பகுதி 53
7வது மாசம் பொதுவா வளைகாப்பு வெப்பாங்க அதே போல தாராவுக்கும் வளைகாப்பு நடத்த ஏற்பாடு நடக்குது... எப்பவும் தாரா எல்லாத்தையும் எளிமையா பண்ணனும்னு சொல்லீட்டே இருப்பா அதுநால ரொம்ப எளிமையா கூட்டம் அதிகமா கூப்பிடாம, ரொம்ப நெருங்குன சொந்தம் மட்டும் அழைச்சு விஷேசம் நடக்குது...
ரேனு மட்டும் தாரா பிரண்ட்ஸ்ல வந்துருந்தா... கல்யாணத்துக்கு எடுத்த அதே முகூர்த்த பொடவை தான் வளைகாப்புக்கும் கட்டனுமாம், அதுனால பொடவை எடுக்கல,,, காலைல எழுந்த தாரா குளுச்சுட்டு முகூர்த்த பொடவை கட்டி எப்பவும் போல சாதாரணமா ஜடை போட்டு,, அளவா பூ வெச்சு எந்த மேக்கப்பும் போடாம பொட்டு மட்டும் வெச்சு இருந்தா.... அப்போ உள்ள வந்த கிருஷ்ணராசு....
கிருஷ்ணராசு: தாராமா ரெடியா,,, ஏன் தனியா இருக்க??
தாரா: இல்ல பா,,, அவரு, அண்ணா, கார்த்தி எல்லாரும் பறிமாறிட்டு இருக்காங்க.... அம்மா, கீர்த்தி, அத்த எல்லாரும் சீமந்த சாப்பாடு ரெடி பண்ணீட்டு இருக்காங்க.. நான் இப்போ தான் குளுச்சுட்டு வந்து ரெடி ஆனேன்.... (தாரா பேசற எதுவுமே அவ அப்பா காதுல விழுகல,,, அவ மொகத்துல இருக்க சந்தோசத்த பாத்து ஆனந்தக்கண்ணீர் விட்டுட்டு இருக்காரு)
கிருஷ்ணராசு: சரி டா மா.. (கண்ண தொடைக்க)
தாரா: என்ன ஆச்சு பா?? ஏன் அழுகறீங்க ???
கிருஷ்ணராசு: (தாராகிட்ட வந்து பெட்ல உட்காந்து) தாராமா நீ பெறக்கும் போது என்னோட கையவீட குட்டியா இருப்ப... உன்ன அழகா தூக்கி மடீல வெச்சுக்குவேன்... என்னோட சுண்டுவிரல நீட்டுனா போதும் உன்னோட ரெண்டு கையால விரல பிடுச்சுக்குவ... கண்ணசிமிட்டி சிமிட்டி பாப்ப... அப்றம் உனக்கு இரண்டரை வயசு வரைக்கும் நடக்கவே வராது டா...
தாரா: ம்ம்ம்ம் தெறியும் பா...
கிருஷ்ணராசு: நீ நடக்கவே மாட்டனு எல்லாரும் சொல்லுவாங்க டா,,, உன் அம்மாவும் ரொம்ப ட்ரை பண்ணா ஆனா நீ நடக்கவே இல்ல 😞 .. ஒரு நாள் நான் தோட்டத்துல ரொம்ப வேலை முடுச்சு வீட்டுக்கு வந்து உன்ன தூக்கிகொஞ்சாம பசில சாப்ட்டுட்டு இருந்தேன்,,, நீயும் அப்பா..... அப்பா னு என்னோமோ ஒலறீட்டு இருந்த அப்போ நான் அப்பாகிட்ட வாங்க டா செல்லம்,,, அப்பாக்கு கால் வலிக்குது நடக்க முடியல னு கைய நீட்டுனேன் அப்டியே எழுந்து நடந்து வந்த.... என்காலா தொட்டு ஊதிவிட்டு,,, உன்னோட பாஷைல என்னோமோ சொன்ன... என்னோட குட்டி தாரா இப்போ அம்மா ஆகப்போறா.... என்னால நீ வளந்தத நம்பவே முடியல டா... சந்தோசத்துல அழுகையே வருது டா😭😢
தாரா: அப்பா அழாத😢😭😭 எனக்கும் அழுக வருது.... (அப்பா கண்ண தொடச்சுட்டு)
கிருஷ்ணராசு: இல்ல டா இல்ல அப்பா அழுகல.... எனக்கு இப்போ எந்த கவலையும் இல்ல டா... என்னவீட உன்ன நல்லா பாத்துக்கற நல்லமனுசன்கிட்ட உன்ன ஒப்படச்சாச்சு... பேறக்கொழந்தையும் வரப்போகுது.... இதுக்குமேல என்ன வேணும் சொல்லு....
தாரா: 😊😊😊
கிருஷ்ணராசு: சரி மா,, ஏன் மேக்கப் போடல...
தாரா: இதுவே போதும் பா... சிம்ப்ளா இருந்தாலே போதும்.... (அப்போ சரியா கார்த்தி அத எல்லாத்தையும் பாத்துட்டு இருக்க, அத அப்பா பாத்துட்டு)
கிருஷ்ணராசு: ஏன் டா கார்த்தி டைம் ஆச்சா,,, கூப்ட்றாங்கலா???
கார்த்தி: இல்ல மாமா... (தாராகிட்ட வந்து,,, திடீர்னு மடீல படுத்துட்டு) ஏன் கா உன் பையன் பெறந்துட்டா என்னையெல்லா கொஞ்சமாட்டல??? உன் மடீல தூங்கற உரிமை இனி அவனுக்குதான்ல?? 😭😭
தாரா: லூசூ.... அப்டிலா இல்ல... எப்பவும் யாரு வந்தாலும் எங்க கார்த்திகுட்டி தான் எங்க வீட்டு செல்லம்....
கார்த்தி: நீ பொய் சொல்லாத... இனி அந்த எடம் எனக்கு இல்ல...
தாரா: இல்ல டா... யாருனாலையும் யாரோட எடத்தையும் நிரப்ப முடியாது டா... எல்லாருக்கும் தனி தனி எடம் இருக்கும்... எனக்கு கொழந்தையே வந்தாலும் அப்பா என்னதானு கொஞ்சுவாங்க அதபோலதான் எல்லாம் (அந்த நேரம் பாத்து கீர்த்தி, லட்சுமி உள்ள வர)
லட்சுமி: போதும் போதும் சென்டிமென்ட் 😂 வாங்க நல்ல நேரம் போறதுக்குள்ள வளையல் போடனும்...
கீர்த்தி: ஹேய் வா டி.... எனக்கும் தான் கல்யாணம் ஆகப்போகுது யாராவ்து எனக்காக பீல் பண்றீங்கலா 😏
தாரா: லூசூ 😂 கல்யாணம் பண்ணீட்டு எங்கையோ போற மாதிரி சொல்லற... நம்ம வீட்டுக்கு தானு வரப்போற...
கீர்த்தி: ஆனாலும் ஐ நீட் சென்டிமென்ட் பா.... 😞😞😞
கார்த்தி: ஐயோ... கீர்த்திக்கா.... இப்டி அனியாயமா எங்கலவீட்டு போறயே... கல்யாணம் பண்ற வயசா இது.... இந்த சின்ன வயசுலயே போறயே (ஒப்பாரி வெக்கற மாதிரி சொல்லறா)
கீர்த்தி: ஐயோ டேய் ஏன் டா?? பீல் பண்ணுனு சொன்னா ஏன் டா இப்டி ஒப்பாரி வெக்கற....
கிருஷ்ணராசு: டைம் ஆகுது வாங்க வெளிய போலா... (எல்லாரும் வெளிய போக... தாராவ அங்க இருந்த சேர்ல உட்கார வெக்கறாங்க... தாரா கண்ணனையே தேடுறா)
கீர்த்தி: போதும் போதும் அண்ணா கடைக்கு போயிருக்கு இன்னும் வரல ரொம்ப தேடாத😂😂
தாரா: போ டி,, நா ஒன்னும் தேடல..... (கண்ணன் கொஞ்ச நேரம் கழுச்சு வர அங்க தாராவ பாத்து என்ன னு கண்ணால கேக்க தாரா ஒன்னு இல்ல னு சொல்லறா)
சம்பரதாயப்படி பொன்னுங்க எல்லாரும் மொதல்ல வளையல் போட.. அதுக்கு அப்றம் கண்ணனோட அப்பா வளையல் போட போறாங்க... அவரு கண்ணாடி வளையல் போட்டுவிடாம தங்கவளையல் போட்டுவிட்டு...
தேவராசு: நல்லா இரு மா.... உன் மனசுக்கு எல்லாம் நல்லாதாவே நடக்கும்...
தாரா: தங்கவளையல் ஏன் மாமா வாங்குனீங்க... எதுக்கு மாமா செலவு...
தேவராசு: அம்மாடி உங்களுக்கு பண்ணாம யாருக்கு மா பண்ண போற... ஏதோ எனக்கு புடுச்ச டிசைன் எடுத்துட்டேன்... உனக்கு டிசைன் பிடிக்கலனா மாத்திக்கோ...
தாரா: டிசைன் ரொம்ப பிடுச்சு இருக்கு மாமா... (அடுத்து தாராவோட அப்பா வந்து அவரும் தங்கவளையல் போட்டுவிட்டு விட்றாரு) அப்பா நீயுமா...????
கிருஷ்ணராசு: என் தங்கத்துக்கு கை முழுக்க தங்க வளையல் போட்டு விடனும்னு தான் இருக்கு ஆனா கண்ணாடி வளையல் போட்றதுதான் சம்பர்தாயம் அதான் ரெண்டு மட்டும் போட்டு விட்ற...
தாரா: 😊😊 நல்லா இருக்கு பா... (அடுத்து ராம் வந்து அவனும் தங்க வளையல் போட்டு விட்றான்) அண்ணா நீயுமா டா 😳???
ராம்: ஈஈஈஈ எல்லாரும் ப்ளான் பண்ணிதான் வாங்குனோம் 😂😂😂... எப்டி இருக்கு??? ..
தாரா: செம டா😍😍 ஒரே சர்ப்ரைஸ்ஸா இருக்கு....
ராம்: உன் கல்யாணத்துக்கு போட வேண்டியது... அவசர அவசரமா கல்யாணம் பண்ணனால எதுவும் பண்ண முடியல.. ஆனா இப்போ 7 மாசமா சேவிங்ஸ் வெச்சு வாங்கினேன்...
தாரா: சூப்பர் டா.... ஏன் இவ்லோ செலவு😞
ராம்: போ டி... நானே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒத்த தங்கச்சிய வெச்சுருக்கன் இதுகூட பண்ணாமையா... நான் தாய்மாமனாக்கும்... நெரையா சீர் செய்வேன்... நீ ஒன்னும் சொல்லகூடாது.... இது என்னோட உரிமை...
தாரா: சரி டா சரி😊😊
கார்த்தி: சாரிக்கா 😞 நானும் வேலைக்கு போயி உனக்கு வளையல் வாங்கி தரன்...
தாரா: டேய் வளையல் வேண்டாம் டா... ஜிமிக்கி வாங்கி தா 😂😂 ஈஈஈஈ
கார்த்தி: 😂😂 சரி சரி... (எல்லாரும் வளையல் போட்டு முடிக்க கண்ணன் தான் கடைசியா வரான்)
தாராகிட்ட வந்து "நியாபகம் 😍 இருக்கா" னு கேக்கறான்... (Part 15 pathi kekkaran) அதுக்கு தாரா "ம்ம்ம்ம் இருக்கு" னு சொல்லுறா... மொதல்ல சந்தனத்த எடுத்து பூசி விட்டுட்டு நெத்தீல குங்குமம் வெச்சுவிட்றான்... அப்றம் பூ எடுத்து அவமேல போட்டுவிட்டு கண்ணாடி வளையல் எடுத்து போட்டுவிட்றான்...
கீர்த்தி: அண்ணா என்ன எல்லாரும் தங்கவளையல் போட்றாங்க நீங்க ஒன்னும் போடல...
கண்ணன்: 😊 இந்த ஒரு டைம் எல்லாரும் கலக்கட்டும்னு விட்டுக்குடுத்துட்டேன்...
கீர்த்தி: ம்ம்ம்ம் சூப்பர்....
கண்ணன்: எனக்கு தான் எல்லாரு மேலையும் கோவம் 👿 (எல்லாரும் அவனையே பாக்க) பின்ன என்ன பா.. எனக்கும் தான் பையன் வரப்போறான் 😂 என்ன யாரும் கண்டுக்கவே இல்ல😞... அவ அம்மானா நான் அப்பா😞😞 (சோகமா இருக்க மாதிரி மொகத்த வெச்சுட்டு சொல்லறான்)
கீர்த்தி: அவ்லோ தானு அண்ணா விடுங்க .... டேய் கார்த்தி அந்த சந்தனத்த எடுத்து பூசு டா...
கண்ணன்: ஹேய் எனக்கெல்லா வேண்டா கம்முனு இரு... (ராம் கண்ணன தொரத்த,, கண்ணனும் ஓட கார்த்தி எதிர்ல வந்து அவன் முகம் முழுக்க சந்தனம் பூசிவிட்டுட்டான்)
எல்லாரும் சாப்ட்டு முடுச்சுட்டு கெலம்ப ரேனு, தாராகிட்ட...
ரேனு: எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆக போகுது டி....
தாரா: சூப்பர் டி... எப்போ மேரேஜ்,, யாரு மாப்ல....
ரேனு: நவம்பர்ல மேரேஜ் டி... சரவணன் இருக்கான்ல அவன் தான்... (ரேனுவோட சொந்தக்காரப்பையன்,,)
தாரா: சரி டி...😊.... நீ நல்லா இருந்தா அதுவே போதும் டி.... (அப்போ சரியா கண்ணன் வர) ஹேய் நம்ம ரேனுக்கு கல்யாணம் டா... சரவணன் தான் மாப்ளையாம்....
கண்ணன்: யாரு எங்க அண்ணா பிரண்ட் அந்த அண்ணாவா... (ரொம்ப பிரண்ட்ஸ் இல்ல சும்மா பேர் மட்டும் தெறியும் போட்டோல பாத்துருக்கான் அவ்லோ தான்)
தாரா: அதே அண்ணா தான்....
ரேனு: தாரா எனக்கு பயமா இருக்கு டி..
தாரா: என்ன டி பயம்??
ரேனு: என் வீடியோ மேட்டர் தெறியாது இன்னும்... நான் இன்னும் சொல்லல... சொன்னா கல்யாணமே நின்னுருமோனு பயமா இருக்கு... பேசாம சொல்லாம விட்டுறட்டா...
கண்ணன்: இல்ல ரேனு வேண்டா... எதா இருந்தாலும் மறைக்ககூடாது...
ரேனு: சொன்னா கல்யாணமே நடக்காது😞
கண்ணன்: பொய் சொல்லி மறச்சு கல்யாணம் பண்ணகூடாது... அந்த அண்ணாவ நேருல மீட் பண்ணி எல்லாமே சொல்லீரு...
ரேனு: பயமா இருக்கு கண்ணா...
தாரா: சரி அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு டின்னர்க்கு கூப்டு எல்லாத்தையும் சொல்லீறலாம் டி... எங்கனாலதான் உனக்கு இவ்லோ கஷ்டம்.. நாங்கதான் இத பேசி சரி பண்ணனும்...
ரேனு: இல்ல டி... நான் நம்ம பிரண்ட்ஸ் கிட்ட சொல்லீட்டனுதான் அவளுக்கு கோவம் வந்துது...
கண்ணன்: இல்ல நான் திட்டுனநாலதான் கோவம் வந்துது...
தாரா: இப்போ கோவம் ஏன் வந்துதுனு முக்கியம் இல்ல... இத எப்டி சால்வ் பண்றதுகறது தான் முக்கியம்...
கண்ணன்: நீ வர சொல்லு ரேனு... எல்லாத்தையும் சொல்லீறலாம்...
ரேனு: ம்ம்ம்ம் சரி... நான் போய்ட்டு வர.. ஒடம்ப பாத்துக்கோ டி... கண்ணா பாத்துக்கோ டா இவள...
தாரா: சரி டி நீயும் பாத்து போ.. போனதும் மெசேஜ் பண்ணு...
ரேனு: சரி பாய்...
அடுத்து வந்த வாரத்துல சரவணன வீட்டுக்கு கூப்டு எல்லா உண்மையும் சொல்லீட்டாங்க.... சரவணனும் சூல்நிலைய புறுஞ்சுகிட்டாங்க... "இனி ரேனு என் பொருப்பு,,," னு சொல்லவும் பெரிய குட்றஉணர்ச்சி போயிட்டதப்போல இருந்துது கண்ணனுக்கு...
கொஞ்சம் வேகமான மியூசிக் கேக்கும்போது , மேக்ஸ் பாக்குபோது, வீட்ல யாராவ்து சத்தியமா பேசும்போதுலாம் கொழந்த வயித்துல நல்லா உதைக்கும்... அடிக்கடி கொழந்த உதைக்கும் போது கண்ணனோட கைய வெச்சு "அம்மாவ ரொம்ப உதைக்கக்கூடாதுங்க அம்மாக்கு வலிக்கும்" னு சொன்னா அமைதியாகீரும்....
கண்ணனப்போலவே பிரியாணி நல்லா சாப்பிடுவான் போல 😂😂 வீட்ல பிரியாணி சமச்சாமட்டும் ஓயாம உதைவிழும்...
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro