புன்னகை பூக்கட்டுமே by @praveenathangaraj
உங்கள் கதையை நீங்கள் எனக்கு கூற முன் ஒரு சகோதரி படிக்க சொல்லி கூறியிருந்தார்கள்.லைப்ரரியில் அட் பண்ணி இருந்த எனக்கு படிக்க நேரம் கிடைக்கவில்லை. சில நாட்களாக நல்ல கதை ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி காணப்பட்டது.அதை என் சகோதரியிடம் கூறிய போது அவர் கூறியது இரண்டு கதைகள்.
ஒன்று சஞ்சனா,மற்றையது புன்னகை பூக்கடும்.
ஒரே நாளில் 42 எபிசோட் படித்தது இதுதான் என்னுடைய பெர்சனல் ரெக்கோர்ட் என நினைக்கின்றேன்.இதெல்லாம் போக கதைக்குள் வருவோம்......
உங்கள் கதைகளில் ஒவ்வொருவரும் ஆயிரம் நிறைகள் சொல்லியிருப்பார்கள் ,ஆனால் நான் கூறப்போவது இரண்டே இரண்டு விடயங்கள்தான்..
1.வில்லன் /வில்லி இல்லை.
2.எந்த இடத்திலும் விரசம் இல்லாமல் அழகாக எழுதி இருந்தமை..
பலருக்கு தியாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.இல்லை எனில் என்ன இவ இவ்வளவு ஓவரா பண்றாலேன்னு நினைத்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தியா மட்டும்தான் பிடித்தது.ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் மிக அழகாக அவளின் நிலையை எடுத்து கூறியிருந்தீர்கள்.
ஆரம்பத்தில் அர்ஜுன் மேல் ஏற்படும் ஈர்ப்பாகட்டும் ,அதை காதல் என்று கூற மாட்டேன்.கண்டிப்பாக அது ஈர்ப்புதான்.ஆனால் நாட்பட்ட ஈர்ப்பு காதலாக மாறும்.,இல்லை என்றால் அவனை மறந்து வாழ எண்ணி அவளுக்குள்ளேயே மருகிக்கொண்டதாகட்டும் எல்லாமே சூப்பர்..இது எல்லாவற்றை விடவும் அவள் அர்விந்துடன் வாழ்ந்த வாழ்க்கை அதில் காதல் மட்டுமே இருந்த்தது.ஒரு துளி கூட அவளுக்கு அர்ஜுனையோ அல்லது அர்விந்தையோ ஏமாற்றுகிறோம் என்ற எண்ணம் வராமல் இருக்க ...அந்த எண்ணம் வாசகர்கள் மனதிலும் தோன்றாமல் இருக்க நீங்க எழுதிய விதம் சத்தியமாக நான் பிரமித்துப்போனேன்.நானெல்லாம் நல்லா இருக்குற கதைலயே குறை பிடிக்கிற ஆளு. எனக்கு இந்த கதை முழுவதும் தேடியும் ஒரே ஒரு குறை மட்டுமே கிடைத்தது. அதுதான் அர்ஜுன் தியாவுக்கு தாலி கட்டியது.கண்டிப்பாக ஒரு கலோபரம் வரும் என் எதிர்பார்த்தேன் ஆனால் சிம்பிலாக முடிந்து விட்டது..எனக்கு அந்த சிம்ப்ளிசிட்டி ரொம்ப பிடித்திருந்தது.
உங்கள் கதையின் குறை கூட எனக்கு நிறையாகவே தோன்றுகின்றது.
இன்றைய நாட்களில் ஒரு நாளு படம் பார்த்து,இரண்டு கதைகள் படித்ததும் எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகிவிடுகின்றனர். அதை பிழை என்று கூறவில்லை.ஆனால் காதல் என்ற பெயரில் வக்கிரத்தையும் ,இரண்டாம் தர பத்திரிகைகளில் வருவது போன்ற காட்சியமைப்பும் மிகவும் வேதனைகொள்ள செய்கின்றது.
இறுதியாக உங்கள் கதையை ரிஜக்ட் செய்த அந்த வார இதழுக்கு கோடானு கோடி நன்றிகள்.இல்லை எனில் எனக்கு கண்டிப்பாக இந்த கதையை படித்திருக்க வாய்ப்புக்கிடைத்திருக்காது..
உங்கள் எழுத்தி பணி தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro