"ஷ்! இது வேடந்தாங்கல்" by @balasundarnovels
நாயகி ஶ்ரீ, நாயகன் ராஜன்..
அவ்வப்போது பவித்ர, அடிக்கடி மசூத்.இவர்களை சுற்றிதான் கதை.
விலைமகளான ஶ்ரீ மற்றும் அவளின் தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவளுக்கு உதவ துடிக்கும் ஒரு பிரம்மச்சாரி பொலிஸ் அதிகாரிக்குமான கதைதான் இந்த நாவல். இங்குதான் எழுத்தாளர் தனது மாயாஜால எழுத்து வித்தையை காட்டியுள்ளார்.
இந்த கதை கருவானது ஒரு கூர்மையான கத்தி மேல் நடப்பது போன்றது.சிறிது எழுத்து பிசகினாலும் கதை வேறு வழியில் பயணித்து விடும்.அதை ஒரு சவாலாக எடுத்து மிக நேர்த்தியாக எழுதியமைக்கு எழுத்தாளினிக்கு ஒரு பெரிய கை தட்டல்.
இந்த கதையை கொஞ்சம் உன்னிப்பாக வாசிக்க வேண்டும். சில நேரங்களில் மனிரத்னம்,க்ரிஸ்டோபர் நோலன் போன்றோரின் படைப்புக்கள் திரும்ப திரும்ப பார்க்கும் போது நமக்கு அந்த படைப்பில் புது விதமான ஒரு அனுபவம் கிடைக்கும்.அது போன்ற ஒரு படைப்புத்தான் இந்த கதையும்.
ஶ்ரீ யை காயப்படுத்த நினைத்து ராஜன் கூறும் வார்த்தைகளுக்கு அவளின் பதில்கள் எல்லாம் எழுத்தாளினி எப்படி யோசித்தாரோ தெரியவில்லை.
"என் கட்டில நான் வித்துட்டேன்.அது இந்த கொஞ்ச நாள்ள உனக்கே புரிஞ்சிருக்கும்"
"வாழ்றதுக்கு காசு வேணும், காசுக்கு வேலை வேணும்"
"கால் கடுக்க நாலு மணி நேரம் நின்னு கூட உழைக்கலாம்"
இப்படியான மனிரத்னம் பாணியிலான நச்சென்ற பதில்களாலேயே எனக்கு இப்போது வாட்பெட் க்ரஷ் லிஸ்ட்டில் ஶ்ரீ முதல் இடம் வந்துவிட்டால் (Sorry "யாதுமாகி" ப்ரகதி -நீயும் என் டார்லிங்க்தான்).
எழுத்தாளினிக்கு ஒரு சிறிய வின்னப்பம். இது போன்ற Time less work எல்லாம் நம்மவர்களுக்கு இலகுவில் புரியாது. 12 வருடம் முன் வந்த "ஆயிரத்தில் ஒருவன்" ஐ நாம் யாருமே சட்டை செய்யவில்லை. அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டாள், ஆளவந்தான் ,விருமாண்டி இவை எல்லாமே தோல்வி படங்கள்தான். ஆனால் இன்று அவைதான் நம்மவர்கள் தூக்கிவைத்து கொண்டாடும் பொக்கிசங்கள். அது போலவே உங்களின் இந்த படைப்பும். எழுதிகொண்டே இருங்கள். உங்கள் பெயர் சொல்ல உங்களின் எழுத்துக்கள் போது.
இன்னும் இருபது வருடம் கழித்தும் "பாலா சுந்தர்" என்று கூறினால் எனக்கு ஶ்ரீ நினைவுக்கு வருவாள். இப்படி எத்தனை எழுத்தாளர்களின் கதைகள் நமக்கு நினைவில் இருக்கும் என்பது தெரியாது.
காலத்தால் அழியாத சில படைப்புக்கள் மக்களை அடைய நாட்கள் அதிகமாகும். எழுதுவது மட்டும்தான் உங்கள் வேலை. உங்கள் எழுத்துக்களை தேடி கண்டிப்பாக வாசகர்கள் வருவார்கள்.
இறுதியாக,
ஒரு விலைமகளின் கதையை எவ்வளவு நேர்தியாக முகம் சுளிக்காமல் எழுத வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
"ஷ்! இது வேடந்தாங்கல்" யார் வேண்டும் என்றாலும் வரலாம்.கண்டிப்பாக மற்றவருக்கு பரிந்துரை செய்யலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro