உனக்காகவே நான்!
எண்ணியதும் மறந்ததுமாய்
எண்ணிலடங்கா சிந்தனைகள்,
கண் இமைக்கும் நொடியிலும்,
காலங் காலமாயும் நான் கண்ட கனவுகள்,
எடுத்துரைக்க எண்ணி
எழுதாமல் போன மடல்கள்,
சொல்ல துடித்து, இயலாமல்
மென்று விழுங்கிய சொற்கள்,
நமக்கென மட்டுமே நான்
எதிர் நோக்கிய தனிமை பொழுதுகள்,
நீ மட்டுமே புரிந்து கொள்வாய்
என என் வாய் சுமந்த மௌனங்கள்,
உன் ஆற்றாமை பொழுதுகளில்
தாங்கிட தவித்த என் தோழமை தோள்கள்,
உன்னிடம் மட்டுமே இழக்க
தயாராக இருக்கும் என் சுயம்,
உன் பற்றுதலுக்காகவே
தனித்து காத்திருக்கும் என் கரம்,
உன் கால் தடம் பற்றித் தொடரும்
காவலாய் என் கால்கள்,
உன் நினைவையும் காதலையும்
கருவாக்கி சுமந்திருக்கும் என் மனம்,
உன் வரவுக்காக மட்டுமே துடித்து இன்னும்
உயிர்ப்போடு காத்திருக்கும் என் இதயம்,
இவை அனைத்தும், இன்னும் சொல்லாத சிலவும்,
மொத்ததில் உனக்காக மட்டுமே நான்,
கை நீட்டி அழைக்கிறேன்
வர மறுக்காதே!
- அனு
* இந்த கவிதை என்னுடைய
'கை நீட்டி அழைக்கிறேன்' கதை எழுதுகையில் எழுதியது. It's included in the story here in wattpad.
காதலியை பிரிந்திருக்கும் காதலனின் ஏக்கத்தை, அன்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro