பகுதி 48
கண்ணன் சைனாக்கு போன மூனாவது நாள் தாராக்கு பிறந்தநாள். கல்யாணம் முடுஞ்சு வர முதல் பிறந்தநாள், ஆனா கண்ணன் தாராகூட இல்ல... எப்பவும் போல கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு கீர்த்தி, தாரா ப்ளான் போட்டு இருந்தாங்க...
நைட் கண்ணன் வீஷ் பண்ண கால் பண்றா ஆனா தாரா தூங்கீட்டா எழுந்திரிக்கவே இல்ல... காலைல 6மணிக்கு தாராக்கு போன் வருது.. அவ எடுத்து பேசுறா...
கண்ணன்: பொண்டாட்டி😍😍
தாரா: சொல்லு டா😊...
கண்ணன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டி... ஹாப்பி பர்த் டே..
தாரா: தேன்க் யூ டா...
கண்ணன்: அப்றம் என்ன ப்ளான் இன்னைக்கு??
தாரா: சும்மா கோவிலுக்கு தான் போகனு டா...
கண்ணன்: நம்ம மேரேஜ்க்கு அப்றம் வர பர்ஸ்ட் பர்த் டே.... சாரி டி...
தாரா: பரவால டா....
கண்ணன்: கண்ண மூடு தாரா...
தாரா: ஏன்???
கண்ணன்: ஷ்ஷ்ஷ் நான் சொல்லறத கர்பணை பண்ணு..
தாரா: ம்ம்ம்ம்...
கண்ணன்: உண்மையாவே நீ எனக்குனு பெறந்த தேவதை டி... உனக்கு எனக்கு சரியா 10 மாசம் தான் வித்தியாசம்... நான் இந்த உலகத்துக்கு வந்ததும் என் தேவதை அவளோட அம்மா கிட்ட வந்து 10 மாசம் வளந்து எனக்காக பிறந்த நாள் இது.. ஐ லவ் யூ....
தாரா: (கண்ண மூடிகிட்டே) ம்ம்ம்ம்😊
கண்ணன்: உன்ன கிஸ் பண்ணனும்னு தோனுது... உனக்காக..... உன்கிட்ட வந்துட்டேன்...
தாரா: அப்டியா சரி சரி..😊
கண்ணன்: நா மட்டு இப்போ உன்கிட்ட இருந்தனு வை😍😍
தாரா: இருந்தா???
கண்ணன்: உன் இடுப்புல கை வெச்சு..
தாரா: கண்ணா.... போதும்.... நா ரெடி ஆகற...
கண்ணன்: வெக்கமா??? உன் தலைய புடுச்சு...
தாரா: டேய் ஆரமுச்சுட்டாயா நா போன் வெக்கற...
கண்ணன்: உன் லிப்ஸ்ல ஒரு...
தாரா: ச்சீ பொருக்கி... ( தாரா கண்ண தெறக்க அங்க கண்ணன் அவகிட்ட சொன்ன மாதிரி வந்து கிஸ் பண்ண அவ கைல இருந்த போன் கீழ விழுந்ததும் தான் சுயநினைவுக்கு வரா)
கீழ விழுந்த போன்ன எடுத்து காதுல வெக்க..
கண்ணன்: கிஸ் பண்ணிகிட்டே போன கீழ போட்ட போல😂....
தாரா: அப்டியெல்லா ஒன்னு இல்ல..
கண்ணன்: தாரா இப்போ பாத் ரூம்க்கு உள்ள போ.. மேல செல்ப் மேல ஒரு பாக்ஸ் இருக்கு அத ஓபன் பண்ணி பாரு...
தாரா: ம்ம்ம்ம்.. வைட்...
அங்க போயி அத ஓபன் பண்ணி பாக்க அதுல நீலக்கலர்ல அழகா ஒரு சேரி..
கண்ணன்: எப்டி இருக்கு??
தாரா: சூப்பர் டா...
கண்ணன்: ம்ம்ம்ம் சீக்கரம் குளுச்சுட்டு வந்து இந்த சேரி கட்டு.. அதுல உள்ளையே ப்ளவ்ஸ் தெச்சது இருக்கு.. சோ சீக்கரம் கெட் ரெடி.. கால் பண்ணு.
தாரா: சரி டா...
குளுச்சுமுடுச்சு வந்து தலை காய வெக்கும் போது போன் வர...
தாரா: சேரி புடுச்சுருக்கு... 😍
கண்ணன்: சரிங்க மேடம்... என் கபோர்ட ஓபன் பண்ணி அதுக்குள்ள ஒரு பாக்ஸ் இருக்கு அத எடுத்து பாரு..
தாரா: 😍😍😍 ம்ம்ம்ம் வைட்
வேகமா போயி அத பாக்க அதுல ஒரு தங்க வளையல் அப்றம் அந்த ட்ரஸ்க்கு மேட்ச்சா எல்லா அழகு சாதனமும் இருக்கு...
கண்ணன்: வளையல் கைல போடு... (தாரா கைல போட) ஓகே வா??
தாரா: அழகா இருக்கு......
கண்ணன்: சரி போயி மேக்கப் பண்ணு... அப்றம் கால் பண்ற..
தாரா: ம்ம்ம்ம் 😊😊...
சரியா அவ தலைசீவி முடிக்க போன் வருது...
கண்ணன்: பொண்டாட்டி சீக்கரம் போயி நம்ம வீட்டு கதவுகிட்ட இருக்க கவர் எடுத்துட்டு வா...
தாரா: ஓகே....
அதுல 2 மொலம் மல்லிகை, ஒரு சிகப்பு ரோஜா... (பூக்கார பாட்டிக்கு போன் பண்ணி குடுக்க சொல்லீருக்கா)
கண்ணன்: பூ வெச்சுக்கோ இன்னும் அழகா இருப்ப....
தாரா: எதுக்கு டா இவ்லோ பூ...
கண்ணன்: நீலமான உன்னோட முடிய பின்னி அதுல அருவி மாதிரி 2 மொலம் மல்லிகைப்பூ வெச்சா இவ்லோ நல்லா இருக்கும் தெறியுமா??😍😍
தாரா: என்ன சார் ரொம்ப சர்ப்ரைஸ் குடுக்கறீங்க...
கண்ணன்: அதெல்லா அப்டி தா...
(காலிங்பெல் அடிக்க)
தாரா: பொரு டா யாரோ வந்துருக்காங்க..
கண்ணன்: உனக்கு ஒரு பார்சல் பேபி.. அத வாங்கிக்கோ...
தாரா போயி அத வாங்கி பிருச்சு பாக்க அதுல 1 கிலோ ஐஸ்கிரீம் கேக் ❤️ அதுல தாரா பேரு இருக்கு...
தாரா: ஐஐஐஐ கேக்கு....
கண்ணன்: உனக்கு தா.... சரி கீர்த்தி கூட முருகார் கோயிலுக்கு போ...
தாரா: சரி டா.....
கீர்த்தி, தாரா , தாராவோட அம்மா,கார்த்தி, ராம் எல்லாரும் கோயிலுக்கு போக... அங்க தாரா பேருல சிறப்பு பூஜைக்கு கண்ணன் ஏற்பாடு பண்ணீருந்தான்... எல்லாரும் சாமி கும்புட்டு முடுச்சுட்டு போகும் போது கீர்த்தி தாராவ டேன்ஸ் க்ளாஸ்க்கு கூப்ட்டுட்டு போயி அங்க கேக் கட் பண்றாங்க...
எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு சர்ப்ரைஸ் குடுத்து அந்த நாளே நல்லா போச்சு.. நைட் கண்ணன் போன் பண்றா...
தாரா: சாப்டயா டா....
கண்ணன்: ம்ம்ம்ம்.. நீ..
தாரா: சாப்ட... அப்றம் கண்ணா தேக்ஸ்...
கண்ணன்: எனக்கு தேக்ஸ்லா வேண்டா...
தாரா: அப்றம் வேற என்ன வேணும்??
கண்ணன்: மொத்தமா ஊருக்கு வந்து வாங்கிக்கற.... ஹேய் உனக்கு எந்த கிப்ட் பிடுச்சுது??
தாரா: எனக்கு கடவுள் குடுத்த கிப்ட் தா பிடுச்சுது....
கண்ணன்: என்ன கிப்ட்??
தாரா: போன வருசம் என் பிறந்தநாளுக்கு நீ என்கூட இல்ல.. இந்த வருசம் கடவுள் உன்ன எனக்கு குடுத்துருக்காரு... இதுதா எனக்கு பிடுச்ச கிப்ட்... விலைமதிப்பு இல்லாத உயிருள்ள ஒரு கிப்ட்... இது போது எனக்கு....
கண்ணன்: ஓஓஓஓ அப்போ நானும் இதே மாதிரி உயிருள்ள ஒரு கிப்ட் குடுக்கட்டா உனக்கு😘😝...
தாரா: நீ எப்டி டா குடுப்ப... எனக்கு புரியல... என்ன கிப்ட்??
கண்ணன்: பேபி😘....
தாரா: 🙈🙈 போது போது நா போன் வெக்கற பாய்....
கண்ணன்: ஐ லவ் யூ...
தாரா: லவ் யூ.... (10seconds kaluchu) டேய் கண்ணா...
கண்ணன்: சொல்லு டி...
தாரா: உம்மாாாா.....😘😘
கண்ணன்: 😍😍 நாளைக்கே வந்தரட்டா....
தாரா: லூசூ லூசூ போது வேலைய பாரு... குட் நைட்...
கண்ணன்: ம்ம்ம்ம்😢 குட் நைட்..
நாட்கள் நகற 1 மாசம் ஆகீருக்க... தாரா அம்மா ஆகப்போறானு தெறிய வருது.. கண்ணுக்கு இத சொல்ல போன் பண்ணா ஆனா கண்ணன் வேலை காரணமா போன் எடுக்கல .. 2 நாள் போன் எடுக்கல தாரா மெசேஜ் பண்றா...
தாரா: கண்ணா ரொம்ப வேலையா??(காலை 10 மணி)
நைட் 11 மணி...
கண்ணன்: ரொம்ப வேல டி முடியல😢😢
தாரா: உன்கிட்ட ஒன்னு சொல்லனும்... கொஞ்சம் பேசலாமா?? போன் பண்ணு டா....
கண்ணன்: தூக்கம் வருது டி... மெசேஜ்ல சொல்லு நா மார்னிங் பாத்துக்கற பாய்... குட் நைட்...
(கண்ணன் தூங்கீட்டா)
தாரா: கண்ணா குட்டி கண்ணன் வரப்போறா... 45 நாளுக்கு மேல ஆச்சூ... உன்கிட்ட போன்ல சொல்லலாம்னு தா கால் பண்ண.. பரவால டா ரெஸ்ட் எடு... நல்லா சாப்டு... குட் நைட்...
காலைல 3மணிக்கு தூக்கம் தெளுஞ்ச கண்ணன் அந்த மெசேஜ் பாத்து.. அதுக்கு ரிப்ளே பண்றா...
கண்ணன்: எனக்கு உன்ன இப்பவே பாக்கனு .....(அடுத்த நிமிசம்)
தாரா: எனக்கும் தா... கேன் யூ கால் மி நௌ (காலை 3.05 )
கண்ணன் போன் பண்ண...
கண்ணன்: தூங்கலையா???
தாரா: இல்ல .... ரொம்ப சந்தோசமா இருக்கு டா...
கண்ணன்: எனக்கும் தா.... நா சொன்னல உன் பர்த் டே கிப்ட்னு எப்டி... ஆதா ஊருக்கு போறதுக்கு முன்னாடியே குடுத்துட்டு போன...
தாரா: 🙈🙈🙈 சரி சரி...
கண்ணன்: இந்த கிப்ட் எப்டி டி செல்லம்??
தாரா: ம்ம்ம்ம் நல்லா கிப்ட் தா... ஆமா எப்டி அந்த சேரிலா வெச்ச...
கண்ணன்: எல்லாமே ஊருக்கு போறதுக்கு முன்னாடியே ப்ளான் பண்ணி வாங்கி வெச்சுட்டு தா போன...
தாரா: கண்ணா...
கண்ணன்: ஏன் டா???
தாரா: பயமா இருக்கு?? இந்த பேபிய நான் சரியா இந்த உலகத்துக்கு கொன்டு வருவனா???
கண்ணன்: கண்டிப்பா டி செல்லம்... நா சீக்கரம் வந்தற ஓகே வா.. இப்போ தூங்கு போ...
தாரா: ம்ம்ம்ம்...
ஒவ்வொரு நாளும் அழகா கொஞ்சம் பிரிவு வலியோட நகற... தாராக்கு ரொம்ப கண்ணன் ஞாபகத்துல நைட் மட்டு பயந்து அழுகறா.... இந்த கொழந்தைய சரியா பெத்து எடுக்கனும்னு ரொம்ப கவனமா இருக்கா...
டேன்ஸ் க்ளாஸ்க்கு லீவ் விட்டுட்டா... வேகமா கூட நடக்காம இருந்தா.. டாக்டர் எவ்லோ ஊசி😢 போட்டாலும் கொழந்தைக்காக பொருத்துகிட்டா... எந்த குரும்பும் பண்ணாம அமைதியா சாப்டா....
3 மாசம் முடுஞ்சுது... விடுஞ்சா கண்ணன் இந்தியா வரா .. ஆவலா அவன பாக்க காத்துருக்கா....
எல்லாரும் ஏர்போட் போக தாரா மட்டு வீட்ல இருக்கா... கண்ணன் தா ட்ரேவல் பண்ண வேண்டானு சொல்லீருந்தான்..
கைல கிப்ட்ஸ், கண்ணல ஒரு துளி கண்ணீர், மனசுல ஒரு ஏக்கம் எல்லாமும் கலந்து கண்ணன் காலிங்பெல் அடிக்க... உள்ள இருந்து தாரா கதவ தெறக்க ..
Thak you so much friends... Evlo naal wait pannathukku romba nandri....Sorry for late update ....
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro