💟 ஜீவாமிர்தம் 66
பவின் ஷைலு மற்றும் ஜீவானந்தன் கவிப்ரியா ஆகியோரின்
திருமண வரவேற்பில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்திருந்தது. கௌதமன், அர்ஜுன் இருவரையும் கட்டிப் பிடித்துக் கொண்டே அலைந்த ஜெய் நந்தனை நிர்மலா தனியாக அழைத்து சென்று ஓர் ஓரத்தில் அமர்த்தி விட்டு,
"ஸ்ரீ என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் அர்ஜுன் அண்ணா, கௌதம் அண்ணாவையும் சும்மா இருக்க விடாம இப்படி இம்சை பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்ட தன் மனைவியிடம் உச்சுக் கொட்டி,
"நீ உங்க மாமா வீட்ல முதமுதல்ல என் கூட நம்ம வீட்டுக்கு வர்றப்போ சத்தம் வராம அழுத.... உனக்கு நியாபகம் இருக்கா பஞ்சு மூட்டை?" என்று கேட்டவரை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
"தெரிஞ்ச சொந்தக்காரங்களை விட்டுட்டு தெரியாத இடத்துக்கு வேலைக்கு போகப்போறோமேன்னு கொஞ்சம் ஃபீல் பண்ணியிருப்பேனா இருக்கும், நீங்க எதுக்கு இப்படி குறுக்கும் நெடுக்குமா நடந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டா நான் எப்பவோ அழுதத இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர் நந்தன்?" என்று சிரிப்புடன் கேட்டவரை தீப்பார்வை பார்த்த ஜெய் நந்தன்,
"சிரிக்காதடீ..... உன் மாமா வீட்ல உன்னை ஏன்டா இங்க வச்சுருக்கோம்னு உங்க அத்தை உன் காதுபடவே பேசியிருக்காங்கன்னு நீ எங்கிட்ட சொல்லியிருக்க. ஆனாலும் அங்கிருந்து கிளம்பி வரும் போது உங்க மாமாவையோ இல்ல உன் பிரெண்டு நதியவோ இல்ல வேற எதையோ மிஸ் பண்ணிட்ட ஒரு உணர்வு வந்ததால தானே அன்னிக்கு நீ அழுத..... அவங்க கடனேன்னு வளர்த்த உனக்கே இவ்வளவு கஷ்டமா இருந்ததுன்னா, நாம எல்லாரும் இவ்வளவு நாள் நம்ம லட்டுவையும், ரூபினியையும் எவ்வளவு பார்த்து பார்த்து வளர்த்துருக்கோம், இப்போ புருஷன் வீட்டுக்கு கிளம்புறப்போ அதுங்க ரெண்டும் கண்கலங்குனா எனக்கு..... என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு தோணல நிலாம்மா!" என்று சொல்லி தழுதழுத்தவரிடம் ஆறுதலை செய்கையில் காட்ட எண்ணி அவர் கைகளைப் பற்றிக் கொண்டார் நிர்மலா.
"ஒவ்வொரு பொண்ணும் அவ பிறந்த வீட்ல இருந்து புருஷன் வீட்டுக்கு கிளம்புறப்போ இப்ப எதுக்குடா தேவையில்லாம அங்க போகணும்? பேசாம அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி தங்கச்சிங்க கூட இங்கயே இருந்துடலாமேங்கிற நினைப்பு ஒரு நிமிஷமாவது அவ மனசுல வந்துட்டு போகத் தான் செய்யும். ஆனா அந்த மாதிரி எண்ணம் தோணுதுங்கிறதுக்காக அங்க போகாம இங்கயே இருந்துட முடியாது இல்லையா..... புதுசா ஒரு சொந்தத்தை அடாப்ட் பண்ணிக்கும் போது புரிதல் இல்லாம ஏதாவது பிரச்சனை வர்றது சகஜம் தான், ஆனா அதெல்லாம் சரி பண்றதுக்கு தான் நம்ம ரூபி, இனியாம்மா கூடவே நம்ம மாப்பிள்ளைங்களும் இருக்காங்களே.... இனிமே உங்க பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் தள்ளி நின்னு பழகுங்க ஸ்ரீ! அப்போ தான் அவங்களும், நீங்களும் ஹேப்பியா இருக்க முடியும்!" என்று சொன்ன தன் மனைவியிடம் ஆச்சரிய பாவத்துடன்,
"ஏன்டீ கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உனக்கு.... இவ்வளவு வருஷம் தூக்கி வளர்த்த பிள்ளைங்கள விட்டு தள்ளி நில்லுங்கன்னு இவ்வளவு அசால்டா சொல்ற.... உனக்கென்னம்மா உன் பையனும், ஏஞ்சலும் ஸப்போர்ட் பண்ணுவாங்க. இனிமே என் மார்னிங் டைம்ல லட்டுவையும் ரூபியையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். என் மகள்களை மனசு தேடுற நேரமெல்லாம் நான் என்ன செய்றதோ தெரியல.....!" என்று சொல்லி சலித்து கொண்டவரிடம்,
"ம்ப்ச்! இப்போ எதுக்கு இப்படி புலம்பிட்டு இருக்கீங்க? நந்து இனிமே பண்ணைய பார்த்துக்கப் போறான். நம்ம கவிம்மாவுக்கும் கொஞ்சம் பொறுப்பை குடுத்துடுங்க. இனிமே உங்க மார்னிங் ட்ரிங்க், ப்ரேக் பாஸ்ட் டைம்ல நான் உங்க கூடவே இருக்கேன். நிறைய பேசலாம். அப்பப்போ பூம்பாறைக்கு போயிட்டு வரலாம். நினைச்ச நேரம் சென்னைக்கும், அம்பைக்கும் போயிட்டு வரலாம். அப்பப்போ நதி வீட்டுக்கு கூட ட்ரிப் அடிக்கலாம். சும்மாவே நேரம் பார்த்து தான் வேலை பார்ப்பீங்க. இனி அதுவும் தேவையில்ல, உங்க பையனும், மருமகளும் பொறுப்பா ஆனந்த ஸாகரத்தை பார்த்துக்குவாங்க. இப்பவாவது முகத்தை தூக்கி வச்சுக்காம இருங்க!" என்று சொன்ன நிர்மலாவிடம் அரைமனதாக "பார்க்கலாம்மா!" என்று சொன்னார் ஜெய் நந்தன். தன் கணவன் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகி விட மாட்டார் என்று உணர்ந்து நிர்மலா அதற்கு மேல் அவரை சாவகாசமாக அமர விடாமல் சில சில்லறை வேலைகளை வரிசையாக அவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
இன்னொரு புறம் பார்கவ், அபிநயா, பவின், ஷைலு, இனியா, ராசு, ராகவ் அனைவரும் சேர்ந்து ஜீவானந்தன் கவிப்ரியாவை சுற்றி வளைத்து, "தேவதை போலொரு பெண் இங்கு வந்தது நம்பி..... உன்னை நம்பி!" என்று பாடிக் கொண்டு இருந்தனர்.
அதுவா பிரச்சனை வந்து இப்போ அதுவா சரி ஆகிடுச்சு. கடவுளே இந்த பையனையும், பெண்ணையும் நீ தான் சந்தோஷமா வச்சிருக்கணும் என்று தான் அதிகம் தொந்தரவு செய்யாத கடவுளிடம் வேண்டிக் கொண்டார் பலராம்.
ஆனந்த ஸாகரத்தின் இவ்வளவு நாள் பிரச்சனைகளிலிருந்து அவல் தேடிக் கொண்டிருந்த சில நண்பர்கள், சுற்றத்தினரை சமாளித்து புது புது சாக்குகளை ஜெயந்தனும் பத்மாவும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
கௌதமன், ராகினி, அர்ஜுன், மீரா, கீதா ஐவரும் வந்தவர்களை கவனிப்பது, உபசரிப்பது என்று பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பெண் பலராமுக்கு சற்று அருகில் அமர்ந்திருந்த சரஸ்வதியின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கவும், பலராம் சற்று யோசனையுடன் அந்த பெண்ணின் அருகில் சென்று அவள் யார் என்று விசாரித்தார்.
"ஹலோ ஸார் ஐ'ம் வசுந்தரா. மிஸ்டர் ஜெய்நந்தன் எங்க டாடியோட பிஸினஸ் ஸர்க்கிள் ஃபிரெண்ட்.... ஸோ அவரோட ஸன் ரிஷப்ஸனுக்கு எங்கள இன்வைட் பண்ணியிருந்ததால இந்த பங்ஷன்க்கு வந்தேன். இந்த ஆன்ட்டியை நான் எங்க ரெஸ்டாரெண்ட்ல ஏற்கனவே மீட் பண்ணி இருக்கேன். பட் என்னை அவங்களுக்கு நியாபகம் இல்லன்னு நினைக்கிறேன். இந்த ஆன்ட்டியோட அங்கிள் ஐ மீன் இவங்களோட ஹஸ்பெண்டை நான் ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஸார்! இவங்க மேல அவருக்கு எவ்வளவு லவ் தெரியுமா.....
அவர ஒரு தடவை கண்டிப்பா மீட் பண்ணனும். இந்த பங்ஷன்க்கு அவர் வந்திருக்காரா ஸார்?" என்று கேட்ட அந்தப் பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்லாமல் புன்னகையுடன்,
"இந்த ஆன்ட்டி தனியா வந்துருக்க மாட்டாங்களே? இவங்க யார் கூட வந்தாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு சொல்றியாமா வசுந்தரா?" என்று அந்த பெண்ணிடம் கேட்டவரது மனம் இவள் கேட்பவன் ஜீவாவாகவோ, பார்கவாகவோ இருந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டது. மற்றபடி இல்லாத தன் அப்பாவை எப்படி கேட்கிறாள் என்றெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. சரஸ்வதியை சமாதானம் செய்வதற்கு அவ்வப்போது அனைவருமே ராஜேஷ்வரன் பெயரில் பேசுவது அந்த குடும்பத்தினரின் வழக்கமான நிகழ்வு தான். ஆனால் இப்போது என்னவோ இந்த பெண் ஏமாந்து போய் விட்டால் சற்று கவலையாக இருக்கும் என்று தோன்றியது அவருக்கு.
"ம்ம்ம் அது ஒரு மூஞ்சுறு மூஞ்சி ஸார்..... அவனுக்கு ஷார்ட்டா மூமூன்னு நிக்நேம் கூட வச்சிருக்கேன்...... தட் கை; ஸ்டேஜ்ல சேட்டை பண்ணிட்டு இருக்கான் பாருங்க, அந்த மெரூன் ஷர்ட் அவன் தான் அன்னிக்கு இந்த ஆன்ட்டியை கூட்டிட்டு வந்தான். அவன் ஒழுங்கா எனக்கு தேங்க் கூட பண்ணல தெரியுமா ஸார்? பாவம் இந்த மூமூவோட லைஃப் பார்ட்னர் என்ன மாதிரி டாக்கடிவ்வா இருந்தால்லாம் ரொம்ப கஷ்டம்!" என்று சொன்ன வசுந்தராவிடம் சிரிப்புடன்,
"அது அவன் முடிவு பண்ண வேண்டிய விஷயம் வசு..... வசுன்னு கூப்பிடலாம்ல, பை தி வே நீ இந்த ஆன்ட்டியோட அங்கிள கேட்டியே? அவர் இறந்து போய் பல வருஷம் ஆச்சு. நீ பார்க்கும் போது உன்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி எங்கம்மாட்ட பேசினது என் ரெண்டாவது பையன் ராகவ்..... எனிவேஸ் நீ அவனுக்கு வச்ச ஸ்பெஷல் நேம் அழகாயிருக்கு. வா உன் டாடியை மீட் பண்ணலாம்!" என்று இடக்கையால் முகத்தை பொத்தி குன்றலுடன் நின்று கொண்டு இருந்த வசுந்தராவின் கையைப் பிடித்து அவள் தந்தையிடம் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தார் பலராம்.
"டாட் எனக்கே தெரியாம ஒரு பையன் மேல நான் ரொம்ப லவ் வச்சுட்டேன்பா; நான் யாரையாவது லவ் பண்ணா அவன் வொர்த்தி பாயா இருந்து என்னை நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறவனா இருந்தா அவன எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்கல்ல; இவங்க தான் அந்த பையனோட டாடி. நான் இப்பவே அவன்ட்ட போய் என் ஃபீலிங்சை எக்ஸ்பிரஸ் பண்ணிடட்டுமா டாட்?" என்று கேட்ட வசுந்தராவின் கையை இருபுறமும் பலராமும் அவளது தந்தையும் பிடித்துக் கொண்டனர்.
"தரு.... நான் உன் மேரேஜ் உன் இஷ்டப்படின்னு சொன்னேன் தான்..... ஆனா அது இப்போ இல்ல. நீ உன் பிஎம்எஸ் டிகிரிய முடிச்சு, எம்பிஏவையும் முடிஞ்சதுக்கப்புறமும் இப்போ சொன்ன அந்த பையன் மேல அதே லவ் இருந்ததுன்னா என் கிட்ட வந்து சொல்லு. அப்போ வந்து நான் இந்த ஸார் கிட்ட பேசி உங்க மேரேஜை நடத்தி வைக்கிறேன்!" என்று சொன்ன தன் தந்தையிடம் கோபத்துடன்,
"படிக்கிறது பிடிக்கலன்னு சொல்லி தானே உன் ஹோட்டலை பார்த்துகிட்டு ஜாலியா இருக்கேன். எனக்கு பெரிய பெரிய ஈவண்ட்ஸ் செஞ்சு தர்ற ஈவெண்ட் ஆர்கனைசர் ஆகணும்னு ஆசையா இருக்கு. என் விஷ் எதையாவது ஓகே பண்ணி செஞ்சு தர்றியா; இல்லல்ல! அப்புறம் உன் இஷ்டத்துக்கு வரிசையா டிகிரியா கேட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்...... இப்போ போயிட்டு வர்ற ஒரு டிகிரியிலேயே நாலு அரியராம்; இதுக்கும் மேல எம்பிஏவெல்லாம் ம்ஹூம் எனக்கு கண்ணை கட்டுது;
ப்ளீஸ் டாட் என் லவ்வை அவன்ட்ட பெர்சனலா சொல்றப்ப நல்ல நேரமெல்லாம் பார்த்துட்டு சொல்லிக்கறேன். இப்போதைக்கு அவனுக்கு ஒரு ஹிண்ட்டாவது குடுத்துட்டு வர்றேனே ப்ளீஸ் ஓகே சொல்லுப்பா!" என்று கெஞ்சிய தன் மகளின் வேண்டுதலை மறுக்க முடியாமல் "வீட்ல அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரையும் நீ தான் தரு சமாளிக்கணும் பார்த்துக்க!" என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தந்தார் வசுந்தராவின் தந்தை.
"தேங்க்யூ சோ மச் டாட்! ஐ லவ் யூ" என்று சொல்லி விட்டு ஓட எத்தனித்தவளை நிறுத்திய பலராம் அவள் காதில் எதையோ ரகசியமாக சொன்னார். வசுந்தரா முகம் மலர அவரைப் பார்த்து, "டன் அங்கிள், தேங்க்யூ!" என்று சொல்லி விட்டு மேடையின் மேலேறி ராகவின் புறம் சென்று,
"மிஸ்டர் ராகவ் கேன் ஐ ஹாவ் தி மைக் ப்ளீஸ்..... உங்க அப்பா ஒரு இம்பார்டென்ட் அனௌன்ஸ்மெண்ட் சொல்ல சொல்லி இருக்காங்க. உங்க செயின் காணாமப் போற ட்ராமாவெல்லாம் வேண்டாமாம். அத விட ஒரு இன்ட்ரஸ்டிங் நியூஸ் என் கிட்ட இருக்கு!" என்று கேட்டவளை அனைவரும் பார்க்க ராகவ் அவளிடம், "ஹு ஆர் யூ?" என்று கேட்டான்.
"பேரையாவது சொல்லி கூப்பிடுவன்னு நினைச்சேன். அதுவும் போச்சா..... இட்ஸ் ஓகே" என்று எரிச்சல் அடைந்தவள் கூட்டத்தினரை பார்த்து தான் ஒருவனை விரும்புவதாகவும் அந்தப் பையன் கூட்டத்தில் தான் இருக்கிறான் என்றும், அவன் பேசிய ஒவ்வொரு எழுத்தும் தனக்கு நியாபகம் இருக்கிறது என்றும், ஆனால் அவன் தன் பெயரை கூட நியாபகம் வைத்து கொள்ளவில்லை என்றும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
பார்கவ், ஜீவா, ஷைலு, கவி இவர்கள் ராகவிடம் வந்து, "டேய் மண்டைவீங்கி யார்டா இந்த பொண்ணு......?" என்று கேட்க ராகவ் தோளை குலுக்கி,
"யாருக்கு தெரியும்..... சரியான லூசா இருக்கும் போலிருக்கு. வாங்க சாப்பிட போகலாம், ஷைலுவும் இனியாவும் கிளம்பணும்ல....?" என்று கேட்ட படி வசுந்தராவை திரும்பி திரும்பி பார்த்தபடி தன் டீமுடன் சென்று கொண்டிருந்தான்.
"ஆமாடா, என்னை பார்த்தது கூட நியாபகம் இல்லாத உன்னைய போய் லவ் பண்ணி தொலைச்சேன் பாரு லுசு தான் நானு......!" என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு தன் தந்தையிடம் சென்றாள் வசுந்தரா.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro