Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 68

"நீ எப்படியும் ரூம் கதவை திறந்து என்னை கூட்டிட்டு போக வந்துடுவன்னு எனக்கு தெரியும். அதனால தான் நான் வாஷ் ரூம்ல காலாட்டிட்டு உட்கார்ந்து இருக்கேனாக்கும். இப்ப என்ன செய்வ?" என்று அலைபேசியில் கேட்ட தன் மனைவியின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் தந்தான் ஜீவானந்தன்.

"டேய் மலைமாடு உன்னை தான் ஒரு கேள்வி கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லாம அங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?" என்று கேட்ட தன் மனைவியிடம் உச்சுக் கொட்டி,

"உனக்கு ஒரு நிமிஷம் டைம் தர்றேன் மூக்கி, மரியாதையா நீயே வெளியே வந்துடு. இல்ல இந்த மச்சானோட ஆக்ஷன்ஸை லைவ்வா பார்ப்ப, சின்ன வயசுல கஷாயம் குடிக்க மாட்டேன்னு வாயை மூடிட்டு சுண்டெலி மாதிரி நீ ஓடும் போது எந்தப் பக்கம் போனாலும் உன்னை ப்ளாக் பண்ணி தோளுல தூக்கி போட்டு கொண்டு போற உன் செல்ல மச்சானை இப்போ ஒருக்கா வைல்டு ஹல்க்கா பிஹேவ் பண்ண வைக்காத. அது உனக்கு நல்லதில்ல. ஒன் மினிட் டைம் முடிஞ்சிடுச்சு அம்முலு. நீ வெளிய வர்றியா, இல்ல நான் உள்ள வரட்டுமா?" என்று கேட்டவனிடம் சற்று பயம் கலந்த ஆர்வத்துடன்,

"நீயும் வரக் கூடாது. நானும் வர மாட்டேன். ஆமா உன்னால எப்படி உள்ள வர முடியும்? கதவை உடைக்கப் போறியாடா?" என்று கேட்டாள் கவிப்ரியா.

"உங்க மூட் ஸ்விங் பத்தி நமக்கு தெரியாதா மூக்கி..... நீ உள்ள பூட்டிக்கிட்டு உட்கார்றப்போ ஒவ்வொரு தடவையும் கதவை உடைச்சுட்டு இருந்தா எத்தனை கதவு செய்றது? இந்த ரூம் நம்ம ப்ரைவேட் கிம்டம்..... இதுல நான் இல்லாம நீ எங்கயுமே தனியா போற வேலையெல்லாம் நடக்காது. இன்க்லூடிங் வாஷ்ரூம்ஸ் டூ.... சரி உனக்கான ப்ரைவஸிய டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், கொஞ்சம் டீசண்டா இருப்போமேன்னு பார்த்தா ஆட்டமா காட்டுற? இரு வர்றேன்!" என்று சொல்லி விட்டு குளியலறையின் மறுபுறச் சுவர் பக்கத்தில் போடப் பட்டிருந்த ஆளுயர டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை சற்று நகர்த்தி விட்டு அதற்குப் பின்னால் இருந்த குளியலறையின் மறுபுறச் சுவரின் ரகசியமாக வைத்திருந்த  கதவை திறந்து கொண்டு அவளிடம் சென்றவன் அவளைக் கண்டதும் முகம் சுளித்தான்.

"டேய் மாடு இது ஏதோ வாஷ்ரூம்லயும் வால்பேப்பர் டெக்கரேட் பண்ணியிருக்கன்னு நினைச்சு இவ்வளவு நாள் அதை நான் கண்டுக்கவேயில்ல. இது இன்னோரு சீக்ரெட் டோரா? எதுக்குடா இப்படி திருட்டுத்தனம் பண்ணி வச்சுருக்க?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்,

"அதான் சொன்னேனே மிஸஸ் ஜீவா இது நம்மளோட பர்ஸனல் ஸ்பேஸ். இதுல நம்ம என்ன வேணும்னாலும் செஞ்சுக்கலாம். ஆமா, வாஷ்ரூமுக்குள்ள வந்து நின்னா கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கற மாதிரி நிக்க மாட்டியா நீ? இது என்னடீ புல் ட்ரெஸ்ல  காதுல ஹெட் செட்டை போட்டுட்டு ரிலாக்ஸ்டா உட்கார்ந்து இருக்க?" என்று கேட்ட தன் கணவனிடம் "ச்ச்சீ போ...... நான் ஒண்ணும் குளிக்கறதுக்காக உள்ள வரல!" என்று சொல்லி விட்டு அவன் கண்களைப் பாராமல் தலை கவிழ்ந்து கொண்டாள் கவிப்ரியா.

அவள் பக்கத்தில் சென்று அவளை தன் மிருதுவான தொடுகையால் முகம் முழுவதும் வருடியவன்,

"உன்னோட ச்ச்சீ போங்குற வேர்ட் அப்ப்ப்ப்பா..... என் செல்ஃப் கண்ட்ரோலுக்கு ஏதோ வார்னிங் குடுக்கற மாதிரி இருக்கு அம்முலு...... இனிமே அத சொல்லாத, மீறி சொன்னன்னா ஏடாகூடமா எதையாவது பண்ணிட்டு உன் கிட்ட மறுபடியும் ஸாரி கேக்குற சிச்சுவேஷன் வந்துடும் போலிருக்கு. என் கைக்குள்ள நிக்குற நேரம் தான்டீ நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க. ஐ வான்ட் டூ கிஸ் யூ ஹிஸ்டரிக்கலி, இவ்வளவு அக்ரஸிவ்வா தாட்ஸ் வருதேன்னு நினைச்சா பயமாயிருக்கு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல இருந்து என்ன தான்டீ ஆச்சு எனக்கு?" என்று கேட்ட தன் கணவனை பார்த்து மென்னகை புரிந்த கவிப்ரியா அவன் இதழ்களில் தன் இதழை பொருத்தினாள். பாவம் பார்த்து இடம் குடுத்த வீட்டில் பந்தி போடச் சொன்னது போல ஜீவா அவனது மனைவியின் சிறு இணங்கலை தனக்கு கிடைத்த முழு நன்மையாக பயன்படுத்தி அவளை ஒருவழியாக்கி விட்டான். இதில் அவனை மிகவும் குதூகலிக்க வைத்த விஷயம் என்னவென்றால் அவர்களது காதல் பரிமாற்றத்தில் அவனுக்கு தேவையான அனைத்துமே  மனையாளிடம் இருந்தும்   மறுப்பில்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது தான்.......

ஐந்து நிமிடங்கள் கழித்து அவளை மனமில்லாமல் பிரிந்தவன், "எல்லாரும் வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, வா போய் அவங்களுக்கு பை சொல்லிட்டு வரலாம்!" என்று சொன்னதும் கவிப்ரியா அவன் கைகளை உருவிக் கொண்டு, "போடா நான் வரமாட்டேன். நீயே போய் உன் மாமனார், மாமியாருக்கு கைய ஆட்டி அவங்கள அனுப்பி வச்சுட்டு வா!" என்று முறுக்கிக் கொண்டாள்.

"ஓஓஓ..... அப்போ நீ மறுபடியும் வரமாட்டேன்னு சொல்ல வர்றியா  அம்முலு? நல்லதா போச்சு. இன்னும் கொஞ்ச நேரம் சமாதான முயற்சியில இறங்கலாம்!" என்று சொல்லிக் கொண்டே அவள் பக்கத்தில் வர முயன்றவனை கை காட்டி நிறுத்தி,

"எனக்கு சமாதானமும் வேண்டாம்....  ஒண்ணும் வேண்டாம். நீ முதல்ல வெளிய போடா!" என்று சொல்லி கதவை நோக்கி கையை நீட்டினாள் கவிப்ரியா.

"ஏய் மூக்கி ஏற்கனவே டஜன் கணக்குல கொடுக்கல் வாங்கல் நடந்துருக்கு. எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டு ஒண்ணும் வேண்டாம்ன்னு ஏன்டீ பொய் சொல்ற..... நம்ம செய்றது தப்புன்னு யாராவது பாயிண்ட் அவுட் பண்ணினாங்கன்னா செஞ்சுட்டு இருக்குற தப்பை சரி பண்ணிக்கணும், என் செல்ல டாலி தான நீ வா போகலாம்!"  என்று சொல்லி அவள் கைகளைப் பற்ற  வந்தவனிடமிருந்து விலகி நின்று சற்று கம்பீரமான குரலில்,

"நாம செய்யுறது சரியோ தப்போ, நம்ம முடிவுல வித்ஸ்டாண்ட் பண்ணி நிக்கணும். நான் என் முடிவுல தெளிவா இருக்கேன் ஜீவா.... நீ மறுபடியும் ரூமுக்கு வரும் போது எனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா, வயிறு பசிக்குது!" என்று சொன்ன தன் மனைவியை பார்த்து சிரித்தபடி தலையை கோதிக் கொண்டான் ஜீவானந்தன். பின்னே அவனது வார்த்தைகளையே நேரம் பார்த்து அவனுக்கு எதிராக பேசினால் சிரிப்பு வரத் தானே செய்யும்.....

ஜீவானந்தனின் தடுமாற்றம் அவனது நண்பனுக்கு புரிந்ததோ தெரிந்ததோ தெரியவில்லை. அலைபேசியில் தன் தங்கையை அழைத்தான். "சொல்லுடா அண்ணா......" என்று கவிப்ரியா கேட்டதும் அவன் ஆரம்பித்து விட்டான்.

"ஏய் திமிருபிடிச்சவளே, நாங்கெல்லாம் கிளம்பறதா வேண்டாமா, கார்லயே எவ்வளவு நேரம் உட்கார்ந்துட்டு இருக்கறது..... உன் ஒருத்திக்காக குடும்பம் மொத்தமும் காத்துக்கிட்டு கிடக்கணுமா, நீ வா சரஸ் நம்ம கிளம்பலாம். கவிப்ரியா இந்தா உட்கார்ந்து இருக்கா பாரு என் பக்கத்துல......" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனிடம்,

"ரெண்டு நிமிஷத்துல வர்றேன் இரு.... இன்னொரு தடவ சரஸ் கிட்ட வேற யாரையும் காமிச்சு கவிப்ரியான்னு பொய் சொல்லாத!" என்று சொல்லி விட்டு நிமிர்ந்தவளை கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"நான் எங்கப்பாவையும், சரஸையும் பார்க்க போறேன், வேற யாரையும் பார்க்க மாட்டேன். பேசவும் மாட்டேன்....." என்று சொல்லி விட்டு கழுத்தை நொடித்து கொண்டவளிடம்,

"பார்த்து மெதுவா ஒடிம்மா..... நீ வெளியே போய் என்ன செய்யப் போறன்னு நான் உங்கிட்ட கேக்கவேயில்லயே..... அப்புறம் எதுக்கு இந்த தன்னிலை விளக்கம்..... கம் லெட்ஸ் கோ!" என்று சொல்லி விட்டு ஜீவானந்தன் கவிப்ரியாவுடன் வெளியே வந்து நின்றான்.

ஜெய் நந்தன் தன் மருமகளை பக்கத்தில் அழைத்து அவளிடம், "ஏஞ்சல் இதுவரைக்கும் நம்ம வீட்டு எல்லா பிள்ளைங்களுக்கும் எங்களால எவ்வளவு வேல்யூஸ் கத்துத் தர முடியுமோ அத கத்து குடுத்து தான் வளர்த்துருக்கோம். இது என் குழந்தை, இது மேல எனக்கு தான் உரிமை இருக்குன்னு யாரும் சொன்னதும் இல்ல..... தப்பு செஞ்சா அவங்க அவங்க குழந்தையை அவங்க தான் கண்டிக்கணும்னு நினைச்சதும் இல்ல. ஆனா நீ ஏதாவது தப்பு செய்யும் போது மட்டும் அது ரகு பாட்டாவா இருக்கட்டும், ஜெயந்தன் தாத்தாவாகட்டும், இல்ல உங்க சரஸ் பாட்டியா இருக்கட்டும், அஜு மீராவா இருக்கட்டும்...... இவங்க யாரையுமே உனக்கு எதிரா கைய ஓங்கிட்டு வரும் போதே நான் அந்த இடத்துல இருந்தன்னா ஒண்ணு உன்னை தூக்கிட்டு வெளியே போயிடுவேன். இல்ல அவங்களை அமைதிப்படுத்திடுவேன். ஒருவேள மாமா உனக்காக அப்படி ஓடியிருக்க கூடாதோன்னு இப்போ தோணுதுடா ஏஞ்சல்!" என்று சொல்லிய ஜெய் நந்தனை திகைத்துப் போய் பார்த்து கொண்டு நின்றாள் கவிப்ரியா.

"என்ன அத்தான் கவிம்மா கிட்ட போய் இப்படியெல்லாம் பேசிட்டு....." என்று ஜெய்யின் பேச்சை தடுக்க சென்ற நிர்மலாவை, "நிர்மலா நந்து பேசட்டும். நீ சும்மாயிரு!" அதட்டி அமர வைத்தார் பத்மா.

"நீ எங்கூட வா!" என்று சொல்லி தன் மனைவியை தனியாக சிறிது தூரம் தள்ளி அழைத்து சென்ற ஜீவானந்தன்,

"கௌதம் அங்கிள் பேச்சுவாக்குல அப்பாட்ட எங்கடா உன் மருமகளை? எல்லாரும் இங்க இருக்கோம். அவளுக்கு மரியாதை தெரியாதா, நம்ம கூட தானே இருக்கணும்னு ஒரு வார்த்தைய விட்டுட்டாங்க அம்முலு; என்னடா உன் டார்லிங் இப்படி பேசுறாரேன்னு நீ அவர மிஸ்டேக் பண்ணிக்காத. கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நீ ஏதாவது தப்பு பண்ணியிருந்தா கவிப்ரியா தப்பு பண்றான்னு சொல்லியிருப்பாங்க. ஆனா இனிமே ஜெய் நந்தன் மருமக, ஜீவானந்தன் வொய்ப் கவிப்ரியா இப்படி செஞ்சுட்டான்னு சொல்வாங்க. எத்தனை பேருக்கு நம்மள மாதிரி அழகான ஒரு பாமிலி பாண்டிங் கிடைக்கும்னு சொல்லு பார்ப்போம். உன்னை அவங்களுக்கு பிடிக்கலன்னா குடும்பம் மொத்தமும் எதுக்கு நீ வெளிய வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கணும், அப்பவே கிளம்பி போயிருக்கலாமே..... ஒருத்தர்ட்ட கோபப்படுறது ரொம்ப ரொம்ப ஈஸிம்மா, முடிஞ்ச வரைக்கும்  எல்லார்ட்டயும் அன்பா இருக்கிறது தான் ரொம்ப கஷ்டமான விஷயம்..... யோசிச்சுக்கோ!" என்று சொல்லி விட்டு சென்றான் ஜீவானந்தன்.

அனைவரும் அவரவர் வாகனங்களில் ஏறிக்கொண்டு இருக்க நீண்ட யோசனைக்கு பின்னர் சில நிமிடங்கள் கழித்து ஜெயந்தன், பத்மா, ஜெய்நந்தன், நிர்மலா, அர்ஜுன், மீரா அனைவரிடமும் இதுவரை தான் செய்த தவறுக்காக கவிப்ரியா மன்னிப்பு கேட்டாள். தன் அண்ணன், அண்ணி, சித்தப்பா, சித்தி, பாட்டி, ராகவ், இனியா, இசக்கி ராசு, கௌதமன், ராகினி, பவின், ஷைலு அனைவரிடமும் சென்று பேசி விட்டு வந்து மீராவின் அருகில் நின்று கொண்டு இருந்தாள்.

"மச்சி கிளம்பட்டுமா..... என்னடா என்னிக்கும் இல்லாம பல்லை கீழே போடுற அளவுக்கு ரொம்ப திறந்து காட்டிகிட்டு இருக்க?" என்று கேட்ட தன் நண்பனிடம்,

"இனிமே ஷைலுவும், இனியாவும் இங்க இருக்க மாட்டாங்கல்ல? உங்க மாமா அத்தையோட மார்னிங் காஃபி டைம் பூரா எனக்கே எனக்கு தான்..... அது தான் ரொம்ப ஹாப்பியா இருக்கு டேய் பாகி நான் ஒண்ணு சொன்னா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.....?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"அப்படி தப்பா எடுத்துக்குற அளவுக்கு என்னடா சொல்லப் போற?" என்று கேட்ட பார்கவிடம்,

"ச்ச்சீ போ.....!" என்றான் ஜீவானந்தன்.

பார்கவ் ஆத்திரத்துடன், "அட கழுவாத மூஞ்சி, பத்து நாள் உங்க வீட்ல தங்கி சாப்பிட்டுட்டு கிளம்புறதுனால ச்ச்சீ போன்னு சொல்லுவியா? உனக்கு என்ன திமிர் இருக்கணும்..... இரு உன்னைய சென்னைக்கு வராமலா போயிடுவ? அப்போ கவனிச்சுக்குறேன்!" என்று பொங்கிக் கொண்டிருந்த பார்கவை பார்த்து புன்சிரிப்புடன்,

"கோபப்படாதடா பாகி, இங்க இருந்து கிளம்புற, அதான் சும்மா கொஞ்சம் உன்னைய ஜாலியா வம்பிழுப்போமேன்னு ச்ச்சீ போன்னு சொன்னேன். ஏன்டா நான் உங்கிட்ட அப்படி சொன்னப்போ உனக்கு உடம்புல ஜிவ்வுன்னு ஏதாவது ஃபீல் ஆச்சு?" என்று கேட்ட தன் நண்பனை முறைத்த பார்கவ்,

"அடிவயித்துல இருந்து ஜிவ்வுன்னு ஃபீல் ஆகி உன்னைய இப்போ கேவலமா ரெண்டு வார்த்தை கேக்கணும்னு தோணுது. கேக்கட்டுமா?" என்று கேட்ட தன் நண்பனிடம்,

"நோ பேட் வேர்ட்ஸ் மிஸ்டர் பார்கவ், அபிநயா இனிமே வொர்க் பண்ணப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்களாமே, அவங்க கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணு, சரஸ் பாட்டியை அவங்க பொறுப்புல விட்டுடு. நல்லா பார்த்துக்குவாங்க. டேக் கேர் மச்சி!" என்று சொல்லி தன் நண்பனை அணைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.

"ம்ம்ம் அப்போலேர்ந்து ஏதோ மிஸ் ஆகுதேன்னு யோசிச்சேன். உன் ஹக் தான்டா இவனே, நம்ம தங்கச்சி உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டதுல இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா டெவலப் ஆகிட்டு வர்றாப்ல, இன்னிக்கு விழுந்து விழுந்து எல்லார்ட்டயும் ஸாரி கேட்டுருக்கா. ரூம்ல போய் தட்டி கிட்டி குடுத்து சரி பண்ணு. நாலு நாள் கன்டினியஸா சண்டை போட்டுக்காம இருந்தீங்கன்னா உங்க மேரேஜ் லைஃப்ல நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னு நினைச்சுக்கலாம். அடுத்து ரெண்டு பேரும் சென்னைக்கு ஒருதடவ வந்துட்டு போங்க..... போயிட்டு வரட்டுமா?" என்று கேட்ட தன் நண்பனிடம் புன்னகையுடன் கையாட்டினான் ஜீவானந்தன்.

அர்ஜூன் குடும்பம், பலராம் குடும்பம், கௌதமன் குடும்பம், இசக்கி ராசு, இனியா, ஜெயந்தன், பத்மா அனைவரும் ஒவ்வொருவராக கிளம்பி போய் விட்ட பிறகு வீட்டின் உள்ளே வந்த ஜெய்நந்தனுக்கு ஏனோ இன்று வீடு மிகவும் பெரிதாக இருந்தது போல் தோன்றியது.

"அப்பா இன்னிக்கு ஒரு நாள் கொஞ்ச நேரம் கார்ட்ஸ் விளையாடிட்டு அதுக்கப்புறம் ஒரு மூவி பார்த்துட்டு நீங்க, நான், அம்மா, கவி, சித்தப்பா எல்லாரும் ஹால்லயே படுக்கலாமாப்பா?" என்று கேட்ட தன் மகனிடம் மறுப்பு தெரிவிக்காமல் "செய்யலாம் ஆனந்த்..... இன்னிக்கு எங்க படுத்தாலும் தூக்கம் வரும்னு தோணல. ஏஞ்சல் கார்ட்ஸ் கேம்ல தோத்துட்டேன்னா மாமா உன்னை கன்னுக்குட்டி மாதிரி தூக்கி சுத்துறேன்.  நீ இருக்கறதுனால தான்டா தைரியமா வீட்டுக்குள்ள வந்தேன், இல்லன்னா அஜு கார்லயாவது, ராம் கார்லயாவது ஏறி அவங்க கூடவே போயிருப்பேன்!" என்று தழுதழுத்தவரை விவேக் பின்னிருந்து அணைத்துக் கொள்ள அப்போது தான் கவிப்ரியாவிற்கு தான் ஜீவாவை விட்டு விட்டு தனியாக கிளம்பி இருந்தால் என்ன விளைவு நடந்திருக்கும் என்று பொட்டில் அறைந்தார் போல புரிந்தது.

"ஸாரி டார்லிங்.....ரொம்ப ரொம்ப ரொம்ப ஸாரி டார்லிங்" என்று கண்கலங்கி அவர் மார்பில் சாய்ந்து கொண்டவளை புரியாமல் பார்த்து விட்டு தன் மகனை ஒரு கேள்வி பார்வையில் நிர்மலா நோக்க அப்போதும் ஜீவானந்தனின் ஒரு புன்னகை தான் அவருக்கு பதிலாக கிடைத்தது. 

ஜீவாமிர்தம் சுரக்கும்!

  

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro