"என்னடி மாயாவி நீ" @maayaadhi
"என்னடி மாயாவி நீ"...
இந்த கதை அடிக்கடி என் கண்களில் படும், காரணம் இதன் தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாகவும் என் கதைகளுக்கு நான் மூன்று சொல்லில் தலைப்பிடுவது போல இருந்ததும் ஒரு காரணம். ஆனால் படிக்க சரியான நேரம் கிடைக்காததால் என்னால் இதை படிக்க முடியவில்லை..
கதைக்குள் சென்றால் .....
வர்ஷித், ஆதிகாவின் திருமணத்திற்கு பின் வரும் காதல்தான் கதையே...மிக எளிமையான கதை கரு. ஆனால் அதை கொண்டு சென்றவிதம் மிக அருமை. குறிப்பாக விஷ்னு இறந்த பின் ஆதிகாவின் திருமணம் நடக்கும். ஆனால் பொதுவாக பல கதைகளில் ஹீரோ உடனே மனம்மாறினாலும் ஹீரோயின் விடாப்பிடியாக புது வாழ்க்கையை வெறுப்பால், ஆனால் இங்கு அது தலைகீழாக இருந்தது மிகவும் பிடித்தது. ஆதிகாவின் ஒவ்வொரு செயல்களும் மிகவும் எதார்த்தமாகவும் ,காதலித்தவன் இறந்துவிட்டானே இன்னொருவனை எப்படி காதலிப்பது என்ற சினிமாத்தனமான எண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கையை எப்படி ஒரு கஷ்டத்தில் இருந்து நகர்த்த வேண்டும் என்பதை மிக அழகாக கூறியிருந்தார் எழுத்தாளினி.
இங்கு வில்லனாக வரும் காரக்டர் கூட கடைசியில் சாகாமல் அவனுக்கும் ஆற்றாமை வரக்கூடியவாறு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவனை போலீசில் சிக்கவைத்தது மிக அருமை. இப்படி ஒரு சீன் நான் படித்தது மிக குறைவு. விஷ்னுவின் தாய் தந்தையரின் பாசம் வர்ஷித்துக்கு கிடைத்த விதம் உங்களில் பலருக்கு எதார்த்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால் நான் இப்படி ஒரு இன்னொரு தாயை என் வாழ்வில் கண்டுள்ளேன். அந்த தாய் அவரின் மகனை எப்படி கவனிப்பாரோ அப்படியே என்னையும் கவனிப்பார். ஒருவேலை அவர் மகன் பெயரே எனக்கு இருந்ததாலோ என்னமோ?.
இந்த கதையில் எனக்கு கொஞ்சம் நெருடலை கொடுத்த இடம் ரொமான்ஸ் சீன்ஸ் மட்டுமே. கதை ஓட்டத்துக்கு தேவையானதை விட கொஞ்சம் அதிகமாக வந்துவிட்டதோ என்ற ஒரு எண்ணம். ஆனால் எழுத்தாளினியின் முதல் கதை என்பதால் இந்த தடுமாற்றம் வருவது மிக இயல்பு. எனக்கு இது ஏற்பட்டதால் அதை நாம் விட்டுவிடலாம்.
கடைசியில் இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் எதுவெனில் ,புது எழுத்தாளினியின் transformation. ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களுக்கும் கடைசி அத்தியாயங்களில் இருந்த எழுத்துக்களுமே அவரின் வளர்ச்சியை வெகுவாக எடுத்துக்காட்டியது. எனக்கு இப்படியான transformation ரொம்பவும் பிடிக்கும்.
இறுதியாக "என்னடி மாயாவி நீ" மாயம் செய்யும் ஒரு அழகான அலட்டல் இல்லாத கதை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro