தமிழ் தாயே
தலையில் சூடாமணியும்,
மார்பில் சிந்தாமணியும்,
காதில் குண்டல கேசியும்,
கைகளில் செ ங்கொலாக
விளங்கும் திருக்குறள்
இவை அனைத்தும் அணிந்த
நமது தமிழ் அன்னை
வாழும் தமிழ் நாட்டில்
உள்ள இளைஞர்களுக்கு
என் வணக்கம்.
ஏன் இன்னும் அன்னைக்கு
யாரும் வேறு அனிகலன்கள்
தொடுக்கவில்லை?
இது ஆங்கிலம் வந்ததால்
தமிழ் தாய்க் கு வந்த
தொல்லையோ?
தமிழ் என்றால் இழிவென்பார்
ஆங்கிலம் என்ற லோ புகழென்பார்
ஏன் நமது தமிழ் தாயை யாரும்
வணங்குவதில்லை?
தாய் மொழியை காட்டிலும்
சிறந்து விளங்கும் வேறு
மொழியுண்டோ?
அவள் என்று பிறந்தாள்?
எங்கு பிரந்தாள்? எப்பொழுது
பிரந்தாள்?
ஏதும் நமக்கு தெரியாது
ஆனால் தொன்று தொட்டு
இன்று வரை கன்னியாக
இருக்கும் தமிழ் தாயை நாம்
ஏன் ரசிக்கவில்லை?
தமிழுக்கு உண்டோ
நிகர்?
எம்மொழி உடன்
ஒப்பிட்டு பார்தாலும்
ஈடாகா அமுதை, தமிழ் மொழியை
ருசிக்க இயலாமல் தவிக்கின்ற
அயல் நாட்டினர் போல்
நம் மனம்
என்று
மாறும்??
அயல் நாட்டினருக்கு எப்படி
அவர்தம் மொழி மூச் சோ
அது போன்று
நம் தமிழை எடுத்துக் கொள்ள்ல்
வேண்டும்.
நம் உயிருக்கு நிகரான
தமிழ் மொழியை
நாம் மூச்சாக சுவாசிப்போம்
ஓர் தோழியென நேசிப்போம்
பல காப்பியங்களை
படைத்து
தமிழை போற்றுவோம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro