பகுதி 46 😍
குளுச்சுமுடுச்சு எல்லாரும் கோயிலுக்கு ரெடி ஆக... 6.30மணிக்கு மேளம், தாளத்தோட மொலப்பாரி ஊர்வலம் போகறாங்க... தாரா, கீர்த்தி ரெண்டு பேரும் அவங்க குடும்பம் சார்பா ஊர்வலத்துல மொலப்பாரி எடுத்துட்டு வர.. கண்ணனும், ராமும் வெச்ச கண்ணு வாங்காம அவங்க அவங்க தேவதைகள சைட் அடிக்க ஊர்வலம் சிறப்பா நடந்துது..
அதுல நம்ம கார்த்தி ஊர்வலத்துல மது இருக்காலானு தேடிக்கிட்டே வரான்... கார்த்தி யாரையோ தேடுரான்னு தாராக்கு நல்லா தெருஞ்சுது... கீர்த்திக்கு சைகை காட்டி கார்த்திய பாக்க சொல்ல அவளும் கார்த்திய பாத்தா... கண்ணாலையே கண்ணனையும், ராமையும் கார்த்திய பாக்க சொல்ல இப்போ எல்லாரு கண்ணும் கார்த்தி மேல...
கார்த்தி மதுவ எதிர் பாத்துட்டு நகத்த கடிக்கறான், வாட்ச்ச பாக்கறான், சட்டைல கைய மடுச்சு விட்றதும், தலைல கோதறதும்.... அவன் சைகைவயே ஏதோ ஒரு படபடப்பு தெறிய அத எல்லாரும் கண்டு புடுச்சுட்டாங்க.... ஊர்வலத்துல தூரத்துல மது அவங்க அம்மாகூட கைல மொலப்பாரியோட வர....
கார்த்தி அவள பாத்து அனியாயத்துக்கு வெட்க்கப்பட்றான்... இன்னும் மது அந்த லெட்டர்க்கு எந்த பதிலும் சொல்ல... ஆனா கார்த்திக்கு அவனோட காதல சொன்னதே பெரிய சாதன பண்ண மாதிரி இருந்துச்சு.. கார்த்தி மதுவையே வெச்ச😍 கண்ணு வாங்காம பாக்க... மது அவன 👿 நல்லா மொறச்சா... அத இவங்க நாலு பேரும் நோட் பண்ணீட்டு தான் இருந்தாங்க...
ஆத்தங்கரைல மொலப்பாரி விட்டுட்டு எல்லாரும் சாமி கும்புட்டு முடுச்ச அடுத்த நிமிசம் ராமும், கண்ணனும் கார்த்திய கோவிலுக்கு பக்கத்துல இருந்த தோட்டத்துள்ள 😂 இழுத்துட்டு போக அங்க தாராவும், கீர்த்தியும் வைட் பண்ணீட்டு இருந்தாங்க...
கார்த்தி: அண்ணா ஏன் இங்க கூப்ட்டுட்டு வந்தீங்க??? எதாவ்து ப்ராப்ளமா???
கண்ணன்: உனக்கு என்ன டா ப்ராப்ளம்,, அத மொதல்ல சொல்லு??
கார்த்தி: எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லையே... நா சூப்பரா இருக்க..
ராம்: யாரையாவ்து லவ் பண்றயா டா??
கார்த்தி: ஐயோ அண்ணா லவ்வா... நானா..... நா ரொம்ப கொழந்தப்பையன்...
கீர்த்தி: யாரு நீயா டா??? நம்பீட்ட....நம்பீட்ட..,
கார்த்தி: லவ்வெல்லா இல்ல கா... நா லவ் பண்ணா கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லீருவ...
கண்ணன்: தாரா இவன் சரிப்பட்டு வரமாட்ட... உன் ஸ்டைல்ல கேளு மா..
தாரா: கார்த்தி...
கார்த்தி: ஏன் கா??
தாரா: நீ அக்காட்ட பொய் சொல்லுவயா ... டா ...
கார்த்தி: சொல்ல மாட்ட கா...
தாரா: நா உன்கிட்ட எதாவ்து விஷயத்த மறச்சு இருக்கனா டா??
கார்த்தி: இல்ல தாராக்கா... நீ எல்லாமே என்கிட்ட சொல்லீருவ... உனக்கு என்மேல அவ்லோ பாசம்..
தாரா: ஆனா உனக்கு என்மேல பாசம் இல்லையே டா....
கார்த்தி: இருக்கு கா... எனக்கு எங்க அப்பா,அம்மாவ விட உன்ன தா ரொம்ப புடிக்கும்...
தாரா: மதுவ லவ் பண்றயா??
கார்த்தி: ........
கண்ணன்: சொல்லு டா... லவ் பண்றயா???
கார்த்தி: .......
ராம்: சொல்லு டா,,, எங்களுக்கு பொன்னு பாக்கறவேல மிச்சம் ...
கீர்த்தி: பயப்படாம சொல்லு டா..
கார்த்தி: ஆமா.... லவ் பண்ற...
தாரா: எப்போல இருந்து...
கார்த்தி: LKG ல இருந்து...
எல்லாரும் கோரஸ்ஸா "வ்வாட்" னு கேக்க....
தாரா: உன் லவ் ஸ்ட்டோரிய சொல்லு கொஞ்சம் கேப்போம்... எப்டி டா... கொழந்தல இருந்து என்கூட தானு இருந்த... இதெல்லா எப்போ பீல் ஆச்சூ..
கார்த்தி: பீல் ஆச்சூ கா அது ஒரு பெரிய கத...
கண்ணன்: சொல்லு டா.... சீக்கரம்..
கார்த்தி கத சொல்லறான் வாங்க எல்லாரும் கத கேப்போம்...
""அப்போ நா LKG படுச்சுட்டு இருந்த....எல்லா கொழந்தைங்க மாதிரி நானும் ஸ்கூல் போக மாட்டனு அழுதுட்டே போன... தாராக்கா அப்போ 4வது படுச்சுட்டு இருந்தா... டெய்லியும் என்ன க்ளேஸ் வரைக்கு கொண்டு வந்து விட்டுட்டு தான் அக்கா க்ளாஸ்க்கு போவா... எனக்கு அப்போலா மதுவ தெறியாது.. அவளும் என் க்ளாஸ் தான்...
ஒரு நாள் ப்ரேக்ல நா பிஸ்கட் சாப்ட்டுட்டு இருந்த... என் க்ளாஸ்ல நவனீதன் னு ஒரு பையன் இருந்தா.. அவன் என்னோட பிஸ்கட்ட புடுங்கீட்டு என்ன கொட்டி வெச்சுட்டான்... நா உட்காந்து அழுதுகுட்டு இருந்த.. அப்போ மது என் தோள்மேல கை வெச்சு...
மது: நீ ஏன் அழுகற?? வீட்டுக்கு போகனுமா?? மம்மி வேணுமா...
கார்த்தி: இல்ல 😭😭😭..
மது: அப்றம் ஏன் அழுகற?? கீழ விழுந்துட்டயா...
கார்த்தி: 😭😭😭
மது: நீ எங்க விழுந்தனு சொல்லு நா போயி அந்த எடத்த கிள்ளி வெச்சுட்டு வந்தர..
கார்த்தி: இல்ல நா ஒன்னும் கீழ விழுகல.. நவனீதன் என்னோட பிஸ்கட்ட புடுங்கீட்டு என்ன கொட்டி வெச்சுட்டான்😭😭😭
மது: இதுக்கு ஏன் அழுகற... (அவ பேக்ல இருந்து முருக்கு எடுத்து கார்த்திக்கு பாதி பிச்சுகுடுத்து) இந்தா இத சாப்டு .. எங்க மம்மி பண்ணாங்க.. சூப்பரா இருக்கும்....
கார்த்தி: (அதவாங்கி சாப்ட்டுட்டு) ம்ம்ம்ம் சூப்பரா இருக்கு... நாளைக்கும் கொண்டு வா பா....
மது: 😊😊 சரி.... நீ அழுகாத...
கார்த்தி: 😭😭 அவன் என்ன கொட்டி வெச்சுட்டான் வலிக்குது... (தலைல தடவிகிட்டே அழுகறா)
மது: அழுகாத அவன் யாருனு மட்டு காட்டு.. நா அவன கொட்டி வெக்கற.. (கார்த்தி கைய புடுச்சு க்ளாஸ்க்குள்ள இழுத்துட்டு போறா) எவன் டா அது ஏஏன்னோட (என்னோட😊) ப்ரண்ட கொட்டுனது...
கார்த்தி: (நவனீதன காட்டி) இவன் தான் பா... என்ன கொட்டி வெச்சா...
மது நவனீதன கிள்ளி வெச்சு, கொட்டீட்டா.. அப்றம் அவன் மிஸ்கிட்ட அழுதுட்டே சொல்லிகுடுத்துட்டான்.. அப்றம் மிஸ் எங்க ரெண்டு பேரையும் வெளிய நிக்க வெச்சாங்க..
மது: ஹேய் உன் பேர் என்ன??
கார்த்தி: எஸ். கார்த்தி, LKG - B😊... உன் பேரென்ன??
மது: கே. மதுமித்ரா, LKG - B😊......
கார்த்தி: ஐஐஐ நம்ம ரெண்டு பேரும் LKG - B😊... இனி நம்ம ப்ரண்ட்ஸ்..
மது: ம்ம்ம்ம் இனி நம்ம ஒட்டுக்கா உட்காந்து சாப்டலா...
கார்த்தி: சரி...பா😊...
அப்போ ப்ரண்ட்ஸ் ஆனா நாங்க டெய்லியும் ஒன்னாதான் சாப்டுவோம், மிஸ் கிட்ட ஒன்னாதான் மாட்டுவோம் ஒரு நாள் மது லீவ் போட்டாகூட எனக்கு அழுகையா வரும்.. அவள யாராவ்து எதாவ்து சொல்லீட்டா நா அடிக்கப்போயிருவேன்.... அப்போலா எனக்கு தெறியல நா அவள இவ்லோ லவ் பண்றனானு... 4வது வரைக்கும் ஒன்னா படுச்சோம்... அப்போ க்ளாஸ்ல பசங்களுக்கும், பொன்னுகளுக்கும் சண்ட வந்துச்சு.... அப்போ எல்லாரையும் க்ளாஸ் மாத்தீட்டாங்க.. அதுல இருந்து மது என்கூட சரியா பேசவே இல்ல....
நா போயி பேசுனாலும் அவ என்கிட்ட பேசல... நானும் கொஞ்ச நாள்ள அவகிட்ட பேசறத நிருத்தீட்ட... ஆனா அவள ஒரு நாள் கூட பாக்காம இருந்ததே இல்ல.. அப்றம் ஒவ்வொரு க்ளாஸ்ஸா மேல போக போக அவ என்ன பாக்கறதகூட விட்டுட்டா... எனக்கு அத தாங்கிக்கவே முடியல.. ஸ்கூல்க்கே போகமாட்டனு நெரையா டைம் அழுதுருக்க... தாராக்கா தா திட்டீ ஸ்கூல்க்கு கூப்ட்டுட்டு போவா...
ஒரு கட்டத்துக்கு மேல என்னால அவள பாக்காம இருக்கவே முடியல அப்போதா புருஞ்சுது இது காதல் னு... 10, +1, +2 க்கு அவ அக்காகிட்ட டியூசன் வருவா... டெய்லியும் அவள பக்கத்துல இருந்து பாத்த... அப்றம் அவ சென்னைல தான் காலேஜ் போவானு விசாருச்சு நானும் சேம் காலேஜ் போனா... தினமும் அவள பாப்ப... எனக்கு தெறுஞ்சு 15 வருசமா நா அவள பாக்கத நாள் ரொம்ப ரொம்ப கம்மி ... நா அவளதா பாக்கறனு அவளுக்கே தெறியாது...""
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கண்ணன்: டேய் காதல்மன்னா 😍 செம டா...
ராம்: ச்சே பையன் என்னமா லவ் பண்ணீருக்கான்..
கீர்த்தி: ஏன் டா உனக்கு வயசே 18 தானு டா ஆகுது... இதுல 15வருசமா லவ்வா... எப்பா சாமி முடியல டா..
தாரா: 👿👿 அப்போ நீ எனக்காக சென்னைக்கு வரல?? மதுக்காக தான் வந்த???
கார்த்தி: இல்ல தாராக்கா... ரெண்டு பேருக்காகவும் தான் வந்த ..
தாரா: நம்பீட்ட டா...... சரி எப்போ லவ்வ சொல்லபோற....
கார்த்தி: அதெல்லா சொல்லி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சூ கா...
தாரா: இது எப்போ டா நடந்துது...
கண்ணன்: மது என்ன சொன்னா டா..?
கார்த்தி காலேஜ் நடந்த எல்லாத்தையும் சொல்ல எல்லாரும் ஆச்சர்யத்துல வாய்மேல கை வெச்சுட்டாங்க... அப்றம் கொஞ்ச நேரம் பேசீட்டு ஆத்தங்கரைல போயி பொங்கல் வெக்கறாங்க... சாமிக்கு பொங்கல் படச்சுட்டு எல்லாரும் பொங்கல் சாப்டுட்டு இருக்கும் போது தாரா மட்டும் காணோம்..
கண்ணன் அவள தேடிப்பாக்க கோவில் முழுசும் தேடுறான் எங்கையும் அவள காணோம்.. கோவிலுக்கு வெளிய வந்து தாராவ தேடிகிட்டு வரான்... அப்போ தாரா ஒரு மரத்துகிட்ட நின்னு அந்த மரத்துல தொட்டில் கட்டிவிட்டுட்டு இருந்தா,,, அத பாத்த கண்ணன் அங்க போக..
கண்ணன்: ஹேய் இங்க என்ன டி பண்ற??? மரத்துல என்ன பண்ற??
தாரா: (தாரா கண்ணு கலங்க) இல்ல டா... இந்த மரத்துல தொட்டில் கட்டிவிட்டுட்டு கொழந்த வேணும்னு ப்ரே பண்ணா சீக்கரம் கொழந்த கொடைக்குமாம் பாட்டி சொன்னாங்க..
கண்ணன்: ம்ச்ச் தாரா... கண்ண தொட டா.... சாமிகிட்ட ப்ரே பண்ணீட்டல எல்லா நல்லதே நடக்கும் வா போலாம்.. தேடுவாங்க...
தாரா: கண்ணா....
கண்ணன்: ஏன் டா??
தாரா: பயமா இருக்கு...
கண்ணன்: என்ன பயம்???
தாரா: இல்ல டா ஒவ்வொருத்தருக்கு மொதல் கொழந்த போனா... அப்றம் கொழந்த கெடைக்க லேட் ஆகும்,, சிலருக்கு கெடை....(தாரா வாய்ல ஒரு விரலால அடச்சு)
கண்ணன்: கண்டிப்பா கெடைக்கும் டா 😊....
தாரா: ஒருவேல நமக்கு பேபியே வரலன்னா... நீ வேற பொன்ன கல்யாணம் பண்ணிக்குவயா டா..
கண்ணன்: ஆமா இதுல என்ன கேள்வி கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவேன் 😊....
தாரா: ம்ம்ம்ம் சரி 😭😭 ... பண்ணிக்கோ...
ஒரு ரெண்டு நிமிசம் தாரா அழுகறத ரசுச்சுட்டு... அவதோள்மேல கை போட்டு....
கண்ணன்: மேடம்..... நா இன்னொரு கல்யாணம் பண்ணி்கட்டா...
தாரா: ம்ம்ம்ம் 😭😭 அதுதா சரி...
கண்ணன்: அப்போ சரி😂😂 இன்னொரு டைம் உனக்கு தாலி கட்டுவேன் ஜாலி😘...
தாரா: வாட்...
கண்ணன்: அட மக்கு இந்த ஜென்மத்துல எனக்கு எத்த கல்யாணம் ஆனாலும் பொன்னு நீ தான் டி😘...
தாரா: ம்ச்ச் கண்ணா 👿 வெளாடாத நா சீரியஸ்ஸா கேக்கற...
கண்ணன்: நானும் 👿 சீரியஸ்ஸா தான் சொல்லற...
தாரா: இல்ல நா சொல்லவரத கேளு கொஞ்சம்... என்மேல தான் தப்பு..
கண்ணன்: நீ ஒன்னும் சொல்லி கிழிக்க வேண்டா.... நீ கிழிச்ச வரைக்கும் போதும் .... கெலம்பு....
தாரா: கண்ணா👿
கண்ணன்: லூசூ எனக்கு நீயே ஒரு கொழந்த தான் டா .... நீயே கொழந்த மாதிரி தான் நடந்துக்கற... எனக்கு கொழந்த இல்லனு பீலே ஆகல... இங்க பாரு டா கொழந்த இல்லனு வேற பொன்ன கல்யாணம் பண்ற ஆளு நா இல்ல.... எனக்கு என் பொண்டாட்டி போதும்..... கொழந்த அது கடவுள் குடுக்கற வரம் ... அது அமையும் போது கண்டிப்பா அமையும்... நீ எதுவும் போட்டு கொழப்பிக்காத
தாரா: ம்ம்ம்ம் சரி....
கண்ணன்: கொஞ்சம் சிரி ..... சிரிச்சா என்ன கொரஞ்சா போயிருவ...
தாரா: ஈஈஈஈஈ 😬😬😬 போதுமா...
கண்ணன்: ஐயோ பாக்கவே முடியல...
😂😂 கண்ணு வலிக்குது...
தாரா: கண்ணாடி போட்டுக்கோ தம்பி😉....
கண்ணன்: சரிங்க அக்கா...
தாரா: அக்கா வா.... பிச்சுப்புடுவன் பிச்சு...
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro