உருவங்கள்
சிற்பியென எம்மை செதுக்கினீர்
சிலலையென உருவெடுத்தேன்
கரையென எம்மை ஆதரித்தீர்
அலையென உருவெடுத்தேன்
சிப்பியென எம்மை காத்தீர்
சிறந்த முத்தென உருவெடுத்தேன்
கல்விச் செல்வம் எமக்கு அளித்தீர்
உங்கள் மாணவியாய் உருவெடுத்தேன்
இத்தனை உருவெடுக்க வைத்த
எம் ஆசிரிய பெருமக்களே
உங்கள் திருவடியை என் தலை தாழ்த்தி
வணங்குகிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro