ஆதிரா By @priyadharshini12
priyadharshini12
மிக நீண்ட நாட்களாக படிக்காமல் இருந்த ஒரு கதையை படித்ததும் ஏன் இத்தனை நாட்கள் இதை படிக்காமல் விட்டோம் என்று முதலில் வருந்தியவனாக,,,
கதை எழுதுவது என்பது இன்றைய உலகில் தடி எடுத்தவன் எல்லாம் சண்டியன் என்பது போல ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக ஒரு பார்முலா சக்சஸ் ஆகிவிட்டால் அதே பார்முலாவை இன்னும் 10 எழுத்தாளர்கள் எடுத்து எழுதும் காலம் இது.எங்கு பார்த்தாலும் காதல் ரசம் சொட்ட (சிலர் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதுவது வேறு விடயம்) கதைகள் உலா வருகின்றன.இதில் சில கதைகள் முகம் சுழிக்காமல் படிக்க முடிகின்றது என்பது கொஞ்சம் சந்தோசமான விடயம்டான்.
"ஆதிரா"வுக்கு விமர்சனம் எழுத வந்து எங்கே சென்று கொண்டிருக்கின்றென்..எழுத்தாளினி ப்ரியதஷினி தனபாலன் 15 வயதிலேயே "மந்திர தேசம் "என்ற தன் கன்னி முயற்சி மூலம் வாட்பெட்டிற்கு அறிமுகமாகி இன்று 4 கதைகளை முடிட்டுள்ளார் என்பது எழுத்துக்கலைக்கு வயது ஒரு விடயம் அல்ல என்பதற்கு உதாரணமாகியுள்ளார்.
"ஆதிரா", என்னடா ஒரு பெண்ணின் பெயர் கதையின் தலைப்பாக உள்ளதே , "ஆகாஷனா" போல இதுவும் பெயரை மையப்படுத்திய ஒரு கதையாக இருக்குமோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால் கதை படிக்க ஆரம்பித்து 3 வது பகுதியிலேயே புரிந்துவிட்டது இது ஒரு மாஸ்டர் பீஸ் ஆக போகின்றது.கதையின் ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சமும் வாசகர்களை சலிப்படைய செய்யாமல் கதையுடன் அவர்களை கட்டி போட்டு எழுதியமைக்கு எழுத்தாளினிக்கு எனது பெரிய கதை தட்டல்.
கதை ஆரம்பித்தது முதல் முதல் 10 பகுதிகளிலும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். ஒரு ஹாரர் மூவி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.அதே போல காட்டில் மங்களாபுரி அரசு, சம்ஹித்த வம்சத்தவர்கள் என எல்லோரையும் அச்சு அசலாக எங்கள் கண் முன் உங்கள் எழுத்து மூலம் இலகுவாக கொண்டுவந்திருந்தீர்கள்.அந்த அருவி என் கற்பனையில் ஆருத்ரா காலத்தில் எப்படி அழகாக இருந்தது என்பதும் ஆதிரா காலத்தில் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்பதையும் மிக நேர்த்தியாக இலகுவாக கண் முன் நிறுத்திய திறமை ஒரு சிலருக்கே இந்த வாட்பெட்டில் உண்டு.
கதையில் லீட் ரோல்களை வர்ணித்ததைவிட வில்லன் காரக்டர்களின் வர்ணிப்பும் அதில் இருக்கும் உக்கிரத்தையும் மிக அழகாக காட்டியிருந்தீர்கள். பான்டசி கதைகளுக்கு லாஜிக் பார்க்க கூடாது என்பது எழுடப்படாத சட்டம். ஆனால் இங்கு கதையின் லாஜிக் கூட சரியாக பொருந்தியிருப்பது ஆச்சரியம். அதிலும் ஏதோ ஒரு எபிசோட்டில் வரும் கவிதை இன்னொரு எபிசோட்டின் லீட் ஆக மாறுவது எல்லாம் வேற லெவல் ரைட்டிங்க்.உங்கள் எழுத்தில் "செக்கோவ்ஸ் கன்"தியரி ஞாபகம் வந்தது. அது என்ன தியரி என்பவர்களுக்கு ஏதோ ஒரு எபிசோட்டில் சுவற்றில் மாட்டியிருக்கும் துப்பாக்கியானது இன்னொரு எபிசோட்டில் மிக முக்கிய கதாபாத்திரமாக மாறுவது..
இந்த கதையில் எழுத்துப்பிழைகள் அதிகமாக இருந்தது.சில இடங்களில் எழுத்துப்பிழையினால வசனங்களை சரியாக வாசிக்க முடியாமலும் இருந்தது.எதிர்காலத்தில் இதை கொஞ்சம் திருத்தினால் நன்றாக இருக்கும்.
கடைசியாக எழுத்தாளினி குட்டி தங்கை (இப்போ பெரிய ஆளு அவங்க) க்கு வாழ்த்து தெரிவித்து,
இன்னும் பல பேன்டசி கதைகளை மட்டும் எழுதும் படி பணிவாக வேண்டுகிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro