22
ஹரிஷின் குரலை கேட்ட மஹதி அவ்விடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிட சற்று நேரத்தில் தன்னை மீட்டெடுத்தவள் "விக்ரம் சரண் அந்த இடத்துக்கு போலாம் "என்க
விக்ரம் "மஹதி ஏதாச்சும் prank callaah கூட இருக்கலாம் அந்த இடத்துக்கு போய் ஏதும் ரிஸ்க் ஆயிர போது"என்க
அவளோ ஜீப்பில் ஏறியவள் "நம்ம கேள்விக்கான எல்லா விடையும் அந்த எடத்துல தான் இருக்கு வாங்க "என்க
சரணும் விக்ரமும் ஒருவரை மற்றொருவர் ஒரு முறை குழப்பத்தோடு பார்த்துக்கொண்டவர்கள் மஹதியின் ஜீப்பில் ஏறினர் .அசுர வேகத்தில் வண்டியை அந்த இடம் நோக்கி செலுத்தினால் மஹதி கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிய உதட்டில் என்றும் இல்லாத புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது .
அவள் முகத்தை என்றுமே ஒரு பாறாங்கல்லை போல் இறுகிய பார்த்த விக்ரமிற்கு சரணிற்கும் இன்று மனதின் உணர்ச்சிகள் அனைத்தையும் முகத்தில் காட்டியவாறு அமர்ந்திருக்கும் மஹதி மிகவும் முற்றிலும் புதுமையானவளாய் தெரிந்தால் .போனில் அந்த மர்மநபர் கூறப்பட்ட இடத்திற்கு வர அதுவோ ஒரு பாழடைந்த மண்டபம் போல் இருந்தது .
பல வருடங்களாய் அங்கே ஆள் நடமாட்டமே இல்லாமல் இருப்பதற்கு அடையாளமாய் விழுதுகளும் புழுதி மேடுகளும் அந்த மண்டபத்தை மண்டி கிடந்தது .ஜீப்பில் இருந்து இறங்கிய மஹதி ஒருவித அலைப்புறுதலுடன் அந்த மண்டபத்தை நோக்கி உள்ளே சென்றால் .அவளை பின் தொடர்ந்து சென்றனர் விக்ரமும் சரணும்.
உள்ளே இருட்டாய் இருக்க சுற்றி முற்றி பார்வையை திரும்பியவள் கண்ணில் பட்டது கையில் விளக்கை ஏந்தியபடி சற்று தொலைவில் பின்னே திரும்பியவாறு நின்றிருந்த உருவம் .
அதன் அருகே செல்ல செல்ல அவள் இதயத்துடிப்பு இருமடங்கை தாண்ட கைகளில் நடுக்கம் பரவி நா வரல கால்கள் எத்தனை முடியுமோ அத்தனை வேகமாய் அவ்வுருவதை நெருங்கியது .அந்த விளக்கின் ஒளி அவள் முகத்திலும் வீசும் தூரத்திற்கு வந்தவள் அந்த உருவத்தின் தோளில் நடுங்கும் தன் கரத்தை வைக்க திரும்பியவனின் முகத்தை பார்த்தவள் உணர்ச்சியை வார்த்தைகளில் அடக்க முடியாது .ஆனந்தம் அளவிலடங்கா ஆனந்தம் உள்ளில் வெந்து உருகிய உயிர்த்துளிகள் கண்ணீர்துளிகளாய் வெளியேற உடைந்து சிதறிய இதயத்தின் சில்லுகள் அனைத்தும் அவன் சிரித்த முகம் கண்டு சிலிர்ப்புற்று ஒன்று சேர்ந்தாற்போல் இருக்க ஹரிஷ் என்று கதறியவள் சிறுகுழந்தையாய் மாறி அணைத்துக்கொண்டாள் தான் கனவாய் சென்றதாய் நினைத்து நினைவாய் தன் முன் நிற்கும் தன் மனம் கவர்ந்தவனை .
அடுத்தநொடி அந்த இடம் ஒளியூட்டப்பட ஹரிஷ் ஆதித்தனின் கரங்களும் தன்னவளின் இடையை தன் கரங்களால் வளைத்தவன் அவளை தன்னுள் புதைத்துக்கொள்ளுபவன் போல் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான் மஹி என்ற ரகசிய அழைப்புடன் .
அவன் மார்பில் இருந்து தன் முகத்தை எடுத்தவள் அவன் முகம் தோளை அங்குலம் அங்குலமாய் வருடியவள் அவன் சட்டையை கொத்தாய் பிடித்து ஏன்?ஏன் ?என்று கதறியவாறே அவனது மார்பில் அடித்துக்கொண்டே கத்தி அழுதாள்.அத்தனை வருடங்களாய் மனதில் அழுத்திய பாரத்தை மொத்தமாய் கண்ணீரின் வழி இறக்கிவிடுவதை போல் அழுதாள்.அவளை தன்னோடு மேலும் இறுக்கி அணைத்தவன் ஏதும் பேசாது நின்றான் அவள் அடித்து அழுது ஓயட்டும் என்று .
அவன் கண்களிலும் சிறுதுளி கண்ணீர் வெளி வந்தது .தான் உயிரினும் மேலாய் காதலித்தவள் தன் கண் முன்னே ஆறுதலிற்கு சாய தோள் இன்றி அனாதையாய் அவள் தமக்கையின்றி தவித்த தவிப்பை நேரில் கண்டும் வெளி வராது போன தன் இயலாமையை நினைத்து தன்னையே நொந்தவன் இனி அவளிற்கு எல்லாமுமாய் தான் இருப்பேன் என்று புரியவைப்பதை போல் அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாய் தன் முதல் முத்திரையை பதித்தான் ஆதித்தன் .
இவர்கள் இங்கே உலகம் மறந்து ஒருவரை ஒருவர் அணைத்தபடி நிற்க ஆதித்தனை உயிரோடு கண்டது ஒரு அதிர்ச்சி என்றால் மஹதியும் அவனும் அணைத்துக்கொண்டிருப்பது மாபெரும் அதிர்ச்சியாய் இருக்க கண்ணெடுக்காமல் வாயினுள் நாய் போகுமளவு வாயை பிளந்து கொண்டு கண் விரித்து சரண் பார்த்துக்கொண்டிருக்க .
அவன் தோளில் அடித்த விக்ரம் "டேய்ய் என்னடா ஆணு பாத்துட்ருக்க என்னடா நடக்குதிங்க "என்க அவன் கேள்விக்கு அவன் பின்னிருந்து பதில் வந்தது "அதை நாங்க சொல்றோம்" என்று யாரென்று திரும்பி பார்க்க அங்கோ கைகளை கட்டியவாறு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி நின்றிருந்தனர் நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் .
நவ்யாவின் அருகில் வேகமாய் சென்ற விக்ரம் அவள் தோளை பற்றியவன் "உனக்கு உனக்கு ஒண்ணுமில்லேல நவி நா நா ரொம்ப ...."என்று பேச முடியாமல் தவிக்க
அவளோ அவன் மார்பில் சாய்ந்து தன் கரங்களால் அவனை சுற்றி அணைத்துக் கொண்டவள் "ஷ்ஷ்ஷ் ஒண்ணுமில்ல விக்ரம் எனக்கு ஒண்ணுமில்ல i am fine "என்க அவளை தானும் அணைத்த விக்ரமின் பார்வை அவளிற்கு பின்னிருந்த தூணிற்கு சென்று அப்படியே உடல் விறைத்து நிற்க அவன் பார்வை செல்லும் இடத்தை பார்த்த நவ்யா விக்ரமை பார்த்து ஒரு வெற்றிச்சிரிப்பு சிரிக்க
விக்ரமோ அதிர்ச்சியுடன் "வி வி விக்ராந்த்....."என்க
அவன் பின்னே ஹரிஷின் குரல் கேட்டது "விக்ராந்த்தே தான் விக்ரம்" என்று மஹதியை கை பற்றி அழைத்துவந்தவன் விக்ரமின் முன் நின்று சிரிக்க விக்ரமோஆதித்தனையும் அவன் கையை தன் கையோடு கோர்த்திருந்த மஹதியையும் விக்ராந்தையும் நவ்யாவையும் மாறி மாறி பார்த்தபடி நிற்க
சரணோ "டேய்ய் என்னதான்டா நடக்குதிங்க ?நீ எப்படி உயிரோட வந்த இவன் எப்படி இங்க வந்தான் இவளுங்கள கடத்திட்டாங்கனு நாங்க தெரு தெருவா அலைஞ்சா இவளுக coolaah நிக்கிறாளுங்க இங்க என்ன தான் நடக்குது ?"என்க
நவ்யா "அதை நான் சொல்றேன் அண்ணா."என்றவள் கூறத்துவங்கினாள் சதி செய்தவனை வலையில் வீழ்த்திட இவர்கள் செய்த சூழ்சியை
அன்று விக்ரமிடம் தான் ஆதாரங்கள் சேகரிப்பதற்கு கூறி சென்ற ஆதித்தன் தனது தோழியான மமதியுடன் இணைந்து விக்ராந்திற்கு எதிரான தகவல்களை சேகரிக்க துவங்கினான் .இருவரும் வெளியிலிருந்தே முக்கால்வாசி ஆதாரங்களை சேகரித்து விட அங்கு நடக்கும் மோசடியை நேரடியாய் படம் பிடிப்பதற்காக அங்கே வேலை செய்யும் ராகுல் என்பவனின் உதவியுடன் திருட்டு தனமாய் அங்கே வீடியோ எடுக்க அந்த இண்டஸ்ட்ரியினுள் நுழைந்தனர் .
ராகுல் "மமதி ஆதி இது ரொம்ப ரொம்ப ரிஸ்க்கான விஷயம் இங்க மனுபாக்ட்டரிங் யூனிட்க்கு செரியா 20 பெரு தான் வேல பாப்பாங்க.id இருந்தா தான் உள்ள விடுவாங்க எப்டியோ ரெண்டு பேர அடுச்சு போட்டு அவுங்க idyah குடுத்துருக்கேன் எக்காரணத்தை கொண்டும் உங்க முகத்துல இருக்குற maskah கழட்டிராதீங்க.இங்க கம்பெனி கார் மோதிக்கொண்டு என் பேர்ல தன் ரேகிச்டேர் ஆயிருக்கும் உங்களுக்கு எது ஆனாலும் அது என்னையும் தான் பாதிக்கும் so be careful "என்க
மமதி "அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் ராகுல் நீ இங்கிருந்து கெளம்பு உனக்கு பிரச்னை வந்துர போது "என்றவள் அவனை அனுப்பி வைத்து விட்டு ஆதியுடன் உள்ளே சென்றால் .
உள்ளே சென்று ஆராய்ந்தவர்கள் வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே ஓவ்வொரு யூனிட்டையும் ஆராய அதில் ஒரு குறிப்பிட்ட அறையில் expiry ஆன மாத்திரைகளை சாதாரண மாத்திரைகளுடன் கலக்கும் பணி நடைபெற அங்கு திருட்டுத்தனமாய் உள்ளே சென்ற மமதையும் ஆதியும் அதை தாங்கள் கொண்டு வந்திருந்த secret cameraavil படமெடுக்க திடீரென்று ஏதோ ஒரு பொருள் மூக்கினுள் நுழைய பெருங்குரலில் தும்மிய ஆதித்தனின் மாஸ்க் அவன் கையோடு வந்துவிட அவனின் முகத்தை போனது அவன் வேற்று ஆள் என்பதை அறிந்து கொண்ட பணியாளர்கள் ஆதித்தனையும் மமதியையும் துரத்த ஆரம்பித்தனர்.
எப்படியோ உள்ளிருந்து தப்பித்து வெளியே வந்தவர்கள் தாங்கள் வந்திருந்த scootyil வெளியேற அவர்களை தொடர்ந்து ஐந்து கார்களில் ஆட்கள் துரத்திக்கொண்டு வந்தனர்
மமதி "ஆதி சீக்கரம் போ புடுச்சாங்கன்னா செத்தோம் "
ஆதித்தன் "பயப்படாத மமதி போயிரலாம்" என்று வேகத்தை கூட்ட அந்த பின்தொடர்ந்த காரிலிருந்து ஒருவன் scooty டயரை சுட நிலை தடுமாறிய ஆதித்தன் மமதியுடன் கீழே விழுந்தான் .
கீழே விழுந்தவர்கள் எழும்முன் அவர்களை ஆட்கள் சுற்றி வளைத்து விட இனி ஓட வழியில்லை அடிக்க தான் வேண்டும் என்று நினைத்தவன் மமதியிடம் "மமதி என்ன ஆனாலும் சரி உள்ள வந்துறாத" என்றவன் அவளை தள்ளி விட அவள் அந்த ஆட்களிடமிருந்து விலகி அவன் பின்னே விழுந்தாள் .
தன்னால் முடிந்த வரை அனைவரையும் தாக்கிக்கொண்டிருந்தவன் தலையில் அடி விழ நிலையின்றி கீழே விழுந்தான் .அவன் விழுவதை பார்த்த மமதி "ஆதி" என்று அவன் அருகே செல்லப்போக அவள் கையை இன்னொரு ஆணின் கை இறுகப்பற்றி முரட்டுத்தனமாய் மேலே இழுத்தது .
நிலைதடுமாறி எழுந்து நின்றவள் கண்டதோ கண்ணில் அகங்காரத்தையும் இதழில் ஏளனத்தையும் கொண்டு தன்னை பார்வையால் துகிலுரித்துக்கொண்டு இருந்த விக்ராந்தை தான் .அவனின் பார்வையை பார்த்தவளிற்கு உடலெல்லாம் கூச அவன் கையிலிருந்து விடு பட போராடினால் ஆதி ஆதி என்ற கதறலுடன் .
ஆதித்தனுக்கு மமதி அழைப்பது ஏதோ கிணற்றின் அடியிலிருந்து கேட்பதை போல் இருக்க கஷ்டப்பட்டு கண்களை பிரித்தவனை வலுக்கட்டாயமாய் தூக்கி நிறுத்தினர் அடியாட்கள் இருவர் .அவள் கையை பற்றி இழுத்துக்கொண்டே ஆதியின் அருகில் வந்த விக்ராந்த் அவன் முகத்திற்கு அருகில் வந்து ஏளனமாய் பெரும் குரலில் சிரித்தான் .
விக்ராந்த் "ஹாஹாஹாஹாஹா ஏன்டா தம்மாதூண்டு cameraava வச்சுக்கிட்டு என் சாம்ராஜ்யத்துக்குள்ள நுழைஞ்சுட்டு அவ்ளோ ஈஸியாக வெளிய போயிறலாம்னு நெனச்சியா ?விக்ராந்த் டா உள்ள வந்துட்டா வெளிய போறது உயிரா தான் இருக்கணும்" என்றவன் அவன் முகத்தை நிமிர்த்தி "கேமரா எங்கே ?"என்க
ஆதி ரெத்தம் ஒழுகும் தலையுடன் "என்ன கொன்னே போட்டாலும் தர முடியாதுடா "என்க
விக்ராந்தின் அடியாட்கள் சரமாரியாக அவனை தாக்க துவங்கினர் "அவன் அடி வாங்குவதை பார்த்த மமதி விக்ராந்தின் பிடியில் இருந்து கொண்டே "ப்ளீஸ் ப்ளீஸ் அவனை விட்று அடிக்காத ப்ளீஸ் "என்றவள்
அவனிடம் திரும்பி ஆதி ஆதி என்று கதற விக்ராந்த்தோ அவர்கள் அடிப்பதை நிறுத்தக்கூறியவன் "ஓஹ் அங்க அடுச்சா இங்க வலிக்குதோ அப்போ இங்க அடுச்சா "என்று அவள் கையை பற்றி அருகில் இழுத்தவன் அவள் ஷாலை உருவ
ஆதித்தன் அலறினான் "விக்ராந்த் வேணாம் அவளை விட்று ப்ளீஸ் என்ன எவ்ளோ வேணா அடி அவளை எதுவும் பண்ணாத "என்று அவர்கள் கையிலிருந்து விடுபட போராட விக்ராந்த்தோ அவன் அலறுவதை விஷமமாய் பார்த்தவன் அவன் கண்முன்னே மமதையை அந்த சாறோடு சேர்த்து அழுத்தியவன் அவளிடம் முறை தவறி நடக்கத்துவங்கினான் .
அவன் கை அவள் மேல் படும்போதெல்லாம் மமதி அலற அவள் அலறுவதை பார்க்க சகியாதவன் "வேணாம் விட்று தந்துருறேன் அவளை விட்டுரு தந்துருறேன் அவளை விட்டுரு "என்று கதற ஒரு வெற்றிச்சிரிப்புடன் அவளை தன்னை விட்டு தள்ளி நிறுத்திய விக்ராந்த் ஆதித்தன் கொடுத்த மெமரி கார்டை வாங்கி அதை லைட்டரை வைத்து கொளுத்தி போட அது எரிந்து முடித்தபின் மமதி ஆதியின் அருகில் வந்து அவனின் தலை காலெல்லாம் வருடியவள் அவன் உடல் மொத்தமும் ரத்தத்தால் நனைந்திருப்பதை பார்த்து கண்ணீர் விட தன் தோழியின் கண்ணீரை பார்க்க சகியாதவன் ஒண்ணுமில்லடி என்று அவள் கண்ணீரை துடைக்கப்போக அவன் கை அப்படியே நின்றது அவன் தலையில் மீண்டும் விழுந்த அடியால் .
அவன் அப்படியே அந்த இடத்தில் நிலை தடுமாறி சரிய திறந்திருந்த அவன் கண்களின் வழி அவன் கடைசியாய் கண்டதென்னவோ மமதியை வலுக்கட்டாயமாய் காரில் ஏற்றிக்கொண்டு செல்லும் விக்ராந்தை தான் .அவன் கை கார் சென்ற திசையை நோக்கி உயர கடைசியாய் மமதியின் குரலால் கேட்ட ஆதி என்ற அலறலை கேட்டவாறே மயக்கமடைந்தான் ஆதித்தன் .அவன் மூச்சு நின்றுவிட அவன் உயிர் பிரிந்ததென எண்ணி ரத்தவெள்ளத்தில் மிதந்தவனை அப்படியே விட்டு சென்றனர் விக்ராந்தின் அடியாட்கள் .
அது ஒரு ஆள்நடமாட்டம் குறைவான இடம் ஆதலால் அவனிற்கு உதவவும் யாரும் முன்வர வில்லை அவ்வழியே பையில் வந்த ஒருவன் ரேத்த வெள்ளத்தில் கிடந்த ஆதித்தனை நோக்கி என்னென்று பார்க்க அருகில் வந்தான் .அருகில் வந்தவனின் கண்களை ஆதித்தனின் கையிலிருந்த bracelettum கழுத்தில் இருந்த chainum கவர சுற்றி முற்றி பார்த்தவன் அதை அவசர அவசரமாய் எடுத்து தன் கழுத்திலும் கையிலும் மாட்டிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர அடுத்த பத்து அடியில் ஒரு டேங்கர் லாரியால் இடித்து தூக்கப்பட்டு முற்புதர்களில் வீசப்பட முகம் சிதைந்து அவ்விடத்திலேயே உயிர் விட்டான் அவன்.
ஒருவரை அடித்து தூங்கியதால் பதறி இறங்கிய அந்த லாரி உரிமையாளரின் கண்ணில் பட்டதென்னவோ ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆதித்தன் தான் .தான் அடித்தது அவனை தான் என்று நினைத்தவர் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்க துடிப்பை நிறுத்தியிருந்த அவன் இதயம் மின்சாரத்தின் உதவியால் உயிரை மீண்டும் பெற்றது .
எனில் அவன் தலையில் ஏற்பட்ட அதிக காயத்தால் தன் சுயநினைவை அவன் இழக்க அங்கே புதரில் முகம் சிதைந்து ஆதித்தனின் ப்ரஸ்க்லேட்டும் idcardum செயினையும் அணிந்திருந்தவன் ஆதித்தனாக கருதப்பட்டான் .இரண்டு வருடமாய் சுயநினைவை இழந்திருந்த ஆதித்தன் ஆறுமாதங்களுக்கு முன்பே தன் சுயநினைவை பெற்றான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro