Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 38

இரண்டு நாள் கழுச்சு....
வெள்ளிக்கிழமை காலை.... வேலைக்கு போகும் போது சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்கும் போது.

கண்ணன்: தாரா...

தாரா: ம்ம்ம்ம் சொல்லு டா😊

கண்ணன்: இன்னைக்கு நா மதியமே வந்தறட்டா டி....

தாரா: ஏன் டா??

கண்ணன்: இல்ல நம்ம ஹாஸ்பிட்டல் போயி செக் பண்ணி பாக்காலா நம்ம பாப்பாவ😍... நா சீக்கரம் கெலம்பி வர டி...

தாரா: நாளைக்கு லீவ்தானு டா,,, நாளைக்கே போயிக்கலா...

கண்ணன்: இல்ல டி இன்னைக்கே போலாம்,,, எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு....

தாரா: அப்போ சரி இன்னைக்கே போலாம்😊.....

கண்ணன்: 2மணிக்கு ரெடியா இரு...

தாரா: சரி டா...

கண்ணன் சாப்டுட்டு வேலைக்கு போயிட்டான்... எப்பவும் மாதிரி இல்லாம கண்ணனுக்கு வேல ரொம்ப அதிகமா இருந்துது... புதுசா ஒரு பையன் மிசின்ல வேல பாக்க தெறியாம மிசின்ன ஏதோ கெடுத்து வெச்சுட்டான்.. அந்த மிசின் கண்ணன் பொருப்புல இருக்கு.. மிசின் கெட்டுபோன கடுப்பல மேனேஜர் கண்ணன ரொம்ப திட்டீட்டாரு...

மதியம் 2மணிக்கு கண்ணன் வேலைய முடுச்சுட்டனு மேனேஜர்கிட்ட சொல்ல போறா... அங்க

கண்ணன்: சார்.. மே ஐ கம் இன்..

மேனேஜர்: எஸ்.. உள்ள வாங்க..

கண்ணன்: மிசின் ரெடி பண்ணீட்ட சார்,,, இப்போ சரியா வேல செய்யுது..

மேனேஜர்: 👿 அந்த மிசின் எவ்லோ விலை தெறியுமா?? புது பையனுக்கு ப்ராக்டீஸ் குடுக்கும் போது சொல்லி குடுக்கனும்... இப்டி எங்கையோ நெனப்ப வெச்சுருந்தா வேல பாக்க முடியாது...

கண்ணன்: சார் நா சொல்லிதா குடுத்த.. புது பையன்ல அதா மிசின பாத்து பயந்துட்டான்...

மேனேஜர்: ரீசன் சொல்லாதீங்க கண்ணன்... காலைல இருந்து ப்ரோடக்சன் எதுவுமே பண்ல👿..

கண்ணன்: சார் என் தப்பு தா,, நா முடுச்சு குடுக்கற...

மேனேஜர்: ஓகே... இப்டி பொருப்பு இல்லாதவன், வேல தெறியாதவன வெச்சுட்டு நா என்ன பண்றது?? போங்க போயி ப்ரோடக்சன் முடுச்சுட்டு போங்க...

கண்ணன்: யாருக்கு வேல தெறியாது எனக்கா?? 👿👿 லுக் இன்னைக்கு எவ்லோ லோடு போகனுமோ அத நா தனியாவே செஞ்சு அனுப்பற...

மேனேஜர்: நீங்கலா பொண்டாட்டி பின்னாடி சுத்ததா லாய்க்கி👿

கண்ணன்: யோவ் என்னயா?? விட்டா ஓவரா பேசீட்டே போற.. நீ பாத்தயா எனக்கு வேல செய்ய தெறியாதுனு...

மேனேஜர்: ஹேய் என்ன மரியாதை கொரையுது👿.... எவ்லோ ரோசம் இருந்தா வேலைய முடுச்சு கொன்டு வந்து காட்டு...

கண்ணன்: முடுச்சு காட்ற..👿

கண்ணன் ரொம்ப கோவமா வேல செஞ்சுட்டு இருக்கா... தாரா ஹாஸ்பிட்டல் போறதுக்காக கண்ணனுக்கு கால் பண்றா.. கண்ணன் கட் பண்றா... இரண்டாவது தடவ தாரா கால் பண்றா..

தாரா: கண்ணா ட்ரேபிக்கா டா...

கண்ணன்: ஏய் ஒரு டைம் போன கட் பண்ணா... திருப்பிகூப்ட்டு டிஸ்டப் பண்ணகூடாதுனு பேசிக் மேனர்ஸ் இல்லயா👿 (மேனேஜர் மேல இருந்த கோவத்த தாரா மேல காட்டுறா)

தாரா: சாரி😢😢 2மணிக்கு வெளிய போலானு சொன்னயா இப்போ டைம் 4 ஆச்சா... அதா கூப்டு கேக்கலானு போன் பண்ண...

கண்ணன்: வரலனா வேலையா இருப்பனு தெறியாதா?? 👿 சும்மா உன் பின்னாடியே சுத்தீட்டு இருக்கனுமா??

தாரா: சாரி😢😢😢 டிஸ்டப் பண்ணீட்ட..

கண்ணன்: தெறியுதுல போன வை... சும்மா கண்ணா கண்ணானு உயிர வாங்காத👿👿

தாரா: சாரி😭😭😭 கண்ணா

கண்ணன் போன்ன கட் பண்ணீட்டா.. வேலைல மூள்கீட்டா... தாராக்கு கண்ணன் சொன்னத நெனச்சு அழுத்துட்டு இருக்கா... எப்பவும் போல வெள்ளிக்கெழம  எல்லாரும் வீட்டுக்கு வராங்க.. ஆனா யாருகிட்டையும் தாரா இத பத்தி சொல்லல.. கண்ணன் எங்கனு கேட்டதுக்கு "ஆபீஸ்ல பிஸி,, வர லேட் ஆகும்" இத மட்டு சொன்னா... எல்லாரும் சாப்டு தூங்கவும் தாரா மட்டு கண்ணனுக்காக வைட் பண்ணீட்டு இருந்தா..

ஆபீஸ்ல அந்த மேனேஜர்கிட்ட சண்ட போட்டநால கண்ணன் 11மணி வரைக்கு இருந்து வேலைய முடுச்சுட்டு வரா... ஆனா மேனேஜர் மேல இன்னும் கோவம் போகல.. கண்ணன் காலிங்பெல் அடிக்கறா.. அடுத்த இரண்டாவது நொடில தாரா கதவ தெறக்க... வேகமா உள்ள வந்து சோபால உட்காந்தா...

தாரா: என்ன ஆச்சு??

கண்ணன்: 👿👿 நா பொருப்பு இல்லாதவனா?? எனக்கு வேல செய்ய தெறியாதா?? 👿👿... என்ன எப்போ பாத்தாலு உன் பின்னாடியே சுத்தீட்டு இருக்கனா👿👿...

தாரா: (ஆபீஸ்ல என்னமோ பிரச்சணனு புருஞ்சுக்கிட்டு) அப்டிலா இல்ல....

கண்ணன்: எனக்கு வேல செய்ய தெறியாதா??? அவன் என் Egoவ தூண்டிவிட்டுட்டா👿👿

தாரா: யாரு சொன்னா உனக்கு வேல செய்ய தெறியாதுனு... நீ திறமையான ஆளு....

கண்ணன்: அந்த ஆளுதா சொன்னா.. அவன... (கோவத்துல வேகமா செவுத்துல கைய குத்த போறா,,, தாரா கைய புடுச்சு)

தாரா: வேண்டா கை வலிக்கும்..

கண்ணன்: 👿👿👿 (கண்ணு அவ்லோ செவந்து இருக்கு கோவத்துல)

தாரா உடனே கண்ணன அணச்சுக்கறா....

தாரா: நீ இப்டி கோவப்படாத எனக்கு பயமா இருக்கு😢.. இதெல்லா ஒன்னு இல்ல.... கூல்..... உனக்கு நல்லா வேல செய்ய தெறியும்... உனக்கு நெரையா திறமை இருக்கு... யாராவ்து உன்ன சீண்டிவிட்டா இப்டி கோவப்படக்கூடாது.... இவ்லோ கோவப்பட்டா ஒடம்பு கெட்டு போயிரு..

கண்ணன்: அவன் எப்டி அந்த மாதிரி சொல்லலா?? புது பையனுக்கு தெறியல அவ தப்பு பண்ணீட்ட,, நா அதுக்கு சாரி கேட்ட,,, அப்றம் என்ன இதுதுக்க்கு👿 அப்டி சொன்னா...

தாரா: அவங்க அப்டி தா இருப்பாங்க,,, அவங்களுக்கும் மேல இருந்து ப்ரஸ்சர் இருக்கும்ல டா... நீ எப்டி அந்த பையன் பண்ண தப்புக்கு திட்டுவாங்குனயோ அதே மாதிரிதானு அவங்களையும் திட்டுவாங்க...

கண்ணன்: அதுக்கு என்ன திட்டுவானா?? நா எவ்லோ சின்சியர் தெறியுமா??

தாரா: அவங்களுக்கு அதெல்லா தெறியாது கண்ணா.. ஒரு நாள் முடியும் போது எவ்லோ ப்ரோடெக்சட் வருது,, இவ்லோ லாபம் வருதுனுதா பாப்பாங்க... அவங்களுக்கும் நம்பர்1 ஆகனும்னு ஆசை இருக்கும்ல அதுநால இப்டிதா சீண்டிவிட்டு வேல வாங்குவாங்க ... நம்மதா டென்சன் ஆகாம இருக்கனு... மொதல்லயே வேல செஞ்சு ஒடம்பெல்லா ஸ்ரஸ்ஸா இருக்கு இதுல டென்சன் ஆனா மனசுக்கும் ஸ்ரஸ் டா...

கண்ணன்: ஆமா,,, கை, கால்லா வலிக்குது😢😢... ஆனா நா எல்லா வேலையும் முடுச்சுட்டு தா வந்த..

தாரா: அதுதா சரி... நம்ம நால ஒரு தப்பு ஆச்சுனா நம்மதா அத சரி பண்ணனும்...  சாப்டயா??

கண்ணன்: இல்ல.... ஹேய் பொரு நீ எனக்கு போன் பண்ணல... (உடனே எல்லாம் நியாபகம் வர,, அணச்சுட்டு நின்ன தாராவ வெளக்கி) ஐயோ சாரி தாரா.... சத்தியமா வேணுனு சொல்லல..

தாரா: பரவால டா,,,😊,, எனக்கு தெறியும்,,, நீ வேணூனு சொல்லலனு..

கண்ணன்: சாரி😢😢 உன்ன ரொம்ப ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்ட... நீ அழுதயா கண்ணூலா செகப்பா இருக்கு....

தாரா: அதெல்லா ஒன்னு இல்ல😊 டா...

கண்ணன்: என்மேல கோவம் இல்லையா????

தாரா: இல்ல டா...

கண்ணன்: அப்றம் ஏன் அழுத...

தாரா: எனக்கு நீ கோவப்பட்றத பாத்தா பயமா இருக்கு..

கண்ணன்: ஏன் அப்டி சொல்ற?

தாரா: எனக்கு உன் கோவம் ரொம்ப பிடிக்கும்,,,, உன்னோட திமிரு ரொம்ப பிடிக்கும்,,,, ஆனா நீ என்மேல கோவப்பட்றதுதா எனக்கு பிடிக்கும் அத நா ரசிப்ப.. ஆனா வெளிய ஆளுககிட்ட நீ கோவப்பட்டா எனக்கு பயமா இருக்கு உனக்கு எதுவும் ஆகாது ஆனா நீ கோவப்பட்டா கை நீட்டீற.. அது ரொம்ப தப்பு டா,,, அதா நா பயப்பட்ற...

கண்ணன்: சரி இனி கோவத்த கொறச்சுக்கற... 😊... ஏன் உனக்கு என்னோட கோவம் பிடிக்கும்??

தாரா: ம்ம்ம்ம் ஒரு பாட்டு வரி சொல்லட்டா அதுக்கு பதிலா😉

கண்ணன்: சொல்லு😊...

தாரா:
"மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முறடா உனை ரசித்தேன்....😍😍

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்...😍😍😍

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ😍😍😍

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ😍😍😍

உன்னைப் போலே ஆண்ணில்லையே நீயும் போனால் நான்னில்லையே😍😍

நீர் அடிப்பதாலே மீன்😘😘 அழுவதில்லையே,, ஆம் நமக்குள் ஊடலில்லை😘😘😘

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது😍😍😍😍😍😍😍😍😍😍
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது"

கண்ணன்: அடப்பைத்தியம்😂😂...

தாரா: 😂😂😂 ம்ம்ம்ம்,,, சாப்டலாம் பா,, பசிக்குது...

கண்ணன்: நீ இன்னு சாப்டலயா??👿

தாரா: இல்ல ஒன்னாதானு தினமும் சாப்டுவோம்,,, அதா...

கண்ணன்: வா போயி சாப்டலா...

ரெண்டு பேறும் சாப்டு,,, விடுஞ்சதும் ஹாஸ்பிட்டல் போலானு பேசி வெச்சுட்டு தூங்கறாங்க... காலைல விடுஞ்சதும் ராம், கீர்த்தி, கார்த்திய வீட்ல இருக்க சொல்லீட்டு ஹாஸ்பிட்டல் போறாங்க...

அங்க போயி தாராவ செக் பண்றாங்க.. கொழந்ததானு கன்பார்ம் ஆகீருச்சு... அதுக்கு அப்றம் தாராவ உயரம், எடை பாக்கறாங்க... இரத்தம் டெஸ்ட் பண்றாங்க... ஸ்கேன் பண்றாங்க... எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு ரிசல்ட்காக வைட் பண்ணீட்டு இருக்கும் போது அங்க ஒட்டீருக்க கொழந்தை படத்தையெல்லா பாத்து ரசுச்சுட்டு இருக்காங்க.... அங்க ஒரு 7மாச கர்பிணி உட்காந்து இருக்கறத பாத்துட்டு கண்ணன்..

கண்ணன்: ஹேய் அங்க உட்காந்து இருக்க அக்காவ பாரு டி...

தாரா: அந்த அக்காக்கு என்ன??

கண்ணன்: இல்ல தாரா நம்ம பேபி வளந்தா உனக்கு இது மாதிரி வயிறு பெருசா ஆகும்லல...

தாரா: ஆமா லூசூ... இது என்ன கேள்வி டா,,, கண்டிப்பா அப்டிதா ஆகும்..

கண்ணன்: எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு டி... நீ இந்த மாதிரி இருக்கும் போது ஓடி ஓடி உனக்கு ஹெல்ப் பண்ணனும்,,, "அவ புருசன பாரு எப்டி தாங்கறா பொண்டாட்டிய" னு எல்லாரு பொறாம பட்ற அளவுக்கு உன்ன பாத்துக்கனும் ...

தாரா: பாற்றா....😂😂

கண்ணன்: மொதல்லயே நீ ரொம்ப அழகு,,,, தாய்மைக்குனு ஒரு அழகு இருக்கு அத உன் மொகத்துல பாக்கனு டி ரொம்ப ஆசையா இருக்கு டி... சீக்கரம் வளற சொல்லு பேபிகிட்ட.. (தாரா வயித்த பாக்க)

தாரா: டேய் இது ஹாஸ்பிட்டல் டா... வீட்ல போயி இத பத்தி பேசிக்கலா..

கண்ணன்: ஓகே டி...

ஒரு நர்ஸ் வந்து கண்ணன மட்டு டாக்டர் கூப்டாங்கனு உள்ள வர சொல்லவும், கண்ணன் உள்ள போறா..

அங்க டாக்டர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன அழுகவெச்சுது..

Doctor apd ena sollirukka poranga..
Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro