Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முன்னோட்டம்

"அக்கா நான் அப்பாக்குத் தெரியாம வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு ரோலர் சூட்கேசுடன் நின்றவளை அதிர்ச்சியாய் நோக்கினாள் சங்கவி. அவளுடன் இருந்த அவளின் தோழி யாழினியும் அவ்வாறே! குட்டீஸ் மட்டும் ஓடிவந்து அவள் கரத்தைப் பற்றியவர்கள் "எங்களுக்கு அல்வா வாங்கிட்டு வந்தியா மது சித்தி?" என்று ஆர்வமாய் கேட்க அவள் சூட்கேசினுள் அலுமினியக்கவரில் அடைக்கலமாகி இருந்த அல்வாவை எடுத்து நீட்டினாள்.

யாழினியும் சங்கவியும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தேதியை வைத்துக்கொண்டு இந்தப் பெண் என்ன காரியம் செய்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியோடு இப்போது அவள் எதுவுமே நடக்காதது போல அல்வா கவரை பிரிக்க உதவிக்கொண்டிருந்தாள்.

**********

அவள் தலையைக் குனிந்துகொண்டே வந்தவள் ஜீன்ஸ் அணிந்த ஜோடி கால்களைப் பார்த்ததும் எதிரில் நிற்பவனுக்கு வழி விட இடதுப்பக்கம் ஒதுங்கினாள். ஆனால் அவள் ஒதுங்கிய புறமே அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரனும் ஒதுங்க சலித்தவளாய் வலதுப்பக்கம் வர அவனும் வலதுப்பக்கம் வந்து நிற்க எரிச்சலுடன் தலை உயர்த்தியவள்

"ஹலோ கண்ணு என்ன பொடதியிலயா இருக்கு? ஒரு மனுசி எத்தனை தடவை அங்குட்டும் இங்குட்டுமா போறதுயா?" என்று எகிறியபடி அவன் முகம் பார்க்க இவ்வளவு நேரம் அவனது ஆப்பிள் ஐபோனில் கண் பதித்திருந்தவன் தன் முன்னே நின்று தன்னை அண்ணாந்து பார்த்து கத்தியவளைக் கண்டதும் முகம் சுளித்தான்.

கூடவே "குட்டிச்சாத்தான் மாதிரி இருந்துட்டு இதுக்கு வாய பாரு" என்று முணுமுணுக்க அதை அவள் கேட்டுவிட்டாள்.

"யாரு குட்டிச்சாத்தான்? நானா?" என்று சண்டைக்கோழியாய் சிலிர்த்தவளின் காதில் அருகிலிருந்த ராகினி "அக்கா பிரச்சனை வேண்டாம்... நமக்காக சவிக்காவும் யாழிக்காவும் வெயிட் பண்ணுறாங்க... லேட்டா போனா ரஞ்சி நம்மள வச்சி செய்வாக்கா... அதோட இந்த ஆள் வேற பார்க்குறதுக்கு கொஞ்சம் டெரர் பீஸ் மாதிரி இருக்கான்" என்று முணுமுணுக்க அப்போதைக்கு அமைதிவழிக்குத் திரும்பியவள் அவனை முழுவதும் மன்னிக்க மனமின்றி

"சரி சரி தள்ளிப் போ! உன்னைப் பாத்தாலே நீ சரியான தயிர்ச்சாதம்னு தெரியுது... நான் பாட்டுக்கு உன்னைத் திட்டி நீ மனசொடஞ்சு தப்பான முடிவுக்குப் போயிட்டேனா என்ன பண்ணுறது? உன் குட்லக் சூசைட் பாயிண்ட் வேற பக்கத்துல இருக்கு... சோ நான் ஒரு இளைஞன் உயிரோட விளையாட விரும்பாததால நீ தப்பிச்ச... இப்போ கொஞ்சம் நகருறியா?" என்று சொல்லிவிட்டு அவனது கையை பிடித்து நகர்த்திவிட்டு ராகினியுடன் சென்றாள் அவள்.

அவனைக் கடக்கும் போதே அவன் பற்களைக் கடிக்கும் சத்தம் காதில் விழ "ஆத்தாடி! பாக்க தயிர்சாதம் மாதிரி இருந்தானேனு கொஞ்சம் ஓவரா தான் பேசிட்ட மது" என்று தன்னைத் தானே எச்சரித்தபடி நகர்ந்திருந்தாள் மது என்ற மதுரவாணி.

**************

"அக்கா அந்த வளர்ந்தவன் வர்றான்... போய் ஒளிஞ்சுக்கோங்க" என்ற ராகினியின் எச்சரிக்கைக்குரலில் தலை நிமிர்த்தியவள் கண்ணாடி கதவுகளினூடே தெரிந்த வெளிப்புறத்தை உற்று நோக்கினாள். அங்கே தெரிந்த காட்சியில் கண்ணை விரித்து பார்த்தவள் சட்டென்று ஓடிப்போய் மலர்க்கூடைகளை அடுக்கி வைத்திருந்த ஸ்லாப்பிற்கு பின்னே ஒளிந்து கொண்டாள். இவர்கள் இருவரையும் பார்த்து கடுப்புடன் முறைத்த ஸ்ரீரஞ்சனி தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஆத்தாடி! இன்னைக்கு சனியன் ஸ்கோடால வந்திருக்குடி மது... இவன் மட்டும் உன்னைப் பாத்தான் இருக்கிற கோவத்துல ப்ரேக்பாஸ்டுக்கு உன்னையே கடிச்சு முழுங்கிருவான் போலயே... பெருமாளே நீ தான் என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்தணும்"

வந்தவன் நேரே ராகினியிடம் நின்று "எங்க போனா அந்த குட்டிச்சாத்தான்? இங்க தான் ஒளிஞ்சிருக்கணும்னு நினைக்கேன்... ஒழுங்கா அவளை வெளிய வரச்சொல்லு... இல்லனா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்" என்று எச்சரிக்க ராகினியின் வாய் தந்தியடித்தது.

"அது.... வந்து.... அக்கா" என்றவளை கேலியாய் நோக்கிவிட்டு "என் பேரு ஒன்னும் அது வந்து அக்கா இல்ல... ஐ அம் மதுசூதனன்... அண்டர்ஸ்டாண்ட்? அந்த குட்டிச்சாத்தானை பாக்காம நான் இங்கே இருந்து போறதா இல்ல" என்று பிடிவாதமாய் உரைத்தவனுக்குப் போன் வரவும் போனைக் காதுக்கு கொடுத்தான்.

"தனு பேபி! உன்னோட மது மேல உனக்கு நம்பிக்கை இல்லயா? அந்தப் பொண்ணே உன் கிட்ட வந்து சொல்லுவா... என்னை நம்புடா ப்ளீஸ்" என்றவனின் குரலில் அவ்வளவு உருக்கமும் காதலும் வழிந்ததை மதுரவாணி அந்த ஸ்லாப்புக்கும் சுவருக்கும் இடையேயுள்ள இடைவெளி மூலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

*********

"கட்டப்பஞ்சாயத்து பண்ணுற ஆளுக்குப் பிறந்தவ மட்டும் அமைதியின் திருவுருவாவா இருப்பா? இவ கேடி நம்பர் ஒன்... சரியான ரௌடியும் கூட" என்று எரிச்சலாய் முணுமுணுத்தான் மதுசூதனன்.

அவனருகில் அமர்ந்திருந்த மதுரவாணி கேலியாய் அவனைப் பார்த்து "அப்பிடியா சார்? எங்க அதை கொஞ்சம் சத்தமா அங்க பார்த்து சொல்லுங்க" என்று சொன்னபடி அவன் தாடையைப் பற்றி தந்தை அமர்ந்திருந்த திசையில் காண்பிக்க மதுசூதனன் தயங்குவது அவன் முகத்தில் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

**********

"என் ஃப்ரெண்ட் அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டானு டிசிபி இவ்ளோ சூடா பேசுறிங்க? அவளுக்குக் கல்யாணத்துல இஷ்டமில்ல... அதை சொன்னாலும் வீட்டுல யாரும் புரிஞ்சிக்கல... அதான் ஓடி வந்துட்டா.. இது என்ன கொலைபாதகமா சார்? போலீஸ்காரங்கனாலே மனசாட்சியைக் கழட்டி வச்சிட்டுத் தான் காக்கிச்சட்டையைப் போடுவிங்க போல... சை" என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு தன்னெதிரே உணர்ச்சிகளற்ற முகத்துடன் நின்று கொண்டிருந்தவனை பார்க்க விரும்பாதவளாய் சற்று தொலைவில் சுற்றுலாப்பயணிகளின் தலையில் போலி யூகலிப்டஸ் தைலத்தைக் கட்டிக் கொண்டிருந்த வியாபாரியைப் பார்த்தபடி நின்று கொண்டாள் ஸ்ரீரஞ்சனி.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவனைக் குற்றம் சாட்டியதை விட அவனது காக்கி உடுப்பைக் குற்றம் சாட்டியது தான் கோபத்தை வரவழைத்தது.


"உங்க ஃப்ரெண்ட் ஓடி வந்ததை பத்தி எனக்கு கவலை இல்ல... ஆனா நீங்கள்லாம் கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிளிட்டி இல்லாம அந்தப் பொண்ணு பத்தின இன்பர்மேசனை அவ குடும்பத்துக்குச் சொல்லாம மறைச்சி கேம் விளையாடுறிங்களே அதான் தப்பு... ரத்தினவேல் சார், சரவணன், கார்த்திக்கேயன் மூனு பேரும் அவளைத் தேடி ஓய்ஞ்சு போயிட்டாங்க... அங்க அவ குடும்பம் அவளைக் காணாம பதறிப்போய் இருக்காங்க... அவ என்னமோ டூர் வந்த மாதிரி மொத்த ஊட்டியையும் ஜாலியா வலம் வர்றா... அண்ணன் ஒரு போலீஸ்காரன்னு கூட மறந்துட்டா போல... அண்ட் ஒன் மோர் திங்! பேசுறப்போ வார்த்தையை அளந்து பேசுங்க" என்று கடினக்குரலில் எச்சரித்தான் ஸ்ரீதர்.

அதைக் கேட்டு போலியாய் ஆச்சரியம் காட்டிய ஸ்ரீரஞ்சனி "அளந்து பேசனுமா சார்? இனிமே நான் ஸ்கேலோ இஞ்ச் டேப்போ வச்சிக்கிறேன்... தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்" என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.

**********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கரை தீண்டும் கடல் அலையே என்னோட நெக்ஸ்ட் ஸ்டோரி... டைட்டில் ரிசர்வ் பண்ணுறதுக்காக போட்ட டீசர் இது... காட்சிப்பிழை முடிஞ்சதும் இதை ஸ்டார்ட் பண்ணுவேன்... யாரும் கிருஷ்ணதுளசி எப்போனு கேக்காதிங்கப்பா... அது 2021ல தான் வரும்... டாட்டா...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro