கவி
சுற்றம் துறந்து நட்பு துறந்து
நீயே புவி என வந்தேன் கள்வா?
சில காலம் கடந்த பின்னரும்
நீயே உறவு என வாழ்கின்ற
என்னை கருவேப்பிலையாய் பார்க்கின்றாயே இது தகுமோ?
உன் பார்வையை எதிர்கொள்ளும் போது
வெடித்து சிதறும் என் இதயத்தை
என்ன சொல்லி தேற்றுவேன்?
என் தோற்றம் கண்டு எள்ளி நகையாடும் உனக்கு இதேயே சில காலம் முன்
நீ விரும்பினாய் என
எவ்வாறு உணர்த்துவேன்?....
என் உணர்வுகளை பகிர உறவேன்று
நீ ஒருவனே உள்ளாய் அன்றோ????...
என் வலிகள் உனக்கு புரியுமோ?
நேசம் கொண்ட கணவனே
உன்னோடு நல்வாழ்க்கை வாழ்ந்து
தலைநிமிர்ந்து நடக்க எண்ணிய என்னை
பிறர் காலில் விழச் செய்வாயோ?
பொன் பொருள் வேண்டாமட
என் உள்ளம் கவர் வேந்த
உன் அன்பிற்காய் ஏங்கி நிற்கின்றேன்
தாயை பிரிந்த சேயாய்
தந்தையை பிரிந்த செல்ல மகளாய்
அண்ணன்மார்களின் அன்பு தங்கை
சண்டையிடும் செல்ல அக்கா
இவ்வத்தனை அன்பையிம் உன்னிடம் எதிர்பார்த்து தோற்று போன உன் காதல் மனைவி???...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro