"நினைவெல்லாம் நீயே" By @navasara
'ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடா'
இந்த பாடலை உணர்வு ரீதியாக கேட்ட பின் படித்த நாவல் இது. காரணம் அட்டைப்படம். இந்த நாவலை குறைந்தது ஒரு 15 தடவை படித்திருப்பேன். ஆனால் இன்றுதான் வோட் மற்றும் ரிவ்யூ போடலாம் என்று உத்தேசித்தேன். சைலன்ட் வாசகனாக இருந்த காலத்தில் படித்த என் மனதுக்கு மிகவும் பிடித்த நாவல் எது.
நாயகி "ரியாஸ்ரீ "
நாயகன் "நிரஞ்".
என்னுடைய வாட்பெட் க்ரஷ் களில் இந்த கதையின் நாயகி மிகவும் முக்கியமானவள்.
கதை முழுவதும் நாயகியே ஆக்கிரமித்திருப்பாள். பிரிவு, திருமணம், ப்ளாஷ்பேக் காதல், காதலர்கள் கணவன் மனைவியாக இணைவு ,மீண்டும் பிரிவு என பல கோணங்களில் கதை நகர்ந்தாலும் வாசிப்பவர்களை சலிப்படைய செய்யாமல் அழகாக கொண்டு சென்றமைக்கு எழுத்தாளரை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த கதை எனக்கு பர்சனலாக ரொம்ப பிடிக்கும். காரணம் இந்த கதையில் இருந்து பல சீன்களை என் முதல் கதையான "என் உயிரினில் நீ" இல் வைத்திருப்பேன்.
'ஹீரோயின் பெயர்'
'பாட்டுக்கு பாட்டு சீன்'
'ப்ளாஷ் பேக் காதலை திருமணத்தின் பின் ரிவீல் செய்வது'
'தனக்கு டைவோர்ஸ் வேண்டும் என்று ஹீரோயின் சண்டையிடுவது'
'தான் ஹீரோவை வெறுப்பதாக காட்டினாலும் அவனுக்காக உருகுவது'
இது எல்லாமே இந்த கதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் நான் என் கதையில் வைத்தேன். அதற்கு முதலில் என்னை மன்னித்துவிடுங்கள்.
பேஸ்புக் காதல், தோழன் ஐடியில் இருந்து உளவு பார்ப்பது எல்லாம் நிஜ வாழ்க்கையில் பலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள். இவை கதையில் வரும் போது மிக அழகாகவும் படிப்பதற்கு சுவாரசியமாகவும் இருந்தது.
இந்த கதையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக சிறு சிறு கதாபாத்திரங்களின் வகிபாகங்கள் கூட அழகாக படைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக பாவனா காரக்டர். வந்தது சில நொடிகள் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த காரக்டர்.
பொதுவாக எனக்கு வில்லிகளை ரொம்ப பிடிக்கும், ஆனால் நான் வெறுத்த ஒரே வில்லி நிஷா. ஏனென்றால் அவள் வில்லிக்கு எல்லாம் வில்லி. தன் காதலனை அடைய அவள் போட்ட திட்டங்கள் எல்லாம் சூப்பர். ஆனால் அவன் மனைவியை அவளுடைய சுய விருப்பின் பெயரிலேயே காணாமல் போக செய்தது சூப்பர் வில்லத்தனம்.
ஷக்தி, கெளதம், அனு, விக்ரம் இந்த காரக்டர்கள் கூட சூப்பராக இருந்தது.
பொதுவாக எனக்கு எபிலோக்ஸ் பிடிக்காது. ஆனால் இந்த கதையில் எபிலோக் அவ்வளவு மோசம் என்று கூறும் அளவுக்கு இல்லாமல் நன்றாகவே இருந்தது.
எல்லாமே நல்லவை மட்டும்தானா என்றால்; சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் உள்ளது , பல இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளது( நீயெல்லாம் எழுத்து பிழை பத்தி பேசுறியேன்னு நீங்க எல்லோரும் நினைக்கிறது எனக்கு புரியுது).ஆனால் அவை எல்லாவற்றையும் கதை ஓட்டம் மழுங்கடிச்செய்கிறது.
ப்ளாஷ்பேக் காதல் மட்டும் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போனது போன்ற உணர்வு.
மொத்தத்தில் இந்த கதை ஒரு வாட்பேட்டின் சூப்பர் டூப்பர் ஹிட்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro