Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அதியாயம் 1: விஜய்-வீரா

அதியாயம் 1: விஜய்-வீரா

விஜயேந்தேன்:க

கண்ணை மூடி கண் திறப்பதற்குள் அந்த மாடி வீட்டின் முன் நின்றது என் பல்சர் வண்டி. வெயில் பல்லை இழித்த நேரத்தில் இவனுக்கு இங்கென்ன வேலையோ தெரியவில்லை.

ஓஹ்... உங்களுக்கு என்னையே தெரியாது இல்லையா? 

நான் விஜயேந்தன், என் நட்பு இன்று இந்த வீட்டில் தான் இருப்பதாக கடந்த பத்து நிமிடம் முன்பு எனக்கு செய்தி வந்தது... 

" டேய் ராஜகுமாரு! அடேய், எங்க டா இருக்க?? ஒருத்தன் கால்மணி நேரமா வெளிய நிக்கிறேன்...வரப்போறியா இல்லையா நீ?! " என மாடி வீட்டின் பால்கெனியை கண்டு கத்தினேன். 

என் நட்பைப் பற்றி நன்கு அறிந்தவர் இந்த உலகத்தில் என்னை விட வேறிவரும் இருக்க மாட்டர். என்னுடைய எட்டாம் அறிவின் வழியாக பார்த்தால், நிச்சயம் அவன் அந்த இரண்டாம் மாடியில் இருக்கும் பூச்சடிச்ச ஸ்டோர் ரூமில் தான் அமர்ந்திருப்பான். 

" அடேய் ராஜகுமாரு! ராஜகுமாரே! ராஜகுமாரா!! " என கத்திக் கொண்டே என் பல்சர் பைக்கை விட்டு ஒரு குதி குதித்து கீழே இறங்கிய நேரம் கேட்டது அவர் குரல். 

" எவன் டா அது? என் பேர சொல்லி கத்துறது?! " 

எகிறி குதித்த என் இதயத்தை பிடித்துக் கொண்டு, என் பைக்கோடு ஒரு மூலைக்கு ஓடி விட்டேன். வந்தது என் நட்பு இல்லை, என் நட்பின் அருமை தந்தையார், மிஸ்டர் முருக்குமீசை ராஜகுமார ராஜீவ்.

இவர் இந்த அந்தி நேரத்தில் வீட்டில் என்ன செய்கிறார். இந்த நேரம், இவருக்கும் இவர் அண்ணன், மெகா முருக்கு மீசை ராஜேஷ்குமார ராஜீவ் என்ற என் தந்தைக்கும் சாம்பார் கிண்ணத்தை கிண்டும் நேரமாயிற்றே... என சிந்தித்தபடியே, நான் ஒளிந்திருந்த கம்பத்தின் பின்னிருந்து தலையை மட்டும் எட்டிக் கொண்டு பார்த்தேன்.

அங்கே நின்றிருந் என் சித்தப்பா, வந்தது நான் தான் என தெரிந்தது போல என்னை எதை வைத்து கிண்டலாம் என சிந்தித்தபடி வீதியின் இடதிலும் வலதிலும் பார்த்துக் கொண்டு, காதில் புகை வராத குறையாக நின்று கொண்டிருந்தார். 

" இந்த வெண்ண எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்தான்?! டேய் ராஜகுமார் மகனே வந்து சேரு டா வெளிய! " என நான் புலம்பிக் கொண்டிருந்த போதே சரியாக, கைகளில் சில பைகளை பிடித்தபடி அவசர அவசரமாக படிகளில் இறங்கி வந்தான் என் நட்பு. 

" வீரா, " என கராராக தொண்டையை செறுமிய சித்தப்பாவின் குரலில் நின்றான், என் நட்பு, வினேயவீரன். 

" இரண்டு நாளுக்கு அப்பறம் ரிசர்வேஷன் இருக்கு. ஒழுங்கா அந்த தருதலைய கூட்டிக்கிட்டு வந்து சேரு, " என திரும்பியும் பாராமல் கூறிவிட்டு ஒரு முறை நான் மறைந்திருந்த கம்பத்தின் புறம் முறைத்து விட்டு விருவிருவென உள்ளே சென்று விட்டார். 

அவர் குறிப்பிட்ட தருதலை, நானே. 

நானும் வீராவும் ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பியின் பிள்ளைகள். நான் பிறந்தே இரண்டே மாதங்களில் பிறந்த என் வீரா எனது மறு நிழல் ஆவான். நாங்கள் இருவரும் செய்யாத அட்டூழியம் இல்லை, வாங்காத பாடல்கள் இல்லை, பெறாத அடிகள் இல்லை, கல்லூரிகள் தராத ஸஸ்பென்ஷன் இல்லை. ஒரு உண்மையை கூற வேண்டுமானால், நாங்கள் செய்த கணக்கில்லாக அட்டூழியங்களில் பாதி உருவான காரணம், தி கிரேட் மீ, நான் தான். 

வீரா என்னைப் போல குரங்கு மனிதன் இல்லை என்பதற்காக அவனை நல்லவன் என நினைக்காதீர்கள். பலே கில்லாடி என் நட்பு. 

எங்களுக்கு என்று 6 வயதானதோ அன்றிலிருந்தே, இந்த ராஜீவ் சகோதர்களுக்கு எங்களை பார்த்து விட்டால் அந்த நாளே விடிந்ததாக சரித்திரம் இல்லையாம். டீயில் சர்க்கரைக்கு பதிலாக அதே நிறத்தில் இருக்கும் உப்பை சேர்த்தால் என்னவாகும் என பார்த்தது ஒரு குற்றமா? அப்படி என்ன தவறு செய்து விட்டோம்? என்ன ஒரு இரண்டு கரண்டியை கொட்டி இருப்போம்...ஆனாலும் ஆறு வயது சிறுவர்களுக்கு அதெல்லாம் எங்கு தெரியப் போகிறது, நீங்களே சொல்லுங்கள்...

அது மட்டும் போதாதென, எங்களுக்கு அபிஷேகங்களை வாரி வழங்கவே இந்த வீட்டில் உள்ள இரு அக்மார்க் தங்க மகன்கள். வேறாறும் அல்ல, ஒருவன் என்னுடன் பிறந்த அண்ணன், மற்றையவன் வீராவின் தம்பி.

என் அம்மாவையும் சித்தியையும் குறையே கூறி விட முடியது. அவர்களிருவருக்காக நான் நடமாடும் கோவிலை கூட கட்டித்தருவேன். என்ன ஒன்று, சித்தி எண்ணெயிலிட்ட எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் போது நாம் அவர் கண் முன் இருந்தால் நம் கதை கந்தல் தான்...

இந்த ஊரே எங்களின் குடும்பத்தை ராம்ராஜீவ் ஃபமிலி என்று அழைப்பர். என்ன ஒன்று, எனக்கும் வீராவிற்கும் தான் அந்த பட்டத்தின் கீழ் இருந்த இடம் இல்லாமல் போய் விட்டது. நான்கு வருடம் முன்பு நாங்கள் செய்த ஒரு காரணத்தினால், முருக்கு மீசை ராஜேஷ் எங்களை வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டார். 

நாங்கள் கவலையுற்றோமா என்ன? இல்லையே...

" டேய் வண்டிய எடு டா, " என திடீரென என் காதருகில் கேட்டது வீராவின் குரல். 

படக்கென திரும்பி பார்த்தேன். அந்த இரு பைகளை மடியில் வைத்துக் கொண்டு என் பின் அமர்ந்திருந்தவன், என் மூக்கின் நுணியில் வந்து நின்ற கண்ணாடியை தூக்கி விட்டான். 

" எப்போ டா வந்த? " 

" நீ கடன்காரன பார்த்து ஒளிஞ்ச மாரி கம்பத்துக்குப் பின்னாடி வந்தப்போவே கீழ வந்துட்டேன். பெரிம்மா சாப்பாடு குடுத்து விட்டாங்க, அதான் வெயிட் பண்ணி வாங்கீட்டு வரேன்.  " என பைகள் இரண்டையும் ஆட்டிக் காட்டினான். 

உணவு என்ற பெயரை கேட்டவுடன் என் முகத்தில் 1000 வோல்ட் பல்பு எரிந்திருக்கும். யாருக்குத் தான் சாப்பிட பிடிக்காது?!

" அப்போ வா, நேரா போய் ஒரு கட்டு கட்டீட்டு அப்பரமா ஆஃபீஸ் போலாம். " 

" நான்லாம் வரல. நீயும் போகாத, " என வாகாய் என் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.  

" எப்போ வேணா வாங்க டா ன்னு கதவ திறந்து வச்சிட்டு இருக்காங்கல்ல? நீ சொல்லுவ டா சொல்லுவ... " ஒரு பெருமூச்சுடன் அவன் முழங்கையை இடித்து அவனை எழுப்பினேன். " ஒழுங்கா இன்னைக்கு ஆஃபீஸ் வரலன்னா நாளைக்கு ஸலரிய கட் பண்ணீடுவோம் ன்னு மெயில் பண்ணீருக்காங்க, " என நான் சீரியசாய் கூறியதற்கு, பைக்கின் கண்ணாடியில் என்னை விளையாட்டாய் பார்த்தான் அவன். 

" பண்ணா மட்டும் இப்போ என்ன நம்ம பறந்துட்டா போக போறோம்... விடு டா, " 

அதுவும் சரி தானே. இன்னும் ஒரு நாள் லீவ் போட்டால் என்ன ஆகி விட போகிறது?

நான்  தான் சொன்னேனே, இவனும் பலேகில்லாடி தான். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வரை, இந்த உலகத்தில் யாராலையும் எங்களை திருத்த முடியாது.

#

வயிறு நிறைய உண்டு விட்டு மாலை நேர காற்றோடு, குலுகுலுவென்ற காற்றாடியின் இதத்தில் உறங்கும் உறக்கம் இருக்கிறதே. அடடா! அதற்கு இணை தான் இருக்கிறதா?

அப்படி நிம்மதியாக கண் காணா தேசத்தில் தொலைந்து கொண்டிருந்த எங்களது நிம்மதியான நித்திராதேவியின் பாடலை கலைக்கவே வந்தது அந்த நாரசமான பாடல்.

" டேய் எந்திரிக்க போறீங்களா இல்லையாடா?! " 

இந்த குரலை எங்கோ கேட்டிருக்கிறேனே, அட குட்டிப்பிசாசு பின்னாடியே வந்து விட்டதோ என நான் தூக்கத்திலே சற்று மறுபுறம் புரண்ட போது மீண்டும் வந்த குரல் இப்போது நில்லாமல் பாடியது. 

" டேய் விஜய்! நான் வந்தேன்னா நீ அவ்வளவு தான்.  வீரா, நீங்க உள்ள தான் இருக்கீங்கன்னு தெரியும்—

" எருமமாடு! வளந்தமாடு! "

" கதவ திறங்க டா! "

" சாய்ந்திரம் 6 மணிக்கு என்ன டா மாய தூக்கம் உங்களுக்கு?! "

" நான் 3 என்றதுக்குள்ள கதவ திறக்கலன்னா, இரெண்டு பேர் சீட்டையும் கிழிச்சிறுவேன்—

" கதவ திற—

" போய் அந்த கதவ திற டா வெண்ண! " என கட்டிலை விட்டு என்னை கீழே உதைத்து தள்ளி விட்ட வீரா, மீண்டும் புரண்டுபடுத்து தலையணைக்குள் அவனது தலையை புகுத்திக் கொண்டான். 

" யம்மாடியோ! " என கத்திக் கொண்டே அரை தூக்கத்தில் தவழ்ந்து சென்று கதவைத் திறந்த மறு நொடி, பாய்ந்து வந்து என் முதுகிலே ஒரு அடி வைத்தாள் கிராதகி.

" ஒரு கதவ திறக்க அரை மணி நேரம்! எங்க அந்த இன்னோறு மாடு! " என பல்லைக் கடித்தபடி, தரையில் கிடந்த என்னை ஒரு உதை உதைத்து விட்டு உள்ளே விருவிருவென என் நட்பையும் சற்று கவனிப்பதற்காக வேகமாக சென்றாள், அவள் ஹாசினி. 

கல்லூரி காலத்தில் பிடித்த சின்ன சனி, 8 வருடங்கள் கடந்தும் எங்களை விட்டபாடில்லை. 

" காலைலயே படிச்சு படிச்சு சொன்னேன்ல? அவ்வளவு பெரிய மீட்டிங் இருக்கு, ஒழுங்கு மரியாதையா வந்து சேறுங்க டா ன்னு, சொன்னனா இல்லையா?! " என அவளது வௌவால் குரலில் கத்திக் கொண்டே கட்டில் மீது ஏறி வீராவின் முதுகில் படார் படாரென அடித்தாள் அவள். 

எனக்குத் தான் இவள் அடித்தால் வலிக்கும் போல, அவன் என்னவோ மசாஜ் வாங்குவது போல் இன்னமும் நிம்மதியாக உறங்கிக் கொண்டு தான் இருந்தான். 

" எங்க அந்த ஜஃக்கு! இன்னைக்கு அவ்வளவு சொல்லியும் கேக்கல நீங்க! திரும்ப என்னை கடைசி நேரத்துல அலைய விட்டானுங்க பாவிங்களா?! " என அவள் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே கத்திக் கொண்டிருக்க, " அதுக்குத் தான் உங்கப்பன் அப்பவே சொன்னான், எங்க கூட சேராதன்னு, நீ தான் கேக்கல, " என முனுமுனுத்தபடி தலையை சொரிந்துக் கொண்டே தரையிலிருந்து எழுந்து நின்றேன். 

ஹாசினி வீராவின் தலையில் ஒரு லிட்டர் தண்ணியை சலாரென ஊற்றி விட்டு, அவன் கிரீச்சென்ற சத்தத்தோடு எழுந்த போது நீலாம்பரியைப் போல நின்று கொண்டு அவனை முறைத்தாள். 

கருப்பு கோட்டை மாட்டிக் கொண்டு சிறிய சைஸ் குட்டிச் சாத்தான் போல் நின்றவளை கண்ட வீரா ஏதேனும் செய்து மீண்டும் உறக்கத்தை தொடரும் முன், எங்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்று குளியல் அறையில் தள்ளி கதவை அடைத்துவிட்டாள் பாவி. 

எங்களின் அப்பாவி வாழ்வை இப்படி ஆட்டிப் படைக்கும் இந்த குட்டிச் சாத்தான் கல்லூரி படிப்பை முடித்ததும் அவளது தந்தை நடத்தி வந்த சிறிய நிறுவனத்தை நிர்வாகிக்கத் தொடங்கி, எங்கள் இருவரையும் அதே நிறுவனத்தில் பணியும் அமர்த்தினாள். 

நான் ஹாசினியின் உதவியாளனாகவும் வீரா அவளது மேனஜராகவும் கடந்த நான்காண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இப்போது கூட, இந்த குட்டி சூறாவளி குதியாய் குதிப்பதற்குக் காரணம், இன்று இரவு நடக்கவிருக்கும் ஒரு இன்டர்நேஷ்னல் மீட்டிங் தான். 

அரசல் புரசலாக எப்படியோ தட்டுத் தடுமாறி அரை மணி நேரத்தில் எங்கள் இருவரையும் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி அவளது காரில் ஏற்றியிருந்தாள் ஹாசினி. முன் சீட்டில் அமர்ந்தபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஹாசினியின் முடியை பிடித்து இழுக்கிறேன் பேர்வழி அவளை மேலும் எரிச்சலாக்கிக் கொண்டிருந்தேன். 

என் நட்போ எனக்கும் இவ்விருவருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று போர்டு மாட்டி விட்டதை போல் பின் சீட்டில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு ஹாயாக படுத்திருந்தான். 

" வண்டிய ஓட்ட விடு டா பக்கி! " 

சிரித்தபடியே மீண்டும் அவளது முடியை பிடித்திழுத்தேன். பல்லை இறுக கடித்தபடி, இடது கையால் என் தோளை அடித்தாள் அவள். சரசரவென வாகனங்கள் பாய்ந்து கொண்டிருந்த நெடுஞ்சாலையை தொடர்ந்து, இரவின் அமைதியில் மூக்குளித்த சாலையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள் ஹாசினி. 

" மீட்டிங் முடிஞ்சதும் நாளைக்கு நாங்க லீவு எடுத்துக்க—

" லீவுன்னு உங்க வாய்ல வந்தாலே போட்டு மிதிப்பேன் சொல்லீட்டேன். இன்னைக்கு மட்டும் இந்த டீல் ஓக்கே ஆயிட்டா அதுக்கு மேல உங்களுக்கு லீவே கிடையாது. ஒழுங்கா உக்காந்து வேலைய ஆரம்பிங்க டா, " என இடைமறித்து மீண்டும் முறைத்தாள் அவள். 

" இந்த டீல் ஓக்கே ஆகுதோ இல்லையோ, நாளைக்கு நாங்க லீவ் தான், " என பின்னிருந்து அசால்ட்டாக வந்தது வீராவின் குரல். 

ஹாசினி தலையை இடவலதாய் ஆட்டி, மிகவும் சீரியசாக அவனின் கூற்றை மறுத்தாள்.  " டேய்!! இரெண்டு நாள்ள ஆல்ரெடி ஏதோ ரிசர்வேஷன் இருக்குன்னு உங்களுக்கு லீவ் சொல்லீட்டாங்க வீட்டுல... நாளைக்குலாம் லீவ் கிடையாது! " 

இரெண்டு நாளில் ரிசர்வேஷனா? எந்த ரிசர்வேஷன்?

ஓரக்கண்ணை மட்டும் திறந்து நம்பமுடியாமல் ஹாசினியின் ஆடும் ஜிமிக்கிகளை பின்னிருந்து பார்த்த வீரா, " அதுக்குள்ளவா எங்க நைனா உனக்கு ஃபோன் போட்டு சொல்லீட்டாரு? " 

நான் குழப்பமாகவே திரும்பி அவனை பார்த்தேன். அவன் கண்களை மூடி மீண்டும் படுத்துவிட்டான் போல... சரி வீட்டிற்குச் சென்ற பிறகு கேட்டுக் கொள்ளலாம். 

" ஆமா உங்க நைனா தான் சின்சியர் சிகாமணிக்கே பன்க்ச்சுவலிட்டி கத்துக் குடுத்தாங்க, " என பல்லிடுக்கில் சிரித்துக் கொண்டே, காரை வலது புறமாக திருப்பினாள். " இரெண்டு நாளுக்கு அப்பறம் லீவு வேணும்னா நாளைக்கு லீவ் கிடையாது! " 

" நீ சொல்லுவ நாங்க அதை கேட்கனுமா? " என நக்கலாய் நான் கேட்க, வீராவின் விளையாட்டுச் சிரிப்பும் என்னுடன் இணைந்து கொண்டது. 

எங்களின் சிரிப்பலை பொருக்காமல் எரிச்சலில் சினுங்கியபடியே காரின் ஹாரனை நான்கு முறை அழுத்தி, எங்களின் வாயை மூடுமாறு கூறிக் கொண்டே வண்டியை மீண்டும் திருப்பினாள் ஹாசினி. அவள் கூறுவதை கேட்டு அடங்கிவிட்டால் நாங்கள் விவி பிரதர்ஸ் இல்லையே? என எண்ணிக் கொண்டே திரும்பி வீராவைப் பார்த்தேன். 

வீராவின் லேசான சிரிப்பலை கேட்டுக் கொண்டே இருந்த பின் ஒரு நீண்ட அமைதி நிலவியது. 

நான் ஏதோ ஒரு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். 

என்னுடன் வீரா இல்லை. 

ஹாசினியையும் காணவில்லை. 

நினைவில் இருந்தவரை, நான் இறுதியாக பார்த்தது வீராவின் முகத்தைத் தான். 

" வீரா! " 

அவனது முகத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு நினைவில் இல்லை. நான் எப்படி இந்த நடு ரோட்டிற்கு வந்தேன்?  இந்த இரண்டு பேரும் எங்கே?

இரவின் அந்த அமானுஷ்ய காற்று என் உடலை தீண்டி வர, சில்லிட்டது என் முதுகெழும்பு. திரும்பிப் பார்த்தேன், ஆள் இருந்ததற்கான எந்த சுவடியும் அந்த சாலையில் இல்லை. 

என்னை தனியே விட்டுவிட்டு இவர்கள் எங்கு போனார்கள்? இது எந்த இடம்? என்ன ஆனது? என பலர்பல கேள்விகளுடன் என் கையை திருப்பிப் பார்த்தேன். நான் அணிந்திருந்த டைட்டன் வாட்ச்சில் முட்கள் சரியாக 01:12 மணியில் நின்றிருந்தது. மணி இப்போது சரியாக நடு இரவா அல்லது என் வாட்ச் ஓடாமல் நின்றுவிட்டதா?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் நடுராத்திரியில் பேய் டூயட் பாடும் நேரத்தில் தனியாக நிற்பதை  விட என் வாட்ச் ஓடாமல் நின்று விட்டதோ என்னும் எண்ணம் தான் என்னை வாட்டியது. இது வீரா எனக்குக் கொடுத்த வாட்ச். அவன் கொடுத்த அனைத்துமே எனக்குப் பிரியமானது தான். 

ஒரு பெருமூச்சோடு மீண்டும் சோகமாய் என் இருப்பிடத்தைச் சுற்றிப் பார்த்தேன்.  அந்த நேரம், ஏதோ ஒரு ஈரப்பதத்தின் காரணமாக, என் கைகள் தானாக என் கழுத்தின் புறம் பாய்ந்தது. பிசுபிசுவென்ற ஏதோ ஒரு—

" விஜய்! " திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். அது என் வீராவின் குரல் தான். அது அவனே தான். 

" வீரா? டேய் எங்கடா இருக்க? வீரா! " கத்திக் கொண்டே முன்னே தெரிந்த சாலையில் ஓடினேன். வீராவின் குரல் மீண்டும் கேட்டது. எனக்கு மிகவும் அருகில் கேட்டது. அவனது குரலை தொடர்ந்து ஏதோ ஒரு கற்குவியல் கலைவதை போன்ற சத்தம் கேட்டது. 

தூரத்தில் அவனை கண்ட அடுத்த நொடி, என் முகத்தில் பரவிய நிம்மதியின் அளவிற்கு வார்த்தைகள் இருக்காது. முகமெல்லாம் பல்லாக வேகமெடுத்து அவனை நோக்கி ஓடினேன். என்ன இடமோ தெரியவில்லை, காய்ந்த சருகுகளின் வாடையோடு நான் கண்ட இடங்களில் எல்லாம் பூங்கொத்துகள் காய்ந்துக் கிடந்தது. 

ஆராயும் வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அதை ஓரமாக தள்ளி வைத்து விட்டு திரும்பி அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்த வீராவை அனுக முன்னோக்கி நான் அடி வைப்பதற்கும் முன் என் கண்கள் அதன் மேல் நிலைத்தது. 

கையில் இருந்த ஒரு கூரான கல்லால் வீராவின் கரங்கள் அந்த கற்சாமிதியில் இருந்த பெயரை ஒவ்வொன்றாக பகர்த்தெரிய முயன்று கொண்டிருந்தது. அந்த பெயரை கண்டப் பின் வீராவின் உடையில் இருந்த காய்ந்த இரத்தமோ, அவனது தலையில் கட்டப்பட்டிருந்த மருந்து கட்டோ என்னை இந்தளவு அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. 

ஏனெனில்...அங்கு நான் கண்டது என் பெயர்.

விஜயேந்தன்

அருவமாய் அவன்...

ஹலோ இதயங்களே! தீராதீ ஈஸ் பக்! நான் திரும்ப வந்துட்டேன்! ஒரு வழியா உனக்கு வழி தெரிஞ்சுடுச்சான்னு நீங்களாம் கேப்பீங்க, தெரியிது. ஆனா நான் இப்போ வந்துட்டேன். திரும்ப போகமாட்டேன்.

நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?! 10 நாள் முன்னாடியே வந்திருப்பேன்,  ஆனா விதி (பையா நான் உன்ன சொல்லல) சதி பண்ணீடுச்சு....

இது என்ன டி புதுசா இருக்குன்னு பாக்குறீங்களா? ஒரு புது சர்ப்ரைஸ் தான்.

எழுதாம ஆல்ரெடி மூணு கதை நிக்கிது தான்,  ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மை டியர் இதயங்களே. உங்க தீரா திரும்ப பக் டு ஃபார்ம் வர்ரதுக்கு ட்ரை பண்ணுட்டு இருக்கேன்,  அதான் புத்தம் புதுசா ஒரு கதை.

ஓக்கே ரொம்ப நாள் கழிச்சு கதை எழுதியிருக்கேன்,  இதுல...ரொம்ப வித்தியாசமா வேற எழுதீருக்கேன் தெரியிது.. நீங்க தான் சொல்லனும் எப்படியிருக்குன்னு... கண்டிப்பா இது பேய் கதை தான் ஆனா காமெடி கதையும் கூட... நல்லாவே இல்லனாலும் அட்ஜஸ்ட் பண்ணீக்கோங்க மை  டியர் ஹார்ட்ஸ்,  நான் என் பெஸ்ட்ட குடுக்குறேன் சரியா?

ஓக்கே இதயங்களே,  நான் திரும்பவும் வருவேன். டாட்டா!

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro