"அவளை காதலித்ததில்லை" By @Guardionofthemonn
கதைக்குள் சென்றால்..
அவள்,மித்திரன்,நித்தின்,லாவன்யா,மனோஜ் அவ்வளவுதான்.சாதாரண கணவன் மனைவிக்குள் நடக்கும் ஒரு கதை.ஆனால் அதை கூறியிருந்த விதம் அருமையிலும் அருமை.எத்தனையோ கதைகளிள் படித்து பல கதாநாயகிகள் எனக்கு க்ரஷ் ஆக இருந்துள்ளார்கள். ஆனால் இங்கு அவள் பெயர் இல்லாமலேயே படிப்பவர் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டால் என்றால் மிகையாகாது.
கதையில் எனக்கு எல்லா சீன்களும் மிகவும் பிடித்தாலும் குறிப்பாக ஆரம்பத்தில் அவள் மித்திரன் மடியில் உட்காருவது, மித்திரன் லாவன்யா பற்றி கூறும் போது அவளின் ரியாக்சன், இறுதியாக மரங்கள் பற்றி வரும் வரிகள்.ரைட்டர் எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல.அதிலும் தன் தோழி மித்திரனிடம் போய் திட்டிவிட்டு வரலாம என்று கேட்கும் போது அவளது ரியாக்சன் சூப்பர்.லாவன்யாவுக்கு என்ன பதில் கூறலாம் என்பதற்கே ஒரு அப்டேட் ப்ளாஷ்பேக்காக வந்தது எல்லாம் வேற லெவல் ரைட்டிங்க்.மித்திரன் அவளிடம் "எனக்கும் இப்படி ஏதும் கஷ்டம் வந்தா விட்டிடு போயிடுவியா?" என்று கேட்க " நான் கஷ்டகாலத்துல விட்டுட்டு போயிடுவேனா மித்திரன் " என்ற அவளின் கேள்வி ,ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதிலாக வரும் என்பதெல்லாம் awesome.
கதை முழுவதும் வசனங்கள் எல்லாமே மணிரத்னம் படத்தில் வருவது போல Crystal Clear and sharp.தேவையில்லாமல் ஒரு சொல் கூட இடம்பெறாமல் இருந்தது கூடுதல் பலம்.
இந்த கதையில் எல்லாமே பாசிட்டிவ்தான் அப்படி என்றால் நெகடிவ் கூற எதுவுமில்லை என்றால் கண்டிப்பாக உண்டு. கதை அத்தியாயத்துக்கு அத்தியாயம் வேறு வேறு இடங்களுக்கு பயணிக்கும்.ரைட்டர் தொடர்ச்சியாக அப்டேட் போடாமல் மிக,மிக தாமதமாக அப்டேட் போடும் போது வாசகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
இந்த கதை வாட்பெட்டின் முத்துக்களில் ஒன்று.நான் கதை படிக்க ஆரம்பித்த நாட்களில் அதிகம் படித்த கதை இதுதான். எப்பொழுதெல்லாம் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க நினைப்பேனோ அப்போதெல்லாம் இந்த கதைதான் எனக்கு துனை. வாட்பெட்டில் அதிகம் நான் படித்த கதை இதுதான். எத்தனை தடவை படித்தேன் என்பது எனக்கே நினைவில்லை.இந்த கதை படிப்பதற்கும் மிக இலகுவாக இருக்கும்.காரணம் அத்தியாயங்கள் எல்லாம் மிகப்பெரியதாக இல்லாமலும் போரிங்க் இல்லாமலும் செல்லும்.
காதலிக்காமல் திருமணம் செய்தவர்களுக்கு இக்கதை ஒரு நல்ல உணர்வை கொடுக்கும். ஆனால் காதலித்து திருமணம் முடித்து வேலை பழு காரணமாக தன் துனையிடம் நேரம் செலவிடமுடியாதவர்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதம்.
வாட்பெட்டில் கதை எழுத விரும்புபவர்களுக்கு இந்த கதை ஒரு கைட்லைன் போன்றது. இறுதியாக அவளை காதலித்ததில்லை எப்போதும் நான் காதலிக்கும் ஒரு நாவல்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro