💟 ஜீவாமிர்தம் 72
"சரஸ் நான் கொடைக்கானல்ல தான் இனிமே செட்டில் ஆகிடலாம்னு நினைக்கிறேன். ராமும், கீதாவும், அபியும், பார்கவும் உன்னை பத்திரமா பார்த்துக்குவாங்க. எதைப் பத்தியும் ரொம்ப யோசிக்காம உடம்பை பத்திரமா பார்த்துக்க சரஸ்..... எனக்கும், ராம்க்கும் நீ எப்பயுமே வேணும்!" என்று சொன்ன தன் மூத்த மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
"அஜு இவ்வளவு வருஷம் நான் குழப்பத்திலயே இருந்தாலும் ராஜேஷ் எங்கேயோ கண் காணாத தூரத்தில இருக்கார்னே நினைச்சு புலம்பி உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தி இருக்கேன். பெத்தவங்கள அன்பா தாங்குற பசங்க, பாட்டிய சமாளிக்க பொய் சொல்றேன்னு சொல்ற பேரப் புள்ளைங்க, ப்ரெண்டு மாதிரி என்னை முகம் சுளிக்காம பார்த்துகிட்ட அபி இப்படி சொந்தம் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு இங்க இருக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு அஜு, அதுனால நானும் உங்கூட அங்க வந்துடட்டுமா?" என்று கேட்ட சரஸ்வதியிடம் மீரா கைகளைப் பற்றி,
"உங்களுக்கு எங்க இருந்தா சந்தோஷமா இருக்குமோ அங்க இருங்க அத்தை; ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டு போயிட்டா போச்சு; நீங்க என்ன சொல்றீங்க ராம்?" என்று ராமிடம் அபிப்ராயம் கேட்க அவரும் தன் அண்ணி சொன்னதையே திரும்ப சொன்னார்.
"யேய் சரஸ் அதெல்லாம் கிடையாது நீ எங்கயும் போகக்கூடாது பார்த்துக்க...... இங்க என்ன குறை உனக்கு? பெரியப்பா கூட நீ கிளம்பி போய்ட்டா எனக்கு..... நான் உன்னை மிஸ் பண்ணுவேன் சரஸ்!" என்று குதித்த பார்கவை கீதாவும் அபிநயாவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்.
"எனக்கு ஒரு சேன்ஜ் வேணும்னு தோணுதுடா கண்ணா, நான் அஜு வீட்ல இருந்தாலும் மாசம் ஒரு தடவ இங்க வந்துட்டு போறேன். அபி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, இனிமே உன் பொண்டாட்டியோட டையத்த நான் திருடிக்க மாட்டேன். அவள நல்லா பார்த்துகிட்டு நீயும் சந்தோஷமா இரு!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரை பார்த்து விட்டு தன் கணவனை ஓரமாக தள்ளி கொண்டு சென்றார் கீதா.
"தேங்க்யூ ராம்..... அத்தை குணமாகிட்டதும் மாமாவை ரொம்ப தேடுறாங்க! அவர் இல்லைங்கிறத இன்னும் அவங்களால ஏத்துக்க முடியல. இந்த டைம்ல அவங்களுக்கு ஒரு சேன்ஜ் கண்டிப்பா வேணும். அவங்களுக்காக தான் அஜு மாமாவையும் மீருவையும் அங்க பார்சல் பண்றீங்களா? இதெல்லாமே உங்க ப்ளான் தானே?" என்று கேட்ட தன் மனைவியிடம்,
"நாங்க ரெண்டு பேரும் பேசி தான் முடிவுக்கு செஞ்சோம் கீது, இது சரஸ்க்காக மட்டும் இல்ல, கவிம்மாக்காகவும் தான்; நம்ம ஒத்த பொம்பள புள்ளடீ! என்ன தான் ஜெய் மச்சானும் நிர்மலாவும் அங்க இருந்தாலும் அண்ணியையும் அண்ணனையும் அவ தேடத் தானே செய்வா..... அதுக்கு தான் இவ்வளவும்!" என்று சொன்ன தன் கணவனிடம் கை குலுக்கி விட்டு சென்றார் கீதா.
கடை திறப்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் சத்தமே இல்லாமல் விவேக் மற்றும் ஜீவாவின் கண்காணிப்பில் நல்ல படியாக நடந்து முடிந்திருந்தன. சென்னையில் 'அவள் பேஷன்சை' நல்ல முறையில் ஒதுக்கி கொடுக்கும் பணியை ஜீவா ஒரு பிரபலமான பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் கொடுத்து இருந்தான். ஆர்ய மாலா தன் குடும்பத்தினருடன் மூன்று நாட்களுக்கு முன்னதாக வந்து கொடைக்கானலில் தன் ஜாகையை அமைத்து விட்டார்கள். அவர்களது மேற்பார்வையில் "ஜஸ்ட் ஃபார் மை லேடி!" வாடிக்கையாளர்களின் வருகைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னது.
"சூப்பர்ங்க ஆர்யா, க்ரேட் ஒர்க்..... அந்த மூக்கி கூட இருக்கிறதுனால தான் மூணே நாள்ல இவ்வளவு பெர்பெக்ட் பினிஷிங் குடுக்க முடியுதுன்னு நினைக்கிறேன். இனிமே ப்ரகி பேபியை லிட்டில் சிக்ஸ்ல வந்து விட்டுட்டு நீங்க ரிலாக்ஸ்டா வொர்க் பண்ணுங்க. உங்க பேபியை பத்திரமா பார்த்துக்க வேண்டியது எங்களோட ரெஸ்பான்ஸிபிளிட்டி...... ஓகே!" என்று சொன்ன தன் முதலாளியின் கணவனிடம்,
"நீங்க நல்லா இருக்குன்னு சொன்னா போதாது ஸார். கவி மேடம் பார்த்து ஓகே சொல்லணும். நம்ம கண்ணுக்கு தெரியாம இருக்குற பல தப்ப அவங்க முதல் பார்வையிலேயே கண்டுபிடிச்சுடுவாங்க. ரொம்ப ரசிச்சு ரசிச்சு வேலை செய்றவங்க ஸார்; கல்யாணம் ஆன பிறகும் அவங்களோட கனவு கலையாம பார்த்துகிட்டதுக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். ரெண்டு மூணு நாளா ப்ரஹதீஸ்வரியை பார்த்துக்கிட்டதுக்கும் சேர்த்து தான்! சீக்கிரமே உங்களுக்கும் மேடமுக்கும் கூட இப்படி ஒரு குட்டி மெம்பர் வந்து உங்க லைஃப்ல ஹாப்பினெஸ் குடுக்கணும்!" என்று சொன்னவளிடம் முக மலர்ச்சியுடன் "தேங்க்யூ ஃபார் யுவர் சப்போர்ட் அண்ட் விஷஷ் ஆர்யா. இன்னும் கொஞ்ச நேரத்தில ப்ளவர்ஸ் வந்துடும். அதை மட்டும் டெகரேட் பண்ணிட்டோம்னா வேலை முடிஞ்சது. உங்க ஓனரம்மாவுக்கு இந்த ஸர்ப்ரைஸ் பிடிக்கும்னு நம்புறேன்!" என்று சொன்னவனிடம் "கண்டிப்பா பிடிக்கும் ஸார்..... சென்னைய விட இந்த இடம் கொஞ்சம் பெரிசா இருக்கு. கவி மேடம் கொஞ்சம் அவங்க டச்சையும் உள்ள சேர்த்தாங்கன்னா இன்னும் ரொம்ப அழகாயிடும்..... ஆனா என்ன மறுபடியும் முதல்ல இருந்து கடைக்கு ரெபூடேஷன் சம்பாதிக்கணும், கஸ்டமர்ஸ் மூவிங் ரேட் நல்ல படியா இருக்கணும், நிறைய ப்ராபிட் கிடைக்கணும், இன்னும் எத்தனையோ விஷயம் இருக்கே ஸார்......!" என்று சொன்ன ஆர்யமாலாவிடம்,
"அய்யய்யே நீங்க என்ன ஆர்யா இவ்வளவு சீரியஸா பேசிட்டு..... உங்களோட வொர்க்கை ஜாலியா என்ஜாய் பண்ணி செய்ங்க. அதுக்கு மேல வர்றதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். சீக்கிரம் வொர்க்கை முடிச்சிட்டு கிளம்புவோம் வாங்க, உங்க ஹப்பி உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க!" என்று சொன்ன ஜீவாவை வியப்பாக பார்த்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்தாள் ஆர்யமாலா.
மாலையில் ஜெயந்தன், பத்மா, அர்ஜுன், மீரா, சரஸ்வதி, பலராம், கீதா, பார்கவ், அபிநயசரஸ்வதி, இசக்கி ராசு, இனியா, பவின், ஷைலு, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர மூன்று மாதங்களுக்கு பின் ஆனந்த ஸாகரத்தில் மறுபடியும் உற்சாகம் களை கட்டியது.
இனியாவிற்கும், ஷைலுவிற்கும் ஓடிச் சென்று கார் கதவை திறந்து விட்டு அவர்களை அணைத்துக் கொண்ட ஜெய் நந்தனிடம் பார்கவ்,
"ஏன் இதோட விட்டுட்டீங்க மாம்ஸ்..... ரெண்டு பேரையும் ஒரு கூடைக்குள்ள போட்டு உங்க தலையில வச்சு வீட்டுக்குள்ள வரைக்கும் தூக்கிட்டு வர வேண்டியது தானே!" என்று கேட்டு விட்டு அனைவரின் முறைப்பையும் பதிலாக பெற்றுக் கொண்டான்.
"ஏய் பாகி அத்தான் நான் சென்னையில தனியா பஸ்ல ஏறி பவினை பார்க்க போயிட்டு வந்தேன் தெரியுமா?" என்று ஷைலஜா அவனிடம் சொல்ல இனியா, பார்கவ், ஜெய் நந்தன் மூவரும் ஆவென்று வாய் பிளந்தனர்.
"அறிவு இருக்காடீ உனக்கு.... நான் தான் எது வேணும்னாலும் என்னைக் கூப்பிடுன்னு சொன்னேன்ல, எங்கயாவது தொலைஞ்சு போய் இருந்தன்னா யார்டீ பதில் சொல்றது?" என்று கத்திக் கொண்டு இருந்தவன் பக்கத்தில் பவின் அமைதியாக அருகில் வந்து நின்று,
"கூல் பார்கவ்.... நான் தான் ஷைலுவை தனியா வர முடியுமான்னு பெட் கட்டி கிளப்பி விட்டேன். அவ கரெக்டா எங்கிட்ட வந்தவுடனே அவ முகத்துல எவ்வளவு எக்ஸைட்மெண்ட் இருந்தது தெரியுமா, இந்த ஜெனரேஷன்ல ஒரு பொண்ணுக்கு தனியா வெளியே போய்ட்டு வரத் தெரியலன்னு வெளியே யார்ட்டயாவது சொல்லிப் பாருங்க; உங்கள விசித்திரப் பிராணி மாதிரி பார்த்துட்டு போவாங்க! இன்னும் கொஞ்ச நாள்ல க்ளினிக் வரணும்னா ஷைலு கார் எடுத்துட்டு வருவா. நீ தனியா வருவ, அது உன்னால முடியும் தானே ஷை?" என்று கேட்ட தன் கணவனிடம் பெரிதாக தலையை ஆட்டி வைத்து விட்டு இனியாவின் கழுத்தை கட்டிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் ஷைலு.
"ஜீவா பண்ணையில நெலவரம் எப்படிறா போயிட்டு இருக்கு..... எம்புட்டு முதல் போட்ட?" என்று கேட்ட இசக்கி ராசுவின் தோளில் கை போட்டு,
"அதெல்லாம் எவனுக்குடா தெரியும்..... ப்ளானை நீ குடுத்த; பணத்தை அப்பா குடுத்தாங்க, மத்த வரவு செலவெல்லாம் சித்தப்பா பார்த்துக்குறாங்க, மாட்டுக்கு கரெக்டா தண்ணி காட்டுறாங்களா, கோழிக்கும் மீனுக்கும் வாத்துகளுக்கும் கரெக்டா இரை போடுறாங்களா; காலையில திறந்து விட்ட கோழியெல்லாம் ஈவ்னிங் கரெக்டா நம்பர் குறையாம ஷெட்ல வந்து அடையுதா..... கோழிக்கோ மாட்டுக்கோ பிரச்சனை எதுவும் வந்தா அதை உடனே சரி பண்ணிடுறாங்களான்னு பார்த்துக்கறது தான் என்னோட வேலை, ஒரே வார்த்தையில சொல்லணும்னா மெயின்டனென்ஸ் மட்டும் தான் நான்! மத்தபடி ப்ராபிட் டீடெய்ல்ஸ் கேக்கணும்னா நீ உன் மாமனார் கிட்ட தான் கேக்கணும்!" என்று சொன்ன ஜீவானந்தனை கழுத்தை பற்றி உள்ளே இழுத்து சென்று கொண்டிருந்தான் இசக்கி ராசு.
எட்டு மணியளவில் கவிப்ரியாவும், விவேக்கும் வீட்டுக்கு வர அனைவரும் அவளின் நலம் விசாரித்தனர்.
"கவிம்மா" என்று அழைத்த சரஸ்வதியிடம் ஓடிச் சென்று அவரின் உடல் நலம் பற்றி விசாரித்தவள் தன் அன்னையிடம், "இப்பவாவது என்னை உங்க மடியில படுக்க விடுவீங்களா.....?" என்று கேட்டாள். மீரா சிரிப்புடன், "எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா உங்க ஹஸ்பெண்ட்டுக்கு இதுல பிரச்சனை இருக்கும்னு தோணுது. அங்க பாரு!" என்று சொல்ல அவள் பார்த்த இடத்தில் ஜீவா நின்று அவளை முறைத்து கொண்டு இருந்தான்.
"அவன் கிடக்குறான்..... அம்மா மடியில படுத்துக்குற ஃபீல் எல்லாம் ஒரு தனி ஃபீல்! அது அவனுக்கு எங்க தெரியப் போகுது; நீங்க வாங்கம்மா!" என்று சொல்லி விட்டு தன் அன்னை மற்றும் சித்தி அத்தையுடனே செட்டில் ஆகி விட்டாள் கவிப்ரியா.
அனைவரும் உணவு உண்ணும் வேளையில் ராகவும் வந்து நிற்க கவிப்ரியாவின் மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு நெருடியது.
"வாடா ராகவ்..... திடீர்னு என்ன சொல்லாம கொள்ளாம?" என்று கேட்ட தன் அக்காவிடம்,
"ஏன் நான் வரக் கூடாதா கவி? எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ற மாதிரி தோணுச்சு. கிளம்பி வந்துட்டேன். நினைச்சவுடனே கிளம்பி வர்ற மாதிரி இருக்கணும்னு தானே யூஎஸ், யூகேல எல்லாம் வொர்க் பண்ணாம சிங்கப்பூர்ல ஜாய்ன் பண்ணினேன்......." என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை சரஸ்வதி ராகவ் என்று அழைக்க அவரிடம் சென்று இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு நேராக அபிநயசரஸ்வதியிடம் சென்று நன்றி உரைத்தான்.
"எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் ராகவ்.... சிங்கப்பூர்ல இருந்து எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? டையர்டா இருப்பீங்க. ப்ரெஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிட்டுட்டு பேசலாம்!" என்றாள் அபிநயா.
"வாங்கிட்டு வந்த ஐயிட்டம் எல்லாம் உங்களுக்கு தான் அண்ணி, அண்ணன்ங்கிற பேர்ல இருந்துகிட்டு வாடான்னு கூட கூப்பிட முடியாம தோசைய முழுங்கிட்டு இருக்கிறவனுக்கு எல்லாம் ஒண்ணும் கிடையாது! சொல்லிடுங்க" என்று சொன்ன தன் தம்பியை ஒரு நிமிடம் தலையை தூக்கி பார்த்த பார்கவ் தோளைக் குலுக்கி விட்டு மறுபடியும் தன் ப்ளேட்டை பார்த்து விட்டு குனிந்து கொண்டான்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியில் சிறிது நேரம் காற்றாட அமர்வோம் என்று சென்றதும் ஜெயந்தன் ஜீவானந்தனை தன்னருகில் அழைக்க அவன் அவரிடம் சென்றான்.
"இந்தா நீ கேட்ட..... இல்லல்ல உன் பொண்டாட்டி உன் கிட்ட கண்ணாடி வீட்டோட சாவி! மாப்பிள்ளை அவர் வீட்டை செட் பண்ணி முடிக்கிற வரைக்கும் நானும், பாட்டியும் இங்க தான் இருப்போம், ஒரு வேளை அதுக்குள்ள உனக்கு தேவைப்பட்டா அது தான் உன் கையில குடுத்துட்டேன். இனிமே நீயே இதை பத்திரமா வச்சுக்க, எப்போ வேணுமோ அப்ப உபயோகிச்சுக்க, புரியுதா?" என்று கேட்ட தன் தாத்தாவை "போய் பாட்டியை மட்டும் கூட்டிட்டு ஆனந்த் தாத்தா ஸாகரி க்ரானியோட ரூமுக்கு வாங்க!" என்று சொல்லி விட்டு சென்றான் ஜீவானந்தன்.
பத்து நிமிடங்கள் கழித்து அறைக்குள் சென்றவன் ஜெயந்தனிடம், "எங்க மேல என்ன கோபம் இருந்தாலும், நாங்க கேட்டது நியாயமான ஆசையா இருந்தா சம்டைம்ஸ் இல்லன்னா கூட அத நீங்க நிறைவேத்தி வைக்குறீங்க தாத்தா. நான் உங்க பேத்தியை க்ராண்ட் வெட்டிங் பண்ணிக்காம இருந்திருக்கலாம். பட் அவ கூட வாழப் போற வாழ்க்கை க்ராண்ட் சக்ஸஸ்புல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன். இது அவளோட ட்ரீம் பொட்டீக்கை அவ கிட்ட தர்றதுக்காக நான் எடுத்த ஒரு சின்ன முயற்சி. நாங்க ரெண்டு பேரும் எங்க பெர்சனல் லைஃப்லயும், கேரியர்லயும் ஜெயிக்க நீங்க தான் ப்ளெஸ் பண்ணனும். இதைப் பிடிங்க!" என்று "ஜஸ்ட் ஃபார் மை லேடி" சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டு அவர்கள் இருவரின் கால்களில் பணிந்து எழுந்தான் ஜீவானந்தன்.
"நீ நல்லா இருக்கணும்டா ராஜா; உங்க தாத்தாவுக்கு அப்பப்போ எங்க மாமனார் மாதிரி கோபம் வந்துடும். அதையெல்லாம் கண்டுக்காத, கவிக்கு இப்படி பார்த்து பார்த்து செய்ற இந்த அக்கறையையும் உன் அன்பையும் மட்டும் கடைசி வரைக்கும் விட்டுடாத..... ரெண்டு பேரும் மனநிறைவோட ரொம்ப வருஷம் நல்லா வாழணும்!" என்று சொன்ன தன் பாட்டியிடம் நன்றி கூறி ஜெயந்தனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான் ஜீவானந்தன்.
"என்ன பேரனுக்கு வாழ்த்தெல்லாம் பெரிசா இருக்கு?" என்று கேட்ட தன் கணவரிடம்,
"மனசார வாழ்த்துறதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும், உங்க கிட்ட அது இல்ல போலிருக்கே.... நாளைக்கு உங்க பேத்தி வந்து கால்ல விழும் போது என்ன செய்யப் போறீங்கன்னு நான் பாக்குறேன்!" என்று சொல்லி விட்டு சென்றார் பத்மா.
"முறைச்சுக்கிட்டே இருக்கும் போதே எல்லாப் பயலும் இந்த ஆட்டம் போடுறாங்க. இன்னும் சிரிச்சு இவனுங்க தோள்ல கையைப் போட்டா என்ன செய்வானுங்களோ.....!" என்று மனதிற்குள் நினைத்த படி தன் மனைவியின் பின் சென்றார் ஜெயந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro