை தாவணிப்பெண்ணிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.

"இங்க பாரு! இப்போ மட்டும் நீ உன்னோட நம்பரைச் சொல்லலனு வச்சுக்கோ, உன்னைத் தூக்கிட்டுப் போய் அந்த யானை கிட்ட குடுத்துடுவேன்... அப்புறம் அது உன்னை தும்பிக்கையால சுத்தி வளைச்சிடும்" என்று மிரட்ட அவன் எதிரில் நின்றவளோ தாவணி நுனியைத் திருகியபடியே தனது முட்டைக்கண்களை உருட்டி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"நிஜமாவே தூக்கி யானை கிட்ட குடுத்துடுவானோ? பட் நம்ம இருக்குற வெயிட்டுக்கு இவனால நம்மள எப்பிடி தூக்க முடியும்? இந்த ஒல்லிக்குச்சியால நம்ம கையைக் கூட தூக்க முடியாது... ஆனா ஆச்சி சொல்லுற மாதிரி ஒல்லியா இருக்குறவங்க சாப்பிட்டு சாப்பிட்டு நரம்புல சேத்து வைக்குற மாதிரி இவனும் சேத்து வச்சிருந்தா என்ன பண்ணுறது?" என யோசித்தபடி நின்றாள் அவள்.

"என்ன லுக்கு?" என்று கேட்டபடி நமட்டுச்சிரிப்புடன் அவன் அருகில் வர அவள் எதிர்த்திசையில் கை காட்டியவள் "உங்கள யாரோ கூப்பிடுறாங்க பாருங்க" என்று சொல்ல வித்யாசாகர் யாரென திரும்பிப் பார்த்த அடுத்த நொடியில் சிட்டாக அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தாள் அந்தப் பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்.

*************

"திருநெல்வேலிக்காரங்கள பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல மனுசங்க ரெண்டே ரெண்டு கலர் தான்... ஒன்னு கருப்பு, இன்னொன்னு சிவப்பு... நீ சொல்லுற ஆலிவ் ஸ்கின்லாம் அவங்களைப் பொறுத்தவரைக்கும் கறுப்பு தான் ரேஷ்மா... இதுல நான் வேற ஓவர் வெயிட்" என்று அலுத்துக் கொண்டாள் சங்கமித்ரா.

ரேஷ்மா அவளது தோளை இடித்தவள் "நீ ஒன்னும் ஓவர் வெயிட் இல்ல மித்து! நீ கொஞ்சம் கொழுக் மொழுக்னு ஹன்சிகா மாதிரி பாக்க ஷப்பியா இருக்கடி... எனக்குலாம் உன்னோட கியூட்டான ரவுண்ட் ஃபேஷை பாத்து செம பொறாமை... அதோட நீ ஒன்னும் கறுப்பு இல்ல... நீ டஸ்கி பியூட்டி பேபி... பாத்துட்டே இரு, நீ இப்பிடி உன்னையே தாழ்வா நினைக்கிறதுக்கு செம ஹாண்ட்சம்மா ஒருத்தன் உன் முன்னாடி வந்து நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கோனு சுத்தி சுத்தி வரப் போறான்... மார்க் கை வேர்ட்ஸ்" என்றாள் கண்களில் ஆவல் மின்ன.

"கிழக்குல உதிக்குற சூரியன் மேற்குல உதிச்சா வேணும்னா நீ சொல்லுறது நடக்கும்" என்றாள் சங்கமித்ரா கண்சிமிட்டியபடி கேலியாக.

*************

"ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட நீ கர்ணாவோட சிஸ்டரை மேரேஜ் பண்ணிப்பேனு சொன்னியேண்ணா?" என்றாள் விருஷாலி ஆதங்கம் நிரம்பிய குரலில்.

"ஆமா சொன்னேன்... ஆனா இப்போ நானே சொல்லுறேன் அவளை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது... என்கேஜ்மெண்ட் நடக்கும்... உனக்கும் கர்ணாவுக்கும் மட்டும் நடக்கும்... நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்... அவளைத் தான் நான் மேரேஜ் பண்ணிப்பேன்" என்றான் வித்யாசாகர் தோளை அசட்டையாக குலுக்கியபடி.

அவனது கடைசி வார்த்தையில் அதிர்ந்த விருஷாலி "என்னது? லவ் பண்ணுறியா? இது எப்போ? டேய் அண்ணா! எப்போவும் போல இப்போவும் நீ விளையாட்டுக்குத் தானே சொல்லுற?" என்று பரிதாபமாக கேட்க இல்லவே இல்லையென தலையைப் பலமாக ஆட்டி மறுத்தான் வித்யாசாகர்.

"நான் அந்த ரக்ஷனாவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்... ஏன்னா நான் என்னோட அமுல் பேபிய ரொம்ப்ப்ப லவ் பண்ணுறேன்... அதுவும் மூனு வருசமா... இது உன் மேல சத்தியம்" என தங்கையின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தவன் "போய் குட்கேர்ளா கர்ணா கூட கனவுல டூயட் பாடு... நானும் என் அமுல்பேபி ஜெம் கூட டூயட் பாட போறேன்... குட் நைட் ஷாலி" என்று அவளின் சிகையைக் கலைத்துவிட்டு உற்சாகமாகக் கிளம்பினான்.

செல்லும் போதே எப்போதும் போல பாட்டும், அதற்கேற்ப கூட யாரோ ஆடுவது போல கற்பனையாக சில நடன அசைவுகளையும் கொடுத்துக் கொண்டே செல்ல அவனது தங்கை தமையனின் செய்கையில் வாயைப் பிளந்தாள்.

ஆனால் அதை கவனியாத வித்யாசாகரோ தனது அமுல்பேபியே தன்னுடன் ஆடுவது போன்ற பிரமையுடன் புன்னகை மலர பாடல் வரிகளைச் சத்தமாகப் பாடியபடி நடந்தான்.

"ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி"

அவன் கையை விரித்து பாடிவிட்டு அந்த வராண்டாவிலிருந்து வெளியே தெரிந்த வானைப் பார்த்த போது விருஷாலியைக் காண மாடிவராண்டாவுக்கு வந்த சங்கமித்ரா திடீரென அவன் முன்னே பிரசன்னமானாள்.

கற்பனையில் யாருடன் டூயட் பாடினானோ அவளே கண் முன் வந்து நின்ற குதூகலத்தில் வித்யாசாகர் நிற்க அதே நேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பியதிலிருந்து தன்னிடம் வம்பு வளர்க்கும் தோழியின் அண்ணன் இப்படி வினோதமாகப் பாடுவதைக் கண்டு தனது முட்டைக்கண்களை உருட்டியபடி நின்றாள் அவனது அமுல் பேபி எனப்படும் சங்கமித்ரா.

*************

"நீ ட்வென்டி ஃபோர் அவர்சும் சாப்பிட்டுட்டே இருப்பியோ? இல்ல, மூனு வருசத்துக்கு முன்னாடி பாத்தப்போ இருந்த மாதிரி இன்னும் ஷப்பி கேர்ளாவே இருக்கியே! அதான் கேட்டேன்" என்று தன்னெதிரே அமர்ந்து ஐஸ் க்ரீமை காலி செய்து கொண்டிருந்த சங்கமித்ராவைச் சீண்டினான் வித்யாசாகர்.

அவள் கடுப்புடன் ஸ்பூனை வைத்து விட்டு நிமிர்ந்து "நானும் ஒரு டவுட் கேக்கவா? நீ ஆளு பாக்க வாட்டச்சாட்டமா இருக்கியே! இந்த மசில்ஸ்லாம் ஸ்டீராய்டு போட்டு ஏத்துனது தானே? ஏன்னா நீயும் மூனு வருசத்துக்கு முன்னாடி பாக்க ஒல்லிக்குச்சியா இருந்த... இப்போ ஆளே மாறிட்டியே" என்று கேட்க இப்போது கடுப்பாவது வித்யாசாகரின் முறை.

"அடியே! இதுல்லாம் நேச்சுரல் மசில்ஸ்டி... மனுசன் மூனுவருசம் ஜிம், ஒர்க் அவுட், டயட்னு கஷ்டப்பட்டு உருவாக்குன உடம்பை ஸ்டீராய்டு போட்டு உருவாக்குனதுனு நாக்கூசாம சொல்லுறியேடி பாவி" என்று பொங்கிவிட்டான் அவன்.

"எப்பிடி குண்டா இருக்குற எல்லாரும் ட்வென்டி ஃபோர் அவர்சும் சாப்பிட்டுட்டே இருப்பாங்கனு பொதுவா நீ ஒரு கருத்து சொன்னியோ, அதே மாதிரி தான் உன்னை மாதிரி ஜிம்பாடி வச்சிருக்கிற எல்லாருமே ஸ்டீராய்டுல் தான் உடம்பை வளக்குறாங்கனு நானும் இன்னொரு பொதுவான கருத்தைச் சொன்னேன்... உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா டொமேட்டோ சாஸா?" என்றாள் சங்கமித்ரா விடாக்கண்டியாக.

வித்யாசாகர் தனது கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடு போட்டவன் "தாயே சங்கமித்ரையே! உங்கள தெரியாம கலாய்ச்சிட்டேன்... பெரிய மனசு பண்ணி இந்தச் சின்னப்பையனை மன்னிச்சிடுங்க" என்று சரணாகதி அடைய சங்கமித்ரா அவன் சொன்ன விதத்தில் கிளுக்கிச் சிரிக்க ஆரம்பித்தாள்.

சிரிக்கும் போது விரிந்த அவளின் செவ்விதழும், மலர்ந்த கயல்விழிகளும், குண்டுகன்னங்களில் தோன்றி மறைந்த குழிகளும் வித்யாசாகரின் ரசனை நிறைந்த விழிகளைக் கவர தவறவில்லை.

அதன் விளைவாக அவனது உதட்டிலும் குறுஞ்சிரிப்பு ஒன்று பிறப்பெடுக்க சந்தோச மிகுதியில் அவனது உதடுகள் பாடலைப் பாட ஆரம்பித்தது.

என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே

சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே

அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே

ரசனையையும் குறும்புத்தனத்தையும் கண்ணில் பூசிக்கொண்டு அவன் பாட சங்கமித்ராவுக்குள் வெட்கப்பூக்கள் மலரத் துவங்க அடுத்த நொடியே "இன்னும் ஸ்ப்ரிங் சீசன் வரல... வர்றப்போ நீங்க விரியலாம்" என்று அவற்றை அதட்டிக் கூம்ப வைத்தாள் அவள்.

கூடவே "ஐயா சாமி! தயவு பண்ணி பாட்டு மட்டும் பாடாத! கேக்க முடியல" என்று தனது காதுகளை விரல்களால் மூட

"ஓகே நான் பாட்டு பாடல... அதுக்குப் பதிலா உன் நம்பரை குடு" என்றான் வித்யாசாகர் தனது காரியத்தில் கண்ணாக.

சங்கமித்ரா அவசரமாக "நம்பர்லாம் குடுக்க முடியாது... மூனு வருசத்துக்கு முன்னாடி மாதிரி நீ என்னை மிரட்டவும் முடியாது.. ஏன்னா இங்க யானை இல்ல" என்றாள் மறுக்கும் விதத்தில்.

"ஏய் யானை எதுக்குடி? இப்போ மட்டும் நீ நம்பர் குடுக்கலனு வையேன், இந்த ரெஸ்ட்ராண்டே திரும்பி பாக்குற மாதிரி 'அமுல் பேபி ஐ லவ் யூ'னு சத்தம் போட்டு பிரபோஸ் பண்ணிடுவேன்.. அப்புறம் உன் இஷ்டம்" என்று சொல்லி அவளை அதிர வைத்தான் வித்யாசாகர்.

***************

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

சாகரசங்கமம் என்னோட அடுத்தக் கதை... வந்தாயே மழையென நீயும் முடிஞ்சதுக்கு அப்புறமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இந்தக் கதைய ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... கொஞ்சம் ஹெவியான கதைக்கு அடுத்து இப்பிடி ஒரு லைட் ஹார்ட் கதை எழுதுனா எனக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்லா... இந்தக் கதைய எப்பிடியும் ஜனவரி மிட்ல தான் ஆரம்பிப்பேன்... டைட்டில ரிசர்வ் பண்ண போட்ட முன்னோட்டம் தான் இது... படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லிட்டு போங்க மக்களே!

நன்றி!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro