💟 ஜீவாமிர்தம் 7
கவிப்ரியாவும், ஜெய் நந்தனும் அவளது வீட்டில் இருந்த மொட்டை மாடித் தோட்டத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
"என்னடா ஏஞ்சல் திடீர்னு என்னை மாடிக்கு இழுத்துட்டு வந்துட்ட...... இந்த வொய்ட் லில்லியும், ரோஸூம் வளரவே மாட்டோம்ன்னு அடம் பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தாங்களே..... இப்ப மொட்டு விட்டுருக்கு. பிஷ் வேஸ்ட் வாட்டர் மெத்தட் ட்ரை பண்ணியா?" என்று கேட்ட தன் மாமனின் தோளில் சாய்ந்து கொண்டு,
"ஆமா டார்லிங், நீ தானே அந்த தண்ணியில நிறைய நைட்ரஜன் கிடைக்கும். செடி நல்லா வளரும்ன்னு சொன்ன..... எப்படி தடவிக் குடுத்தே வளர்த்துட்டேன்.... பார்த்தியா?" என்று கேட்ட கவிப்ரியாவிடம் சிரிப்புடன்,
"சூப்பர்டா ஏஞ்சல்! இன்னும் நிறைய காய்கறி எல்லாம் போடலாம். நீ தான் பூவோட போதும்ன்னு நிறுத்திக்கிற...... 4 நாளைக்கு ஒரு தடவை தான் நம்ம தோட்டத்தில் இருந்து காய்கறி குடுக்க முடியுது...சரி அதை விடு.
அப்புறம் உன் பொட்டீக் ஷாப்ல வொர்க் எல்லாம் எப்படி போகுது? எல்லாம் ஓகே தானே? காரணம் இல்லாம மாமாவை நீ இப்படி கூட்டிட்டு வந்து இருக்க மாட்டியே..... ஆனந்த்க்கு எதுவும் வேணும்ன்னு உன் கிட்ட கேட்டானா? அவனை யாரும் எதுக்காகவும் கம்பெல் பண்ணாதீங்கடா! நிலாம்மா அவன் கிட்ட பேச சொல்லி என்னை நச்சரிச்சதுனால தான் போனேன். ஒரு வார்த்தை சொன்னான்டா, உண்மையிலேயே மனசு ரொம்ப வலிச்சது. சின்ன வயசுல இருந்து ஒரே பையனா வளர்ந்துட்டதுனால எங்கிட்ட பிடிவாதம், கோபம், பொஸஸிவ்னெஸ் இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தான் இருந்திருக்கு. உங்க அத்தையை எத்தனையோ தடவை ஹர்ட் பண்ணிட்டு அப்புறமா அவ கிட்ட மன்னிப்பும் கேட்டுருக்கேன். ஆனா அவளோட வார்த்தைகள் கூட இவ்வளவு ஆழமா எனக்குள்ள இறங்கினதில்ல. 20 வயசுல இருந்த மாதிரியே 50 வயசுலயும் இருக்க முடியாது இல்லையா? கொஞ்சமாவது பக்குவம் வந்து இருக்கணுமே? என்னோட அவசரம், முட்டாள்தனத்தால ஆனந்த் பையன் லைஃப ரொம்ப காம்ப்ளிகேட் ஆக்கி விட்டுட்டேன்! அப்பான்னு அவன் கூப்பிடுற வார்த்தையை கேக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கணுமோ தெரியல!" என்று சொன்ன ஜெய் நந்தனின் மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்து கொண்டு இருந்தாள் கவிப்ரியா.
"ஏ............ய்! என்னடா ஏஞ்சல்! அழறியா; வேண்டாம்டா கண்ணா, ஸாரிம்மா! மாமா மனசுல இருக்கிறதையெல்லாம் கொட்டுறேன்னு சொல்லி உன்னை அழ வச்சுட்டேன் பாரு! அழாதடா...... கஷ்டமா இருக்கு!" என்று சொன்னவரிடம்,
"மாமா எல்லா தப்பும் என் மேல தான். ஜீவாட்ட ஸாரி கேட்டா அவன் அதை கண்டுக்கவே இல்ல. இப்போ நீ தப்பெல்லாம் நீ செஞ்சதா சொல்லிட்டு இருக்க. யாருமே எனக்கு தண்டனை குடுக்க மாட்டீங்களா?" என்று கேட்ட படி தன் மாமன் முகம் பார்த்தவளிடம் புன்னகைத்து,
"நீ ராகவ்க்கு பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு நினைச்ச மாதிரி ஆனந்த் உனக்கு பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு நினைச்சு அவன் தான் தப்பு செஞ்சேன்னு ஒத்துக்கிட்டான். இந்த விஷயம் பற்றி ஏற்கனவே எனக்கு தெரியும்டா ஏஞ்சல்! ஆனந்த் சென்னைக்கு வந்தவுடனே மீரா சொல்லிட்டா. ஆனா தம்பி ஒரு மாதிரி இறுகிட்டானே..... அவனை எப்படி மறுபடியும் ஃபார்ம் பண்றது..... அதனால தான் உங்கப்பன், சித்தப்பன் கிட்ட என் புள்ளைய ஒப்படைச்சுட்டேன். நான் ஒருத்தன் பண்ணின தப்பால குடும்பத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதாகிடுச்சு. நீ தேவையில்லாம வருத்தப்படுவன்னு நினைச்சு தான் உங்கிட்ட எனக்கு விஷயம் தெரியும்ன்னு சொல்லல. இதுல நீ எங்கடா தப்பு செஞ்சதா நினைச்சு ஃபீல் பண்ற? தேவையில்லாம கண்ணெல்லாம் கலங்கிட்டு.....! என் அழகு பொம்மை!" என்று அவள் கன்னங்களை தடவியவரின் கைகளை முத்தமிட்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றி,
"நான் செஞ்சத நீங்க ரெண்டு பேரும் பெரிசா எடுத்துக்காம விடலாம். ஆனா எனக்கு தெரியும். நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான்! இதை எப்படியாவது சரி செஞ்சு ஆகணும். பழைய சந்தோஷம் திரும்ப வந்து எல்லாரும் சகஜமா மாறணும். அப்புறம் தான் என்னால நிம்மதியா உம் புள்ளைய லவ் பண்ண முடியும். கவலைப்படாதே டார்லிங், நீயும், அத்தையும் கொஞ்சி விளையாடுறதுக்கு பேரன், பேத்தின்னு ரெண்டு பேபீஸ் பெத்து குடுக்குறேன். அத்தைக்கு என் மேல ஏதாவது கோபம் இருந்தாலும் சரி ஆகிடும்ல்ல.....!" என்று கண்சிமிட்டிய கவிப்ரியாவிடம்,
"கேக்குறதுக்கும், யோசிக்குறதுக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்குடா ஏஞ்சல்! பார்க்கலாம். உன் ஆசைப்படி எல்லாம் நல்ல படியா நடக்கணும்!" என்றவரிடம்,
"கண்டிப்பா நடக்கும் டார்லிங்; நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத!" என்றாள் கவிப்ரியா.
"என்னடா கவி கண்டிப்பா நடக்கும்? எதுக்கு உங்க மாமா ஃபீல் பண்றாராம்?" என்று கேட்ட படி மேலே வந்த நிர்மலாவை பார்த்ததும் ஜெய் நந்தன் அருகே அழைத்து அமர்த்தி கொண்டார்.
"சொன்னா நீங்க கொஞ்சம் வருத்தப்படுவீங்களே அத்தை.....!" என்று யோசனையுடன் இருந்தவளிடம் அடக்கப்பட்ட சிரிப்புடன்,
"பரவாயில்லை சொல்லு கவிம்மா! நான் எதுவும் வருத்தப்பட மாட்டேன். உன் டார்லிங்கும், நீயும் எங்க ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?" என்று கேட்ட தன் மனைவியை வாயில் அடித்தார் ஜெய் நந்தன்.
"ஐயோ....ஆன்ட்டி, டார்லிங் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். ஆனா நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க..... மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் மச்சான் ரொம்ப வருத்தப்படுவான். அதனால நீங்க மிஸ்டர் ஜெய்நந்தனை சமாளிங்க. நான் மிஸ்டர் ஜீவானந்தனை சமாளிக்குறேன். சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. உங்க பையனை ரொம்ப நாள் வெயிட் பண்ண சொல்றதுக்கு மனசு வரல. நான் கீழே போறேன்! ரெண்டு பேரும் இப்போ கீழே வர மாட்டீங்களே...?" என்று கேட்டவளிடம் ஜெய் அசட்டுப் புன்னகையுடன்,
"நீ கிளம்பு ஏஞ்சல்; மாமாவும், அத்தையும் கொஞ்ச நேரம் வாக்கிங் போயிட்டு வர்றோம்!" என்று சொன்னவரிடம்,
"மாம்ஸ் உங்க மடியில உட்கார வச்சு தானே எனக்கு காது குத்தினாங்க....பதினொரு மணி பகல் வெயில் தான் உங்க வாக்கிங் போற டைமா? கூட நிலா இருந்தா நேரம் கூடவா தெரியாது? நடக்க போறீங்களா? எதையாவது நடத்தப் போறீங்களான்னு தெரியல......நடத்துங்க; நடத்துங்க!" என்று சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் கவிப்ரியா.
"என்ன ஸ்ரீ சின்னப் பொண்ணு நம்மள பார்த்து கேலி பேசுற மாதிரி நடந்துக்குறீங்க? மானம் போகுது! கவிம்மா இவ்வளவு சீக்கிரம் நந்துவை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிடுவான்னு நான் நினைக்கல ஸ்ரீ! நீங்களும், கவியும் தனியா மேல வந்ததும் என்ன விஷயமா இருக்கும்ன்னு யோசிச்சு யோசிச்சு தலை சூடாகிடுச்சுப்பா. அதனால தான் மேல வந்து பார்க்கலாம்ன்னு வந்துட்டேன். கவிம்மா உங்க கிட்ட ஸாரி கேட்டாளா?" என்று கேட்ட தன் மனைவியை அணைத்து கொண்டு,
"எப்படிடீ பஞ்சுமூட்டை உன் மருமக பல்ஸை கரெக்டா பிடிச்சுட்ட? பாவம்டா; மனசுக்குள்ள அன்பை மறைச்சு வச்சுட்டு வாலு இவ்வளவு நாள் வீம்புக்கு பேசாம இருந்திருக்கு பாரேன்! கிட்டத்தட்ட நீ உன் காதலை மறைச்சு வச்ச மாதிரி; ஆனாலும் ஆனந்துக்கும், கவிம்மாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு நிலாம்மா!" என்று சொன்னார் ஜெய் நந்தன்.
"யோசிக்க வேண்டிய இடத்துல யோசிக்குறது கிடையாது, தேவையே இல்லாத இடத்துல ரொம்ப யோசிக்குறது ரெண்டுமே பிரச்சனை தான் ஸ்ரீ! மாமா பையன், அத்தை மகள்ன்னு நந்து, கவிக்கு உறவு இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க ஸ்ரீ! இவ்வளவு வருஷமா அவங்க பேசிக்கவேயில்ல. ஆனா பேச ஆரம்பிச்ச பிறகு அவங்களுக்குள்ள ஏதாவது ஒதுக்கம், தடுமாற்றம் ஏதாவது தெரிஞ்சதா.......? நந்துவும், கவியும் இவ்வளவு நாள் ஒரு வைராக்யத்தால தான் பிரிஞ்சு இருந்திருக்காங்கப்பா, இனிமேலும் அந்த பிரிவு சாத்தியம் இல்லைன்னு தான் எனக்கு தோணுது! இதுக்கும் மேல நீங்க யோசிச்சுக்கோங்க!" என்று சொன்ன நிர்மலாவிடம் மெல்லிய சிரிப்புடன்,
"ஏதாவது பஞ்சாயத்துன்னு வந்தா என் கிட்ட தள்ளி விட்டு வேடிக்கை பாருடீ! உன் பையன் கிட்ட பேசி ஒரு தடவை தெளிவா கல்யாணத்துக்கு சம்மதமா ன்னு கேட்டு சொல்லிடு. சீக்கிரமே நிச்சயதார்த்ததுக்கு தேதி குறிச்சுடலாம்!" என்று சொன்னவரிடம்,
"கீழே போகலாம் ஸ்ரீ!" என்று கெஞ்சலுடன் கேட்டார் நிர்மலா.
"சும்மா பேசிட்டு தானேம்மா இருக்க; நான் உன் பக்கத்தில கூட வரல. இரண்டடி தள்ளி தான் உட்கார்ந்து இருக்கேன்!" என்றவர் நிர்மலா முறைப்புடன் பார்க்க சிரித்து கொண்டு, "சரி சரி முறைக்காத; கிளம்பலாம்!" என்று சொல்லி தன் மனைவிய கீழே அழைத்து சென்றார்.
கீழே சமையல் அறைக்குள் ஒரு பெரிய சண்டை நடந்து கொண்டு இருந்தது. தன் மடிக்கணினியில் வேலைகளை செய்து கொண்டிருந்த பார்கவிடம் ஜெய் நந்தன், "என்னடா நடக்குது இங்க? எதுக்கு இவ்வளவு கலவரம்?" என்று கேட்க, அவன் எரிச்சலுடன் அவரிடம்,
"முப்பெரும் தேவியரும் உங்க அருமை பையனை ஏதோ விளையாட கூப்பிட்டாங்க. அவன் சீன் போட்டுட்டு கிச்சனுக்குள்ள அம்மா, பெரியம்மாவுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு ஓடி ஒளிஞ்சுக்கிட்டான். அதனால தான் நாலும் உள்ள போய் கிச்சனில் அதகளம் பண்ணிட்டு இருக்குங்க. எதையாவது கொட்டி கவுத்துட்டு க்ளீன் பண்ண வாடா அண்ணான்னு கூப்பிடட்டும். கவிப்ரியாவுக்கு அப்புறம் இருக்கு கச்சேரி!" என்று சொல்லியவனிடம்,
"ஏன்டா அவ்வளவு சண்டை போட்டுக்குறாங்கன்னு சொல்லிட்டு லேப்டாப்க்குள்ள தலையை விட்டுட்டு என்னத்தடா தேடிட்டு இருக்க? நீ போய் ஷைலு, இனியாவை இழுத்துட்டு வா. அப்புறம் ஊசிப் பட்டாசு சத்தம் தன்னால அடங்கிடும்!" என்றார் பலராம்.
பார்கவ் எரிச்சலுடன் எழுந்து சென்று ஷைலஜா, இனியாவை கிச்சனுக்குள் இருந்து வெளியே அழைத்து வந்தான். வந்தவன் தனது புலம்பலை
ஆரம்பித்து விட்டான்.
"பொறுப்பா ஒரு பையன் வேலை பார்த்துட்டு இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் இப்படி பாதி வேலையில டிஸ்டர்ப் பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் என்னப்பா? குடுத்து வச்சுவங்க. ஹெச்ஓடி ஸார் லீவ் போட்டுட்டாரு. நீங்களும், உங்க வொய்ப் ம் ஷாப் ல வொர்க் அலாட் பண்ணி குடுத்துட்டு ஓடியாந்துட்டீங்க..... இந்த பண்ணையாருக்கும், லாயருக்கும் வேலைன்னு ஒரு விஷயம் நியாபகம் இருக்கான்னு கூட தெரியல. கவிப்ரியா அவளோட "அவள் பேஷன் க்ரியேட்டர்ஸ்" சாவியை குடுத்து விட்டுட்டு நாலு நாள் என்னை தேடாதீங்கன்னு எழுதி வச்சுட்டு வந்து வீட்ல டான்ஸ் ஆடிட்டு இருக்கா. ஏய் ஷைலு, இனியா நீங்க என்னடீ இந்த தடவை உங்க லீவுக்கு காரணம் காய்ச்சலா.... பாட்டி செத்து போயிட்டாங்களா?" என்று கேட்ட பார்கவிடம் இருவரும் இணைந்து,
"அத்தான், கொஞ்சம் வளருங்க. இப்பல்லாம் கிண்டர் கார்டன் குழந்தைங்க கூட லீவுக்கு பெட்டரான ரீசன் சொல்றாங்க. காலேஜ் லெவல் கேர்ள்ஸ் கிட்ட போய் குட்டிப்பாப்பா மாதிரி லீவ் போட காரணம் சொன்னியான்னு கேக்கறீங்க...... அதெல்லாம் தேவையே இல்ல. நான், இனியா எல்லாம் படுத்துக்கிட்டே பாஸாகிடுவோம். ரெண்டு பேரும் அவ்வளவு ஜீனியஸாக்கும்!" என்று சொன்ன ஷைலஜாவிடம்,
"ரிசல்ட் வரட்டும்! அப்புறம் பேசுங்க உங்க பெருமையெல்லாம்; காலேஜ்ல இருந்து ஏதாவது கம்ப்ளைன்ட் வந்தது, மாமா தான் வந்து நிக்கணும். தெரியும்ல?" என்று மிரட்டியவனிடம்,
"அதெல்லாம் தெரியும் தீக்கோழி! நீ நிமிர்ந்து பார்த்து ரொம்ப நேரம் ஆச்சு, மண்டைய லேப்டாப்க்குள்ள விட்டுக்க; எங்களுக்கு வேற வேலை இருக்கு!" என்று பழிப்பு காட்டினாள் ஷைலஜா.
"உனக்கு வாய் ரொம்ப கூடிப் போச்சு.....இரு உன்னை வச்சுக்கிறேன்!" என்று கோபத்துடன் சொன்னான் பார்கவ்.
"அத்தான் உனக்கு ஓகேன்னா எனக்கு ஒண்ணும் இல்ல. பட் கட்டிக்குறதுக்கு, பெட்டா வச்சுக்குறதுக்கு உன்னை விட பெட்டர் சாய்ஸா எனக்கு யாரும் கிடைக்க மாட்டாங்களா என்ன?" என்று கேட்டவளை முகச்சுளிப்புடன் அதட்டிய இனியா, "ஸாரி அத்தான்! ஷைலு தெரியாம பேசிட்டா! அவளுக்கு பதிலா நான் ஸாரி கேட்டுக்கறேன்!" என்றாள் சிறு புன்னகையுடன்.
"பரவாயில்லைடா லட்டு, உன் ப்ரெண்டை கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லு. வேற யார்ட்டயும் இப்படி எல்லாம் பேசக்கூடாது ஷைலு! தப்பா எடுத்துக்க சான்ஸ் குடுக்காம பேசப் பழகு!" என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான்.
ஜெய் நந்தன் சமையல் அறை வாசலில் சென்று நின்று கொண்டு உரத்த குரலில்,
"ஏஞ்சல் இப்போ என்ன உனக்கு விளையாடணும் அவ்வளவு தானே? யுனிக் திங்க்கிங்ன்னு ஒரு கேம் சொல்லுவியே.... அத விளையாடலாம்! நீ தான் எப்பவுமே அந்த கேம்ல ஜெயிப்பல்ல.... மாமாவும் கேமுக்கு வர்றேன். வெளியே வாடா!" என்று அழைத்து வந்து ஹாலில் பேப்பர், பேனா சகிதமாக அமர்ந்து விட்டார்.
"பை ஜீவாம்மா! உன்னை மாதிரி ஒரே இடத்தில உட்கார்ந்துகிட்டு உதவி செய்யறது எல்லாம் என்னால முடியாது. எனக்கு ஃபன் வேணும். நான் ஜெயிக்கணும். அம்மா, சித்தி நீங்களும் டென் மினிட்ஸ் ப்ரேக் எடுத்துட்டு வாங்க. க்ரேவியை கிளறி விடுற வேலையை வேணும்னா ஜீவாம்மா கிட்ட குடுத்துட்டு வாங்க! அவன் கரெக்டா செஞ்சு முடிச்சிடுவான்!" என்று சொன்ன கவியின் கையை அழுந்தப் பற்றிக் கொண்டான் ஜீவானந்தன்.
"ஏய் விடுடா.....!" என்று கையை உறுவியவளிடம், "ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. உன் கிட்ட ஒரு விஷயம் க்ளியர் பண்ணிக்கணும். மை டியர் ஆன்ட்டீஸ் கொஞ்சம் இடத்தை க்ளியர் பண்றீங்களா.... ப்ளீஸ்?" என்றான் பணிவுடன்.
என்னடீ மீரா எல்லாம் செட் சேர்ந்துட்டு அமர்க்களம் பண்ணுதுங்க. நல்ல வேளை ஊமை குசும்பு பண்றவன் இங்க இல்ல. இல்லன்னா அவனையும் சேர்த்து சமாளிக்கணும்!" என்ற கீதாவிடம் புன்னகைத்து,
"என்ன கீது ஏதோ அஞ்சு வயசு பையனை சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்க! ராகவ்க்கு 22 வயசு ஆகிடுச்சு. ஆனாலும் இன்னும் மாறி இருக்க மாட்டான்ங்கிற?" என்று சந்தேகமாக கேட்ட மீராவிற்கு,
"நந்துல இருந்து இனியா வரைக்கும் யாருமே அவங்க இயல்பை மாத்திக்கவே இல்ல. அப்புறம் ராகவ் மட்டும் எப்படி மாறியிருப்பான்னு நினைக்கிறீங்க..... வாங்க ஹாலுக்கு போகலாம். நந்துவும், கவியும் அஞ்சு நிமிஷத்துல வருவாங்க....!" என்று சொல்லி விட்டு நிர்மலா மீரா, கீதாவுடன், ஜெய் நந்தனையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.
"அம்முலு உன் மேல ஜானு பாட்டி ஃப்ரேக்ரென்ஸ் வருது. எப்படிம்மா?" என்று கேட்ட படி அவள் தோள் வளைவில் தன் மூக்கால் முகர்ந்து கொண்டிருந்த ஜீவாவிடம் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருந்தாள் கவிப்ரியா.
"ஏய்... நான் உங்கிட்ட தானே கேக்குறேன். ஏன்டீ இப்படி நெளிஞ்சுட்டு இருக்க...? பதில் சொல்லு கேப்ஸி!" என்று கேட்டவனை முறைத்தவள்,
"என்னை விட்டு தள்ளி நில்லுடா. அப்போ தான் பதில் சொல்ல முடியும்!" என்றவளிடம் புன்னகையுடன்,
"இதென்ன லாஜிக்? பேசப் போறது உன் வாய், கேட்கப் போறது என் காது; இதுக்கு எதுக்காக தள்ளி நிக்கணும்?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"ஜீவா....ப்ளீஸ்! உடம்பில எறும்பு ஊறுற மாதிரி குறுகுறுப்பா இருக்கு .... நம்ம கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணிக்கலாமா? ப்ளீஸ்!" என்று கேட்டாள் கவிப்ரியா.
"ஏன்டீ குடமிளகா மூக்கி உன்னைய டிஸ்டென்ஸ்ல இருந்து சைட் அடிச்ச பீரியட் இன்னும் ஒரு முடிவுக்கு வராதா? உனக்கு இது பிடிச்சிருக்கான்னு தெரியல. பட் எனக்கு ரொம்ப நல்லா இருக்கு! இப்போ எதுக்கு என்னை உங்கிட்ட இருந்து தள்ளி நிக்க சொல்ற.... கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு!" என்று சொல்லி விட்டு தன் கைகளை அவள் இடுப்பை சுற்றி அணைத்து, அவள் பின்கழுத்தில் வாசம் பிடித்து கொண்டு இருந்தான் ஜீவா.
"ஜானு பாட்டி சொல்லி குடுத்தது மாதிரி தான் பத்மா பாட்டி, அம்மா, நான் எல்லாரும் வாசனைப் பொடி கலந்து மஞ்சள் தூள் அரைச்சு யூஸ் பண்றோம். எல்லார் கிட்டயும் ஒரே ஸ்மெல் தான் இருக்கும். ஜானு பாட்டியோட ஆவியெல்லாம் என் மேல ஏறல. கேள்விக்கு தான் பதில் சொல்லியாச்சுல்ல.... இப்பயாவது கையை எடுக்குறியா?" என்று அவசரப்படுத்தியவளிடம்,
"ம்ஹூம்; உன் கிட்ட இன்னும் சில பல கேள்விகள் கேக்கணும். இப்படி நின்னுட்டு இருக்கிறது கம்பர்டபிளா இருக்கு. இப்படியே இருக்கட்டுமா?" என்றான் ஆர்வமாக.
"என்ன கேக்கணுமோ சீக்கிரம் கேளுடா!" என்ற கவிப்ரியாவிடம்,
"அதென்ன யுனிக் திங்க்கிங்ன்னு ஒரு கேம்? புதுசா இருக்கு!" என்று கேட்டான் ஜீவா.
"இந்த கேம்ல 10 பேர் விளையாடினா ஒவ்வொருத்தரும் தனியா ஒரு பதில் எழுதணும். ரெண்டு, மூணு பேர் ஒரே பதில் எழுதி இருந்தாங்கன்னா அவங்க அவுட் ஆகிடுவாங்க. ஒருத்தரோட யுனிக் திங்க்கிங்கை கண்டுபிடிக்கறதுனால தான் இந்த கேமுக்கு பேரு இப்படி; எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் எழுதுவேன். உனக்கு பிடிச்ச விஷயத்தை நீ எழுதணும். ஆனா ரெண்டு பேரோட பதில் வேற வேறயா இருக்கணும். புரிஞ்சதா?" என்று கேட்டவளிடம்,
"நல்லா......பட் இதை ஏன் 2 பேர் டீமா சேர்ந்து செய்யக்கூடாது? யுனிக் திங்க்கிங்ன்னு சொல்றதுக்கு பதிலா கப்பிள் கம்பாட்டபிளிட்டின்னு வச்சுக்கலாமே..... அப்பா, அம்மா; அத்தைஸ், மாமாஸ்; பாகி, ஷைலு; நீ, நான்; இனியா பாட்டி இந்த பேர்ஸ்க்குள்ள கம்பாட்டபிளிட்டி செக் பண்ணலாமே?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"ம்ஹூம்; உன் இஷ்டத்துக்கு கேமை சேன்ஜ் பண்ணாத! தனித்தனியா தான் விளையாட போறோம். வா போகலாம்!" என்றவளை தன் புறம் திருப்பி அவளை காதலுடன் பார்த்து கொண்டு இருந்தவன் அவள் கன்னத்தில் லேசாக கிள்ளினான்.
"கேப்ஸி தோத்து போய்ட்டா ஃபீல் பண்ணி அழுவியா?" என்று கேட்டவனிடம் வெடிச் சிரிப்புடன்,
"என்ன மிஸ்டர் ஜீவானந்தன்.....நீங்க என்னை டிஃபீட் பண்ண போறீங்களா? அது உங்களால முடியவே முடியாது ஸார், பத்து பேர் இருக்கோம்! ஸோ பத்து கேள்வி இருக்கும். கொஸ்ட்டீன் பேப்பர் எல்லாம் லீக் பண்ண மாட்டாங்க. ஸ்பான்டேனியஸா பதில் எழுதணும். இதுல நீ எந்த தைரியத்தில என்னை ஜெயிக்க முடியும்ன்னு நம்புற?" என்று கேட்ட கவியை பார்த்து சிரித்தவன்,
"இந்த கேம்ல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தோத்து போகப் போறோம். கேக்கப் போற பத்து கேள்விக்கும் நீ யோசிக்குற பதிலை நானும் அப்படியே மாறாம எழுதிக் காட்டுறேன். நம்ம ரெண்டு பேரோட கம்பாட்டபிளிட்டியை நான் செக் பண்ணப் போறேன். இட்ஸ் ஸோ எக்ஸைட்டிங். பட் உனக்கு தைரியம் இருந்தா, உண்மையா விளையாட தில் இருந்தா கேமுக்கு வரலாம். இல்லன்னா உன் இஷ்டம்!" என்று தோளை குலுக்கியவனை,
"அப்படி நீ என்ன தான் என்னை புரிஞ்சு வச்சிருக்கன்னு..... வாடா, ஒரு கை பார்த்துடுவோம்!" என்று சூளுரைத்து கொண்டு அவனுடன் விளையாடச் சென்றாள் கவிப்ரியா.
ஒவ்வொருவராக அவரருக்கு பிடித்த ஊர், பழம், வாசனைத் திரவியம், பாடல், வீட்டு உபயோகப் பொருள், உணவு, உடை, கடவுள், வாகனம், நாடு என்று பத்து கேள்விகளை கேட்டு முடித்த பின்னர் அர்ஜுன் அனைத்து தாள்களையும் வாங்கி மதிப்பெண் வழங்கி கொண்டு இருந்தார்.
"இன்னிக்கு கேமோட வின்னர் 8 யுனிக் ஆன்சர் எழுதின......!" என்று சொல்லி விட்டு தன் மகளின் முகத்தை பரிதாபமாக பார்த்தவரிடம்,
"சொல்லு டாடி, எதுக்கு இப்படி பாவமா லுக் விடுற....நான் தானே வின்னர்?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்து விட்டு,
"நிர்மலா ஜெய் நந்தன் தான் வின்னர்; செகண்ட் ப்ளேஸ்ல பார்கவ், தேர்டு ப்ளேஸ்ல சரஸ். கங்கிராட்ஸ் வின்னர்ஸ்!" என்று கைதட்டல் கொடுத்தவரிடம்,
"அப்பா, எனக்கு ஒரு டவுட்டு....என் பேப்பர் பார்த்தப்ப நீ கண்ணாடி போட்டு இருந்தியா....நான் எத்தனை மார்க்?" என்று குரலே எழும்பாமல் கேட்டவளிடம்,
"ஜீவாவும், நீயும் ஆன்சரை காப்பி அடிச்சீங்களா? 8 பதில் ஒரே மாதிரி இருக்கு. நீயும் அவனும் 2 மார்க்! ஸாரி டா செல்லம்! அடுத்த கேம்ல பார்த்துக்கலாம்!" என்று அவளை சமாதானப்படுத்தினார் அர்ஜுன்.
பார்கவ் சற்று ஆச்சரியத்துடன் ஜீவாவை சுரண்டினான்.
"என்னடா....சொல்லு!" என்று கேட்ட தன் நண்பனிடம்,
"என்னடா சொல்ல..... என் கிட்ட தான் உட்கார்ந்து இருக்க; அப்புறம் எப்படி கவிம்மா ஆன்சரும் உன்னோடதும் ஒரே மாதிரி இருக்கு? எனக்கு புரியலையே.....!" என்று கேட்ட பார்கவிடம் புன்னகையுடன்,
"அடப்போடா...எப்படி 2 மார்க் எடுத்தேன்னு நான் குழம்பிட்டு இருக்கேன். மே பி ஹோம் அப்ளையன்ஸ், டிரஸ்ல தப்பு வந்திருக்கும் ன்னு நினைக்கிறேன்! உன் தங்கச்சி அளவுக்கு எல்லாம் நமக்கு மார்டன் அவுட்பிட்ஸ்ல ஐடியா இல்ல!" என்றவனிடம் முறைப்புடன்,
"அப்போ சொல்லி வச்சுட்டு ரெண்டு பேரும் வேணும்னே தோத்துட்டீங்க. பட் உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி பயங்கரமா வொர்க் அவுட் ஆகுதுன்னு எல்லாருக்கும் காட்டணும்னும் நினைச்சு இருக்கீங்க. அதென்னடா எல்லாரும் ஒரு விளையாட்டு விளையாடினா எங்க எல்லாரையும் வச்சு நீ தனியா ஒரு கேம் ஆடுற, என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?" என்று கேட்டவனிடம் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல்,
"உன் தங்கச்சியை தான்டா நினைச்சுட்டு இருக்கேன். இது கூடவா தெரியல. இப்போ தான் எனக்கு செம ஹாப்பியா இருக்கு! என்ன நம்ம வீடு லைப்ரரி மாதிரி இவ்ளோ அமைதியா இருக்கு..... வர்றியா ஒரு கர்பா டான்ஸ் ஆடலாம்!" என்று கண்சிமிட்டியவனிடம்,
"அடி வாங்குறதுக்குள்ள ஓடிடு! கவிம்மா கொலைவெறியில இருப்பா, வீணா அவளை டென்ஷன் ஆக்கி வாங்கி கட்டிக்காத! எல்லாரும் எழுந்துரிச்சு ஆட்டைய கலைங்க. சீக்கிரம் போய் சாப்பாடு ப்ரிப்பரேஷனை முடிங்க! நிர்மலா அத்தைக்கு இன்னிக்கு கவனிப்பு ஸ்பெஷலா இருக்கணும். ஏன்னா வின்னர் அவங்க தானே....என்னடா கவிக்குட்டி!" என்றவனை தாக்க பூ ஜாடி பறந்து வந்தது.
"பாகி வாடா.....வெளியே போயிடுவோம். உள்ள ரொம்ப அனல் காத்தடிக்குது!" என்று சொல்லி விட்டு ஜீவா சிரிக்க கவிப்ரியாவின் முறைப்பில் இருவரும் பம்மி பதுங்கி ஓடி விட்டனர்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro