யார் நீ?
உணர்ச்சிகளின் கூடாரம்,
உள்ளக்கிளர்ச்சிகளின் அவதாரம்,
எண்ணங்களின் குவியல்,
பஞ்சபூதங்களின் பிடியில்.
நீயோ, நானோ, அவரோ, இவரோ,
மனத்தின் குணமோ,பணத்தின் மோகமோ,
யாரும் ஸ்திரமில்லை,
எதுவும் நிலையில்லை.
காலத்தின் பிடியில் நாம்,
நம் குற்றங்களுக்கு பிணை நாம்,
செயல்களின் எதிர்வினை தான்,
கர்மவினையின் மூலம் வெளிப்படுமாம்.
ஊழ்வினை என சொன்னால்,
எள்ளி நகையாடும் பதர்களெல்லாம்,
அறிவியல் மூலம் சான்றை கோரும்,
அஃதில்லையேல் புறந்தள்ளும்.
சிருஷ்டியை உணர மனிதம் வேண்டும்!
சூட்சுமத்தை உணர தனிமை வேண்டும்!
பிரம்மத்தை உணர பக்குவம் வேண்டும்!
ஞாலத்தை உணர காலாவகாசம் வேண்டும்!
இவையனைத்தும் உனக்குள்ளே என உணர
உன்னை நீ உணர வேண்டும்!
- அனு
🌸🌸🌸🌸🌸🌸
This was inspired after reading a poem written by my mentor/ guide🙏
She walked into my life in the most unassuming manner and during the most testing phase of my life. This is what is called blessing in disguise.
தெய்வம் மனுஷ்ய ரூபேண - என்பார்கள் அதாவது தெய்வம் தானே வராது, மனித உருவில் வந்து தான் துணை நிற்கும். எல்லோருக்கும் வாழ்வில் இது போல யாரேனும் நிச்சயம் உதவியிருப்பார்கள் அல்லது வழி நடத்தியிருப்பார்கள். 🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro