பெண்
சாட்டைகளா கூர் அம்புகளா
நீ உதிர்க்கும் வார்த்தைகள்?
ஒரு முறைகூட
இதயத்தின் ரத்தம் சுவைக்க தவறுவதேயில்லை.
●●●●●●●●●●●●●●●●●●●●
ராவணன் கடத்தவில்லை,
அசோகவனத்தில் அடையவில்லை,
கணவனின் கோபக்கனலில்
பற்பல சீதைகள் நிதம் தீக்குளிக்கிறார்கள்.
●●●●●●●●●●●●●●●●●●●
என் விருப்பங்களை நீயே தீர்மானிக்கிறாய்.
எனக்கான முடிவுகளை நீயே எடுக்கிறாய்.
என் மௌனத்திற்க்கான அர்த்தத்தை நீயே புகுத்திவிடுகிறாய்.
அத்தனை துணிச்சல் இருந்தால்
என் வாழ்வை ஓரிரு நாள் நீ வாழ்ந்துபார்.
●●●●●●●●●●●●●●●●●●●
திருமணம் என்பது..
என்னை துறக்கும் துறவறம்
என் பெற்றோருக்கு!
அறியவில்லை நானும்
அதுநாள் வரை!
- அனு
❤❤❤❤❤
Writing a story on domestic violence in english, " THE VOICE OR THE ECHO".
As i was writing that in between these lines kept cropping up in my head, since the story is in english, publishing those lines here. Those who read that story can co relate these lines with it.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro