Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

25

அடுத்த நாள் காலை தன் கடமை தவறேன் என்று சபதம் எடுத்தவன் போல் செங்கதிரவன் காலையில் தன் கதிரொலியை இவ்வுலகிற்கு பரப்ப இங்கே கடற்கரையில் நின்றிருந்த இருவருக்கும் அவ்விடியில் வாழ்விலும் பெரும் விடியலாகவே அமைந்தது .

கையில் அஸ்திக்கலசத்துடன் கடலையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த மஹதியின் அருகில் வந்த ஆதித்தன் அவள் தோளில் கை வைக்க சுயநினைவை பெற்றவள் கண்களில் நீருடன் அவனை நோக்க அவனோ சென்று உன் கடமையை செய் என்பதைப் போல் கடலை காட்டினான் .

ஒரு பெரு மூச்சு எடுத்துவிட்டவள் அந்த அஸ்திக்கலசத்தோடு கடலில் இறங்கினால் அந்த கலசத்தில் இருந்த தன் தமக்கையின் அஸ்தியை தன் சபதத்தை நிறைவேற்றிய நிறைவுடன் கரைத்தவள் மூன்று முறை கடலில் முங்கி எழுந்து ஆதித்தனின் அருகில் நின்று கொண்டால் .

அவன் அவள் கையை பற்றி தன் கைக்குள் வைத்துக்கொள்ள அவளோ அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் "ஹரிஷ் " என்று மெல்லமாய் அழைக்க

அவன் "ம்ம் சொல்லுடா "என்க

அவள் "நா வேலைய resign பன்னிரவா?"என்க

அவனோ அதிர்ந்து விழித்தவன் அவள் தோளை பற்றி தன் எதிரே நிறுத்தியவன் "லூசாடி நீ இப்போ என்ன நடந்துச்சுனு வேலைய விட போற நீ ?"என்க

அவளோ அவன் கண்ணை நோக்கியவள் "சட்டத்தை காப்பாத்தி தண்டனை வாங்கி தரத்துக்கு தான் போலீஸ் .ஆனா அந்த சட்டத்தை மதிச்சு காப்பாத்துற எடத்துல இருக்குற நானே என் கையாள துடிக்க துடிக்க ஒருத்தன கொன்னுருக்கேன் .எப்போ என் கைல நா சட்டத்தை எடுத்தேனோ அப்போவே நா இந்த வேலைல இருக்குறதுக்கான தகுதியை இழந்துட்டேன் ஹரிஷ் குற்ற உணர்ச்சியோட என்னால இந்த வேலைய பார்க்க முடியாது "என்க

அவனோ "லூசு மாறி பேசாத மஹி நீ என்ன உலகமகா உத்தமனையா கொன்ன குற்றஉணர்ச்சியோட இருக்க ?"என்க

அவளோ "உத்தமனை கொன்னேனோ கெட்டவன கொன்னேனோ கொன்னது கொன்னது தான என்னால முடியாது ஹரிஷ் "என்று விட்டு கடலை வெறிக்க

அவனோ சற்று நேரம் மௌனமாய் இருந்தவன் "உன் இஷ்டம் "என்றுவிட்டு அவளை பார்க்க அவளோ அவனை நோக்கி ஒரு இளநகை புரிந்தாள்.

அவள் சிரித்தமுகத்தை பார்த்தவனின் இதழிலும் புன்னகை ஒட்டிக்கொண்டது .சிறிது நேரம் அப்படியே கழிய மஹதி சற்று தயக்கத்துடன் மீண்டும் அவனை அழைத்தாள் "ஹரிஷ் நா உன்ட ஒன்னு சொல்லணும் "என்று

அவன் அவளை கேள்வியாய் நோக்க தனது மூன்று வருட போலீஸ் வாழ்க்கையில் குற்றவாளிகள் தனது நெற்றிப்பொட்டிற்கு நேராய் ஏந்திய துப்பாக்கியையும் கத்தியையும் கண்டு நிமிர்ந்து நின்று சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த தன் குரலால் பிறருக்கு கட்டளை பிறப்பித்தவள் தன் முன்னே நிற்கும் தன் மனம்கவர்ந்தவனின் பார்வை வீச்சில் தடுமாறி முதல் முறையாய் நிலம் நோக்கினால்.

அவனை அன்று ஓடி வந்து அணைத்ததிலேயே அவள் மனதை அறிந்துகொண்டவன் அவள் வாய் வழி அதை கேட்பதற்கு ஆவலாய் இருக்க அவளோ "அது வந்து ஹரிஷ் எனக்கு பசிக்குதுடா சாப்பிட போலாமா?"என்க

இவனிற்கோ புஸ்சென்றாகிவிட்டது அவளை செல்லமாய் முறைத்தவன் "இதுக்கு தான் இந்த இழு இழுத்தியா வாரும் வந்து தொலையும்"என்றவன் "நா கூட என்னென்னமோ expect பண்ணேன் க்ரதாகி எப்போ பாரு புல்புஹ் குடுக்குறதே வேலையா போச்சு "என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே வர

அவன் முணுமுணுப்பதை தெளிவாய் கேட்ட மஹதி தன்னுள்ளே சிரித்துக்கொண்டவள் "மவனே உயிரோட இருந்தும் என் முன்னாடி வராம என்ன அழ விட்டல உன்ன வச்சு செய்றேன் டா"என்று நினைத்தவள் அவன் வேகத்திற்கு ஈடாய் நடந்தால் அவனோடு .இருவரின் கால்களும் ஒரே பாதையில் பயணிக்க இருவரின் நிழலும் ஒன்றோடொன்று உறவாடியபடி அவர்களை பின்தொடர்ந்தது.

இங்கே சரண் ஸ்வஸ்திகா விக்ரம் நவ்யா நால்வரும் வெளியே ஏலகிரிக்கு வந்திருந்தனர்.அனைத்து பிரெச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட மூன்று நாட்கள் விடுப்பெடுத்துக்கொண்டவர்கள் ஒரு குட்டி ட்ரிப் செல்ல முடிவெடுத்து வந்திருந்தனர்.சரணும் ஸ்வஸ்திகாவும் செல்வதால் நவ்யாவை நம்பி அனுப்பி வைத்திருந்தனர் வித்யுதும் சைந்தவியும்.

பாட்டும் கூத்துமாய் சென்றுகொண்டிருக்க காரில் நவ்யா எதிலும் பங்கெடுக்காமல் உம்மென்று வருவதை பார்த்த ஸ்வஸ்திகா அடுத்து விக்ரமை கவனிக்க அவனும் முகத்தை பாறையால் செய்ததை போல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் .முன் சீட்டில் சரண் அமர்ந்து வம்பிழுத்துக்கொண்டே வர அவனிற்கு பதிலளித்த விக்ரம் மறந்தும் நவ்யாவின் புறம் திரும்பாமல் இருக்க இங்கே ஸ்வஸ்திகா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வெறும் ம்ம் மட்டும் கொட்டிய நவ்யா விக்ரமையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் .

நவ்யாவிடம் இதை பற்றி கேட்கலாம் என்று நினைத்த ஸ்வஸ்திகா அவளை நோக்கி திரும்ப வண்டி நிறுத்தப்பட்டது.பின் இருக்கையின் ஜன்னல் பக்கம் வந்த சரண் "ஓய் கத்திரிக்கா என்ன கனவு கண்டுக்கிட்டு இருக்கியா வெளிய வந்து பாரு scenery செம்மையா இருக்கு "என்று அவள் கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு போக அங்கே பச்சை போர்வை விரித்தார் போல் சுற்றிலும் பச்சைப்பசேல் என்று இருந்த மலைமுகடுகளும் சில்லென்று உடலை தழுவிச்சென்ற கூதல்காற்றுடன் கையில் எட்டி பிடிக்கும் தூரத்தில் தவழ்ந்து சென்ற மேகங்களும் அங்கே நடப்பட்டிருந்த ஏலக்காய் மற்றும் தேயிலையின் சுகந்த மணமும் நாசியில் நுழைந்து ரசனையை தூண்ட அந்நிமிடம் குழந்தையாய் மாறிய ஸ்வஸ்திகா சரணின் கையேடு தன் கை கோர்த்தவாறு அந்த எஸ்டேகளின் நடுவே நடக்க துவங்கினால் .

இங்கே இவர்கள் சந்தோஷமாய் நடக்க துவங்க அங்கே எதிர்திசையில் நடந்து சென்றுகொண்டிருந்த விக்ரமின் பின்னே விக்ரம் விக்ரம் என்று கத்திக்கொண்டே வந்தால் நவ்யா எனில் அவன் அவள் கத்துவதை காதிலேயே வாங்க வில்லை.

ஓடி சென்று அவன் கையை பிடித்தபடி மூச்சு வாங்கியவள் "இப்போ ஏன் விக்ரம் நேத்துல இருந்து பேசாம இருக்கீங்க ?"என்க

அவளை ஒரு முறை முறைத்தவன் கையை பட்டென தட்டி விட்டு நடக்கத்துவங்கினான் .மீண்டும் அவன் முன் ஓடி சென்று வழியை மறுத்தவள் "என்னாச்சு விக்ரம் ஏன் இப்டி என்ன avoid பண்றீங்க நா என்ன பண்ணேன் ?"என்க அவனோ அவளை அலட்சியம் செய்தவன் அவளை பேசாம போயிரு என்ற அர்த்தத்தில் ஒற்றை விரலை நீட்டி முறைத்தவன் ஓரமாய் தள்ளி விட்டு முன்னே நடக்க துவங்கினான் .

அவன் செல்வதையே வெறித்துப்பார்த்தவள் பின் அவனுடன் மௌனமாய் நடக்கத்துவங்கினாள்.முதல் முறை அவர்களுக்குள் வந்த ஊடலின் போதும் அவளை கண்டுகொள்ளாமல் இருப்பானே ஒழிய அவளை இப்படி மொத்தமாய் ஒதுக்கியதில்லை அவள் பற்றிய அவன் கையை அவன் பட்டென தட்டி விட்டது நவ்யாவின் மனதில் பெரும் காயத்தையே ஏற்படுத்தியது.சுற்றி இருக்கும் அந்த இதமான சூழலில் இவ்விரு இதயங்களும் இறுக்கமான மனநிலையில் பயணித்தது .

இங்கே இவர்கள் இப்படி இருக்க அங்கே சரணுடன் சென்ற ஸ்வஸ்திகாவிற்கோ ஏனடா இவனுடன் வந்தோமென்றாகி விட்டது ஒவ்வொரு அடிக்கும் ஒரு போட்டோ எடுக்க வைத்தான் அவளை .

அவன் ஒவ்வொரு இன்ச்சிற்கும் நின்று அவனை போட்டோ எடுக்க கூற அவளோ கடுப்பானவள் "எரும ஏன்டா இவ்ளோ போட்டோ எடுத்து தொலையுற ?"என்க

அவனோ அவள் தோளில் கையை போட்டவன் "அது ஒண்ணுமில்ல கத்திரிக்கா உனக்கு மாப்ள பாக்குறதுக்கு என் அத்த ஒரு albumeh வச்சுருக்காங்க நல்ல நல்ல போட்டோவா ஆனா எனக்கு பொண்ணு பாக்குறதுக்கு குடுக்க ஒரு நல்ல போட்டோ கூட இல்லையே அதான் இப்டி போட்டோவா எடுத்து தள்ளுறேன்.அய்யா அழகா பாத ஒடனே அந்த பொண்ணு பிளாட் ஆயிடனும்ல "என்று கண்ணடித்து கூற சிரித்துக்கொண்டிருந்த அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது .

அவன் ஏதேதோ பேசிக்கொண்டே வர அவள் கருத்தில் எதுவுமே பதியவில்லை அவன் கூறிய அந்த வார்த்தைகளையே மனம் சுற்றி சுற்றி வந்தது .மனதில் ஏதோ தாங்க முடியாத பாரத்தை வைத்தார் போல் உணர்ந்தவள் அதற்கான விடை தெரியாமல் குழம்ப அவனோ அவளின் திடீர் அமைதியில் குழம்பியவன் அவள் தோளை தொட்டு உலுக்கியவன் "ஓய் கத்திரிக்கா என்ன கனவுலகத்துக்கு போய்டியா ?"என்க

அவளோ "ஆங் ஒண்ணுமில்ல சரண் "என்க அவனோ அவளை தோளோடு அணைத்தவன் அங்கிருந்த இடங்களை சுட்டிக்காட்டியபடியே ஏதேதோ கூறியபடி காரிற்கு அவளை அழைத்து வந்தான் .

அவர்களுக்கு முன்பே நவ்யாவும் விக்ரமும் காரிற்கு வந்திருந்தனர் .ஸ்வஸ்திகா அன்று முழுவதும் தனக்கு ஏன் அவனை வேறொரு பெண்ணுடன் இணைத்து பார்க்க நினைக்கையிலேயே இத்தனை கோபம் வருகிறதென்று யோசிக்க நவ்யாவோ தான் என்ன தவறு செய்ததற்காக இவ்வாறு தன்னை ஒதுக்குகிறான் என்ற நினைவில் வந்தனர் .

இவ்வாறே ஒவ்வொரு மனநிலையில் இருந்தவர்கள் அவர்கள் தங்கும் cottageirku வந்ததும் கீழிறங்க நவ்யா அவளது luggageay எடுக்க போக விக்ரமோ அவள் கையை பட்டென தட்டி விட்டவன் தானே அவளது luggageai எடுத்து சென்றான் அவன் செல்வதையே பார்த்தவள் மனதில் "இந்த அக்கரைக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல ஆனா எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு மாறி முறைச்சுட்டு இருக்காருன்னு மட்டும் சொல்ல மாட்டாரு கடவுளே இவரை கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறேனோ ?"என்று நினைத்தவள் உள்ளேயே சிரித்துக்கொண்டாள் கோபமாய் இருக்கும்பொழுதும் தன் மேல் அக்கறையை காட்டும் தன்னவனின் செயலில் .

பின் ஸ்வஸ்திகாவுடன் தங்களிற்கு கொடுக்கப்பட்டருக்கும் அறைக்குள் சென்றவள் குளித்து விட்டு வெளியே வர ஸ்வஸ்திகாவோ அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவள் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தால்.அவளது விசித்திரமான நடவடிக்கையை பார்த்தவள் "ஸ்வஸ்தி "என்றழைக்க

மிரண்டு விழித்தவள் "என்ன நவி"என்க

நவ்யாவோ புருவத்தை சுருக்கியவள் "அதை நா உன்ட கேக்கணும் என்ன குட்டி போட்ட பூனை மாறி அங்குட்டும் இங்குட்டும் நடந்துட்டிருக்க "என்க

அவளோ "அது வந்து அது நவி அது எப்படி சொல்ல அது "என்று பிதற்ற

நவ்யாவோ அவன் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவள் "என்ன பிரச்னை உனக்கு காலைல இருந்த நல்லா தான இருந்த இப்போ என்னாச்சு ?"என்க

அவளோ சற்று நிதானித்தவள் பின் நவ்யாவை நோக்கி "இந்த லவ் வந்தா என்ன symptoms ,side effectslaam இருக்கும்டி?" என்க

நவ்யாவோ அவளை சற்று உற்றுநோக்கியவள் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் அவளை பார்த்துக்கொண்டே விழுந்து விழுந்து சிரித்தவள்"சிம்ப்டன்ஸ், side effectsaah அது என்ன நோயா டி ஆனாலும் உன் டாக்டர் புதிய இப்டி காமிக்காதடி "என்க

ஸ்வஸ்திகாவோ இடுப்பில் கை வைத்து அவளை முறைக்க தன் சிரிப்பை அடக்கிய நவ்யா ஸ்வஸ்திகாவின் கையை பற்றி "லவ் அது ஒரு தனித்துவமான பீல் டி .அப்பா ,அம்மா அண்ணன் தங்கச்சி இப்டினு எவ்வளவோ உறவிருந்தாலும் அவுங்களோட அருகாமைக்கு மனசு ஏங்கும்."

என்க

ஸ்வஸ்திகாவிற்கோ ஆதித்தன் இல்லாதபோது அவன் அன்னையும் தந்தையும் அத்தனை தூரம் ஆறுதல் கூறியும் ஆறுதலடையாதவள் மனது அவனின் ஒற்றை அணைப்பில் ஆறுதலை தேடியது நினைவில் வந்தது .

"அவுங்க முன்னாடி நாம நடிக்க மாட்டோம் நாமளாவே இருப்போம் எத்தனை அடுச்சுக்கிட்டாலும் ஒரு ரெண்டு நாள் கூட முழுசா பேசாம இருக்க முடியாது எதையோ இழந்த மாறி இருக்கும் "என்க

ஸ்வஸ்திகாவிற்கோ அவனிடம் எத்தனை முறை சண்டை இட்டாலும் இரவிற்குள் சரி ஆகா விட்டால் இருவருக்கும் தூக்கம் வராது ஒரு முறை நடு இரவிலெல்லாம் அவள் வீட்டு balconikkul குதித்து அவள் அறைக்குள் வந்தவன் அவளை எழுப்பி சமாதானம் ஆன பின்பே வீடு போய் சேர்ந்தான் .

அதை நினைத்த ஸ்வஸ்திகாவின் இதழ்கள் புன்னகையை சூடிக்கொள்ள மேலும் கவனிக்க துவங்கினால்

"கேட்க கொஞ்சம் சுயநலமா தெரியும் ஆனா அவுங்க அன்பும் அக்கறையும் நமக்கு அதிகமா கெடைக்கணும்னு தோணும் அவுங்க கூட இல்லேனா எதையோ இழந்த மாறி இருக்கும் .finally வேற எந்த பெண்ணோடயும் அவுங்கள வச்சு நெனைச்சு பாக்கேலயே உடம்பெல்லாம் எரியுற மாறி இருக்கும் இதெல்லாம் இருந்ததா hundred percent sureaah சொல்லலாம் அவுங்க லவ் பன்றாங்கன்னு என்றவள் ஆமா இதை ஏன் நீ கேக்குற "என்று திரும்ப ஸ்வஸ்திகாவோ கோல்கேட் விளம்பரத்தில் வருவதை போல் இளித்துக்கொண்டிருந்தால் .

அவளை பார்த்து ஒரு விசித்திரப்பார்வையை வீசிய நவ்யா "ஸ்வஸ்தி "என்று அவள் தோளை தொட

ஸ்வஸ்திகாவோ அவளை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டவள் "thank யூ சோ muchdi செல்லம் என்ன எனக்கே புரிய வச்சுட்டு இனி பாரு இந்த ஸ்வஸ்தியோட ஆட்டத்தை "என்றவள் தலையணையை கட்டிப்பிடித்து உறங்க துவங்க நவ்யாவோ அவளின் விசித்திர நடவடிக்கையில் குழம்பியவள் கன்னத்தை தேய்த்துவிட்டு லூசு என்று முனங்கிவிட்டு படுத்தாள் விக்ரம் தன்னை ஏன் ஒதுக்குகிறான் என்று புரியாமல் .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro