Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வர மறுக்காதே!

மனம் மகிழ, மந்திரம் முழங்க
வாழ்த்தொலி நிறைக்க,
உளம் குளிர, ஆனந்த கண்ணீர் மல்க,
அவன் கரம் பற்றி அடி எடுத்து வைக்கிறாள் இல்லறத்தில்..

இது உன் குடும்பம், உன் உறவுகள்
சமாளித்துக்கொள்,
எனை சங்கடப்படுத்தாதே என்றான்!
ஓதிய மந்திரம் ஒதுக்கி, பற்றிய கரமும் விடுத்தான்.
எல்லாமே அர்த்தமற்றவையோ?

அறிமுகமில்லா மனிதர்கள்,
முன் அனுபவமில்லா பொறுப்புகள்,
பயிற்சியும் இல்லை, மன முதிர்ச்சியுமில்லை,
புலம்புதலும் கூடாதாம், கோபமும் ஆகாதாம்!

அன்னைக்கு என்றும் குழந்தை,
ஆனால் இன்று குடும்ப தலைவி,
சட்டென மாறியது காட்சி
குருவியின் தலையில் பனங்காய்!

கனவுகள் உறங்கிபோயின,
ஆசைகள் கருகிபோயின,
குடும்பத்தின் புன்னகையே லட்சியங்களாகின!
மனதின் ஆழம் மலைப்பை தந்தது!
இன்னும் எத்தனை தான் புதைப்படும் இதில்?

குடும்பத்தின் தேவையில் தன்னை மறந்தாள்,
போற்றி வளர்த்த பெற்றோரையும் துறந்தாள்,
உறவுகளின் செய்கை வலியை தந்ததது,
பிள்ளைச் செல்வம் அதை மறக்கச் செய்தது.
மறந்த, மறைத்த வலியை வளர்ந்த பிள்ளைகள் மீட்டுகொடுக்க,
மறத்து போனது மனது வேதனையில்.

ஆடி, ஓடி, உழைத்து, களைத்து,
தனிமையில் அழுது ஓய்ந்து,
பாசத்திற்காக ஏங்கி தவித்து,
எலும்பு தேய்ந்து, நரம்பு தளர்ந்து,
எல்லாம் கொடுத்து முடித்து,
இதயம் வறண்டு பாலைவனமாய் மாறி
களைப்பாற நினைக்கையில்,
கை பிடித்து நடக்க அழைத்தான் அவன்!

இதயத்தின் வலி கண்களில் திரையிட,
மனதின் வினாக்கள் உதட்டோடு உலர்ந்திட,
கேள்விகளை கண்ணில் தேக்கி ஏறிட்டாள் - அவனை!

'காவிய நாயகனாய் பாதுகாக்க தெரியவில்லை,
காதாலாய் கசிந்துருகி கவி பாட அறியவில்லை,
ஆலமரமாய் நின்று நம் இல்லத்தை நீ காத்தாய்,
தாயாய் மாறி உறவுகளை அரவணைத்தாய்,
உனக்கொரு அன்னை தேவைப்படும் நேரமிது,
கை நீட்டி அழைக்கிறேன் - வர மறுக்காதே!'

- அனு

🌸🌸🌸🌸

Basically it's like a spin off of my other poem "உனக்காகவே நான்".

Inspiration was an old couple who go for morning walk in our colony. அந்த பாட்டி நடக்க முடியாம மூட்டு வலியில அவங்க வீட்டுகாரரு கையை பிடிச்சு மெதுவா நடக்க, அவரு பொறுமையா கூட நடப்பாரு தினம். அந்த அம்மா எவ்வளவு ஓடி உழைச்சிருப்பாங்க அவங்க குடும்பத்துக்காக? அவரும் வயசு காலத்துல முடியாட்டாலும் இப்பவாச்சும் அக்கறை எடுக்குறாரேனு தோணுச்சு.

***அனைத்து அன்னையர்க்கும் சமர்ப்பணம்*** 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro