அத்தியாயம் 4: பேய் சொஸைட்டி
விஜயேந்தன் : ங
ஜன்னலில் இருந்து எட்டிக் கொண்டு என்னைப் பார்த்த பேய் அக்கா, கை காட்டி என்னை அருகில் அழைத்தார்.
" அக்கா! எப்புடிக்கா இங்க வந்த? அய்யோ நீ உள்ள வா க்கா! "என எதோ வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல் ஜன்னல் கதவை பலமாய் திறந்து முகமெல்லம் பல்லாய் அவரை அழைத்தேன்.
" இன்னோறு உயிரோட டெரிட்டரிக்குள்ள நான் வரக் கூடாது தம்பி. அது நம்ம பேய் சொஸைட்டில உள்ள ஒரு முக்கியமான ரூல்! "
என்னைப் பார்த்து பக்குவமாய் குழந்தைக்கு சொல்வதை போல் சொல்லி சிரித்த பேய் அக்காவை நான் விசித்திரமாகப் பார்த்தேன்.
பேய் சொஸைட்டியா... அன்றும் இதையே தான் இந்த அக்கா சொன்ன மாதிரி எனக்கு நியாபகம்...
" என்னக்கா சொல்ற... "
" ஆமா தம்பி, நம்ம சொசைட்டில நான் தான் டிப்பார்ட்மென்ட் கைஃட். நீ நேரா என் கிட்ட வருவன்னு நெனச்சேன், நீ என்ன பார்க்காமையே போய்ட்ட... " என பேய் அக்கா கொஞ்சம் ஏமாற்றத்தோடு என்னைப் பார்த்த உடனே, சின்சியர் சிகாமனியாய் ட்யூஷனுக்கு சென்று விட்டு ஒரு நாள் லீவ் போட்டதற்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்ட எனது ஃபீஃப்த் ஸ்டண்டர்ட் ட்யூஷன் மிஸ் போல் என்னைப் பார்ப்பது போல் இருந்தது.
" சாரிக்கா சாரிக்கா. எனக்கு...எனக்கு தெரியாதுக்கா! "
" அதுக்கு ஏன் தம்பி பதட்டப்படுற?! " சட்டென பாசமாக என் தலையை தட்டினார். " நீ திடீருனு செத்து பேயாவன்னு உனக்கு தெரியுமா என்ன? இறந்த உடனே நாம கொஞ்ச நாளுக்கு நம்மளோட மனுஷ வாழ்கையோட தான் ஒன்றி இருப்போம்... அதுல இருந்து ஆன்மவாழ்கைய ஏத்துக்குறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்... ஆனா அது உன் தப்பு இல்ல. "
இந்த அக்கா எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க? இந்த மாதிரி ஒரு அக்கா எனக்கு உயிரோட இருக்குறப்போ கிடைக்கலையே... வந்து வாய்ச்ச தருதலையும் நான் செத்ததுக்கும் என்னையே திட்டீட்டுப் போறான்... டேய் செல்வா...உன்ன அப்பறம் பாத்துக்குறேன் டா!
" அக்கா அக்கா, இப்போ நான் என்னக்கா பண்ணனும்? ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க? ட்ரக்கிங் டிவைஸ் எதாவது வச்சு இருக்கீங்களா என்ன?! "
சொஸைட்டியே இருக்கும் போது, டெக்னாலஜி எல்லாம் இல்லாமலா இருக்கப் போகிறது? எனக்கு நினைவு உள்ள வரை பார்த்தால், நான் பேயான முதல் நாள் வீராவோடு வீட்டிற்கு திரும்பும் போதிலிருந்தே நான் பல வித்தியாசமான விஷயங்களை கவனித்தேன் தான்...
இது வரை இந்த தெருமுனையில் ஒரு டீ கடை கூட இருக்கவில்லை. ஆனால் அன்று அங்கே ' எல்லாரும் வாங்க, எல்லாரும் வாங்க ' என்ற ஃபோர்டு போட்ட ஒரு ஹோட்டலே இருந்தது.
சாலை ஓரங்களில் இருக்கும் கம்பங்களை தாண்டி அவ்வப்போது வித்தியாசமான நிறங்களில் சில பல தெருவோர நாய் பூனைகளைப் பார்த்தேன். அங்கங்கே சில பல வீதிகளில் பேய் அக்காவை போலவே உடையணிந்த சிலரையும் கவனித்தேன். இது அவர்களின் யூனிஃபார்ம் போல...
நான் பிரம்மிப்பில் கண்களை பிதுக்கிக் கொண்டிருந்த போதே ஒருவழியாக பேய் அக்கா என்னைப் பார்த்து சிரித்து விட்டு என் குழப்பத்திற்கு முடிவு கொண்டு வந்தார்.
" ட்ரக்கிங் டிவைஸ் எல்லாம் இல்ல டா தம்பி... நம்மளோட டெக்னாலஜி மாதிரி தான். நீ நம்மக்குள்ள ஒருத்தர பார்க்கனும்னு நினைச்சா போதும், அவங்களுக்கு உடனே அது தெரிஞ்சிடும். நீ கவலையேப்படாத தம்பி. உனக்கு நான் எல்லாத்தையும் சொல்லிக்குடுக்குறேன்... " பெருந்தன்மையோடு என் தலையில் பாசமாய் தட்டிக் கொடுத்துக் கொண்டே ஜன்னல் அருகிலிருந்த திண்டில் அமர்ந்து கொண்டார்.
" நீ தெரிஞ்சிக்க வேண்டிய முதல் ரூல், இன்னோறு பேயோடு டெரிட்டரிக்குள்ள நாம போய்டவே கூடாது. நிறைய விஷயங்கள் உனக்கு மறந்து போயிருக்கும். அதையே நினைச்சு குழப்பிக்காத... நியாபகம் வர வேண்டிய நேரத்துல அது வரும். "
எதனால நியாபகம் இல்ல...
நான் நினைத்துக் கொண்டிருந்த போதே என் குழப்பத்தைப் படித்ததைப் போல அவரே பதில் கொடுத்தார்.
" இது வரைக்கும் அப்படித் தான் இருந்துருக்கு தம்பி. இறந்து போகுற எல்லாரும் பேயாகுறது கிடையாது. எத்தனையோ பேர் இறந்த உடனே, சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவாங்க... ஆனா அரிதிலும் அரிதான சில பேருக்கு மட்டும் தான் அந்த இரண்டு இடத்துக்கும் இடைல இருக்க இடத்துல வாழுற வாய்ப்பு கிடைக்கும். அதுல நீ நான், நம்ம சொஸைட்டில உள்ள எல்லாரும் அடக்கம். அந்த வாய்ப்பு ஏன் கிடைக்கிது தெரியுமா? "
" என்னோட நிறைவேறாத ஆசை நிறைவேறுறதுக்கா அக்கா? " நான் ஆர்வமாக கேட்டேன்.
" அதான் இல்ல. நமக்கு சான்ஸ் கிடைச்சதுக்குக் காரணம் நம்மள விரும்புற ஒருத்தரோட ஏக்கம் தான். வாழுர காலம் முடிஞ்சு போன உயிரோட வாழ்கை இன்னோறு உயிரோட வாழ்கையோட முழுசா ஒன்றியிருக்குற நிலைமைல இந்த மாதிரி ஒரு அதிசயம் நடக்கும்! "
" அப்போ வீராவோட பாதி வாழ்கை எனக்கு வந்துருமா இப்போ?! "
இருந்தலும் உனக்கே இது ஓவரா இல்ல என்பது போல என்னைப் பார்த்த அக்கா, தலையை இடவலதாய் ஆட்டினார்.
" இல்ல தம்பி. உன் கூட இருக்க தம்பி இருக்குள்ள, அந்த தம்பியோட உயிர் ஏக்கத்துனாலயையும், அந்த உயிர்காலம் முடியிற வர தொடரனும்ங்குற காரணத்துக்காகவும் தான் இந்த வாய்ப்பு உனக்கு கிடைச்சிருக்கு... ஒரு உயிரோட பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்துல தான் தீர்மானிக்கப்படுது.. அதுல மாற்றம் ஏற்படாது. ஆனா எதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுட்டா அது கண்டிப்பா உலகநியதிய குழப்பிவிட்டுடும். உன் இறப்பு அவனோட இறப்பையும் சீக்கிரம் கொண்டு வர மாதிரி இருந்ததால தான் உனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு... "
பிரம்பிப்பில் ஜன்னலின் திண்டின் மீது அமர்ந்தபடி, தரையில் மல்லாக்க கிடந்த வீராவைப் பார்த்தேன்.
" இயற்கையோட விதி வழியா பார்த்தா, இறந்து போன நம்ம கணக்கெல்லாம் முடிஞ்சு போச்சு. அதனால நம்மளால விதியில எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. "
" அப்போ...நாம பிறப்புஇறப்புனு ஒரு மனுஷனோட விதிய விட்டு மொத்தமா வெளிய வந்துட்டோமா?"
நான் கேட்டதற்கு ஆமென தலையாட்டிய பேய் அக்கா, ஒரு புன்னகையோட வீட்டின் கீழே நின்ற ஒரு மஞ்சள் நிற பூணையைக் காட்டினார்.
" அங்க பார்த்தியா... அந்த பூணை நேத்து தான் ட்யூட்டில ஜ்யான் பண்ணுச்சு...
" எதே?! ட்யூட்டியா?! "
" ஆமா தம்பி. நீ கேள்விப்பட்டதில்லையா? பூணைகளுக்கும் நாய்களுக்கும் தான் நாம முதல்ல தெரிவோம். அவங்களால ஈசியா நம்மள பார்க்க முடியும்! " என உற்சாகமாய் கூறிவிட்டு, எங்களை எதற்சையாய் பார்த்து விட்டுத் திரும்பிய அப்பூணைக்கு கையை வேகமாய் ஆட்டினார் பேய் அக்கா. " இவங்க தான் வழி தெரியாம அங்கங்க சுத்தீட்டு இருக்க பேய்கள நம்ம சொஸைட்டி பில்டிங்கு அலைசிட்டு வருவாங்க... "
நான் வாயைப் பிளந்து வைத்துக் கொண்டு அ.கா சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
" அக்கா... நமக்கு இந்த சூப்பர் பவர்ஸ்லாம் எதுவும் இல்லையாக்கா? "
திடீரென முகமெல்லாம் பல்லாக, மிகவும் குதூகலத்தோடு கைகளை தட்டி நான் இந்த கேள்வியை எப்போது கேட்பேன் என தவம் கிடந்தது போல உடனே அவரது கைகளை சொடக்கிட்டார்.
" ஏன் இல்லாம?! எனக்கு ஃகைட் ஆ இருக்குறதுல புடிச்சதே இது தான். நல்லா கேட்டுக்கோ தம்பி. நமக்கும் மனுஷதன்மைக்கும் இருக்க சங்கிலி அறுந்து போச்சு. இதுக்குமேல நாம நினைச்சா நாம என்ன வேணா செய்யலாம்... அதுக்குன்னு ரொம்ப ஓவராவும் போக கூடாது. நம்ம சொஸைட்டி ஹெட் வருத்தெடுத்துடுவாரு... சரி அந்த பேய பத்தி அப்பறமா பேசுவோம்... எல்லா சக்தியும் உனக்குள்ளையே இருக்கும் தம்பி, அத நீ வெளிய கொண்டு வர தான் கத்துக்கனும்... "
நானும் அவர் சொல்வதை கேட்டபடி சரியென வேகமாய் தலையாட்டினேன்.
" நீ இதுல தெரிஞ்சிக்க வேண்டிய முதல் விஷயம் - நினைக்கிறது. நீ எதை செய்யனும்னு நினைக்கிறியோ, அதை நினைச்சு உன்னால பண்ணீட முடியாதாங்குற மாதிரி யோசிக்கனும்... சம்பில் காட்டவா? " நான் மீண்டும் வேகவேகமாக தலையை ஆட்டினேன். அக்கா சிரித்துக் கொண்டே சற்று சுற்றிப் பார்த்தபடி, அவரது விரலை மீண்டும் சொடக்கிட்டார்.
" அந்தா தெரியிதே ஒரு லைட்டு... அது எவ்வளவு நாளா எரியாம கெடக்கு? " என வெளியே எங்கோ கையை நீட்டிக் காட்டினார்.
நான் வேகமாய் என் தலையை வெளியே நீட்டிக் கொண்டு பார்த்தபோது, கிட்டத்தட்ட பல நாளாய் பாழடைந்து கிடந்த ஒரு மின்விளக்கு என் கண்ணில் பட்டது. இதை சரி செய்ய சொல்லி பல நாள் ஈபிக்கு ஃபோன் செய்து கொண்டே இருப்பார் எங்கள் ஹௌஸ் ஓனர். ஆனால் மீண்டும் இது ஒன்றுக்கும் உதவாமல் போய் விட்டது போல...
" ரொம்ப நாளா அப்படித் தான்க்கா இருக்கு.. "
என் பதிலை கேட்டு ஒரு விஷமம்ப் புன்னையோடு அந்த விளக்கைப் பார்த்த அக்கா, " என்னால அந்த விளக்க எரிய வைக்க முடியாதுன்னு நினைக்கிறியா? " என கேட்டு விரலை சொடக்கிட்டார்.
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் என்னைத் தாண்டி பலத்த காற்றடித்ததைப் போல் உணர்ந்து நான் நிமிர்ந்து அந்த விளக்கைப் பார்க்க, பெட்ரமாஸ் லைட்டை மாட்டி விட்டது போல பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது அந்த விளக்கு...
இது என்னடா அதிசயமா இருக்கு?!
" இதான் தம்பி நம்ப டெக்னிக்கு! எப்படி இருக்கு?! "
ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த கலவையாய் என்னைக் கண்டு உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருந்த அக்காவைப் பார்த்தேன்.
பேயா இருக்குறதும் நல்லா தான் இருக்கும் போல...
" சரி தம்பி வா அக்கா நான் உனக்கு நிறைய சொல்லி தரேன். அப்படியே நாம பேய் சொஸைட்டிக்கும் போய்ட்டு வந்துடலாம். "
உறங்கிக் கொண்டிருந்த வீராவைச் சற்றுத் திரும்பிப் பார்த்தேன். எல்லாம் இவனுக்காகத் தானே... என்ன ஆகிவிட போகிறது? பார்த்துக்கொள்ளலாம்.
" வாங்க அக்கா போலாம்... " என நான் ஏதோ ஜன்னலுக்கு வெளியே படிகட்டை கட்டி வைத்ததைப் போல, ஏதோ ஒரு யோசனையில் அந்த பக்கம் இரண்டு காலையும் வைத்து விட்டேன். தொபக்கடீரென கீழே விழுந்து மீண்டும் இறக்க நேர்ந்த என்னை சரியாக அக்கா பிடித்துக் கொண்டார்.
" டேய் தம்பி, பொறுடா! இரெண்டாவது டைமெல்லாம் செத்தா பேய் சொஸைட்டி உன்ன வேற எங்கையாவது அனுப்பீடும். இப்படி வா பொருமையா... " என அன்பாய் கூறியபடி என்னை மெதுவாய் கீழே அழைத்துச் சென்றார்.
என்ன சொல்லீட்டு இந்தக்கா மட்டும் எப்படி பறக்குது?
நான் நினைத்ததை அறிந்தது போல ஒரு குட்டி சிரிப்போடு என்னை கீழே நிற்க வைத்தவர், " நான் 24 வர்ஷமா இங்க தான் சுத்தீட்டு இருக்கேன். நீ வந்தே 4 நாள் தான ஆகுது... போகப் போக உனக்கேத் தெரியும் வா... போய் ஒரு டீ சாப்பிடலாம், " என நான் அவரை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்த போதே அவர் என்னை தெருவில் இழுக்கத் தொடங்கியிருந்தார்.
24 வருடமா? அவ்வளவு காலமெல்லாம் பேயாக இருக்களாமா? இவ்வாறு நான் சிந்தனையில் மூழ்கியிருந்த போது, ஏதோ என் கால்களை உரசுவதைப் போன்றுணர்ந்து படாரென கீழே பார்த்தேன்.
நாங்கள் முன்பு பார்த்த அந்த மஞ்சள் பூனை என் கால்களுக்கிடையே வந்து தலையை காலோடு உரசிக் கொண்டிருந்தது.
" அடடே நீங்களும் வந்துட்டீங்களா? வாங்க வாங்க அப்படியே ஒரு டீ குடிச்சிட்டு போவோம்... " என வீட்டிற்கு வந்த விருந்தாளியை அழைப்பதைப் போல, அந்த பூனையை அழைத்துக் கொண்டு எங்கள் கண் முன்னே எங்கிருந்தோ தோன்றியிருந்த டீ கடைக்குள் நுழைந்தார்.
பூனையோட டீ யா? ஏ... இரு... நாம பேயாச்சே, நமக்கு யாரு டீ குடுப்பா?!
நான் அதிர்ச்சியில் இருந்த சமயம் தான் என் கண்கள், இந்த நான்கு வருடத்தில் இந்த வீதியில் இருந்திராமல் திடீரென முளைத்திருந்த இந்த புதுவிதமான டீ கடையின் போர்டு மீது நிலைத்தது.
" கோஸ்ட் கஃபே "
பட்டை எழுத்தில் பளிச்சென மிளிர்ந்த கடையிலிருந்து ஒரு டீ க்லஸோடு ஏதோ வல்டு கப்பையே ஜெயித்துவிட்டதை போல வந்தார் என் பேய் அக்கா...
அருவமாய் அவன்...
ஹலோ இதயங்களே?!! நல்லா இருக்கீங்களா? என்ன டி ஏதோ வாரத்துக்கு இரெண்டு யூடி குடுக்குறேன்னு சொல்லீட்டு நீ இரெண்டு வாரமா எங்க போனன்னு தான பாக்குறீங்க... ஹிஹிஹி என்ன பன்றது? நேரம் அப்படி இருக்கு... சரி விடுங்க விடுங்க... கதை எப்படி போது... எதாவது சொல்லுங்க இதயங்களே... நான் உங்களுக்கு அடுத்த யூடி ரெடி பன்றேன்... டாட்டா!!
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro