பிருந்தாவன தோட்டம்
சுற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
நீர் வீழ்ச்சியே!
உன்னை கண்ட நாங்கள் மனம்
வியந்தோம்!
உன்தன் அழகில் நாங்கள் மெய்
மறந்தோம்!
படிமேல் ஊர்ந்து வரும்
நீர் வீழ்ச்சியே!
உன் மடி மேல் விளையாட
துணிந்தோம்!
ஆனால் அது தான் இயலுமோ?
தொட்டால் வெட்கம் கொள்ளும் இயல்பை
கற்றுக்கொடுத்தாரோ?
பெண்ணோ?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro