காதல்
கண்ணாமுச்சி ஆடுகிறது கடல்,
எங்கிருந்தோ ஓடி வருவதும்,
கரையைச் சீண்டிவிட்டு ஓடுவதுமாய்
இவர்களின் காதல் விளையாட்டை
தள்ளி நின்று ரசித்தபடி நிலவு,
வெட்கத்தில் மின்னிய நட்சத்திரங்கள்,
இவை எதையும் ரசிக்காதபடி நீயும் நானும்,
நின்றபடி அலையில் கால் நனைப்பதும்,
நடந்தபடி மணலில் கால் புதைப்பதும்,
பட்டும் படாமலும், நாம் கைகோர்த்து
தொட்டும் தொடாமலும் சேர்ந்து நடக்க,
நீ சொல்வாய் என நான் தவிக்க..
நான் உரைப்பேன் என நீ நினைத்திருக்க..
நம்மை பாரத்து களைத்தது நிலவு,
மனிதனுக்கு காதல் உணர்வே மறந்து போனதோ?
இந்த ஏக்கத்தில் நிலவும் தேய்ந்து போனது!
- அனு
#firstlove 🙈
Don't judge me! Wrote it when i was newly married 🤣🤣🤣
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro