பகுதி 40
ஹாஸ்பிட்டல் போயிட்டு வீட்டுக்கு வந்த ரெண்டு பேரும் சந்தோசமான விஷயத்த எல்லாருகிட்டையும் போன் பண்ணி சொல்லாங்க... வீடே பண்டிகை மாதிரி இருக்கு... ஆனா கண்ணன் மட்டும் எதையோ தொழச்ச மாதிரி அமைதியா இருக்கா... சனிக்கெழம நைட் கீர்த்தி அவசர வேலையா போகவும்,, ராம்,கார்த்தி ஒரு ரூம்லையும்,, கண்ணன்,தாரா ஒரு ரூம்லையும் தூங்கராங்க...
தாரா அசதீல தூங்கீட்டா. ஆனா கண்ணனுக்கு தூக்கம் வரமா தாரா மொகத்தையே பக்கறான்... அவ வயித்துல கை வெச்சு கொழந்தகிட்ட பேசறா...
கண்ணன்: குட்டி😢... இன்னைக்கு அப்பாக்கு தூக்கமே வரல டா... பயமா இருக்கு. அந்த டாக்டர் என்ன ரொம்ப பயப்படுத்தீட்டாங்க டா... அம்மாக்கு ஒடம்புல சக்தியே இல்லயாமா.. அம்மா ரொம்ப பாவம் டா.. எவ்லோ கஷ்டத்த பாத்துட்டா தெறியுமா?? ரொம்ப அழுதுட்டா டா... அம்மாவ கஷ்டப்படுத்தீறாத டா... நா வெளிய இருந்து அம்மாவ பாத்துக்கற நீ அம்மாக்கு உள்ள இருந்து அவள பாத்துக்கோ... நீ பயப்படாத அப்பா நா இருக்க உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆக நா விடமாட்ட..
கொழந்தகிட்ட பேசீட்டு அவனும் தூங்கீட்டா. காலைல தாராக்கு முன்னாடி எந்திருச்சு ஊருல இருக்க பக்கத்துவீட்டு பாட்டிக்கு போன் பண்ணி வயிற்று புண் ஆருறதுக்கு சில உணவுப்பொருள்கள கேட்டு தெறுஞ்சுக்கறா.. நெட்ல நெரையா சர்ச் பண்ணி பாக்கறா... அதுபடி காலைல சாப்பாடு ரெடி பண்றா.. ராம்,கார்த்தி ஞாயிற்றுகெழம நால நல்லா தூங்கீட்டாங்க..
தாரா தூக்கம் தெளுஞ்சு எழுந்து கிட்சன்க்கு வந்ததும் அவளுக்கு கண்ணன் ஒரு டம்டர்ல என்னமோ தரான்..
தாரா: என்ன டா இது... பச்ச கலர்ல இருக்கு...
கண்ணன்: மனத்தக்காளி இலை(சுக்கிட்டி இலைனு சொல்லுவாங்க சிலர்) சாறு டி..
தாரா: ஐஐஐயே 😕... இது எதுக்கு எனக்கு தர...
கண்ணன்: ஒடம்புக்கு நல்லது டா,, டாக்டர் குடுக்கசொன்னாங்க (மனதிற்க்குள்- வயிற்று புண்க்கு சிறந்த மருந்து டி,, பாட்டி வைத்தியம்😊)
தாரா: வேண்டா கண்ணா,,, பாக்கவே ஒரு மாதிரி இருக்கு...
கண்ணன்: பாக்காம ஒரே மொடக்குல வாய்ல ஊத்திக்கோ டா..
தாரா: ப்ளீஸ் கண்ணா...
கண்ணன்: தாரா👿👿
தாரா: குடு குடிக்கற (அத வாங்கி கண்ணமூடி குடுச்சுட்டா).... தள்ளு நா சமைக்கற...
கண்ணன்: இல்ல நா காலைக்கு சமச்சுட்ட...
தாரா: ஓஓஓ அப்டியாங்க சார்... என்ன சமச்சீங்க???
கண்ணன்: திணையரிசி பொங்கல் (ப்ரோட்டின் அதிகம்)... பீட்ரூட் ஜூஸ் (இரத்தம் நல்லா ஊரும்)... சாதம், கருவேப்பிலை சட்னி (இரும்பு சக்தி), மலநெல்லிக்கா தொக்கு ( ப்ளட் கவுன்ட் அதிகம் ஆகும்).. மோர் ( தயிறு அப்டியே சாப்டகூடாது,, மோரா சாப்டாதா புண் ஆரும்).... அவ்லோ தா
தாரா: என்ன டா புது புதுசா சொல்லற... இதெல்லா எங்க பழகுன?
கண்ணன்: YouTubeல பாத்த,,,
தாரா: ஆனா எல்லா வெரைட்டியும் வித்தியாசமா இருக்கு??
கண்ணன்: இந்த மாதிரி டைம்ல வெரைட்டி வெரைட்டியா சாப்டனும்னு தோனுமாமா டா அதா பண்ண (மனதிற்க்குள்- இது எல்லாமே மருத்துவ குண்ம் உள்ள உணவுப்பொருள் இப்போ உனக்கு இந்த மாதிரி சாப்பாடு தா தேவை)
தாரா: ஓகே டா... ஆனா இதெல்லா இப்போ தா நா மொதல் தடவ கேக்கற..
கண்ணன்: இனி எல்லா இப்டிதா😍
தாரா: அண்ணாக்கு, கார்த்திக்கு??
கண்ணன்: அவங்க எழுந்திரிக்கவே 1 மணி ஆகும் டி 😂... எப்பவும் போல மதிய சாப்பாடு தா சாப்டுவாங்க டி..
தாரா: ஆமா டா😂...
கண்ணன்: குளுச்சுட்டு வா சாப்டலா...
தாரா: சரி டா😊
தாரா குளுச்சுட்டு வரவும் கண்ணன் டேபிள்ல ரெடியா உட்காந்துட்டு இருக்கா...
தாரா: பாற்றா... கவனிப்பு பலமா இருக்கு😂😂 இது எனக்கா?? இல்ல பேபிக்கா??
கண்ணன்: உனக்கு தா டா...
தாரா: அப்போ இவ்லோ நாள் ஏன் இப்டி பண்ணல??
கண்ணன்: இஇஇ உங்க ரெண்டு பேருக்கும் தா😂 (மனதிற்க்குள்- இவ்லோ நாள் தெறியல டி நீ இப்டி வீக்கா இருப்பனு)
தாரா: ம்ம்ம்ம் சரி சரி...
தாரா சேர்ல உட்கார வரவும் அவள தூக்கி டேபிள்மேல கொழந்தைய உட்கார வெக்கறமாதிரி உட்காரவெச்சு கண்ணன் பக்கத்துல நின்னு ஊட்டி விட்றா...
தாரா: ஹேய் நா என்ன கொழந்தையா டா... டேபிள்மேல உட்கார வெக்கற... டேபிள் வைட் தாங்காது டா...
கண்ணன்: ஆமா கொழந்த தா எனக்கு நீ😍😍😍... அதெல்லா ஒடையாது பேசாம சாப்டு..
சாப்டு முடுச்சதும் பழம் எடுத்து கட் பண்ணி குடுக்கறா...
தாரா: என்ன டா இப்டிலா பண்ற.... ஓவர் லவ்வா இருக்கு... இது சரி இல்லையே🤔
கண்ணன்: பேபி வரப்போகுதுல அதா டி... பட் பேபியவிட உன்ன தா நா ரொம்ப லவ் பண்ற...
தாரா: அப்டியா நம்பீட்ட... (தண்ணிய கண்ணன்மேல ஊத்த)
கண்ணன்: தண்ணியவா ஊத்தற உன்ன (பழத்த அவமேல கொட்டறான்) தாரா ப்ரூட்ஸ்ல குழுச்சா நல்லதாம் என்ஜாய்😂
தாரா: யாரு டா சொன்னா அப்டீனு..
கண்ணன்: நான்தா 😜 சொல்லற.. (எழுந்து உள்ள ஓடீட்டான்)
மதியம் தாராவ கிட்சன்க்கு விடாம அசைவத்துல எல்லாத்தையும் வாங்கீட்டு வந்து சமைக்கறா... எல்லாரும் சாப்ட உட்காந்ததும் கண்ணன் தாராக்கு ஒரு ப்ளேட்ல மீன், முட்டை எல்லாம் வெச்சு சாப்ட சொல்லறா..
கண்ணன்: சாப்டு தாரா..
தாரா: ஹேய் நா நான்வெஜ் சாப்ட மாட்டன்ல டா... உனக்கு தெறியும்ல ஏன் சாப்ட சொல்லற??
கண்ணன்: இது உனக்கு இல்ல வயித்துல இருக்க என் பையனுக்கு,,, நீ சாப்டு தா ஆகனும்..
தாரா: வேண்டா கண்ணா ப்ளீஸ்..
ராம்: தாரா கொஞ்சம் சாப்டு டா... மீன்லா ரொம்ப நல்லது மா..
கார்த்தி: அக்கா உண்மையா எல்லாமே சூப்பரா இருக்கு... ஒரு ட்ரை பண்ணி பாரு டேஸ்ட் புடிக்கலனா யாரும் உன்ன கம்பல் பண்ண மாட்டோ..
கண்ணன்: ஆமா டா... ஒரு டைம் ட்ரை பண்ணு... ப்ளீஸ் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ண டா😢
தாரா: ம்ம்ம்ம் சரி... ( அப்பதா ப்ளேட்ட பாக்கறா,,, மீன் பீஸ்ஸ பாக்கறா சாப்டாம... திடீர்னு அழுகறா😭)
கண்ணன்: ஹேய் ஏன் அழுகற??
தாரா: இல்ல நா சாப்டமாட்ட... எனக்கு வேண்டா..
ராம்: ஏன் தாரா அடம்புடிக்கற👿
தாரா: என்னால முடியாது விட்டுங்க ப்ளீஸ் 😭🙏
கார்த்தி: ஏன்கா அழுகற?? எவ்லோ கஷ்டப்பட்டு சமச்சுருக்காங்க கொஞ்சம் சாப்டு கா...
கண்ணன்: சரி இப்டி அழுதுட்டு சாப்ட வேண்டா... ஆனா ஏன் சாப்டமாட்டீற காரணம் சொல்லு?
தாரா: இல்ல டா... எனக்கு அந்த மீன பாத்தா பாவமா இருக்கு... அதோட கண்ண பாத்தா " நா என்ன கொல்லாதனு எவ்லோ துடுச்ச ஆனா என்ன கொன்னு உனக்கு எப்டி சாப்ட மனசு வந்துச்சு" னு என்கிட்ட பேசற மாதிரி இருக்கு... பாவம் டா அது... நீங்க உங்களுக்கு புடுச்சா சாப்டுங்க ஆனா என்னால முடியல...
கண்ணன்: ஹேய் இது சுற்று சுழல் அமைப்பு டி... இப்டிலா பாத்தா எதுவுமே சாப்ட முடியாது...
கார்த்தி: அக்கா இதெல்லா ரொம்ப ஸ்ரென்த் கா... பேபிக்காக சாப்டு..
ராம்: இவ்லோ சொல்லரோம்ல சாப்டு 👿👿
தாரா அமைதியா ஒரு வாய் பெசஞ்சு சாப்றா அவ கண்ணுல தண்ணியா வருது...
கண்ணன்: புடிக்கலனா வேண்டா டா... வெச்சுரு... நீ இப்டி பண்ணுவனு எனக்கு மொதல்லயே தெறியும் அதா ரசம் வெச்ச அத சாப்டு ஓகே வா...
கார்த்தி: அக்கா ஏன்கா இப்டி பண்ற??
தாரா: இல்ல நா மொதல்ல சாப்டுட்டு தா இருந்த டா.. நம்ம ஊருல ஆடு மேய்க்கற தாத்தா அவரோட பெரிய ஆடு போட்ற குட்டிய 9 மாசம் வளத்தி கறிக்கடைக்கு விப்பாரு.. அந்த ஆட்டுகுட்டிய புடுச்சுட்டு போது பெரிய ஆடு எப்டி கத்தும் தெறியுமா?? அதோட குட்டிய கட்டிவெச்ச எடத்தையே சுத்தி சுத்தி வரும்... பாக்கவே ரொம்ப பாவமா இருக்கும், வாயில்லா ஜீவன் டா.... எனக்கு அத பாத்ததுல இருந்து நான்வெஜ் சாப்டாவே அழுகையா வருது😢😢.
ராம்: ஹேய் நீ மொதல்ல கெலம்பு,,, இங்க இருந்தா எதாவ்து கத சொல்லி எங்களையும் அழுக வெச்சு நான்வெஜ் சாப்டாம பண்ணீருவ..
கார்த்தி: அக்கா பேசாம ஓடீரு... கத சொல்லி அழுக வெக்காத..
கண்ணன்: தாரா மா நீ உள்ள இரு டா,, உனக்கு தனியா சாப்பாடு கொண்டு வர (மனதிற்க்குள்- அடக்கடவுளே ஒரு ஆடு அதோட குட்டிய எழந்ததுக்கே இவ்லோ அழுகறா,,, இவளுக்கு ஏன் நீ இந்த சோதனைய குடுத்த? ஆனா ஓவரா பீல் பண்றாலே🤔 )
தாரா: ம்ம்ம்ம் சரி டா...
கண்ணன் சாப்பாடு குடுத்துட்டு வந்துட்டான். சாயங்காலம் எல்லாரும் ஒன்னா உட்காந்து கேம் வெளாடலாம்னு ப்ளேன் போட்றாங்க. கண்ணன் எப்பவும் சோகமா அமைதியாவே இருக்கா. அவன் குரும்பு எல்லாமே காணாம போயிருச்சு... பாட்டு பாடலாம்னு கார்த்தி சொல்ல எல்லாரு ஓகே சொல்லறாங்க..
ராம்: ஆனா ஒரு கண்டிசன்...
எல்லாரும் என்ன னு கேக்கறாங்க ..
ராம்: உங்க லைப் ஓட சுல்நிலைய சொல்லற மாதிரி பாட்டு தா பாடனும்.. ஓகே வா ....
எல்லாரும் ஓகே👍 சொல்ல.. மொதல்ல கார்த்தி...
கார்த்தி:
"என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி"
தாரா: டேய் யாரு கிட்ட காதல் சொல்ல நேரம் இல்ல😂..
ராம்: யாரு டா அது...
கண்ணன்:......(எதுவும் பேசாம தாராவ பாத்துட்டு இருக்கா)
கார்த்தி: இன்னும் செலெக்ட் பண்ணல 😂😂 (மனதிற்க்குள்- மதுகிட்ட தா😍)
தாரா: ஹேய் போ போங்கு பண்ணீட்ட நீ அவுட்.. அடுத்து ராம் அண்ணா நீ பாடு...
ராம்: (போன்ல கீர்த்தி போட்டோவ பாத்து)
"உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு 😍😍
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு 😍😍
இருக்கிறேன் உன்னால மறக்குறேன் தன்னால 😍😍
கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள 😘"
தாரா: அண்ணா செம போ... கீர்த்தி மட்டு இங்க இருந்தா நீ டேன்ஸ்ஸே ஆடீருப்ப...
ராம்: 🙈🙈🙈,,, சரி சரி அடுத்து உன் புருசன பாட சொல்லு...
கார்த்தி: கண்ணண்ணா எப்பவும் என்தாரா பாட்டு தா பாடுவாங்க
தாரா: என்தாரா பாட்டு இல்லாம வேற எதாவ்து பாட்டு பாடு கண்ணா
கண்ணன்: நீ பாடு தாரா எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. (மனதிற்க்குள்- ஏன் டி நீ வேற நானே பயத்துல இருக்க இதுல பாட்டு வேறயா😢 )
தாரா: ஹேய் பாடு டா... உன் மனசுல என்ன தோனுதோ அந்த பாட்ட பாடு எனக்காக...
கார்த்தி: ப்ளீஸ் ணா....
ராம்: பாடு கண்ணா,, தாரா கேக்கறாலா....
கண்ணன்: (தாராவ பாத்து)
"காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை இந்த தேவதையே
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்"
தாரா: ஏன் டா சோகப்பாட்டு பாட்ற..
கண்ணன்: இல்ல டி நா உண்மையா தா சொல்லற எனக்கு எதுவும் வேண்டா,, நீ மட்டு போதும்... நீ இல்லனா நா உயிரோட இருக்க மாட்டா டி
ராம்: ஹேய் டூயட் பாட ஆரமீக்காதீங்க... அடுத்து தாரா நீ பாடு...
தாரா: (கண்ணன் கைய புடுச்சு)
"உண்மைக் காதல் யாரென்றால்😍 உன்னை என்னை சொல்வேனே😘
நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே😊
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே😍
தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கிகொள்வேனே"
கார்த்தி: ராம் அண்ணா வாங்க நம்ம கெலம்பலாம்,, இவங்க ரொமேன்ஸ்லா நம்ம பாக்க வேண்டா..
தாரா: பாட்டு தானு பாடுன.... இது ரொமேன்ஸ்ஸா உனக்கு...
கண்ணன்: தூங்கலாமா??? தல வலிக்குது...
ராம்: சரி தூங்குங்க...
எல்லாரும் தூங்க போனதும் அங்க ரூம்ல
கண்ணன்: (தாரா மடீல படுத்துகிட்டு)
ஐ லவ் யூ.....
தாரா: நானும் தா.... நீ இல்லனா நானு உயிரோட இருக்க மாட்டா டா...
கண்ணன்: தெறியும் தாரா...
கொஞ்ச நேரம் கதை பேசீட்டு தூங்கறாங்க...
-----------------------------------------------------------
இப்படியே 20 நாள் போக,,, ஒரு நாள் சாயங்காலம் 3மணிக்கு கண்ணன் ஆபீஸ்ல இருக்கும் போது தாரா போன் பண்றா...
கண்ணன்: ஹலோ சொல்லு தாரா...
தாரா: கண்ணா வயிறு வலிக்குது டா😭😭😢😢😢 முடியல டா.... ரொம்ப வலிக்குது...😭😭😭
கண்ணன்: அழுகாத நா 2நிமிசத்துல அங்க இருப்ப...
தாரா: முடியல டா வலிக்குது கண்ணாாாா...............😭😭
Tharakku ena achu??????
Yarum thittathinga pa me paavam 😢😢😢
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro