Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் 3: நான் பேய்‌ டா

விஜயேந்தன் : உ 


ஏக்கத்தோடு தட்டுத்தடுமாறி நின்றிருந்த வீரா என்னை தவிப்போடு பார்த்தான். நான் அவன் கண்களுக்கு தெரிகிறேனா என்று கூட தெரியவில்லை. நானும் இரண்டு நாட்களாக என்னென்னவோ செய்து பார்த்தேன். 


முதலில் நான் எங்கு சென்றாலும் என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். சில நேரம் ஏதாவது சில வார்த்தைகள் என்னைப் பார்த்து பேசுவான், பின் அவனே திரும்பிக் கொள்வான். 


இறந்தது நானா இல்லை இவனா என்று தெரியவில்லை. எனக்கே இந்த இரண்டு நாட்களில்லை உணவு பக்கமே செல்லாமல் என் உயிரில்லாத உடலுக்கு ஏதேதோ செய்து விட்டது இவன் எப்படித் தான் படுத்த படுக்கையாகவே இரண்டு நாட்களாக கிடக்கிறானோ தெரியவில்லை. 


என் மேல அவ்ளோ பாசமா டா மச்சான் ... என்று அவ்வப்போது நானே கேட்டுக் கொண்டாலும், ஒருவேளை இந்த நிலையில் நான் இருந்திருந்தால் நான் எப்படியிருப்பேன் என என்னாலும் யோசிக்க முடியவில்லை. 


இறந்தே போயிருந்தாலும், இந்த இரண்டு நாட்களுக்கும் எங்களது 28 வருட வாழ்கைக்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. எப்பவும் போல நான் கத்திக் கொண்டிருந்தேன், அது அவனுக்கு கேட்காததை போல் அவன் அமர்ந்திருப்பது போல இப்போது உண்மையிலே கேட்காமல் சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தான். 


" டேய் எதையாவது கொட்டிக்கோ டா மடசாம்பிராணி! " நானும் கத்திப் பார்த்து விட்டேன், அழுது பார்த்து விட்டேன், கதறி பார்த்து விட்டேன் புரண்டு கூட பார்த்து விட்டேன் இந்த மடையனுக்கு கண் தெரியவில்லையா நானும் அவனுக்குத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 


இரண்டு நாட்களாக எங்களின் அண்ணன் செல்வாவும் இவனை வந்து வந்து அழைத்து விட்டு போய் விட்டான். இவன் கடன்காரனைப் பார்த்தது போல இங்கேயே தான் ஒழிந்து கொண்டிருக்கிறான். 


கதவைத் தான் திறயேன் டா என்பதை போல் அவனைப் பார்த்தேன். அவன் எனக்கென்ன என திரும்பிப் படுத்துக் கொண்டான். 


" கும்பகர்ண பரம்பரை தோத்துறும் இவன் கிட்ட... "


பல்லைக் கடித்தபடி நான் கதவைப் பார்த்தேன். நான் எப்படிப் பார்த்தாலும் இப்போது ஒரு பேய் தானே, ஏன் படத்தில் வருவது போலெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை என யோசித்தபடி, இந்த கதவை திறக்க முடியாதா என என் கைகளைப் பார்த்தேன். 


மாயமோ மந்திரமோ தெரியவில்லை, படாரென கதவு திறந்து கொண்டது. சரி இப்போதாவது இவன் சாகாமல் இருப்பான் என நான் நினைத்துக் கொண்டிருந்த போதே, செல்வா என்னை வாயில் அரைத்துக் கொண்டே வீராவை போட்டு உலுக்கினான். 


" நாங்க எக்கேடோ கெட்டுப் போனா என்னன்னு எங்கள தொறத்தி விட்டுட்டு இப்போ வந்து உங்கள சாகடிக்கிறான்னு சொல்ற?! என்னாடா நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? நேத்து வரைக்கும் இந்த வீட்டு அட்ரெஸ் தெரியுமா உனக்கு?! " என கோவத்தில் நான் அவனிடம் கத்திக் கொண்டிருந்தேன். 


இந்த வளர்ந்த மாங்கா மடையன் என்னை மனுஷனாகவே மதிக்கவில்லை. ஓ...நான் மனுஷனே இல்லல்ல... 


என்ன இருந்தாலும் அவன் கூறியது தப்பு தானே?!


ஒரு கட்டத்திற்கு மேல் வீரா இவனை இப்படியே விடுவது சரி தான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் இவன் உண்ணாமல் உறங்காமல் இப்போதே உயிரை விட்டு எனக்கு துணையளிக்க வந்துவிடுவானோ என்ற கவலை தான் எனக்கு ... 


நான் இறந்துட்டேன்னே இவன் சொல்லி தான் எனக்குத் தெரியும்... ஹன்ன்ன்... 


பெருமூச்சோடு அந்த நேரம் நான் எதாவது செய்தாக வேண்டுமென முடிவெடுத்தேன். நானும் என் கைகளை சீரியசாக பார்த்தபடி அங்குமிங்கும் வீசி பார்த்தேன், சொடக்கிட்டு பார்த்தேன், ஒரு சில பொருட்களை இங்கு வா அங்கு போ என்றேன், ம்ஹும்ம்ம்ம்... 


எதுவும் அசையவில்லை போல. 


ஆத்திரம் ஏற ஏற எனக்கு தலை கால் புரியவில்லை. சுடுகாட்டில் அன்று பார்த்த அக்கா சொன்னது போல் இரண்டு நாள் நான் அங்கேயே இருந்து விட்டு வந்திருக்க வேண்டும் போல... 


" நண்பன் டா, என் மச்சான் டா ன்னு நான் டயலாக் பேசீட்டு வந்துருக்கக் கூடாது... அந்தக்கா அப்பவே என்னென்னமோ சொல்லுச்சு... " என முனகிக் கொண்டே வேகமாய் ஏதேதோ முயற்சித்தேன்.


என்னைச் சுற்றி காற்று வேமெடுத்தது. நான் நினைத்தததை போல, ஜன்னல் கதவு திறந்த மூடியது. 


ஆஸ்கர் ஆவார்ட் வாங்கிய குதூகலத்தோடு, திறந்திடு சீஸே என வீட்டின் கதவைப் பார்த்தேன் அது திறக்கவில்லை. இப்படியே நான் ஏதேதோ செய்து பார்த்து எனக்கு நானே பேசிக் கொண்டிருந்தேன். 


" அய்யோ என்ன டா இது கொடுமையா இருக்கு! எப்படி தான் பேயெல்லம் படத்துல பார்த்த உடனே பேசுது?! எந்த பட்டனா டா அழுத்தனும்?! "


வீரா அறை தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு பப்லிக் எஸ்மின் ப்ரக்டிக்கலுக்கே நான் வீராவின் கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன். பேய் ப்ரக்டிக்கலுக்கெல்லாம் யாரிடம் நான் போவேன்?!  நான் இவன் கண்ணிற்கு தெரியாமலே போய்விட்டேனோ?! கடவுளே! 


" டேய் வீரா உனக்காக நான் என்ன என்னலாம் டா பன்றது?! ஹையோ பேய் ட்ரெய்னிங்கு நான் எங்க டா போவேன்?! " 


மீண்டும் காற்று மட்டும் வீசியது. 


இதற்கு வேறு வேலையே இல்லை. 


" விஜய்.... விஜய் எங்க டா இருக்க?! " 


திடீரென வீரா கத்தும் சத்தத்தில் அவனைப் பார்த்துத் திரும்பினேன். எப்போதும் நான் இருக்கும் இடத்தை சரியாய் பார்ப்பவன் இன்றும் அங்குமிங்கும் பார்த்தான். 


ஹையையோ நான் என்ன பன்னேன்னு தெரியலையே. நான் அவன் கண்ணுக்குத் தெரியலையோ!! என நான் பதட்டத்தில் அவனிடம் ஓட, அவன் மயக்கத்தில் தள்ளாடினான். 


" அய்யோ நான் இங்க தான் டா இருக்கேன். என்ன பாரு டா, " என கத்திக் கொண்டே போய் அவனைப் பார்த்தேன். 


" டேய்! எங்கடா போய் தொலஞ்ச செத்த நேரத்துல?! " என சட்டென என்னைப் பார்த்து கத்தினான். ஆனால் நான் பேசுவது அவனுக்குக் கேட்கவில்லை. நான் அவனை பாவமாய் பார்த்தேன். 


" ஒழுங்கு மரியாதையா என் கண்ண விட்டு மறையாத சொல்லீட்டேன். நீ இங்க தான் இருக்கனும், " என காட்டமாய் என்னைப் பார்த்து கூறினான். 


" ஹன்... நீ இப்படி என்னப் பார்த்துட்டே மட்டும் இருந்தா நீயும் என் கூட வந்து உக்காந்துடுவ... நாம இரெண்டு பேரும் சுடுகாட்டுக்கு போக வேண்டியது தான். " 


வீராவின் புருவம் குழப்பத்தில் சுருங்கியது. நான் ஏதோ புரியாத மொழி பேசியது போல் என்னைப் பார்த்தான். 


" எதாவது சொல்றியா... நீ... நீ பேசுறியா டா...? " என சற்றே...மிரட்சியோடு கேட்டான். 


இப்போது தான் ஒரு பேய் உடன் இருப்பது தெரிகிறது போல... பேயைப் பார்ப்பது போல் இப்போது தான் என்னைப் பார்க்கிறான். பேயாக இருந்த இந்த நான்கு நாட்களில் இன்று தான் எனக்குப் பெருமையாக இருந்தது. 


நான் பெருமையில் திழைப்பதற்குள்ளாக எனது கழுத்தைப் பிடித்திழுத்தான் இவன். 


" பேச முடியுமுன்னா மூணு நாளா மூஞ்ச தூக்கி ஏன் டா அமேரிக்கால வச்சிருந்த?! " என படாரென என்னைக் கண்டு மீசைக்காரர் ராஜகுமாரரின் அவதாரம் எடுத்ததைப் போல சீரினான். " நான் பேசுனப்போவாவது பேச வேண்டியது தான? என்ன செத்துட்டன்னு திமிரா உனக்கு? அப்பவும் உன்ன நான் விட மாட்டேன்?! " 


" டேய் நான் ஒரு பேய் டா! " என அப்போதும் நான் என் பேய் பெருமையை விடுவதாய் இல்லை. 


ஆனால் சத்தம் வராமல் நான் என் வாயை மட்டும் அசைப்பதால் அவனுக்கு எரிகிறது போல... நான் பேசுவது இவனுக்குக் கேட்டால் இவன் என்ன செய்வான்?


" சத்தமா பேசு டா! சத்தமா பேசுன்னு சொல்றேன்ல?! " 


" டேய் அடிச்சிறாத டா எனக்கு வலிச்சிற போது! " நான் கத்திக் கொண்டே கண்களை மூடிக் கொண்டேன், ஆனால் ஓங்கிய அவன் கை என் மேல் இறங்கவே இல்லை. 


" விஜய்... விஜய் நீ பேசுற டா... நீ சாகல, விஜய்... நீ சாகல! " 


நான் வீராவை சோகமாகப் பார்த்தேன். என்ன தான் நான் இந்த நான்கு நாட்களும் இவனோடே அலைந்திருந்தாலும், எனது அருகாமை அவனோடு உண்மையில் இருந்திருக்கவில்லை. நான் இவனுக்கு எப்படி பதில் சொல்வது... 


" வீரா... நான்... நான் செத்துட்டேன் டா. " 


" நீ என் கண்ணு முன்னாடி நிக்கிற! நான் உன் கழுத்தைப் பிடிச்சிருக்கேன்! நீ பேசுறது எனக்குக் கேக்குது! நீ சாகல விஜய்! " 


ஏதோ எனக்கு எப்படி உயிர் வாழ்வது என கண்டுப்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதைப் போல அவன் உற்சாகமாய் அனைத்தையும் கூறினான். ஆனால்...அது சில வினாடிகளுக்குத் தான். 


நான் பெருமூச்சு விட்ட போது மெதுமெதுவாக வீராவின் கை என் கழுத்தை விட்டு அகன்றது. 


அவனுக்குத் தெரியும். நான் அவனுடன் இல்லை. அவனை விட்டு வெகுதூரம் சென்று விட்டேன். நான் வெறும் அருவன் தான் என அவனுக்குத் தெரியும். அதை ஏற்றுக் கொள்ளும் மனம் தான் அவனிடத்தில் இல்லை. 


தள்ளாடத்தோடே நகர்ந்து சென்று, தலையைப் பிடித்தபடி கீழே அமர்ந்தான். நான் அவனைப் பார்த்தபடியே நின்றேன். 


" விஜய்... " 


" ஹ்ம்... " 


" என்னையும் உன் கூட கூட்டீட்டு போ, ப்லீஸ். " 


இரைஞ்சலோடு என்னைத் தவிப்பாய் பார்த்தவனை அள்ளி அணைத்துக் கொண்டு நான் இங்கே தான் இருக்கிறேன் என கூற லேண்டும் போல் இருந்தது. ஆனால் என்னால் அவனை தொட முடியுமா முடியாதா என்ற பயமும் தயக்கமும் என்னை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. 


" வீரா, என்னைப் பாரு டா... " 


" நீ என் கற்பனை தான... கடைசில எனக்குக் கூட இப்படி ஒரு நிலமை பாறேன், " என விரக்தியாய் புன்னகைத்தவன், நிமிர்ந்து என் கன்னத்தைப் பிடித்துக் கொண்டான்.  " நீ கற்பனையா இருந்தாலும் பரவாயில்ல... என் கூடவே இருந்துடு விஜய். என்ன விட்டு போய்டாத, " 


" உன்ன விட்டா எனக்குப் போக வேற எந்த இடமும் இல்ல வீரா... எனக்கு உன்னத் தவிற வேற யாரையும் தெரியாது.  " என நான் கூறியபோது, நான் அவனை விட்டுச் செல்ல மாட்டேன் என்ற திருப்தியில் சிரித்தான். 


அந்த சிரிப்பு துளியும் அவன் கண்களை ஆனால் எட்டவில்லை. நான் அங்கு தான் இருக்கிறேன் என்பதையே அவன் உணரவில்லை. 


என் வீராவால் என்னை உணர முடியவில்லை என்ற உண்மை என் இதயத்தை ஊசியாய் தைத்த போது, இவ்வளவு நேரம் இல்லாத வலியும் ஏக்கமும் என்னை ஆட்கொண்டது. 


அவன் சிரித்துக் கொண்டே கீழே சாய்ந்து விட்டான். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல், பதட்டத்தில் என் கண்கள் பனித்தது. 


நினைவு தெரிந்து கடைசியாய் நான் என்று அழுதேன் என்றும் தெரியவில்லை. வீரா இந்நிலையில் இருந்தும் பார்த்ததில்லை. 


எங்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலை? 


இத்தனை அருகிலே இருந்தும், துணையில்லாத அனாதைகள் போன்ற நிலை மீண்டும் வரும் என்று என்றும் நான் நினைத்ததில்லை. 


" மச்சான் என்ன பாரு டா, நான் இங்க தான் டா இருக்கேன். நான் உன்ன விட்டு எங்கையும் போ 


" நீ இங்க தான் இருக்கன்னு தெரியிது அதுக்கென்ன இப்போ ... தூக்கம் வருது தூங்கு டா நீயும்! " என படாரென எழுந்து என்னை முறைத்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான் இவன். 


" அப்போ நான் இப்போ வேஸ்ட்டா ஃபீல் பண்ணீட்டு இருந்தனா? "


சரி ஓவர் அக்டிங் உடம்புக்கு ஆகாது, நாமும் தூங்குவோம் என நினைத்தபடி நானும் அங்கேயே படுத்து விட்டேன். என்ன பசி தான் வயிற்றை கிள்ளுகிறது, ஆனால் இந்த தடியன் இப்போது எழுந்து போயெல்லாம் உண்ண மாட்டான். 


நமது எனர்ஜியும் வேஸ்ட்டு.


ஆனால் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது... 


" அந்த பேய் அக்கா கூப்பிட்டப்போவே நான் அங்கு இருந்திருக்கலாம் போல. பார்க்க நல்லா அக்காவாத் தான் தெரிஞ்சிது... " 


நான் இப்படி யோசித்துக் கொண்டே இருந்த போது, ஏதோ ஒரு சத்தம் கேட்டு நான் சடாரென ஜன்னல் புறமாய் திரும்பினேன். 

ஜன்னலின் ஒரு புறம் தலையை மட்டும் எட்டிப் பார்த்தபடி என்னைக் கண்டு சிரித்தது ஒரு உருவம். 


நானே ஒரு பேய் என்பதை மறந்து உடல் திடுக்கிட்டு, நான் வீராவை கட்டிப் பிடித்துக் கொள்ள, பகீரென மீண்டும் சிரித்த உருவத்தின் குரலில் நான் அதிர்ச்சியாக அதைப் பார்த்தேன். 


" தம்பி, அக்காவ கூப்ட்டியாப்பா? " 


அங்கு தலையை எட்டிக் கொண்டு என்னைப் பார்த்தது அந்த நல்ல பேயக்காவே தான்... 


அருவமாய் அவன்... 




ஹாய் இதயங்களே... சப்பா இந்த யூடிய அறக்க பறக்க ஒரு மணி நேரத்துல எழுதியிருக்கேன். நல்லா இல்லனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க இதயங்களே சீக்கிரம் நாம் ட்ரக்குக்கு போய்டுவோம்... இப்போ நான் கிளம்புறேன்... சீக்கிரமே அடுத்த யூடியோட வரேன்... டாட்டாஆஆஆஆ!!!! 


DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro