Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 9

கவிப்ரியா ஜீவாவின் கேள்வியால் திகைத்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்த போது ஜெய் நந்தன் தன் மருமகளின் சில நொடிகள் முகச்சிவப்பை ரசித்து விட்டு, "பாவம் நம்ம ஏஞ்சல்! இத்தனை பேரு சுத்தி நின்னுட்டு இருந்தா ஆனந்த் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவா?" என்று அர்ஜுனை நோக்கியவர், மேலே கை காட்டினார். அர்ஜுன் அவரின் சமிக்ஞை புரிந்து விட்டதாக பெருவிரல் உயர்த்தி காட்டவும் பெருமூச்சுடன் தன் மனைவியிடம்,

"நிர்மலா, எப்பவும் ஏஞ்சல் ஜெயிக்கற கேமை சீட்டிங் பண்ணி இன்னிக்கு நீ ஜெயிச்சுட்ட.....!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரின் பக்கம் தன் கோபப்பார்வையை செலுத்திய ஜீவா,

"டேய் பாகி, உன் தங்கச்சியை கேம்ல தோக்கடிக்க போறேன்னு முன்னாலேயே நான் அவ கிட்ட சொல்லிட்டேன். அவ தான் பெரிய ஹெட் வெயிட் பிடிச்சவளாச்சே...... முடிஞ்சா என்னை ஜெயிச்சு காட்டுடா பார்ப்போம்ன்னா; யாரும் யாரையும் சீட் பண்ணவும் இல்ல. எங்கம்மாவை யாரும் அநாவசியமா திட்டவும் தேவையில்ல......!" என்று சொல்லிக் கொண்டு இருக்க பார்கவ் தலையை பிடித்துக் கொண்டான். ஜீவா அர்ஜுன் புறம் பார்த்து, "டேய் மாமா அத்தையை கூட்டிட்டு நீ எங்க மேல போயிட்டு இருக்க?" என்று கேட்டவனிடம் கோபத்தில் பற்களை கடித்தவாறு,

"அடி செருப்பால...... உங்கப்பனை பார்த்தவுடனே திமிர் ஏறிடுச்சாடா உனக்கு? எப்பவும் என் கிட்ட மரியாதையா பேசணும்.... இல்ல தோலை உரிச்சுடுவேன். பார்த்துக்க! உனக்கு பயந்து பம்முறதெல்லாம் உங்கொப்பன் தான்! நான் இல்ல, மேல தான் இருப்பேன்! கவிம்மா கிட்ட ஏதாவது நொரைநாட்டியம் பண்ணின..... கீழ வந்து ஒரே மிதி தான்......ஜாக்கிரதை!" என்று சொன்ன தன் மாமனிடம் சிரிப்புடன் அருகில் சென்று, அவரை கட்டிப் பிடித்து கன்னம் கொஞ்சி சமாதானம் செய்து விட்டு வந்தான் ஜீவானந்தன். இதற்கு மேல் வீட்டிற்குள் நிற்பது சரியில்லை என்று உணர்ந்த ஜெய் நந்தன்,

"எல்லாரும் சேர்ந்து பங்ஷனுக்கு ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடலாம். அஜு உனக்கு, மீராவுக்கு, ஏஞ்சலுக்கு, சின்னவருக்கு நிர்மலா பார்த்து செலக்ட் பண்ணிடுவா. மீரு உனக்கு ஓகே தானேடா?" என்று கேட்க, மீரா "சரிண்ணா! பார்த்து போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க!" என்று சொல்லி விட்டு மேலே சென்றார்.

பலராம் சரஸ்வதியிடம், "சரஸ் நீ கேட்ட வினோபாவோட கீதை பேருரைகள் புக் வாங்கிட்டு வரலாம். எங்க கூட வர்றியா?" என்று கேட்ட பலராமிடம்,

"ம்ம்ம்! அப்பாவுக்கும் ஏதாவது புக் வாங்கி தர்றியா? நான் உன்னோட கிப்ட்ன்னு சொல்லி அவர் கிட்ட குடுத்துர்றேன்!" என்று ஆவலுடன் தன் முகத்தை பார்த்த தன் அன்னையின் கண்களை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்தார் பலராம்.

"ஏய் சரஸ்.... உன் புருஷனுக்கு கிப்ட் வாங்குறதெல்லாம் சரி தான்.....அதை எங்க போய் குடுப்ப?" என்று கேட்ட தன் பேரன் பார்கவிடம்,

"எ.....எங்க போய் குடுக்கணும்? கீதா ஏதோ சொன்னாளே....!" என்று கண்களை சுருக்கி யோசித்தவரிடம்,

"ம்ஹூம்! உன் கிட்ட சொன்னது கீதா இல்ல. கவி உன் பேத்தி! எட்டூர் திருடி.... அவ கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு! நீ புக் வாங்கிட்டு என் கிட்ட குடு. நான் ராஜேஷ்க்கு பத்திரமா அனுப்பி வச்சுடுறேன்! ஐய.... உங்க வீட்டுக்காரர் பேரை சொன்னவுடனே முகமெல்லாம் சிரிப்பா இருக்கு.... போ! மெதுவா உள்ளே ஏறு!" என்று அவரின் கையைப் பிடித்து காரில் ஏற்றி விட்டவன் முதுகில் சுரண்டினாள் ஷைலஜா.

"உனக்கு என்னடீ வேணும்?" என்று கேட்ட பார்கவிடம்,

"எதுக்கு அத்தான் இப்படி ஆளாளுக்கு உங்க பாட்டிக்கு எல்லாரும் பால்ஸ் ஹோப் குடுக்கறீங்க? இது தப்பில்லையா......!" என்று கேட்ட தன் மாமன் மகளை கைப்பிடித்து சிறிது தூரம் தள்ளி கூட்டி வந்து,

"தப்பு தான் ஷைலு; ஆனா என்ன பண்றது; சரஸ்க்கு வாழ்க்கையில எல்லா விஷயமும் ராஜேஷோட போய் கனெக்ட் ஆகி நிக்குது. ஏதாவது ஆப்பரேஷன், ட்ரீட்மெண்ட் எடுக்கலாம்னு கூப்பிட்டா குழந்தை மாதிரி என்னை இப்படியே விட்டுடு; வாழுற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு நிறைவா போயிடுறேன்னு சொல்றாங்க. எங்க பாட்டிக்கு ஒண்ணும் இல்லம்மா, அப்படியே ஏதாவது ஆனாலும் சமாளிக்க தான் இத்தன பேர் இருக்கோமே? போய் கார்ல ஏறு, கிளம்பலாம்!" என்று சொன்ன பார்கவின் கைகளை குலுக்கி, "நீ ரொம்ப நல்லவன் டா அத்தான், ஐ லவ் யூ!" என்று சொல்லி அவன் தாடையை பிடித்து இழுத்து கொஞ்சியவளிடம்,

"அடச்சீ.....லூசு! லவ் யூ சொல்றாளாம்! லவ் யூ எல்லாம் உனக்கு வரப்போறவனுக்கு போய் சொல்லுடீ..... என் கிட்ட ஏன் சொல்லுற! என் இடுப்பு உசரம் கூட இல்ல. உன்னையெல்லாம் லவ் பண்ணி என் இடுப்புல தூக்கி வச்சி சோறூட்ட நான் ரெடியா இல்ல தாயி!" என்றான் எரிச்சலுடன்.

"ஹலோ மிஸ்டர் பார்கவ், கடுகு சிறிசுன்னாலும் காரம் கடுசாக்கும், டோண்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்!" என்று விரலை உயர்த்திக் காட்டியவளிடம்,

"மரியாதையா வாலை சுருட்டிட்டு உள்ள போய் உட்காரு. இல்லன்னா ஷாப்பிங்க்கு நீ கிடையாது!" என்ற தன் அத்தானின் முதுகில் ஒரு குத்து விட்டு நகர்ந்தாள் ஷைலஜா.

"அடியேய்.....குந்தாணி, உன்னையெல்லாம்.....!" என்று மூக்கு புடைக்க கோபத்தில் நின்றவனை,

"வண்டியை எடுத்து தொலையேன்டா!" என்ற அவன் தந்தையின் அதட்டல் "இதோ வந்துட்டேன் டாடி!" என்ற சொல்லுடன் அவனை காரை நோக்கி ஓட வைத்தது.

ஜெயந்தன் தன் அண்ணன் மகனிடம், "என்ன தம்பி; ஜீவாவுக்கும், உனக்கும் எங்கேயாவது இடிச்சுட்டே இருக்கே? என்னப்பா பண்றது?" என்று கவலையுடன் கேட்டார்.

ஜெய் நந்தன் சிரிப்புடன், "ஸாகரி மேடம், நிர்மலா மேடமை எல்லாம் எவ்வளவு படுத்தினேன் சித்தப்பா, இப்போ அதுக்கு எல்லாம் சேர்த்து ஆனந்த் நமக்கு திருப்பி குடுக்குறார் போலிருக்கு!...... கௌதமும், ராகினியும் இன்னிக்கு நைட் அர்ஜுன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருந்தாங்களே நிர்மலா, மறந்தே போயிடுச்சு. கௌதம் பையனுக்கு மேரேஜாம். எல்லாரையும் மொத்தமா இன்வைட் பண்ணிட்டா ஈஸியா இருக்கும்ன்னு சொன்னான். அதுக்காக தான் இன்னிக்கு நைட் வரச் சொன்னேன்மா!" என்று சொன்னவரிடம் தலையாட்டிய நிர்மலா,

"அவங்க பையனும் நம்ம ஜீவா செட் தானேப்பா; நான் அவங்க வர்றதை மீரு கிட்ட சொல்லிடுறேன். ராம் அண்ணா உங்க பொண்டாட்டியை பாருங்க...... தூங்கி தூங்கி என் மேல விழறா! ஏய் கீத்தும்மா.... என்னடீ இப்படி தூங்குற?" என்று கேட்ட நிர்மலாவிடம்,

"போங்க அண்ணி, எப்போ பார்த்தாலும் ஷாப், வொர்க்னு ஓடி ஓடி எங்கேயாவது ரிலாக்ஸ்டா சாய்ஞ்சாலே தூக்கம் தான் வருது.... இந்த பார்கவ் எருமையை ஷாப்பை பார்த்துக்கடான்னு சொன்னா அவனோட க்ளையண்ட்ஸ் லிஸ்ட்டோட சேர்த்து நமக்கு ஃப்ரீயா ஆடிட் பார்த்து குடுக்கறேன். அவ்வளவுதான் என்னால முடியும்னு சொல்றான். இன்னொரு பிசாசு வெளிநாட்டுல உட்கார்ந்து ரிசர்ச், அது, இதுன்னு சொல்லிட்டு இந்த பக்கம் வர மாட்டேங்குது....... கமிட்மெண்ட் குறையும்னு பார்த்தா கூடிட்டு தான் போகுது! என்ன பண்றது.... ஷாப் வர்ற வரைக்கும் படுத்துக்குறேன் அண்ணி!" என்று சொல்லி விட்டு நிர்மலாவின் தோளை தலையணையாக்கி கொண்டார் கீதா.

(உள்ள ரெண்டு ஜீவன் நின்னுட்டு இருந்துச்சுங்கல்ல.....அதுங்க என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்! வாங்க)

"கேப்ஸி.....உன் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப நேரமா வளைஞ்சு, குனிஞ்சு, நெளிஞ்சுட்டு இருக்க......இதுக்கு பேரு தான் வெட்கம்ன்னு மட்டும் தயவு செய்து சொல்லிடாத; இட் சீம்ஸ் ஸோ ஃபன்! ஆமா. நான் உன் கிட்ட கேட்டேன். எதுக்கு இப்படி எல்லாரும் சேர்ந்து வெட்கப்பட்டுட்டு ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க.....
பண்ணையார் எல்லாரையும் கூட்டிட்டு ஷாப்பிங் கூட கிளம்பிட்டாரு. எல்லாருக்கும் டிரஸ், 6 பேருக்கு ஜ்வல்ஸ்..... அவ்வளவு பணக்காரர் ஆகிட்டாராமா?" என்று கேட்ட ஜீவா சிரிப்புடன் புருவம் உயர்த்த கவிப்ரியா ரௌத்திரத்துடன் அவனை பார்த்தாள்.

"என் டார்லிங் என்ன தான் பணக்காரரா இருந்தாலும், குடும்பத்துக்கு, சொஸைட்டி டெவலப்மெண்ட்டுக்கு, அவருடைய வொர்க்கர்ஸுக்குன்னு ஒவ்வொரு காசையும் பக்காவா கால்குலேட் பண்ணி தான்டா செலவழிப்பாரு. உன்னை மாதிரி இருக்கிற காசையெல்லாம் கார் ஆக்குற வேலையெல்லாம் செய்ய மாட்டார். எத்தன வெரைட்டி கார், எவ்வளவு கேஜெட்ஸ்..... மவனே வாழுறடா நீ!" என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவள் சடையை பிடித்து இழுத்து ஸோஃபாவில் அமர வைத்தான் ஜீவானந்தன்.

"டேய்..... எங்கப்பாவை கூப்பிட்டுருவேன்!" என்று சொன்னவளை தலையில் குட்டி, "ஏன்டீ அவரையும் டிஸ்டர்ப் பண்ற..... அவர் அவரோட பொண்டாட்டியோட ஜாலியா இருக்கட்டும். நான் என் பொண்டாட்டியோட கொஞ்சம் மீடியமா இருக்கேன்!" என்று சொல்லி கவியை தன் மடியில் சாய்த்து அணைத்து கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.

"தலிவா ஃபீல் ஆகிட்டீங்க........போல; சரி அதென்ன மீடியமா இருக்கிறது?" என்று முகம் நிமிர்த்தி அவனை நோக்கியவளிடம்,

"பட்டும் படாம; தொட்டும் தொடாம..... லைட்டா லவ் பண்றது தான். சரி நீ சொல்ற மாதிரி நான் என்னத்தடீ இவ்வளவு நாளா வாழ்ந்து கிழிச்சுட்டேன்......வாழ்க்கைன்னா அது உன்னோட வாழ்க்கை மாதிரி இருக்கணும் அம்முலு! எல்லாரும் உன்னை இன்னும் நம்ம வீட்டு பிரின்ஸஸா தான் ட்ரீட் பண்றாங்க. ஒண்ணுமில்ல..... நம்ம எஸ்டேட் ல மாடு கன்னு போட்டா அந்த சீம்பாலை கூட ஏஞ்சலுக்கு எடுத்து வைங்கன்னு அவர் சொல்லுவாரு. நீ ஜீவாம்மா, ஷைலு, இனியா கூட ஷேர் பண்ணிக்கிறேன் டார்லிங்னு சொல்லிட்டு குடுப்ப, வீடு; மாடு; பால் எல்லாம் என்னோடது தான், ஆனா நீ சொன்னா தானே ஒரு டம்ளர் பால் கூட எங்களுக்கு தருவாங்க. உன்னை மாதிரி எல்லாருக்கும் செல்லமா இருக்கிறதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்டீ அம்முலு! கார் வாங்கினது உனக்காக தான் கேப்ஸி! உனக்கு பிடிக்கும்ன்னு என் கிட்ட நீ உணர்த்துற; அப்புறம் எப்படி வாங்காம இருக்கிறது? இன்னும் நீ சின்னதுல ஆசையா கேட்ட ஒட்டகத்தை தான் உனக்கு வாங்கியே குடுக்கல. அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு!" என்று ஜீவா சொன்னதும் கவி துள்ளி எழுந்து விட்டாள்.

"ஏய்.....என்னாச்சும்மா?" என்று கேட்ட ஜீவானந்தனை விசித்திரமான பார்வை பார்த்துவிட்டு,

"ஜீவாம்மா... உனக்கு மூளை தலைக்குள்ள தான் இருக்கா.....இல்ல கொஞ்சம் கனமா இருக்குன்னு நினைச்சு கழட்டி ஒரு ஓரமா வச்சுட்டியா? நான் கார் ஸ்டில்ஸ் தான் எனக்கு பிடிக்கும்னு எடுத்து வச்சிருந்தேன். நீ தான் என்னை இம்ப்ரஸ் பண்ணணும்னு அந்த காரையே வாங்கிட்டு வந்த; ஒவ்வொரு தடவையும் சீம்பால் குடிக்கிறப்போ பொருமிட்டே தான் குடிச்சிருக்க, என் ஆசைன்னு சொல்லி என்னை
ஒட்டகம் மேய்க்க விட்டு பழிவாங்கிடாத ஜீவாம்மா....... நான் ஏன் இப்படி இருக்கேன்னு புலம்பி, புலம்பி என்னையும் டென்ஷனாக்காத. அவங்க அவங்க வாழ்க்கையோட அருமை தெரியாமல் அடுத்தவங்க லைஃப் ரொம்ப அழகானதுன்னு சொல்றது பைத்தியக்காரத்தனம்...... மாமா கூட ஸ்மூத்தா பேச ஆரம்பி. எல்லாம் சரியாகிடும்! அது வரைக்கும் நோ புலம்பல்ஸ்! அப்ப்ப்பா..... கொஞ்சம் கேப் கிடைச்சா என்னை பேசியே கொன்னுடுற! நீ பொண்டாட்டி கூப்பிடுறது ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கு. ஆனா இடம், பொருள், ஏவல் தெரிஞ்சு தான் பேசணும். நமக்கு கல்யாணம் ஆனா.....நம்ம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் ஆனா..... நீ வாடி, போடி, பொண்டாட்டி, அம்முலு குட்டின்னு என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம், அது வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி!" என்று சொன்னவளிடம் ஜீவா,

"என்னடீ கல்யாணம் ஆனா..... பொண்டாட்டி ஆனான்னு இழுக்குற.....! ஜீவானந்தன் எவ்வளவுக்கு எவ்வளவு பொறுமைசாலியோ, அதே அளவுக்கு கோபமும், ரோஷமும் உள்ளவன்...." என்றவனிடம் ஓர் ஏளன சிரிப்புடன்,

"அது தான் தெரியுமே..... இப்ப எதுக்கு இந்த விளம்பரம்?" என்று கேட்டவளிடம்,

"மாமா பையனை கட்டினா சைன்டிபிக்கலா தப்பு; சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணினா தெய்வ குத்தம் ஆகிடும், பிள்ளைங்களை அபெக்ட் பண்ணிடும்னு யாராவது குடும்பத்துல யாராவது ஏதாவது கதை சொல்லிட்டு இருந்தீங்கன்னா எல்லாரையும் சோத்துல விஷத்தை வச்சு கொன்னுட்டு நானும் செத்துடுவேன். ச்சே.....நம்ம அன்பை புரிஞ்சுக்காதவங்க கிட்ட அதை காட்டி எந்த பிரயோஜனமும் இல்ல!" என்று கால்களால் தரையில் ஓங்கி மிதித்தவனிடம்,

"மச்சான்.....நந்து மச்சான்! கூல் டவுன்; சும்மா குதிக்காத! நீ யாரையும் விஷம் வச்சு கொல்லவும், சாகவும் வேண்டாம்.
இப்படி எல்லாரையும் வீட்டை விட்டு விரட்ட ப்ளானும் போட வேண்டாம். நீ எப்படி இருக்கியோ அப்படியே உன்னை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நீயும் அதை மாதிரி என்னோட இயல்புகளோட என்னை ஏத்துக்கணும். உன்னால முடியும்னு தோணுதா?" என்று கேட்டவளிடம் பெருஞ்சிரிப்புடன்,

"என்ன கேட்ட.....உன்னை சமாளிக்க என்னால முடியுமான்னு; நீ பிறந்த அன்னிக்கே பண்ணையாருக்கு தெரிஞ்சுடுச்சுடீ, இது சரியான அடங்காப்பிடாரி, திமிரு பிடிச்ச ராட்சஸி, இவளை மேய்க்க ரெண்டு வயசுல இருந்தே ஒரு அடிமையை ப்ரிப்பேர் பண்ணணும்னு தெரிஞ்சு தானே உன்னை என் கையில குடுத்திருக்காரு. இது அன்னிக்கு எனக்கு புரியலையே......... பாப்பா அழகா பொம்மை மாதிரி இருக்குன்னு நினைச்சு பார்த்துக்குறியானு கேட்டவுடனே மண்டைய ஆட்டி தொலைச்சேன். இந்த உலகத்தில உன்னைய சமாளிக்க கடவுள் ஸ்பெஷலா டிஸைன் பண்ணியிருக்கிறது என்னைத்தான்..... உனக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமையானவன்; ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்.....வாய் இல்லைன்னா உன் கிட்டல்லாம் பிழைக்க முடியாதும்மா!" என்றவனை "போடா லூசு!" என்று திட்டி சிரிப்புடன் அணைத்து கொண்டாள் கவிப்ரியா.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro